Saturday, May 30, 2015

பர்மிய முஸ்லீம்களும் இஸ்லாமிக் ஸ்டேட்டின் கீழ் உள்ள முஸ்லீமல்லாதவர்களும்


பல இஸ்லாமிய இயக்கங்கள் ரோஹிங்யா-முஸ்லீம்கள் படும் பாட்டிற்காக கண்டணங்களையும் அரசிற்கான வலியுறுத்தல்களையும் அறிவித்தவண்ணம் உள்ளனர். அத்தகைய அறிவிப்பில் ஒன்று கீழே உள்ளப் புகைப்படத்தில் உள்ளது.



 ஆனால், அவர்களால் ஓரளவிற்கேனும் அநீதிக்கு எதிராகப் பங்காற்ற இயலும் பிரச்சனையில் மெளணம் காக்கிறார்கள். இஸ்லாமிக்-ஸ்டேட்டின் கொலை, கொள்ளைக் கற்பழிப்புகளுக்கு எதிராக இவர்கள் பிரச்சாரம் செய்தால், அவைகள் பல முஸ்லீம்களைச் சென்றடைந்து பலன் விளைவிக்கும். இந்த இயக்கத்தினர்கள் மத்தியக் கிழக்கு நாடுகளிலும் இருப்பதால், இவர்களால் மிக எளிதாக பணியாற்ற இயலும். ஆனால் மெளணமாக உள்ளனர்.  (இஸ்லாமிக் ஸ்டேட்டின் இழிசெயல்களுக்கு ஆதார செய்தி:  http://www.bbc.com/news/world-middle-east-30573385 ).

 இஸ்லாமிக் ஸ்டேட் இயக்கத்தினர்கள் மாற்று மத ஆண்களை, அவர்கள்
கைதிகளாக‌ இருந்தாலும், அவர்களைக் கொலைச் செய்வதும், பெண்களைக் கற்பழிப்பதும் விற்பதுமாக உள்ளனர். இஸ்லாமிக் ஸ்டேட் இயக்கத்தினர் இந்த இழிசெயல்களை மதம்-சார்ந்த மார்க்க செயலாகச் செய்துவருகின்றனர். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னெவென்றால், இவர்களின் இந்தச் செயல்கள் அவர்களது தனிப்பட்ட இயக்கச் செயல்கள் அல்ல. அவைகள் அவர்கள் நம்பும் மதக் கொள்கையினைச் சார்ந்தது. இவ்வாறு தான் நபி அவர்களின் தோழர்கள் செய்ததாகவும் நபி அவர்கள் அதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்றும் அவர்களது புகாரி போன்ற புனிதமான புத்தகங்கள் கூறுவதால், இவ்வாறு கற்பழித்து அவர்கள் நம்பும் இஸ்லாத்தின் ப‌ணியினை ஆற்றுகின்றார்

 அந்த புகாரிப் போன்ற புத்தகத்திலுள்ள இதுபோன்ற ஹதீஸ்கள் (அதாவது வரலாற்றுக் குறிப்புக்கள்), அவர்கள் வரையறுத்த "ஆதாரப் பூர்வமானவை" எனும் வகையைச் சேர்ந்ததினால் இவர்களும் அத்தகையக் கற்பழிப்புகளை மார்க்கப் பணியெனக் கருதுகிறார்கள் போலும்.

இவர்கள் இந்தச் செயலைக் கண்டிக்கவேண்டும். தனது வளைகுடா-வாழ் தொண்டர்கள் மூலம் இந்தக் கண்டனத்தினை சவுதி அரசாங்கத்திற்குத் தெரிவிக்க வேண்டும். அத்தோடல்லாமல், அந்தக் கற்பழிப்பாளர்களுக்கு, இந்த கற்பழிப்புகள் மத-மார்க்க அம்சமில்லையென்றும்,அது பண்டைய அரபுக் கலாச்சார அம்சமென்றும் அறிவுறுத்தவேண்டும். அவ்வாறு செய்ய முன்வருவார்களா? மாட்டார்கள். செய்யவேண்டும் மென்றால் எப்போதோ செய்திருக்கவேண்டும். வேண்டுமானால், இவைகளை அவதூறு என்று கூறுவாரி மழுப்புவார்களேத் தவிர கண்டிக்க மாட்டார்கள்.

1 comment:

வேகநரி said...

நியாயமான கருத்து.