Monday, December 30, 2013

கோப்ரகாடேயின் கைதும் இந்தியாவின் கொக்கரிப்பும்


 தேவ்யானி கோப்ரகாடே எனும் இந்தியாவின் இராஜிய அலுவலர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு மேலாடைக் கலைப்புப் பரிசோதனைக்குள்ளாகி சிறையிலடைக்கப்பட்டு, பின்பு பிணையில் விடுதலையானார்.

 அவர் செய்தக் குற்றமாகக் கூறப்படுவது யாதெனில், அவர் ஒரு பணிப்பெண்ணை வேலைக்கமர்த்தியபின், அந்தப் பணிப்பெண்ணிற்கு குறைவாக சம்பளமளித்தார் என்பதாகும்.

 கோப்ரகாடே எனும் அந்த இராஜ்ய அலுவலர் மீது கூறப்படும் குற்றம், அவரது தொழில் ரீதியானதல்ல. எனவே, இந்தியா அவருக்கு வக்காலத்து வாங்குவது சரியல்ல.

 அவர் சரியாக சம்பளம் கொடுத்தாரா இல்லையா என்பதினை மிக எளிதாகத் தீர்மானிக்க முடியும். அதற்கு சட்டம் இருக்கிறது.

ஆனால் இதனை இந்திய‌ நாட்டுப் பிரச்சனையாக சித்தரிப்பதிலிருந்து, இந்தியாவில் ஊறிக்கிடக்கும் ஒரு சமூ நோய் தெளிவாக வெளியுலகிற்கு அடையாளம் காட்டப்படுகிறது. அந்தஸ்தில் இருப்பவர்கள், தங்கள் அதிகாரங்களையும் செல்வாக்கினையும் துஷ்பிரயோகம் செய்பவர்கள் பெரும்பாலான இந்தியர்கள் எனும் உண்மை வெளிப்படுகிறது. கோப்ரகாடேயின் தந்தை உத்தம் கோப்ரகாடேயும் ஒரு செல்வாக்கு மிகுந்தவர். அதற்காக இந்தியாவினைத் தனது சொத்து என நினைத்து இராஜ்ஜிய அலுவலர்கள் பயன்படுத்துகின்றனர். தேவ்யானி கோப்ரகாடே மீதுள்ள தனி நபர் சார்ந்த‌ குற்றச்சாட்டினை நீதிமன்றத்தில் சந்திக்காமல், அதனை அரசியல் மூலமாகவும் இராஜாங்க ரீதியாகவும் தீர்க்க வேண்டும் என வெளிப்படையாகவே கோரிக்கை விடுக்கிறார் அவரது தந்தை உத்தம் கோப்ரகாடே. (அவர் ஆங்கிலத்தில் பயன்படுத்திய வார்த்தைகள்: "through political and diplomatic means").

 இதுபோன்ற தனி நபர் விவகாரங்களே நாட்டு விவகாரங்கள் என்று கருதிக் கருதியே வாழும் ஆளுங்கட்சி எதிர்கட்சி ஆகிய அனைவரும், இந்த விவகாரத்தில் கோப்ரகாடேயிற்கு ஆதரவு.

இருப்பினும் அவரை நடத்திய விதத்தில் அமெரிக்கர்கள் நிறவெறியினை கடைபித்திருக்கலாம். ஆனால் அதற்காக தேவியானி கோப்ரகாடே நிரபராதி என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

மேலும் என்ன விஷயம் என்றால், இந்தியாதான் முதலில் பணிப்பெண் மீதான‌ கைது வாரண்டினையும் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றி இந்தியாவிற்கு கொணர்தலுக்கான வேண்டுகோளையும் வைத்தது. இது ஒரு அதிகார துஷ்பிரயோகம்

Thursday, December 12, 2013

ஈரானின் அறிவியல் வளர்ச்சி: இஸ்லாமிய நாடுகளுக்கு முன்னுதாரணம்


 ஷியா பிரிவு மக்களை, "ஷியா காரன்", "காஃபிர்" என்று தூற்றுவதில் வஹ்ஹாபிகள் முன்னணியில் இருப்பர். ஆனால், "இஸ்லாமிய அறிவியல் அறிஞர்கள்" என்று மற்ற சமூகங்களுக்கு மத்தியில் பீத்திக்கொள்வதற்கு, சுயதம்ப்பட்டம் அடித்துக் கொள்வதற்கு மட்டும், ஷியா/ பாரசீக இஸ்லாமிய அறிஞர்களை தனது பட்டியலில் சேர்த்துகொள்வர். உதாரணத்திற்கு ஜாஃர் அஸ்ஸாதிக், ஜாபிர், இப்ன் சீனா, அல் காஷி, அல் பிருனி போன்றவர்கள் அனைவர்களும் பாரசீகர்கள். சொல்லப் போனால், சுயத் தம்பட்டம் அடிப்பதற்காக அவர்கள் சுட்டும் இஸ்லாமிய அறிஞர்கள் அனைவர்களும் 90% என்று சொல்லும் அள‌விற்கு பாரசீகர்களே.

 இப்னு தைமிய்யா, அப்துல் வஹ்ஹாப் எனும் வஹ்ஹாபிய அறிஞர்கள் வளர்ச்சியினால், அறிவியல் எனப்படுவது, குர்ஆன் அல்லது ஹதீஸ்களில் கூறப்பட்டிருந்தால் மட்டும் தான் அறிவியல் எனும் நிலைக்கு மாறியது. (ஹதீஸ் என்றால், நபிகள் நாயகத்தினைப் பற்றிய செய்திகள்). இதன் காரணமாக வஹ்ஹாபிய, அல்லது வஹ்ஹாபியக் கொள்கைகளை மையமாகக் கொண்ட அறிஞர்களின் ஆராய்ச்சி குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில், அறிவியல் இருக்கா இல்லையா எனும் கோணத்தில் திரும்பியது.

 அரேபியர்களின் கலாச்சாரமானது, குலச்சண்டைகளில் ஊறித்திளைத்த பழங்குடிமக்களின் கலாச்சாரம். அவர்களது அந்த குலச் சிந்தனையினாலேயே பாரசீகர்களை தொன்று தொட்டு வெறுத்து வந்தனர். ஏனெனில், பாரசீகர்களின் சிந்தனை சற்று நாகரீகமானது என்பதனால். பாரசீகர்களின் நாகரீகம் மிகப்பழமையானது. "அகமெனித்" எனும் பாரசீக வம்சம் ஐரோப்பாவினை உள்ளடக்கி ஆட்சி செய்த வம்சம்.

இந்த பாரசீகர்கள் மீதான அரேபிய வெறுப்பு, தற்போது பெட்ரோல் பணத்தினைக் கொண்டு பரப்பப் பட்டு வருகிறது. அரபு வஹ்ஹாபிய அரசுகள், பல மதப் பிரச்சாரகர்களைப் பராமரித்து வருகின்றனர். அவர்கள் அவ்வப்போது ஷியாக்களைத் தாக்கி "ஃபத்வா"க்களை விடுவது வழக்கம். உதாரணத்திற்கு "யூசுஃப் அல் கரதாவி" எனும் இஸ்லாமிய மத அறிஞர். இவர் வஹ்ஹாபியல்ல என்றாலும், இவரைப் பராமரிக்கும் நாடு கத்தார். கத்தாரின் ஆட்சியாளர்களும் சவுதியின் ஆட்சியாளர்களும் "தமீமி" எனும் பழங்குடிப் பிரிவினர். இந்த யூசுஃப் அல் கரதாவி சமீபத்தில், சிரியா பிரச்சனையின் போது அடுக்கடுக்காக ஷியாக்களைத் தாக்தி மத சம்பந்தமான அறிக்கைகளை விட்டு, ஷியாக்களைத் தாக்குவது மதக்கடமையென்பது போல வர்ணம் தீட்டினார். (இதைப் படிக்கும் சிலர் என்னை ஷியா என நினைத்து விடக்கூடும்; ஆனால் அப்படியல்ல; இருப்பினும் ஷியா மக்களின் மீது பெறுமதிப்பு வைத்திருப்பவன்).

 (இந்த யூசுஃ அல் கரதாவியினை மூக்கினை உடைக்கும் நிகழ்வாக ஒரு சம்பவம் சில வருடங்களுக்கு முன்பு ஒரு சம்பவம் நடந்தேறியது. அவரது மகன் ஷியா பிரிவிற்கு மாறிவிட்டார்)

 மீண்டும் விஷயத்திற்கு வருவோம்.

தற்காலத்தில் கூட இந்த பாரசீகர்கள் அறிவியலில் சிறந்து விளங்குகின்றனர். "ஸ்கோப்பஸ்" (Scopus) எனும் அமைப்பு அறிவியல் சஞ்சிகைகளில் வெளிவரும் கட்டுரைகளை பட்டியல் இடும் அமைப்பு. இது ஹாலத்தினைச் சேர்ந்த அமைப்பு. இந்த ஸ்கோப்பஸின் பட்டியல்கள், உலக பல்கலைக் கழகங்கள் அனைத்தினாலும் பெறுமதிப்புடன் நோக்கப் படுபவை. இந்த ஸ்கோப்பஸ் பட்டியலின் படி, அறிவியல்துறைகளில் வெளியிடப்பட்ட கட்டுரைகளின் அடிப்படையில், ஈரான் உலக அரங்கில் 17 ம் இடத்தில். வஹ்ஹாபிய தேசங்கள் கவனிக்குமா?