Tuesday, May 15, 2018

பிஜே ( பி ஜெயினுல் ஆபிதீன் ) எனும் பொறுக்கி வீழ்ந்தான்

( நான் பதிவுகள் எழுதி மூன்று வருட காலம் ஆகிவிட்டது. இது ஒரு முக்கியமான நிகழ்வு என்பதால், இதைப் பதிவு செய்ய தேவையேற்பட்டு ஒரு பதிவினைச் செய்கிறேன் )

 இது பற்றிய பத்திரிக்கை செய்தியிற்கு: https://www.facebook.com/photo.php?fbid=153297532188421&set=pcb.153297555521752&type=3&theater

 இது பற்றிய தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் (TNTJ) வெளியிட்ட விளக்கம்: https://www.facebook.com/tj.hameershaid.79/videos/153029435548564/நிகழ்ந்தது பற்றி அறியாத மக்களுக்காக காலவரிசைப் படி அமைக்கப்பட்ட குறிப்புகள் கீழே:

 1. கடந்த வருடம் ஆகஸ்டு மாதம், பிஜே ஒரு பெண்ணிடம் விரசமாக 28 நிமிடங்கள் பேசிய ஆடியோ ஒன்று வெளியானது. ( https://www.youtube.com/watch?v=0O4IiYkbSlY ) ( இந்த ஆடியோவினை "ஆடியோ-1" என்று சுருக்குமாகக் குறிப்போம் )

 2. இந்த ஆடியோவினை அம்பலப்படுத்தி வெளியிட்டவர், "கோவை பாஸித்" எனப்படும் ஒரு மாமனிதர். ( https://www.facebook.com/mohamedcoim ).

 3. இந்த ஆடியோவினை மிமிக்ரி என்று சமாளித்தனர் பிஜேயும் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் (TNTJ) காரர்களும். அதற்காக ஒரு ஜோடனையான ஆடியோவினை தயார் செய்து வெளியிட்டனர். அந்த ஜோடனை ஆடியோவில்  ( https://www.youtube.com/watch?v=UvK2t-zYgaA )  பின்வரும் நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. அதில் "ஹஸன்" எனும் ஒருவர் ஒரு மிமிக்ரி ஆளுடன் தொலைபேசியில் பேசுவது போலவும், அந்த ஹஸன் அந்த மிமிக்ரி-ஆளிடம் பிஜே போல பேச ஒரு வேலை-ஆர்டர் கொடுத்தது போலவும், அந்த வேலை-ஆர்டர் முடிந்துவிட்டதா என விசாரிப்பது போலவும், அதற்கு அந்த மிமிக்ரி-ஆள் அந்த வேலை-ஆர்டரை கூடிய சீக்கிரம் செய்து தருவதாகவும் சொல்லிவிட்டு ஒரு மாதிரிக்காக (அதாவது ஒரு சாம்பிளுக்காக) பிஜே பேசுவதுபோல பேசிக்காட்டுவதாகவும் அந்த ஆடியோ அமைந்திருந்தது. இதனை வெளியிட்டுவிட்டு அந்த பிஜே ஆதரவாளர்கள், ஆடியோ-1ம் இதேப் போல போலியானதுதானென்றனர்.

4. அந்த ஜோடனை ஆடியோ ஒரு செட்டிங். இந்த ஆடியோவில் பேசிய ஹஸன் என்பவன், பிஜேயின் ஆட்டோக்காரனும் முத்துப்பேட்டை எனும் ஊரினைப் பூர்வீகமாகக் கொண்டனுமான ரியாஸ் எனப்படுபவன். ஆதாரத்திற்கு: https://www.facebook.com/ameer.shaid/posts/2461949007363127 . அந்த ஆடியோவில் மிமிக்ரி ஆசாமியாக நடித்தவன் மக்தூம் என்பவன். இவன் TNTJ தலைமை அலுவகத்தில் பணிபுரிபவனாம். கோட்டைப் பட்டினம் எனும் ஊரினைச் சேர்ந்தவனாம்.  ஆதாரத்திற்கு: https://www.facebook.com/ameer.shaid/videos/2508080819416612/ . மேலும் அந்த ஜோடனை ஆடியோவில் மாதிரி (சாம்பிள்) காண்பிக்கும் போது அந்த மிமிக்ரிஆசாமி பிஜே போல பேசும்போது பிஜேயே பேசியுள்ளார் என்பது நிகழ்வுசார்ந்த ஆதாரம் (circumstantial evidence).

5. இது தவிர ஜெரினா எனும் பெண் விஷயத்தில் ஒரு ஆடியோ வெளியானது. அது பற்றிய பிண்ணனித் தகவலாகக் கூறப்படுபவது: ஜெரினா எனும் பெண் தன் கணவனுடன் தனக்கு பிணக்குகள் இருப்பதாக TNTJ அலுவலகத்தின் உதவியை நாடியுள்ளார். பிஜே அந்தப் பெண்ணிடம் அவர்கணவரை விவாகரத்து செய்ய சொல்லிவிட்டு அந்த ஜெரினாவினை செட்டப் செய்துவிடுகிறாராம். ஜெரினாவோ பிஜேயுடன் தனக்கு ஏற்பட்ட உறவிற்கு ஆதாரங்களை தயார்செய்துவிட்டு பிளாக்மெயில் பண்ணினாராம். அப்போது அந்தப் பெண்ணின் வழக்கறிஞர் துணையோடு அப்போலோ ஹனீஃபா எனும் பிஜேயின் நண்பர் ஒரு சுமூகமானத் தீர்வுக்கு சென்று பெருந்தொகைக் கைமாறுகிறதாம். இந்தப் பிண்ணனியினை பிஜே மறுத்தாலும், இது சம்பந்தமான ஆடியோவினைப் பற்றி பிஜே மூச்சுவிடவில்லை. ஆதாரம்: https://www.facebook.com/ameer.shaid/posts/2477445339146827 ( இந்த ஆடியோவில் பேசுபவர்கள் பீஜேயும் அப்போலோ ஹனிஃபா என்பவரும். இதில் ஜெரினா எனும் பெயர் உச்சரிக்கப்படுவதினைக் கவனத்தில் கொள்க. ) (ஆடியோ - 2)

6. ஒரு பத்து நாட்களுக்கு முன் அமீர் ஷாய்த் எனும் இலங்கைக்காரர் ஒரு பத்து நிமிட நீளமான உரையாடலை வெளியிட்டார். பிஜே ஒரு திருமணமான பெண்ணுடன் ஒரு விவகாரமான வீடியோகாலில் ஈடுபட்டபோது பதிவு செய்யப்பட்ட ஆடியோதான் அது. அதனை வெளியிட்டதோடல்லாமல், அந்தப் பெண்பற்றிய தகவல்களையும் அவரின் கணவர் புகைப்பத்தினையும் முகநூலில் வெளியிட்டார் அமீர் ஷாய்த். ( ஆனால், புகைப்படத்தினை வெளியிட்ட‌ புகார்களின் பேரில் முகநூல் அந்தப் பதிவினை அவர் பக்கத்திலிருந்து அழித்துவிட்டது). அந்த ஆடியோ : https://www.youtube.com/watch?v=-tGoGM_5jgk&t=2s (ஆடியோ - 3)

7. இந்த ஆடியோ - 3 விஷயத்தில் அந்தப் பெண்ணிடமே விசாரிக்கப்பட்டதில் வீழ்ந்தான் அயோக்கியன் பிஜே.

இவன் மீது நடவடிக்கை எடுத்ததால், TNTJ அமைப்பினை ஒரு ஒழுக்கமான அமைப்பாகக் கருதிவிடாதீர்கள். ஒரு நிர்பந்தத்தினால் மட்டுமே நடவடிக்கை எடுத்துள்ளனர். அதற்கு பல நிகழ்வுசார்ந்த ஆதாரங்க:ள் (circumstantial evidences) உள்ளன‌

Saturday, May 30, 2015

பர்மிய முஸ்லீம்களும் இஸ்லாமிக் ஸ்டேட்டின் கீழ் உள்ள முஸ்லீமல்லாதவர்களும்


பல இஸ்லாமிய இயக்கங்கள் ரோஹிங்யா-முஸ்லீம்கள் படும் பாட்டிற்காக கண்டணங்களையும் அரசிற்கான வலியுறுத்தல்களையும் அறிவித்தவண்ணம் உள்ளனர். அத்தகைய அறிவிப்பில் ஒன்று கீழே உள்ளப் புகைப்படத்தில் உள்ளது. ஆனால், அவர்களால் ஓரளவிற்கேனும் அநீதிக்கு எதிராகப் பங்காற்ற இயலும் பிரச்சனையில் மெளணம் காக்கிறார்கள். இஸ்லாமிக்-ஸ்டேட்டின் கொலை, கொள்ளைக் கற்பழிப்புகளுக்கு எதிராக இவர்கள் பிரச்சாரம் செய்தால், அவைகள் பல முஸ்லீம்களைச் சென்றடைந்து பலன் விளைவிக்கும். இந்த இயக்கத்தினர்கள் மத்தியக் கிழக்கு நாடுகளிலும் இருப்பதால், இவர்களால் மிக எளிதாக பணியாற்ற இயலும். ஆனால் மெளணமாக உள்ளனர்.  (இஸ்லாமிக் ஸ்டேட்டின் இழிசெயல்களுக்கு ஆதார செய்தி:  http://www.bbc.com/news/world-middle-east-30573385 ).

 இஸ்லாமிக் ஸ்டேட் இயக்கத்தினர்கள் மாற்று மத ஆண்களை, அவர்கள்
கைதிகளாக‌ இருந்தாலும், அவர்களைக் கொலைச் செய்வதும், பெண்களைக் கற்பழிப்பதும் விற்பதுமாக உள்ளனர். இஸ்லாமிக் ஸ்டேட் இயக்கத்தினர் இந்த இழிசெயல்களை மதம்-சார்ந்த மார்க்க செயலாகச் செய்துவருகின்றனர். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னெவென்றால், இவர்களின் இந்தச் செயல்கள் அவர்களது தனிப்பட்ட இயக்கச் செயல்கள் அல்ல. அவைகள் அவர்கள் நம்பும் மதக் கொள்கையினைச் சார்ந்தது. இவ்வாறு தான் நபி அவர்களின் தோழர்கள் செய்ததாகவும் நபி அவர்கள் அதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்றும் அவர்களது புகாரி போன்ற புனிதமான புத்தகங்கள் கூறுவதால், இவ்வாறு கற்பழித்து அவர்கள் நம்பும் இஸ்லாத்தின் ப‌ணியினை ஆற்றுகின்றார்

 அந்த புகாரிப் போன்ற புத்தகத்திலுள்ள இதுபோன்ற ஹதீஸ்கள் (அதாவது வரலாற்றுக் குறிப்புக்கள்), அவர்கள் வரையறுத்த "ஆதாரப் பூர்வமானவை" எனும் வகையைச் சேர்ந்ததினால் இவர்களும் அத்தகையக் கற்பழிப்புகளை மார்க்கப் பணியெனக் கருதுகிறார்கள் போலும்.

இவர்கள் இந்தச் செயலைக் கண்டிக்கவேண்டும். தனது வளைகுடா-வாழ் தொண்டர்கள் மூலம் இந்தக் கண்டனத்தினை சவுதி அரசாங்கத்திற்குத் தெரிவிக்க வேண்டும். அத்தோடல்லாமல், அந்தக் கற்பழிப்பாளர்களுக்கு, இந்த கற்பழிப்புகள் மத-மார்க்க அம்சமில்லையென்றும்,அது பண்டைய அரபுக் கலாச்சார அம்சமென்றும் அறிவுறுத்தவேண்டும். அவ்வாறு செய்ய முன்வருவார்களா? மாட்டார்கள். செய்யவேண்டும் மென்றால் எப்போதோ செய்திருக்கவேண்டும். வேண்டுமானால், இவைகளை அவதூறு என்று கூறுவாரி மழுப்புவார்களேத் தவிர கண்டிக்க மாட்டார்கள்.

Thursday, June 19, 2014

"தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்"-தின் முட்டள் தனம்

"தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்" எனும் தமிழ்நாட்டு வஹ்ஹாபிகளின் இயக்கம், இலங்கைத் தூதரகத்திற்கு முன்பு ஆர்பாட்டத்தினை செய்து முடித்துள்ளது. அது சம்பந்தமாக தவ்ஹீத் ஜமாத் பல புகைப்படங்களை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அப்புகைப்படத்தின் படி கணிசமான மக்கள் குவிந்திருந்திருக்கின்றனரென்று தெரிகிறது.

இந்த மக்களைக் குவிக்க, அவர்களை அழைத்து அந்த தவ்ஹீத் ஜமாத் வெளியிட்டிருந்த அறிவிப்பு செய்தியும் அவர்களது இணையதளத்தில் காணப்படுகிறது. அந்த அறிவிப்பினைக் கீழே மேற்கோள்-குறிகளுக்கிடயே காட்டியுள்ளேன்:

"
இலங்கையில் பொதுபலசேனா எனும் இன வெறியர்களால், முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள். அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டு வருகின்றன.
இவற்றைத் தடுக்கத் தவறிய சிங்கள ராஜபக்சே அரசைச் கண்டித்து இன்ஷாஅல்லாஹ் நாளை காலை (17.06.2014) 11 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்.

நியாயவான்களே, முஸ்லிம்களின் உயிரைக் காப்பதற்கும், அவர்களின் உடமைகளை மீட்பதற்கும் புயலெனப் புறப்பட்டு வாரீர்.

இப்படிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமையகம்.
"

இவர்களது இந்த அழைப்பு விடுக்கும் அறிவிப்பின் வாசகங்களைப் பார்ப்போம். அதில் உள்ள ஒரு வாசகம்: "முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள்". இதுவரை நான்கு முஸ்லீம்கள் இறந்துள்ளனர். இத்தனைக்கும் அவர்கள் செய்திவெளியிட்ட தேதியன்று மூன்று முஸ்லீம்கள்தான் இறந்துள்ளனர். இப்படியிருக்க, "முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள்"- என்று எழுதுவது சரியா? இவ்வாறு எழுதுவது அபாண்டமல்லவா? இது மதவெறியினைத் தூண்டும் செயலல்லவா? இவர்களது இந்த துல்லியமற்ற மற்றும் ஏகத்திற்கும் உண்மைக்குப் புறம்பான வார்த்தை சோடிப்புகளால், எத்தனைப் பேர்களது மனதில் பதற்றத்தினை அளவுக்கதிகமாக ஏற்படுத்திக் கூட்டத்தினைக் கூட்டியுள்ளனர்? இது முறையா?

மேலும் "சிங்கள ராஜபக்ச அரசைக் கண்டித்து" என்று எழுதியுள்ளனர். அவர் சிங்களராக இருப்பது எப்படி இந்தப் பிரச்சனைக்குப் பொருந்தும். தவ்ஹீத் ஜமாத் முட்டாள்களின் கூடாரம் என்பதற்கு இது சான்றல்லவா? "குரங்கு பார்க்கும் குரங்கு செய்யும்" என்ற பழமொழிக்கேற்றவாறு குரங்குக் கூட்டமாக இருக்கிறதல்லவா இந்த தவ்ஹீத் ஜமாத்?

இது தவிர,

கீழ் கண்டவாறல்லவா முஸ்லீம்களை வழி நடத்திருக்கவேண்டும்:

1. பெருவாரி மக்களிடம் சிறுமான்மையான முஸ்லீம்களே நீங்கள் உங்கள் அடையாளத்தினைத் திணிக்க முயற்சிக்காதீர்கள். அவரகளது கலாச்சாரங்களை அழிக்க முயற்சியெடுக்காதீர்கள். "ஹலால் சர்டிஃபிக்கேட்" போன்ற அடையாள மேலோங்களுக்கான அட்டகாசங்களை விட்டுவிடுங்கள். பெருவாரி மக்களிடம் ஒற்றுமையுடன் நீங்கள் இல்லையென்றால் அழிந்துபோவீர்கள் --- என்று அறிவுறுத்திருக்கவேண்டாமா?

2. இலங்கை வாழ் முஸ்லீம் பெண்களே, உங்களிடம் ஏற்கனவே மதத்திற்குட்பட்ட நல்ல செயலான, "தலைக்குத் துண்டு அணிதல்" எனும் பாரம்பரியம் இருந்து வருகிறது. அது போதுமானது. "புர்கா" அணிவதுதான் மார்க்கமென்று ஒன்றுமில்லை. "புர்க்கா" அணிவதால், பள்ளிகளிலும் பணியிடங்களிலும் பிரச்சனை வருகிறதென்றால், "புர்கா" அணிவதற்கு பதிலாக உங்கள் பாரம்பரியப் படியே நடந்து கொள்ளுங்கள். உங்கள் மதத்தினை நீங்கள் பின்பற்றுவதற்கு ஒற்றுமையான சூழல் கட்டாயம் தேவை.  -- என்று அறிவுறுத்த வேண்டாமா?

Friday, February 21, 2014

ராஜீவ் கொலை சம்பந்தப்பட்டோரின் விடுதலையில் எங்கு தவறு நடக்கிறது?

1. ராஜீவ் காந்தி அவர்கள் இந்திய ராணுவத்தினை அனுப்பும் போது அதை ஒரு கற்பழிப்பு எந்திரமாகக் கருதி அனுப்பவில்லை. ஒரு கொல்லும் இயந்திரமாகக் கருதியே அனுப்பினார். கற்பழிப்புகளுக்கு ராஜீவினைப் பொறுப்பாக்குவதைவிட இந்திய ராணுவத்தினை போர்களத்தில் வழி நடத்தியவர்களைத்தான் பொறுப்பாக்கவேண்டும். இராணுவத்தினை ஒரு கொல்லும் இயந்திரமாகக் கருதி மற்றொரு கொல்லும் இயந்திரத்தினைச் சந்திக்க அனுப்புவது தார்மீகமான செயல். இராஜீவினைக் கொல்லும் அளவிற்கு திட்டம் தீட்டும் ஆற்றலுள்ள விடுதலைப் புலிகள், இந்திய இராணுவத்தின் சம்பந்தப்பட்டவர்களை இந்தியாவில் எதிர்கொள்ள ஆற்றலுடையவர்களே.

2. ராஜீவ்காந்தியின் செயலாகிய படையனுப்புதலை ஒரு கொல்லும் இயந்திரத்தினை அனுப்பும் செயலென்று நோக்கினால், ராஜீவ் அவர்கள் விடுதலைப் புலிகளின் தார்மீகமான இலக்கே ஆகும். அதே சமயத்தில் அவரைக் கொல்லப் பயன்பட்டவர்கள், விடுதலைப் புலிகள் அழிக்கப்படவேண்டியவர்களென்ற நியாயத்தின் அடிப்படையில் மரணதண்டனைப் பெறுவதே நியாயம்.

3. மரணதண்டனைப் பெற்றோர் மன்னிப்புக் கோரவில்லையென்றே கருதுகிறேன். கருணை மனு, அதாவது கருணை காட்டச் சொல்லிக் கெஞ்சுதல், மன்னிப்புக் கோருதலுக்கு நிகராகாது. மன்னிப்புக் கோருதல் என்பதில் செய்த செயலினைத் தவறென்றுக் கருதி மனவருத்தம் கொள்ளலும் உள்ளடக்கம். கருணை மனு என்பதில், "நீ கருணையுடைவனாக இரு" எனும் அறிவுரைதான் வெளிப்படும்.

4. மன்னிப்புக் கோரி இருந்தால், அவர்களை மன்னிப்பது ராஜீவின் குடும்பத்தினரது செயலுக்குட்பட்ட விஷயமட்டுமல்ல. அவருடன் இறந்த மற்ற 14 பேர்களின் குடும்பத்தினரது மன்னிப்பும் முக்கியம்.

8. சட்டப் படி ஜனாதிபதிக்கு கருணை காட்டும் அதிகாரமிருந்தாலும், ஆன்மீகத்தின் அடிப்படையில் அவரால் மன்னிக்க முடியாது. எனவே, "ஜனாதிபதியிடம் கருணை மனு" எனும் சட்ட அனுமதி நகைப்புக்குறியது.

9. சம்பந்தப்பட்டோர் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கோருவதுதான் முறை. அவர்கள் மன்னித்தால் மட்டுமே விடுதலை அளிக்கவேண்டும். இல்லையென்றால் அவர்கள் கடவுளிடம் மன்னிப்புக் கோரிவிட்டு, கடவுளைச் சந்திப்பதுதான் முறை. மன்னிப்புக் கோருதலென்பது தண்டனையிலிருந்து விடுதலை பெறுவதுடன் சம்பந்தப்பட்டதென்று கருதுவதே கூடாது. மன்னிப்புக் கோருதலென்பது மனவருத்தத்தினை மட்டுமே சம்பந்தப் படுத்திய ஒரு விஷயம்.

Wednesday, February 19, 2014

சூஃபிஸம், வஹ்ஹாபிஸம் மற்றும் அத்வைதம்: தீன்-முகம்மது அவர்களிடம் நேர்காணல்

 சூஃபி தத்துவங்கள் பற்றி தீன் முகம்மது என்பவர் சிறந்த விளக்கங்களை அளிக்கிறார். அந்த வீடியோவினை கீழே கொடுத்துள்ளேன். அந்த வீடியோ தமிழில் இருந்தாலும், தமிழ்-முஸ்லிம்களுக்கு மட்டுமே விளங்கும் வண்ணம் பற்பல அரபி கலைச் சொற்கள் உரையாடல்களில் பயன்படுத்தப்படுகின்றன. முஸ்லிமல்லாதோர்களும் விளங்கிக் கொள்வதற்காக அந்த கலைச்சொற்களை தமிழில் கீழே பட்டியலிட்டுள்ளேன்.

அந்த வீடியோவினைப் பகிர்ந்துகொள்வதற்கு முன் அந்த வீடியோவில் கூறப்படும் சில‌ கருத்துக்களைப் பற்றி சிறு விமர்சனங்களை முன்வைக்கிறேன்.
 அந்த வீடியோவில், அத்வைதக் கோட்பாடுகளுக்கும் சூஃபி தத்துவங்களுக்கும் உள்ள வேறுபாடு பற்றிப் பேசப்படுகிறது. தீன்-முகம்மதவர்கள், அத்வைதம் பற்றி தான் நன்கு அறிந்தவரல்ல என்றும், சங்கராச்சாரியார் அவர்கள் கூறியதினைப் பற்றி சிறிதுப் படித்துள்ளதாகவும் கூறிவிட்டு, சங்கராச்சாரியார் அவர்கள் கூறியதாகத் தான் படித்த சிலவற்றவைகளையும் கூறுகிறார். பின்பு சங்கராச்சாரியார் அவர்கள் கூறியதாக தான் கூறியது, எவ்வாறு சூஃபி தத்துவத்தினின்று வேறுபடுகின்றதென்றும் கூறுகிறார்.

ஏறத்தாள இந்தப் பிரபஞ்சமே (Universe, அண்டம், உலகம்) இறைவன் என்று சங்கராச்சாரியார் கூறியதாக தீன்-முகம்மது அவர்கள் அபிப்ராயம் கொண்டுள்ளார். இந்த அபிப்ராயம் சூஃபிக் கொள்கையிலிருந்து மாறுபடுகிறது என்றுக் கூறி எவ்வாறு மாறுபடுகிறதென்பதினை கீழ் கண்டவாறு விவரிக்கிறார்.

 பிரபஞ்சத்தில் காணப்படுபவைகளுக்கு இருக்கக் கூடியத் தன்மை போலியானதென்றும், அந்த இருக்கக் கூடியத் தன்மை கடவுளுக்கு மட்டுமே உண்டு என்றும், ஆனால் பொருட்களுக்கு அந்தத் தன்மை கடவுளிடமிருந்து வழங்கப்படுகிறதென்றும், இது சூஃபி நம்பிக்கையின் அம்சமென்றும் கூறுகிறார் தீன்-முகம்மதவர்கள்.  எனவே பொருட்களின் தொகுப்பினைக் கடவுளென்று கூறமுடியாதென்று தீன்-முகம்மதவர்கள் விளக்குகிறார். எனவே இது சங்கராச்சாரியார் கூறியதாகத் தான் கூறிய‌திலிருந்து வேறுபடுகிறதென்றும் விளக்குகிறார்.

 ஆனால் சங்கராச்சாரியாரவர்கள் கூறியதாக தீன் முகம்மதவர்கள் கூறியதை சங்கராச்சாரியாரவர்கள் கூறவில்லையென்று கருதுகிறேன். பொருட்களைக் கடவுளென்று சங்கராச்சாரியார் கூறியவரல்ல. மாறாக, பொருட்களின் மீதான‌ விளைவுகள், தன்மைகள் அவனுடையவையென்று அவர் கூறியவரென்று நம்புகிறேன். ஏறத்தாழ சூஃபிக்களின் நம்பிக்கையாக தீன்-முகம்மதவர்கள் விவரிப்ப‌தைத்தான் சங்கராச்சாரியாரும் கூறியுள்ளாரென்று நம்புகிறேன். அத்வைதம் பற்றிய விக்கிப்பீடியாப் பக்கமும் இதைத்தான் கூறுகிறது. இப்னு-அரபி எனும் சூஃபி கூறியதும்  சங்கராச்சாரியார் கூறியதும், ஒரே வாக்கியங்களில் உள்ளன: "இந்த உலகம் போலி ஆனால் முற்றிலும் போலியல்ல".

 புரிந்து கொள்வதற்காக இந்த வீடியோவில் கையாளப்படும் உதாரணமாகிய அலை ஒரு நல்ல உதாரணம். பொருட்களைக் கடவுளென்பது, தண்ணீரினை அலையென்று கூறுவதற்கு சமமானது. எனவே தவறானது. மேலும் அலைக்கு இருக்கக்கூடியத் தன்மை நிரந்தரமானதல்ல, எனவே அலையும் கடவுளின் பகுதியல்ல, ஏனெனில் கடவுள் நிரந்தரமானவன். இருக்கக் கூடியத்தன்மை, அலைக்கு தற்காலிகமாக வழங்கப்படுகிறது. அலையின் இருக்கக் கூடியத்தன்மையினை அலையினுடையதென்பது, இறைவனுக்கு இணைவத்தலெனும் இஸ்லாமியக்குற்றமாகும். அது நம்மைப் போலியுலகில் ஆட்டிப்படைக்கும்.

வீடியோவில் கையாளப்படும் பச்சை நிறம் பற்றிய உதாரணமும் அருமை.

  மேலும் பற்பல அம்சங்களில் அத்வைதமும் சூஃபி தத்துவங்களும் உடன்படுகின்றன. சூஃபி தத்துவங்கள், "இறைவன் ஒருவன்", "இறைவனுக்கு இணையில்லை" என்ற கருத்துக்களின் அடிப்படையில் ஏற்பட்ட சிந்தனையாதலால், சூஃபி தத்துவங்கள் ஒரு தூய்மையான இஸ்லாமிய தத்துவங்களுமாகும்.


இப்போது அந்த வீடியோவில் கையாளப்படும் அரபு கலைச் சொற்களின் தமிழ் மொழிபெயர்ப்புக் கீழே உள்ளன. மூன்றாம் நிமிடத்திலிருந்து வரும் காட்சிகளுக்கு இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

"ஷாஃபி மத்ஹபு" ----- இலங்கை முஸ்லீம்கள் பின்பற்றும் ஒரு விதமான மதச்சட்ட அமைப்பு முறை;
"காதிரியா, ஷாதுலியா, நக்க்ஷபந்தியா தரீக்காக்கள்" ----- இவைகள் ஒருவிதமான குரு-குல பயிற்சி முறைகள் அல்லது தொடர்கள்;
"திக்ரு"-- இறைவனின் பெயர்களைக் கூறி அவனை ஞாபகம் கொள்ளும் ஒரு முறை
"தசவ்வுஃப்" - சூஃபிஸம்
"சுன்னா"- நபி அவர்களது முறைகள்
"அக்கீதா"- இஸ்லாமிய இறைக் கொள்கை
"வஹ்ஹாபிச இயக்கம்" - குர்-ஆன் மற்றும் நபி அவர்கள் பற்றி நூற்றாண்டு காலங்கள் கழித்து எழுதப்பட்ட செய்திகளை, "ஆதாரபூர்வமானது", "பலஹீனமானது" பிரிக்கும் முறைகளில் எந்த தவறுமில்லையென்று மனப்பூர்வமாக நம்பும் இயக்கங்கள்.
"குஃப்ர்" - இஸ்லாமியக் கொள்கைகளை நிராகரித்தல்
"ஷிர்க்" - இறைவனுக்கு இணையாக எதையாவது கருதுதல்
"மஹப்பத்" - அன்பு
"தீன்"-- இறைவன் பற்றிய‌ நம்பிக்கைகளுடன் வாழும் முறை
"காஃபிர்கள்" -- இறைவனை அல்லது இஸ்லாமிய தத்துவங்களை நிராகரிப்பவர்கள்
"இஸ்லாமிய கிலாஃபத்" -- இந்த வீடியோவில் தீன் முகம்மதவர்கள் இந்த வார்த்தைகள் மூலம் சுட்டுவது அரேபியா மீதான துருக்கிய ஒட்டோமானியர்களின்  இஸ்லாமிய ஆட்சி
"உலமாக்கள்" -- இஸ்லாமியக் கோட்பாடுகள் மற்றும் தத்துவங்கள் பற்றிக் கற்றறிந்தவர்கள்
"கஸ்ஸாலி" -- இவர் சூஃபிஸம் இஸ்லாத்திற்குட்பட்ட நம்பிக்கையே என நிரூபித்தவர்
"ஷாஃபி" - இவர் ஒரு இஸ்லாமிய சட்ட வல்லுனர்
"அபூ ஹனீஃபா" - இவர் ஒரு இஸ்லாமிய சட்ட வல்லுனர்
"இப்னு தைமிய்யா" - இவர் கஸ்ஸாலிக்கு எதிர்பதமானவர்.
"ஷேகுல் இஸ்லாம்" - "இஸ்லாமிய குரு". இது வஹ்ஹாபிகள் இப்னு தைமிய்யாவிற்கு கொடுத்தப் பட்டம்
"அமானத்" - ஒருவர் மீது வைக்கும் நன்னம்பிக்கை
"வஸீலா தேடுதல்" - உதவி தேடுதல்
"ஹதீஸ்" - நபி அவர்கள் பற்றிய செய்திகள்
"உஜூத்" --- உள்ளமை, இருக்கக்கூடியத் தன்மை, existence
"உஜூதுல் வாஜிப்" --- "கட்டாயமாக இருக்கக் கூடியத் தன்மை"
"மும்கினுல் உஜூத்" --- "இருக்க சாத்தியமானவைகளின் இருக்கக் கூடியத் தன்மை"
"மவ்ஜூத்" --- இருப்பவை
"சிஃபத்" - பண்பு, தன்மை
"ஹதம்" -- இல்லாமை
"குன்" - "ஆகுக" என்று கட்டளையிடுதல்
"வஹ்தத்துல் உஜூத்"  -- இருக்கக் கூடியத் தன்மையினை ஒன்று என நம்பும் மெஞ்ஞானத் தத்துவம் (Oneness of Existence)
"ஒதுவெடுப்பது" --- தொழுகைக்கு முன்பு தனது உறுப்புக்களை தண்ணீர் கொண்டு தூய்மை செய்தல்
"அனல் ஹக்" - நானே உண்மை (இங்கு "உண்மை" என்பது கடவுளின் பெயர்களில் ஒன்று எனும் பொருளில் பயன்படுத்தப்படுகிறது)
"ஷரியத்" - வெளிரங்கமான சட்டதிட்டங்கள்
"மாரிஃபா" - இறைவன் பற்றிய ஞானம்
"காலிக்" - படைப்பவன்
"ஃபத்வா" - மதத் தீர்ப்பு