Tuesday, November 13, 2012

தன்னை அறிவாளி என்று நினைச்சிகிட்டா இப்படித்தான் உளர்வார்கள்: பிஜே ஒரு உதாரணம்

 பிஜே தனது இணையதளத்தில் ஒரு அபிப்ராயம் சொல்லி இருக்கிறார். லைசென்ஸ் இல்லாத சாஃட்வேரைப் பயன்படுத்தலாம் என்பதுதான் அவர் சொல்லி இருக்கும் அபிப்ராயம்.

 சாஃப்ட்வேரைக் காசுகொடுத்து வாங்கினவரிடமிருந்து காப்பிஎடுத்து, அவரது அனுமதியோடப் பயன்படுத்திக் கொள்ளலாமாம் ! காசு கொடுத்து வாங்கவேண்டியத் தேவையில்லையாம். ஏன்னாக்கா, சாஃட்வேரை வாங்கினவருக்கு அனைத்து உரிமையும் இருக்காம.

 நான் கேள்வி கேட்கிறேன்.

 (1) சாஃப்ட்வேரை காசு கொடுத்து வாங்கியவர் இன்னொருவர் காப்பியெடுக்க அனுமதிக்கும் போது, தனது கணினியில் அந்த சாஃட்வேரை அழித்தால்தானே எடுக்கப்பட்ட காப்பியின் பயன் பாட்டிற்கு பணம் கட்டப்பட்டிருக்கும். அழிக்கப்படாத நிலையில் எப்படி இது நியாயம் ஆகும். இந்த கூமுட்டை பதில் சொல்லமாட்டார் என்பது வேறுவிஷயம். அவரோட முட்டாள்தனத்தினை வெளிச்சம் போடுவதற்காக மட்டும்தான் இந்தப் பதிவு. புண்ணாக்குப் பாண்டி ஏதாவது பதில் சொல்லுதான்னுப் பார்ப்போம்.

(2) சாஃட்வேரை வாங்கியவர், ஒரு ஒப்பந்தத்தினை (லைசென்ஸ் ஒப்பந்தம்) ஏற்றுக்கொண்டுதானே அதைப் பயன்படுத்துகிறார். அந்த ஒப்பந்தத்தினை ஏற்றுக்கொண்டு, அதற்கு உட்பட்டுப் பயன்படுத்துவேனென்று கூறிவிட்டு அதைப் புறக்கணிப்பதுதான் நீ கற்பிக்கும் மதமா? அந்த ஒப்பந்தத்தினை ஏற்றுக் கோன்டவருக்கு எப்படி அனைத்து உரிமைகளும் உண்டு என்கிறாய்? புண்ணாக்குப்பாண்டி இதற்கும் பதி சொல்லமாட்டார். ஆனால் மக்கள் கவனிக்கவேண்டும்.

(இது போன்ற கேள்விகளால், புண்ணாக்குப் பாண்டி பிறகு தனது அபிப்ராயத்தினை மாற்ற வாய்ப்புள்ளது. இருப்பினும் அவரது மூடத்தனத்தின் உதாரணம் என்று சொல்வதற்காக, அவரது அந்த அபிப்ராயப்பக்கம் ஸ்கிரீன்ஷாட்டாக எனது சேமிக்கப்பட்டுள்ளது. பிஜே மாற்றினால், அந்த ஸ்கிரீன்ஷாட் இங்கே போடப்படும்.)

Thursday, October 11, 2012

இசைக்கு மொழி இல்லை என்பதற்கான நிரூபணம் இந்த கவ்வாலி உர்து பாடலுக்கு அர்த்தம் வேண்டிக் கிடக்கா உங்களுக்கு? வேண்டியதே இல்லை. எனக்கு எந்த வரியும் புரியவில்லை. புரியவேண்டும் என்றும் எனக்குத் தோனவே இல்லை. உங்களுக்கு?

நீங்கள் முற்றிலும் சில நிமிடங்கள் மற்ற எல்லாவற்றையும் மறக்க, இந்த வீடியோவினைப் பாருங்கள்.

நன்றி: நாகூர் இஸ்மாயில்


நோயுறுதலும் பிரார்த்தித்தலும்

 நம்மில் பலர் நோயுறுதலை இறைவனின் சோதனை எனக் கருதுகின்றனர். ஆனால் அது சோதனையாகவும் இருக்கலாம் அல்லது இறைவனின் தண்டனையாகவும் இருக்கலாம். நோயுறுதல் மட்டுமின்றி எந்த ஒரு துன்பமும் அவ்வாறுதான்.

 உதாரணத்திற்கு பிரபாகரனுக்கு நேர்ந்ததினை யாராவது சோதனை என்று சொல்வார்களா? பிரபாகரன் எப்படிப் பட்டவர் என எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

நோயுறுதலால், அல்லது எந்த ஒரு துன்பத்தினாலும், ஆன்மாவிற்கு தூய்மையே. உங்கள் புண்களின் வழியேதான் இறைவனின் ஒளி (நூர்) நுழைகிறது என்பது சூஃபிஞானி ரூமி அவர்களின் கூற்றாக ஒரு இடத்தில் படித்ததுண்டு. அந்த துன்பம் தண்டனையினால் நிகழ்கிறதோ அல்லது சோதனையால் நிகழ்கிறதோ. இரு வகையிலும் ஆன்மா தூய்மை அடைகிறது. துன்பக் காலங்களில் நாம் இறைவனுக்கு நெருக்கமானவர்களாக இருக்கிறோம்.

 ஒருவர் நோயுற்றுள்ளார் என மற்றவர்கள் கேட்டதும், அவருக்காகப் பிரார்த்திக்கிறோம் என அவர்கள் அறிவிக்கின்றனர். ஆனால் உண்மையில் இவ்வாறு பிரார்த்தித்தலென்பதில், பிரார்த்திப்பவரின் மனம் கசடற்றதாகவும் மாறலாம், அதே சம்யத்தில் பலப் புதிய கசுடுகள் வந்தும் சேரலாம்.

 நோயுற்றவரின் செயல்களை நாம் கவனிக்கவேண்டும். அவர் தகாத செயல்களைச் செய்திருந்தால், அதற்காக அவர் பாவமன்னிப்புத் தேடியவரா எனப்பார்க்க வேண்டும். இல்லாவிட்டால், "இறைவனே நீயே போதுமானவன்" என்று சொல்லிவிட்டு சென்றுவிடுவதே மேலானது. நோயுற்றவர் தகாத செயல்களைச் செய்பவர் என அறிந்தும் அதற்காக இன்னும் வருத்தமடையாமல் அச்செயல்களைச் செய்பவர் என அறிந்தும். அவருக்காக அவர் குணமாக வேண்டி பிரார்த்திப்பவர்களின் மனதில், நோயுற்றவர் மற்றவருக்கு செய்கின்ற குற்றங்கள் எல்லாம் "மிகச் சாதாரணவை" என்ற கசடு சேர்ந்து அந்தப் பிரார்த்திப்பவரும் தீயவர்களில் உள்ளவராகிறார்.

 தீயவன் ஒருவன் நோயுற்றால், 'அவன் தண்டனை அடைகிறான்' எனப் பார்த்து, பாடம் பெறவேண்டும். அந்தத் தீயவன் வேறு ஏதாவது காரணத்தினால் உங்களுக்கு வேண்டப்பட்டவராயின், அவ‌ர் திருந்தி குண‌ம‌டைய‌ பிரார்த்திக்க‌லாம். வெறும‌னே குண‌ம‌டைய‌ப் பிரார்த்தித்த‌லால், பிரார்த்திப்ப‌வ‌ருக்குத் தான் கேடு.

 பிஜே விஷ‌ய‌த்தில் நான் இதை நினைவுக் கூர்கிறேன்.

 முஜீப் என்ப‌வ‌ருட‌ன் நிக‌ழ்ந்த‌ விவாத‌த்தின் போது, விவாதத் தலைப்பிற்கு அப்பால் பட்டு, பிஜே அவ‌ர்க‌ள் முஜீபை, "பால் குடி ஹ‌தீஸ்" என்ப‌து ப‌ற்றிப் பேசி, முஜீபின் குடும்ப‌த்தினையெல்லாம் விவாத‌த்தில் இழுத்து இவ் இவ்விஷ‌ய‌த்தில் திமிர்த‌ன‌மாக‌ப் பேசிய‌த‌ற்கு இறைவ‌ன் புற‌த்திலிருந்தி எந்த த‌ண்ட‌ன‌யும் வ‌ராம‌ல் இருக்குமா?

 இத‌னை ஒரு உதார‌ண‌த்திற்கு தான் நினைவுக் கூறுகிறேன்.
 ஃபைஜி ஷா அவ‌ர்க‌ளை க‌த்தியைக் காட்டி மிர‌ட்டுவேன் என‌ மேடையில் ஆக்க்ஷ‌ன் செய்துக் காட்டிய‌த‌ற்கு, ஒருவ‌ரை அவ‌மான‌ப் ப‌டுத்துவ‌தைத் த‌னது உரிமை என‌க் க‌ருதிய‌வ‌ருக்கு, த‌ண்ட‌னை இறைவ‌ன் புற‌த்திலிருந்து வ‌ராம‌ல் இருக்குமா?

 ஒரு ஃபோட்டோவினை அடிப்ப‌டையாக‌க் கொண்டு, ஒருவ‌ரை இன்னொருவ‌ர் காலில் விழுந்த‌வ‌ர் என‌க் கூறி அவ‌மான‌ப் ப‌டுத்த‌ உரிமை எடுத்துக் கொண்ட‌வ‌ருக்கு த‌ண்ட‌னை வ‌ராம‌ல் இருக்குமா?

 இவைக‌ள் உதார‌ண‌ங்க‌ள்தான். உண்மையில் பிஜே இவைக‌ளுக்கு ம‌ன‌ம் வருந்தினால் நான் கூட‌ பிரார்த்திக்க‌ த‌யாராக‌வே உள்ளேன்.

Sunday, October 07, 2012

"குர் ஆனில் எழுத்துப்பிழை" விவாதத்தில் பிஜேக்கு பயங்கரமான‌ அடி


 பிஜே எனும் அந்தப் பொய்யனுக்கும் (இவர் பொய்யன் என நான் இரு வருடங்களுக்கு முன்பே நிரூபித்து வீடியோ ஆதரங்களுடன் பதிவு எழுதியுள்ளேன்) ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி மற்றும் அவரது நண்பர்கள் அணியினருக்கும் இடையே விவாதம் தூத்துக்குடியில் நடைபெற்றுள்ளது. விவாதத்தின் தலைப்பு: "குர்ஆனில் எழுத்துப்பிழைகளா?". ஜமாலி &  Co -ன் நிலைபாடு, "இல்லை" என்பதாகும். பொய்யன்-பிஜேயின் நிலைபாடு, "எழுத்துப் பிழை உண்டு" என்பதாகும். பொய்யன் பிஜேயுடன் வேறு யார் யாரோவும் கலந்து கொண்டு பிஜேக்கு சப்பைக்கட்டுக் கட்டிக்கொண்டிருந்தனர். ஜமாலி அவர்களுடன் முஹம்மது முஸ்தஃபா மஸ்லஹி என்பவர் அணிசேர்ந்திருந்தார்.

 இந்த விவாதத்தின் வீடியோக்களை பிஜே தனது இணையதளத்தில் ஏற்றியுள்ளார். ஆனால் வழமைக்கு மாறாக அதிக தம்பட்டமில்லாமல் ஏற்றியுள்ளார். முந்தைய, மற்றவர்களுடன் செய்த‌ விவாதங்களின் வீடியோக்களை தனது தளத்தில் ஏற்றும்போது அதிக இரைச்சல், தம்பட்டம், அறிவிப்புகள் என தனது தளத்தின் முதல் பக்கத்தினை நிரப்புவது அவரது வழக்கம். ஆனால் இந்த தடவை அவ்வாறு செய்யவில்லை. கீழே உள்ள ஸ்கிரீன்ஷாட்டினைக் கவனிக்க. இந்த வீடியோக்கள் பற்றி ஒரு ஓரத்தில் சிறிதாகப் போட்டுவிட்டு போயுள்ளார். அதைப் பற்றி தனது தளத்தின் மையப் பகுதிகளில் எந்த ஆரவாரமோ அல்லது அறிவிப்புகளோ செய்யவில்லை என்பதினைக் கவனிக்க. இது வழமைக்கு மாறானது. இதிலிருந்து இந்த விவாதத்தில், பிஜேயின் சுய மதிப்பீடே பாதாளத்தில் உள்ளது என்பது தெரிகிறது. இல்லாவிட்டால் ஏன் எந்த ஆராவாரமும் இல்லாமல் வீடியோக்களை ஏற்றவேண்டும்? சரி, மேலே செல்லும் முன் ஸ்கிரீன்ஷாட்டினைப் பார்த்து நான் சொன்னதினை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த வீடியோக்கப் பற்றி பிஜே போட்டுள்ள ஒரு ஓர குறிப்பினை பச்சை வண்ணக் கட்ட‌மிட்டுக் காட்டியுள்ளேன்.


பிஜே அப்படி என்னத் தான் அடிவாங்கினார் இந்த விவாதத்தில்? முழுமையாக எழுத எனக்கு நேரம் போதவில்லை. நீங்கள் அந்த வீடியோக்களைப் பார்க்கவேண்டும். அப்போதுதான் புரியும்.

 இருப்பினும் சில குறிப்புகள் கீழே உள்ளன.

1. "நுன்ஸி" எனும் அரபு வார்த்தை, "நுஸி" என்று குர்ஆனில் எழுதப்பட்டுள்ளது. ஆனால் அதை "நுன்ஸி" என்று அனைவரும் படிக்கிறார்கள். இதனை, எழுத்துப்பிழை என்று பிஜே சொல்கிறார். பிஜேக்கு எதிரணியில் அமர்ந்திருந்த முஸ்தஃபா என்பவர் இந்தக் குற்றச்சாட்டினைத் தகர்க்கிறார். "நுன்ஸி" எனும் வார்த்தையினை " நுஸி" என்று எழுதுவது அரபி இலக்கணத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதென்பதினைக் காட்டுகிறார். "முக்கண்ண" எனும் இலக்கண‌ நூலினை ஆதாரமாகக் காட்டுகிறார்.

2. பிஜேயின் மற்றொரு வாதம்: நுன்ஸி போன்ற பல வார்த்தைகள் மற்ற இடங்களில் " நுஸி" என்பது போலல்லாமல் பிழை இன்றி எழுதப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் மட்டும் நுஸி என்று பிழையாக இருப்பதால், அது பிழைதான். இது பிஜேயின் வாதம். இதற்கு முஸ்தஃபாவின் பதில்: நுஸி என்பதற்கு எழுத அனுமதி இருக்கு என்று இலக்கண புத்தகத்தினையே கொடுத்தோமே, மீண்டும் ஏன் அதைப் பிழை என்கிறாய் ?. இப்படி முஸ்தஃபா அவர்கள் கேட்டுவிட்டு, "ஒரு இடத்தில் மட்டும்" என்று பிஜே சொன்னதினை மறுக்கிறார். பல இடங்களில் "நுன்ஸி" போன்றமற்ற  வார்த்தைகள் " நுஸி" என்பது போல் எழுதப்பட்டுள்ளதினைப் பட்டியல் இடுகிறார். பற்பல வார்த்தைகள். இவைகளைப் பட்டியலிட்ட பிறகு, இவை அனைத்தும் அந்த "முக்கண்ண" எனும் இலக்கணப் புத்தகத்தில் உள்ள சட்டத்தின் படியே உள்ளன என நிரூபிக்கிறார். ஆனால் பிஜேயோ முஸ்தஃபா அவர்கள் கொடுத்தப் பட்டியலைத் தனக்கு சாதகமாகத் திருப்பி, இவை அனைத்தும் பிழைகள் என்கிறார். என்று கூறிவிட்டு முஸ்தஃபா தனது வேலையை சுலபமாக்கிவிட்டாரெனக் கூறுகிறார். ஆனால் முஸ்தஃபா அவர்கள் சுட்டிக் காட்டிய இலக்கண அனுமதியினைப் பற்றி ஏது பேசாமல் "முரட்டு முட்டாள்" என்று உட்கார்ந்திருந்தார் பிஜே. "முக்கண்ண" என்ற அந்த இலக்கணப் புத்தகத்தினைப் பற்றி எந்த வார்த்தையையும் பிஜே பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

3. "இபுசித்து" எனும் வார்த்தையில், "சீன்" எனும் அரபி எழுத்திற்கு பதிலாக "ஸாத்" எனும் அரபி எழுத்துப் போட்டு எழுதப்பட்டுள்ளதினைப் பிஜே பிழை என்கிறார். அவ்வாறு எழுத "லிஸான் அல் அராப்" எனும் இலக்கணப் புத்தகத்தில் அனுமதி உள்ளது என்பதினைச் சுட்டுகிறார் முஸ்தஃபா.

4. 786 பற்றிய விவாதம் அருமை. காணத்தவறாதீர்கள். ஜமாலி அவர்கள் பிஜேயைத் தோலுரிக்கிறார். பிஜேயும் அவரது ஆதரவாளர்களும் எந்த சமயத்திலும், "அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயரால்" என்று முழுமையாக எழுதமாட்டார்கள். அவர்கள் "அல்லாஹ்வின் திருப்பெயரால்" என்று மட்டும்தான் எழுதுவார்கள். ஜமாலி அவர்கள் அதனைச் சுட்டிக்காட்டி, பிஜே கும்பலின் அந்த செயல், இஸ்லாத்திற்கு முந்தைய மக்காவாசிகளின் செயல் எனச் சுட்டுவார்கள். பிஜே அதற்கு பதிலளிக்கும் போது அந்த மக்காவாசிகளின் அந்த செயலினை நபி அவர்கள் அனுமதித்தார்கள், எனவே அதைச் செய்கிறோம் எனக் கூறுவார். ஆனால் மக்காவாசிகள் "அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயரால்" என்று எழுத மறுக்கும் போதுதான் நபி அவர்கள், மக்காவாசிகளின் விருப்பப் படி, "அல்லாஹ்வின் திருப்பெயரால்" என்று எழுத அனுமதிப்பார்கள். ஆனால் நபியும் அவரது தோழர்களும் "அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயரால்" என்றுதான் எழுதினார்கள் என்று ஜமாலி அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

 இந்த விவாதத்தில், பிஜே அவ்வப்போது மூர்க்கனாகி, வெறி நாயை போல அடிக்கடி கோபம் கொண்டு, மற்றவர்களை மரியாதை இன்றி குதறுவதினை நீங்கள் கண்டு ரசிக்கலாம்.


Thursday, October 04, 2012

ஐன்ஸ்டீனின் "யூத எதிர்ப்பு வெறி" ("Antisemitism")

இஸ்ரேலுக்கு எதிராக யார் கருத்துக் கூறினாலும், அவர்களை "யூத எதிர்ப்பாளர்கள்" (Antisemitic) அன்று அழைப்பது இஸ்ரேல் மற்றும் அதன் ஆதரவாளர்களின் வழக்கம். ஒரு யூதர் இஸ்ரேலினை எதிர்த்துக் கருத்துக் கூறினால், அவரை, "தன்னைத்தானே வெறுக்கும் யூதன்" என்று அழைப்பார்கள் இஸ்ரேல் ஆதரவாளர்கள். அந்த வகையில், "தன்னைத் தானே எதிர்க்கும் யூதர்" ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

அவர் எழுதியக் கடிதம் ஒன்று கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது


Thanks: http://angryarab.blogspot.com/2012/10/albert-einstein-on-israeli-terrorism.html

Monday, October 01, 2012

இஸ்ரேலிய மொஸாத் உளவுத்துறையின் திறமைஈரானின் அணுஆயுதத்தின் வரைபடத்தினை இஸ்ரேலிய மொஸாத் உளவுத்துறை ரகசியமாக பெற்று இஸ்ரேலிய பிரதம மந்திரி நெத்தான்யாஹுவுக்கு அளித்தது. பிரதம மந்திரி நெத்தான்யாஹுவும் அந்த வரைபடத்தினை ஐக்கிய நாட்டு சபையில் காட்டினார். புகைப்படம் கீழே:


Thanks: http://www.angryarab.blogspot.com/2012/09/iranian-bomb-design.html


Saturday, September 29, 2012

அப்துல் நாசர் மதனியும், கோவை குண்டுவெடி பாஷாவும்

 அப்துல் நாசர் மதனி அவர்கள் சிறையில் படும் இன்னல்களைப் பற்றி அவர் கொடுத்தப் பேட்டியினைப் படிக்க நேர்ந்தது. இப்போது எனது கல்லூரி வாழ்க்கையினைத் திரும்பிப்பார்க்கிறேன்.

 அவர் படும் இன்னல்களை நான் கடவுளின் சோதனை என்று கருதுவதை விட, கடவுளின் தண்டனை என்றுதான் பார்க்கிறேன். அவருக்கும் கோவை குண்டு வெடிப்பிற்கும் சம்பந்தம் இருக்கா இல்லையா என எனக்குத் தெரியாது. ஆனால் அவர் ஒரு டெமாகாக் (Demagogue) எனக்குத்தெரியும். பிஜே போன்ற ஒரு டெமாகாக். அப்துல் நாசர் மதனி அவர்களின் தற்போதைய நிலை பற்றி அனுதாபப்படுகிறேன், ஆனால் இறைவனின் ஆற்றலையும் நான் கவனிக்கிறேன். 1993-96 ஆகிய வருடங்களில், "PDP-அயோத்தியை நோக்கி" என கொட்டை எழுத்துக்களில் எழுதப்பட்ட நோட்டீஸுகளை நான் நினைவுக் கூறுகிறேன். மக்களைத் தூண்டிவிடுதல், "உரிமை" எனப் போலியாக சித்தரித்து மக்களை தனது அடையாளத்துக்காக இரத்தம் சிந்தத் தூண்டுதல் ஆகியவைகளுக்காக இறைவன் கோபம் கொள்ளக் கூடியவன் எனத் தெரிந்துகொள்கிறேன்.

 குண்டுவெடி புகழ் பாஷா அவர்களும் கஷ்டப் படுகிறார். அவர் உண்மையிலேயே மனம் வருந்துபவராக இருந்தால், இறைவன் அவரை மன்னிக்க வேண்டுகிறேன். ஆனால் "அல் உம்மா" வின் திமிர்தனமான் செயல்களை நான் நினைவுகூறுகிறேன். சென்னையில் பல்லவன் பேருந்தின் உள்புறங்களில், தனது மதத்தின் நூலில் உள்ள வாசகங்களை  நோட்டிஸாக (அதுவும் ஸ்டிக்கர் நோட்டீஸாக‌) ஒட்டிச் சென்ற திமிர்தனத்தினை நான் அப்போதே நினைத்து உள்ளுக்குள் மலைத்தேன். அந்த வாசங்களின் மீது யாரும் கேலியாக ஏதும் எழுத மாட்டார்களா? அல்லது மற்றவர்களும் ஏதாவது கண்டித்து எழுதமாட்டார்களா? என்ற சிந்தனையெல்லாம் கிடையாது.

 சமுதாய ஒழுங்கினைச் சீர்கெடுத்து இரத்தம் சிந்துவதற்காக மக்களின் மனதுகளை தயார்படுத்தும் டெமாகாக்குகள் இறைவனின் கோபத்திற்கு ஆளாவார்கள் எனப் படிப்பினைப் பெறுகிறேன். அப்துல் நாசர் மதனீயின் பேட்டியினை சில வலைப்பதிவுகளில் இட்டப் பின்னூட்டங்கள் வாயிலாகப் படிக்கக் கொடுத்த UNMAIKAL எனும் நபருக்கு நன்றி

Friday, September 07, 2012

"நஜ்த்" எனும் நிலப் பகுதி பற்றிய பீஜேயின் ஃபத்வா

"புகாரி" எனும் ஹதீஸ் புத்தகத்தில் தொகுக்கப்பட்ட ஒரு ஹதீஸின் படி, நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையில் கீழே சொல்லப்பட்டுள்ளதைப் போல ஒரு சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது:

"யா அல்லாஹ் "ஷாம்" (டமாஸ்கஸ்) பிரதேசத்தையும், "ஏமன்" எனும் பிரதேசத்தையும் செழிக்கச் செய்வாயாக" என நபிகள் நாயகம் வாழ்த்தும் போது, அங்கிருந்த ஒருவர் தனது "நஜ்த்" எனும் பகுதியையும் நபிகள் நாயகம் வாழ்த்த வலியுறித்துகிறார். நபிகள் நாயகமோ அவரை சட்டை செய்யாமல் மீண்டும் ஷாமையும் ஏமனையும் மட்டுமே வாழ்த்துகிறார்கள். அதனைக் கேட்ட அவர் மீண்டும் தனது "நஜ்த்" பகுதியை வாழ்த்த வலியுறுத்த, நபிகள் நாயகம் மறுத்துவிடுகிறார்கள். மேலும் நஜ்த் பகுதி பூகம்பம், குழப்பங்கள் மற்றும் சைத்தானின் கொம்பு ஆகியவற்றின் இருப்பிடம் என முன்னறிவிப்பு செய்கிறார்கள்.

இந்த ஹதீஸில் வரும் "நஜ்த்" எனும் பகுதி என்பது எது என்று விக்கிப்பீடியாவில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்: http://en.wikipedia.org/wiki/Najd

இது அரேபிய தீபகற்பத்தில் அமைந்துள்ள பீடபூமி. நமது நாட்டு தக்காணப் பீடபூமி போல அரேபியாவில் அமைந்துள்ள ஒரு பீடபூமி. சவுதி அரேபியாவின் தலை நகரான "ரியாத்" எனும் நகரம் இந்தப் பீடபூமியில் அமைந்துள்ளது. மேலும் நபிகள் நாயகம் முன்னறிவிப்பு செய்தது இந்தப் பகுதியைப் பற்றிதான் என்பதற்கு வலுச்சேர்க்க மேலும் ஒரு காரணம் மற்றொரு ஹதீஸ் ஆகும்.

புகாரி மற்றும் முஸ்லீம் எனும் ஹதீஸ் புத்தகங்களில் தொகுக்கப்பட்ட ஹதீஸ்கள்படி நபிகள் நாயகம் அவர்கள் கிழக்குத் திசையினைச் சுட்டிக்காட்டி அது குழப்பங்களின் பிறப்பிடம் என அறிவித்துள்ளார்கள் (ஆதாரம்: சஹீஹ் புகாரி, பகுதி 9, புத்தகம் 88, எண் 213. மற்றொரு ஆதாரம்: சஹீஹ் முஸ்லிம், புத்தகம் 41, எண் 6939)

நபிகள் நாயகம் வாழ்ந்த மதீனாவிற்கு நேர் கிழக்கே இருப்பது ரியாத் எனும் நகரம் ஆகும். தற்போதயை சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத் எனும் அதே ரியாத் தான். "கூகிள் மேப்"பின் வரைபடத்தினைக் கீழேக் காட்டியுள்ளேன். கவனிக்க.


எனவே நஜ்த் எனும் பகுதி ரியாத் அமைந்துள்ள பீடபூமீயே ஆகும் எனத்தெரிகிறது. மற்றப் பீடபூமியாக இருக்க வாய்ப்பு இல்லை.

இந்தப் பகுதியிலிருந்துதான் நபிகள் அவர்கள் காலத்திலேயே, "முஸ்லைமா" எனப் பெயர் உடையவன் தன்னை "நபிகள்" எனப் பிரகடனம் செய்து, பின்னர் அபூபக்கர் அவர்களின் ஆட்சியில் மாபெரும் போரினைப் புரிந்து பலர் இறப்புக்குக் காரணமாக இருந்தவர்.

மேலும், இந்தப் பகுதியிலிருந்து தான் நபிகள் நாயகத்தின் பேரனான ஹுசைன் எனும் ஒரு அமைதியானவரைக் கொன்ற யஜீதினைப் புகழ்ந்து கொள்கைகள் வகுத்த வஹ்ஹாபிகளின் குருவான "முகம்மது இப்னுஅப்துல் வஹ்ஹாப்" தோன்றினார். அந்த வஹ்ஹாபிகள் ஆட்சி செய்யும் நகர்தான் ரியாத். மேலும் சவுதி அரசின் ஆஸ்தான குருமார்கள் அனைவரும் இந்தப் பகுதியில் இருந்துதான் வருபவர்கள். அவர்கள் "இப்னு பாஸ்" எனப்படும் காலஞ்சென்ற குருவாக இருந்தாலும் சரி, தற்போதைய குருவாக இருந்தாலும் சரி. சுருங்கச் சொன்னால், இந்த நஜ்த் பகுதியே அரசியல் ரீதியிலும் மதக்கொள்கை ரீதியிலும் குல அடிப்படையிலும் சவுதி அரேபியாவை ஆட்சி செய்து வருகிறது.

இந்தப் பகுதிப் பற்றி பிஜே ஒரு ஃபத்வா போட்டுள்ளார். "நஜ்த்" எனும் அந்தப் பகுதி ஈராக் என்றுக் கூறுகிறார். பிஜே, தனக்கு ஆங்கிலம் தெரியாது என்று சொல்லிக்கொண்டே, ஆங்கில மொழியில் அமைந்த விக்கிப்பீடியாவில் கூறப்பட்டுள்ள செய்தியையே தனது ஃபத்வா எனத் தனது இணையதளத்தில் பிஜே போட்டுள்ளார். இந்த ஹதீஸ் பற்றிய விக்கிப்பீடியாப் பக்கம்: http://en.wikipedia.org/wiki/Hadith_of_Najd

இந்த விக்கிப் பீடியா பக்கத்தில் கூறப்பட்டுள்ள செய்தியையும், அவர் போட்டுள்ள ஃபத்வாவையும் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள்.

 (மேலும் படிக்கும் முன் ஒரு குறிப்பு: எனது இந்த இணையதளத்தில் பழைய பதிவுகளில் பிஜே "ஒரு பொய்யன்" என வீடியோ ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவரைப் பொய்யன் என்றே இந்தப் பதிவிலும் அழைக்கப்படுகிறது. பிஜே இதற்கு தகுந்த முறையில் காரணங்களைக் கூறி ஆட்சேபனைத் தெரிவித்தாலோ அல்லது எனது நிரூபணம் தவறு என அவர் நிரூபித்தாலோ, நான் அவரை பொய்யன் என அழைப்பதை விட்டு விடுவேன் என அறிவிக்கிறேன்.)

அடப் பொய்யா உன்னிடம் சிலக் கேள்விகள்:

1. ஈராக் என்பதுதான் நஜ்த் என்றால் ஈராக் நாடானது, நபிகள் நாயகம் வாழ்ந்த மதினாவிற்குக் கிழக்குப் பக்கம் இல்லையே! பதில் சொல்.

2. ரியாத் அமைந்துள்ள நஜ்த் (பீடபூமி) மதினாவிற்கு கிழக்கே இருக்கிற பீடபூமியாக இருக்கே! அப்போ நபிகள் நாயகம் சுட்டிக்காட்டிய கிழக்குப் பகுதி ரியாத் தானே! பதில் சொல். இந்த கேள்வியைச் சற்று உடைத்துக் கேட்கிறேன்: ரியாத் இருக்கிறப் பகுதி மேட்டு நிலம் என்று சொல்லக் கூடிய உயரமான பகுதியா இல்லையா ? (அந்த பகுதி கடல் மட்டத்திற்கு மேலே 1500 மீட்டர்கள் வரை உயர்ந்துள்ளது. அப்புறம், அது மதினாவிற்கு கிழக்கே இருக்கா இல்லையா?

3. இப்ன் ஹாஜர் சொல்லுகிறார் என்பதற்காக ஈராக் தான் நஜ்த் என்கிறாயே, அவர் என்ன ஆதாரம் சொன்னார் என்று சொன்னாயா ? ஈராக்கில் பூகம்பம் வருவதால் அதுதான் நஜ்த் என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கவாதமா ? "பூகம்பம்" என்றால் உண்மையான பூகம்பம் தானா ? சரி வைத்துக்கொள்வோம். "சாத்தானின் கொம்பு" என்றால் ஈராக்கில் சாத்தானின் "கொம்பு" அதாவது உண்மையான கொம்பு ஒன்று அல்லவா அங்கு உருவாகி இருக்க வேண்டும். இதிலிருந்து பூகம்பம் என்றால் உண்மையான " நில நடுக்கம்" என சொல்லப்படுகிற பூகம்பம் இல்லை என்றுத் தெரியவில்லையா? அது கொள்கை மற்றும் பிரச்சனைகள் சம்பந்தமான சொல்லாடல் என்று உனக்குப் புரியத் தெரியவில்லையா?

4. சரி, இப்னு கத்தாபி மற்றும் இப்னு ஹாஜர் தெளிவு படுத்தியுள்ளனர் என்று சொன்னாயே, அவர்கள் கூறிய "அந்த தெளிவு படுத்தலில்" ஈராக் மதீனாவிற்கு கிழக்கே உள்ளது என்று கூறியுள்ளனரே! அது சரியா தவறா என்று பார்த்தாயா? இப்போதாவது மேப்பினை எடுத்து வைத்து பார்த்து தெரிந்து கொள்வாயா?

5. மேலும் நீ எழுதுகிறாய்: "குழப்பங்களும் பிரச்சனைகளும் வழி கெட்டக் கொள்கைகளும் ஈராக்கில் தான் முதலில் தோன்றின." அடப் பொய்யா, "முஸ்லைமா" என்பவன் நபிகள் நாயகம் காலத்திலேயே பிரச்சனை செய்தானே, அவன் ஈராக் பகுதியையா சேர்ந்தவன் ? சவுதி அரேபியா தலை நகரான ரியாத் அங்கம் வகிக்கும் நஜ்த் பகுதியைத் தானே சேர்ந்தவன். பதில் சொல்லு.

Friday, August 24, 2012

"பிஜே" என்பவருக்காகக் குழிதோண்டியாச்சா இல்லையா?

 பிஜே எனப்படும் பி ஜெயினுல் ஆபிதின் தனது இணையதளத்தில் ஒரு அறிவிப்பு செய்துள்ளார்: "ஷைஃபுத்தீன் ரஷாதியுடன் இன்ஷா அல்லாஹ் 26.8.2012 அன்று விவாத ஒப்பந்தம் நடைபெறவுள்ளது. விவாத ஒப்பந்தத்தில் பி.ஜே அவர்கள் கலந்து கொள்கிறார்கள்". இப்படி ஒரு அறிவிப்பினைப் போட்டுள்ளார்.

 மீண்டும் கவனிக்க: "பி.ஜே அவர்கள் கலந்து கொள்கிறார்கள்" என்று பன்மையுடன் கூறப்பட்டுள்ளது. பிஜே என்றாவது மற்றவர்களை பன்மையில் கூறியுள்ளாரா? ரஷாதி என்பவருடைய பேரைக் கூறும்போது கூட ஒருமையில் தான் கூறுகிறார். அதுவும் அதே வாக்கியத்தில் கூறுகிறார். "ரஷாதி அவர்களுடன்" என்று அவர் கூறவில்லை என்பதினைக் கவனிக்க. ஆனால் தனக்கு மட்டும் "அவர்கள்" என்று மரியாதைவேண்டுமாம். சரி, ரஷாதியை விட்டுத்தள்ளுங்கள். அவர் மதிக்கும் கல்வியாளர்களையாவது, எப்போதாவது, அவர் "அவர்கள்" என்று பன்மையில் அழைத்திருக்கிறாரா? உதாரணத்திற்கு, இப்னு தைமிய்யாவை, "இப்னு தைமிய்யா அவர்கள்" என்று அழைத்திருக்கிறாரா ?

 நான் மேலேக் கூறியதை சும்மா போகிற போக்கில் தான் கூறினேன். நான் சொல்ல வந்த விஷயம் வேறு.

அதே இணையதளப்பக்கத்தில் சற்று கீழே "பீஜேயின் முக்கிய அறிவிப்பு" என்று ஒன்று எழுதப்பட்டுள்ளது. தனது "தனிப்பட்டக் காரணங்களால்" விடுப்பு எடுத்துக்கொள்வது பற்றி அறிவிப்பு எழுதப்பட்டுள்ளது. அது என்ன "தனிப்பட்ட காரணங்கள்"? அந்த தனிப்பட்டக் காரணத்தினைப் பற்றி, அவர் அந்த அறிவிப்பில் கூறியதைப் போல, ஏற்கனவே ஒரு அறிவிப்பு செய்துள்ளார். நான் கூட அந்த பழைய அறிவிப்பினைப் பற்றி ஒரு பதிவு ஒன்று போட்டேன். அவரது தனிப்பட்டக் காரணம் என்பது அவரது உடல்-நிலைக் குறைபாடு என்பதுதான்.

 தனது உடல்-நிலைக் குறைபாடு பற்றி அவர் அறிவித்து சில மாதங்கள் கடந்த பிறகும் அவருக்கு அந்த காரணத்தினால் விடுப்பு எடுக்க வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து என்ன தெரிகிரதென்றால், அவருடைய வியாதி குறையவில்லை என்று தெரிகிறது. எனவே நான் எனது முந்தையப் பதிவில் கூறியது போல, ஆர்வலர்கள் மம்பட்டியை எடுத்து குழுதோண்ட ஆரம்பிக்கலாம்.

Friday, August 17, 2012

இவர்தான் சவுதி ராஜாவாம்இந்த ஃபோட்டோவில் பாருங்கள். தட்டுத்தடுமாறி நடக்கிறார். ஆனால் பதவி ஆசை விடவில்லை. இவர் மட்டுமல்ல. இவருக்கு பின்னால் வரிசையில் நின்று கொண்டிருக்கும் இளவரசர்களெல்லாம் கிழட்டு பன்றிகள். பதவி ஆசை. ராஜா சீட்டு எப்போ காலியாகும் என்று எதிர்பார்த்து தள்ளாத வயசிலேயும் தனது உயிரைப் பிடித்து வைத்துக்கொண்டு நிற்கின்றனர். வரிசையில் நின்று கொண்டிருந்தவர்களில் இரண்டு இளவரசர்கள் ஏற்கனவே மண்டையப் போட்டுவிட்டனர். அவர்களின் பெயர்கள் சுல்தான் மற்றும் நாயஃப்.


இதுக்கு யாரைக் குத்தம் சொல்லனும்னா. 'சவுத்' என்னும் ராஜாவைத்தான் குத்தம் சொல்லனும். பல மனைவிகள் மூலமாக அவர் உருவாக்கிய எலி-வளைதான் இன்றைய சவுதி அரசக்குடும்பம்.

Image taken from: http://www.presstv.ir/detail/2012/08/17/256681/saudi-shame-on-islamic-world/

ஒரு தற்செயலான விஷயம் என்னெவென்றால், இந்த பிரஸ்டிவி இணையதளத்தின் கட்டுரையின் தலைப்பு நான் இந்த வலைப்பதிவில் இட்ட‌ ஒரு சமீபத்திய தமிழ் இடுகையின் தலைப்பு: http://vilambi.blogspot.com/2012/04/blog-post_12.html

Saturday, August 11, 2012

அறிவுத்-திருடலில் பிடிபட்ட ஃபரீத் ஜக்காரியா,

 நமது தெற்காசியா மக்களுக்கு, "அறிவுத்-திருடல்" (plagiarism) எனப்படும் காப்பி-பேஸ்ட் ஒரு குற்றம் எனத் தெரிவதில்லை. இதற்குக் காரனம், இதனைக் குற்றம் எனக் கருதும் பாங்கு பள்ளிகளில் தெரியப்படுத்தப்படுவதில்லை. இதன் காரணமாக இந்த தெற்காசிய மக்கள், அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்தாலும் இதே குற்றத்தினைச் செய்து பிடிபட்டுவிடுகிறார்கள்.

 காவ்யா விஸ்வனாதன் என்ற எழுத்தாளருக்குப் பிறகு இப்போது பிடிபட்டிருப்பவர் ஃபரீத் ஜக்காரியா என்பவர். ஃபரீத் ஜக்காரியா, அமெரிக்காவின் அறிவுஜீவிகளில் ஒருவராகக் கருதப்பட்டவர். இந்தியாவில் பிறந்தவர். சி.என்.என் தொலைக்காட்சியில் பல மிகப்பெரிய வித்தகர்களை பேட்டிக்காணும் ஒரு பெரும்புகழடைந்த பத்திரிக்கையாளர். அரசியல் ஞானம் உடையவர் எனக் கருதப்பட்டு வந்தவர்.

 இவர் இப்போது அறிவுத்திருடல் குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ளதோடல்லாமல், சி-என்-என் நிறுவனத்தால் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஃபரீத் ஜக்காரியாவும் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

 மேலே உயந்துவிட்டால் மிகக் கவனமாக இருக்கவேண்டும் எனும் பாடம் இதிலிருந்து தெளிவாகிறது. ஃபரீத் ஜக்காரியா சொல்லவேண்டியதெல்லாம் சொல்லி கருத்துக்கள் தீர்ந்தவுடன், மீண்டும் அரங்கில் இருக்கவேண்டிய நிர்பந்தத்தில் இந்தக் குற்றத்தினைச் செய்திருக்கவேண்டும். சுயமாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்றால் அமைதியாக இருக்கவேண்டும். அல்லது "அவர் சொல்கிறார்" என்றுக் கூறி சுயமாகக் கூறியவர் யாரோ அவரது பெயரினைக் குறிப்பிட்டுவிடவேண்டும்.

 முக்கியமாக அறிவுத்-திருடல் பற்றிய‌ பாடம்  கல்லூரிகளில் வழங்கப்பட வேண்டும். சமீபத்தில் சி என் ஆர் ராவ் என்ற புகழ்பெற்ற விஞ்ஞானியே நமது நாட்டில் இந்த குற்றச்சாட்டுக்கு ஆளானார் என்பது கருத்தில் கொள்ளவேண்டியது.

Friday, August 10, 2012

இஸ்லாமிய நாடுகளில் சிறந்தவை துருக்கியும் ஈரானுமே


 அறிவியல் துறைகளில் ஆராய்ச்சி செய்பவர்கள் ஒரு விஷயத்தினைக் கவனிக்கலாம். அறிவியல்ஆராய்ச்சி வெளியீடுகளில், இஸ்லாமிய நாடுகளின் பங்களிப்பு மிக மிகக் குறைவு என்றாலும், அந்த இஸ்லாமிய நாடுகளில் சிறந்து விளங்குபவை ஈரானும் துருக்கியும்தான். அதற்கு அடுத்த நிலையில் எகிப்தியர்களைக் கருத்தில் கொள்ளலாம். ஆனால் வஹ்ஹாபிசம் ஆட்சி செய்யும் நாடுகள் ஒன்று அல்லது இரண்டினைக் கூடப் பார்க்க முடியாது. இத்தனைக்கும், வஹ்ஹாபிச நாடான சவுதி அரேபியா பல பில்லியன் செலவில் ஒரு பல்கலைக் கழகத்தினைக் கட்டிய பிறகும் இந்த நிலை நீடிக்கிறது.

 இதை இந்த நேரத்தில் நான் நினைவுக் கூறுவதற்க்கு காரணம், ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் பதக்கப் பட்டியல். ஈரான் 4 தங்கமும் 4 வெள்ளிகளும் ஒரு வெங்கலமும் பெற்றுள்ளது. ஒரு ஒப்பீட்டிற்காக சவுதி அரேபியாவை நாம் கருத்தில் கொள்வோமானால், அது 0000000000 தங்கப் பதக்கங்களையும், அதே அளவிற்கான வெள்ளிப்பதக்கங்களையும் ஒரு வெங்கலத்தினையும் பெற்றுள்ளது.

 ஒரு ஆண் தனது ஆளுமைத் திறனைக் காட்டுவதற்கு ஊக்கமளிப்பது பெண்களின் முன்னிலையில் கிடைக்கும் பேரே என்று மன ரீதியான காரணியாக அடையாளம் காணலாம். அது இயற்கையே. அந்த காரணிகள் வஹ்ஹாபிச நாடுகளில் இல்லாத பட்சத்தில், எந்த ஆணும் தனது திறனை வெளிப்படுத்த காரணமற்று போய்விடுவான். தன்னை மேம்படுத்தவும் மாட்டான்.

 இந்தக் காரணம் விளையாட்டுத்துறையில் மட்டுமல்லாமல், கல்வி மற்றும் ஆராய்சித்துறையிலும் வஹ்ஹாபிய நாடுகள் பின் தங்குவதினை விளக்குகிறது. ஆஃபிரிக்க நாடுகளைப் போலல்லாமல், பண வசதிகள் இருந்தும் இந்த நாட்டு மக்களுக்கு தனது திறனை வெளிக்கொணரும் ஆர்வம் இல்லாமல் இருப்பது ஆச்சரியப்படத்தக்கதொன்றல்ல.

Monday, August 06, 2012

அரபு தேசங்களின் "வசந்தம்"-மும் நம் உள்ளூர் புண்ணாக்குகளும்

பல அரபு நாடுகளில், "அரபு-வசந்தம்" என்று செல்லமாக அழைக்கப்படும் புரட்சிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. துனீசியா, எகிப்து, லிபியா ஆகிய நாடுகளில் ஆட்சிகள் தூக்கியெறியப்பட்டு புதிய ஆட்சிகள் வந்துள்ளன.

 நம் உள்ளூர் முஸ்லீம் மக்களுக்கு, அந்தப் புரட்களைப் பற்றி சரியான புரிதல்கள் இல்லை என்பதினை, அவர்கள் பகிர்ந்து கொள்ளும் கருத்துக்கள் அடிப்படையில் அறியலாம். இதையே இந்த வெள்ளைக்-கைலி மக்களின் இணையதளங்களைப் படிக்கும்போதும் அறியலாம்.

 பலர் இந்த புரட்சிகளை, "கருப்பு" அல்லது "வெள்ளை" என்ற வகையில் இருப்பது போல பார்க்கிறார்கள். நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும் இடையேயான போர் என்று கருதிவிடுகிறார்கள். இது ஒரு சில நாடுகளில்தான் உண்மை. எகிப்தினைப் பொறுத்தவரை உண்மை. ஆனால் சிரியாவினைப் பொறுத்தவரை உண்மைக் கிடையாது.

 மேலும் பலருக்கு இந்தப் புரட்சிகளின் பிண்ணணி இனவாதமென்று கருதுமளவுக்கு அறியாமையுள்ளது. பஹ்ரைனில் அந்த ஆட்சிக்கு எதிரான புரட்சியினை, "ஷியாக்களின் புரட்சி" என்று ஊடகங்கள் சித்தரித்ததிலிருந்து, அவர்கள் அந்தப் புரட்சியின் நேர்மைதன்மையினை மறைக்க முயல்வதினை அறியலாம். பஹ்ரைனின் ஆட்சி ஒரு இன கீழ்தரமான இனவெறி பிடித்த ஆட்சி. பஹ்ரைனின் பெரும்பான்மையான மக்கள் ஷியாக்கள். அவர்களை ஓரம் கட்டிவிட்டு இந்தியா பாக்கிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து ரவுடிகளை இறக்குமதி செய்து, போலிஸ்காரர்களாக ஆக்கி அந்த நாட்டுக் குடிமக்களை பாடோ படுத்தும் நாடு. அவர்கள் ஷியாக்கள் எனும் ஒரே காரணத்தினால். நமது உள்ளூர் வெள்ளைக்கைலி புண்ணாக்குகளும் அதே காரனத்தினால், பஹ்ரைன் அரசினை ஒரு புனிதமான அரசாக காண்கின்றன.

 மேலும் இந்த மக்களுக்கு (அதாவது நமதூரைச் சேர்ந்த பல‌ முஸ்லீம்களுக்கு) கடாஃபி மீது ஒரு பெருமதிப்பு. அவரை அமெரிக்காவின் எதிரியாகக் கருதி அவர் மீது மதிப்புக் கொண்டுள்ளனர். ஆனால் இந்த கூமுட்டைகளுக்கு, கடாஃபி மேற்குலகின் அபிமானியாக பிற்காலத்தின் ஆனாரென்பது தெரியாது. க‌டாஃபி த‌ன‌து குடும்பத்தின், மற்றும் குல‌த்தின் ந‌ல‌னுக்காக‌ ஆட்சி செய்துவந்த‌ ச‌ர்வாதிகாரி. அவ‌ர் ஒரு ப‌ழ‌ங்குடிப் பிரிவின் த‌லைவ‌ர். அவ‌ர் நாட்டின் த‌லைவராக‌ இருக்க‌ த‌குதிய‌ற்ற‌வ‌ர். மேலும் அவ‌ர‌து ஆட்சி அவரது சுய‌த‌ம்ப‌ட்ட‌த்தின் காட்சிய‌க‌மாக‌ இருந்த‌து. ஆனால் அதே ச‌ம‌ய‌த்தில் புர‌ட்சியாள‌ர்களின் தலைவர்கள் ஒன்றும் புனித‌ர்க‌ளில்லை. அந்த‌ புர‌ட்சியாள‌ர்களின் தலைவர்கள் மேற்குல‌ நாடுக‌ளுட‌ன் ஒப்ப‌ந்த‌ம் செய்துகொண்ட‌தாலேயே, மேற்குல‌க‌ம் அந்த‌ப் புர‌ட்சியாள‌ர்க‌ளுக்கு உத‌வி செய்த‌ன‌. மேலும் க‌டாஃபி என்ன‌தான் மேற்குல‌கிற்கு ஆத‌ர‌வாள‌ராக‌ மாறி இருந்தாலும், ச‌வுதி அள‌விற்கோ அல்ல‌து ஜோர்டான் அள‌விற்கோ அல்ல‌து க‌த்தார் அள‌விற்கோ மாறவில்லை.

 ஏம‌ன் எனும் நாட்டிலும் புர‌ட்சி. ச‌வுதி வ‌ஹ்ஹாபிக‌ள் ஏம‌ன் நாட்டு அர‌சுக்கு ஆத‌ர‌வு. ம‌க்க‌ள் போராடுகிறார்க‌ள். உள்ளூர் த‌வ்கீது ஜ‌மாத்து புண்ணாக்குக‌ளுக்கு ஏம‌ன் ப‌ற்றி அவ்வ‌ள‌வாக‌ அக்க‌றைக் கிடையாது. கார‌ண‌ம் அது ஒரு ஏழை நாடு. அந்த‌ ஜ‌மாத்துக‌ளுக்கு ப‌ண‌ம் அனுப்புவோர்க‌ள் அந்த‌ நாட்டில் இல்லை.

 த‌ற்போது சிரியா. உல‌க‌ ஊட‌க‌ங்க‌ள், அங்கு நடக்கும் போராட்டத்திற்கு "இன‌வாத‌ம்" எனும் பெய‌ரைச் சூட்டுகின்ற‌ன‌. சிரிய‌ அதிப‌ர் ஆசாத் "அலாவி" எனும் பிரிவினைச் சேர்ந்த‌வ‌ர். அத‌னால் அவ‌ர் பெரும்பான்மையான‌ "சுன்ன‌த்" பிரிவினைச் சேர்ந்த‌ ம‌க்க‌ளை அட‌க்கியாள்கிறார் என்று அந்த‌ ஊட‌க‌ங்க‌ள் வ‌ண்ண‌ம் தீட்டுகின்ற‌ன‌. ஆனால் உண்மையில், சிரியா இஸ்ரேலுக்கு எதிரான‌ நாடு என்ப‌தாலேயே மேற்குல‌க‌ம் ஆசாத்துக்கு எதிராக‌ உள்ள‌ன‌.

 வ‌ஹ்ஹாபிய‌ அர‌சான‌ ச‌வுதி அரேபியாவோ, இஸ்ரேலுக்கு எதிராக‌ சிரியா இருப்ப‌தாலும், ஈரானிட‌ம் ந‌ட்புற‌வில் இருப்ப‌தாலும், சிரியாவின் ஆசாத்தினைக் க‌விழ்க்க‌ ஐக்கிய‌ நாட்டு ச‌பை மூல‌மும், ஆயுத‌ங்க‌ள் ம‌ற்றும் ப‌ண‌ உத‌விக‌ளை புர‌ட்சியாள‌ர்க‌ளுக்கு அனுப்புவ‌த‌ன் மூல‌மும் ப‌ங்காற்றுகிற‌து.  இஸ்ரேல் தூத‌ர‌க‌ங்க‌ளான‌ த‌வ்கீது ஜ‌மாத்துக‌ள், சிரியாவினைக் க‌ண்டித்து வெகு சீக்கிர‌ம் புண்ணாக்கு அறிக்கைக‌ள் விடுவார்க‌ள் என‌ எதிர்பார்க்க‌லாம்

Monday, April 16, 2012

ஜப்பான் கார் மாடல்கள் தமிழ் பெயருடன்

தமிழில் "ஊர்வான்" என்றால் ஊர்ந்து சொல்லக் கூடியவன் என்று பொருள் கொள்ளலாம். இந்தத் தமிழ் வார்த்தை வரும்படி நிஸ்ஸான் வண்டி ஒன்றின் மாடல் "ஊர்வான்" (Nissan Urvan). இதில் என்ன ஒற்றுமை என்றால், அந்த வண்டி "ஊர்ந்து செல்லக் கூடியது" என்று சொல்வதற்கு வசதியாக அது நீளமாக உள்ளது.
தமிழில் "சிறியோன்" என்றால் சிறியவன் எனப் பொருள் கொள்ளலாம். இந்தப் பெயரில் ஒரு காரினை 'டைஹாட்சு' என்னும் ஜப்பான் கார் நிறுவனம் ஒரு கார் மாடலை பல வருடங்களாக வெளியிட்டு வருகிறது. மேலும் என்ன ஒற்றுமை என்றால், தமிழ் பொருள் வரும்படி, அந்தக் கார் சிறியதாக உள்ளது. (Daihatsu Sirion)

Thursday, April 12, 2012

சவுதி அரேபியா: இஸ்லாமியர்களின் சாபக்கேடு

"Custodian of Two Holy Mosques" அல்லது "இரு புனிதப் பள்ளிவாசல்களின் பொறுப்பாளர்" என்ற போர்வையில், இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் பண்ணுகிற அழிச்சாட்டியங்களுக்கு அளவே இல்லை. சவுதி மக்களையே பிச்சைக்காரர்களாக்கி ரோட்டில் பிச்சை எடுக்க விட்டிருக்கும் நாடு அந்த நாடு. உலகத்தின் 25% பெட்ரோலியம் இந்த நாட்டிடம்தான் உள்ளது. இருப்பினும் சவுதி மக்கள் கூட பிச்சை எடுக்கும் நிலை. அந்த அளவிற்கு அதன் ஆட்சியாளர்களின் ஆட்சி. சவுதி இளவரசர் காலித் ஒரு மிகப்பெரிய பணக்காரர். ருப்பர்ட் முர்டோச் எனும் செய்திஊடக தாதாவின் சொத்துக்களில் பங்குகள் உடையவர் இந்த இளவரசர் காலித்.

உலகில் அமைதிவேண்டுமானால், இஸ்ரேல் எனும் நாடு இருக்கக் கூடாது என்பதினை நியாயமான சிந்தனையுடைய யாரும் ஏற்றுக்கொள்வர். அதற்கு முதல்படி சவுதி ஆட்சியாளர்கள் அழியவேண்டும். அது இல்லாமல் இஸ்ரேலிய நாடு எனும் அமைப்பு அழிவது சாத்தியமில்லை. (கவனிக்க: இஸ்ரேலிய நாடு எனும் அமைப்புதான் அழியவேண்டும் என்கிறேனே தவிர அதன் மக்களை அழிக்கவேண்டும் என நான் சொல்லவில்லை)

ஆனால் சவுதி அராபியாவோ இஸ்ரேலினைக் காக்க பல விஷயங்களில் பாடுபட்டு வருகிறது. அதற்குக் காரணம் தனது சவுதி குடும்பத்தின் ஆட்சி நீடிக்கவேண்டும் என்பதுதான். அதற்காக இஸ்ரேல் சார்பாக இருப்பது மட்டுமல்லாமல், இஸ்ரேல் சார்பான பல ஆட்சிகள் பல அரேபிய நாடுகளில் நிகழ பாடுபட்ட நாடு இந்த சவுதி அரேபியா. இந்த நாடுதான் எகிப்தில் முபாரக்கின் ஆட்சியினைப் பேணிவந்தது. துனீசியாவில் "பென் அலி" என்பவரின் ஆட்சியினைப் பேணிவந்த நாடு. இந்த நாடு தான், மக்கள் விரோத ஆட்சியொன்றை ஏமன் எனும் நாட்டில் பேணி வந்தது. இந்த நாடுதான் மக்கள் விரோத ஆட்சியினை பஹ்ரைனிலும் பேணிவருகிறது. தனது முழு மூச்சும் இஸ்ரேலிய பணிக்கே என அர்பணித்து வருகிறது இந்த சவுதி அராபியா. ஜோர்டானின் ஆட்சியையும் இதுவே பேணிவருகிறது. லெபனானின் "ரஃபீக் ஹாரிரி" எனும் இஸ்ரேல் சார்பானவரின் ஆட்சியைப் பேணிவந்தது.

இஸ்ரேலுக்கு எதிரான நாடுகளின் ஆட்சிகளை அழிக்க முயல்வதிலும் இந்த சவுதி அரேபியா பங்காற்றுகிறது. சிரியா எனும் நாடு மக்கள்விரோத ஆட்சியினைக் கொண்டிருந்தாலும், அதன் ஆட்சியாளர்கள் இஸ்ரேலுக்கு விரோதியானவர்கள். அந்த நாட்டின் ஆட்சியினைக் கவிழ்த்து இஸ்ரேலுக்கு சேவகம் செய்ய பெரு அளவிலான ஆயுதக்களை சிரியா ஆட்சிக்கெதிரான கிளர்சியாளர்களுக்கு அனுப்பியதோடல்லாமல், அவர்களுக்கு சம்பளத்தினையும் ஏற்பாடு செய்துள்ளது.

இஸ்ரேலுக்கு எதிரான ஈரானில் அதன் ஆட்சியாளர்களை அழிக்க சவுதி மன்னர் விடுத்த ரகசிய வேண்டுகோளை விக்கிலீக்ஸ் வெளியிட்டதினை மறந்திருக்க மாட்டீர்கள்.

இவ்வாறு தனது ஆட்சியினை உலக வல்லரசுகளிடம் செல்வாக்குப் பெற்றதாக ஆக்க இஸ்ரேல் சார்புடன் செயல்படுகிறது. ஆனால் எப்படி மக்களைக் கட்டுப் படுத்துவது ? அதற்குதான் அது வஹாபிசம் எனும் கருத்துக்களைக் கொண்டு அடக்கியாள்கிறது. "ஆதாரப் பூர்வமான ஹதீஸ்கள்" என்று கூறி மக்களை அடக்குகிறது. "ஆதாரப் பூர்வமானது" என்று பல ஹதீஸ்களை வகைப் படுத்தும்போது, "ஆதாரப்பூர்வமானது" எனும் வார்த்தைக் கான அர்த்தத்தினையும் விதிமுறைகளையும் அந்த வஹாபிகளே நிர்ணையிப்பார்களாம்.

எளிதாக சொல்ல வேண்டுமானால், அவர்கள் ஒரு வகையான‌ பாஸ்டர்டுகள். தமிழில் சொன்னால் கேட்கும் சிலருக்கு கோபம் வரும் என்பதால் விட்டுவிடுகிறேன்.

ஆனால் தமிழ்நாட்டில் உள்ள இந்த வஹாபிய இயக்கங்கள் இந்த சவுதிஅரேபியாவுக்கு ஆதரவானவை. சவுதிஅராபியாவினைப் போலவே, ஷியாக்களின் மீது காழ்ப்புணர்வினைப் பரப்புபவை. இத்தகைய இயக்கங்களில் ஒன்றான "இந்திய தவ்ஹீத் ஜமாத்" பஹ்ரைனிற்கு ஆதரவாக ஒரு கருத்தினை ஒரு சமயம் வெளியிட்டிருந்தது. அவ்வளவு கேவலமான இந்த வஹாபிகள். ஷியாபிரிவினர் என்றால் இவர்கள் இரத்தம் கொதிக்கும்.

பிஜே என்பவன்/ர் (பிஜேயை "அவர்" என அழைக்க வேண்டுமா அல்லது "அவன்" என அழைக்கவேண்டுமா என்பது வாசகர்களுக்கான விருப்பப்படி) ஒரு கடந்தெடுத்த ஷியாபிரிவு மக்களின் விரோதி.

Sunday, April 08, 2012

பிஜே என்பவருக்காக ஒரு குழித் தோண்டுவோம்

பிஜே, தனது இணையதளத்தில் ஒரு அறிவிப்பு செய்துள்ளார். உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவரது 'தவ்ஹீத் ஜமாத்' பொறுப்பிலிருந்து விலகப் போவதாகக் கூறியுள்ளார்.

இதில் முக்கியமானது என்னவென்றால், அவர் விலகப்போகிறாரா இல்லையா என்பதல்ல. அவருக்கு உடல் நிலைக் குன்றியுள்ளது என்பதுதான் முக்கியம்.

இதைத் தான் நான் எதிர்பார்த்திருந்தேன்.

எனவே ஒரு மம்பட்டியைத் தயார் செய்து கொள்ளுங்கள். ஏதாவது ஒரு புறம்போக்கு நிலத்தில் ஒரு குழிதோண்டிவையுங்கள்.

பிஜேயின் நம்பிக்கைப் படி, செத்தவர்களது சமாதி (கப்று) தரைமட்டத்திற்கு மேல் எழும்பக்கூடாதாம். எனவே அவரைப் புதைத்தபின் அவரது கப்றும் தரைமட்டத்திற்கு மேலே எழும்பாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். அது சிரமம் தான். நன்கு திண்று அவர் வளர்த்துவைத்துள்ள உடலைப் புதைத்தால், தரை மட்டத்திற்கு மேலே மண் எழும்பத்தான் செய்யும். எனவே ஒரு ரோடு-ரோலரையும் தயார் செய்துக் கொள்ளுங்கள்.

ஒரு மனிதாபிமானத்தினை முன்வைத்து, அவர் சாவப்போவதை நினைத்தோ அல்லது செத்தப்பின்னரோ யாரும் கொண்டாட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.