Tuesday, November 13, 2012

தன்னை அறிவாளி என்று நினைச்சிகிட்டா இப்படித்தான் உளர்வார்கள்: பிஜே ஒரு உதாரணம்

 பிஜே தனது இணையதளத்தில் ஒரு அபிப்ராயம் சொல்லி இருக்கிறார். லைசென்ஸ் இல்லாத சாஃட்வேரைப் பயன்படுத்தலாம் என்பதுதான் அவர் சொல்லி இருக்கும் அபிப்ராயம்.

 சாஃப்ட்வேரைக் காசுகொடுத்து வாங்கினவரிடமிருந்து காப்பிஎடுத்து, அவரது அனுமதியோடப் பயன்படுத்திக் கொள்ளலாமாம் ! காசு கொடுத்து வாங்கவேண்டியத் தேவையில்லையாம். ஏன்னாக்கா, சாஃட்வேரை வாங்கினவருக்கு அனைத்து உரிமையும் இருக்காம.

 நான் கேள்வி கேட்கிறேன்.

 (1) சாஃப்ட்வேரை காசு கொடுத்து வாங்கியவர் இன்னொருவர் காப்பியெடுக்க அனுமதிக்கும் போது, தனது கணினியில் அந்த சாஃட்வேரை அழித்தால்தானே எடுக்கப்பட்ட காப்பியின் பயன் பாட்டிற்கு பணம் கட்டப்பட்டிருக்கும். அழிக்கப்படாத நிலையில் எப்படி இது நியாயம் ஆகும். இந்த கூமுட்டை பதில் சொல்லமாட்டார் என்பது வேறுவிஷயம். அவரோட முட்டாள்தனத்தினை வெளிச்சம் போடுவதற்காக மட்டும்தான் இந்தப் பதிவு. புண்ணாக்குப் பாண்டி ஏதாவது பதில் சொல்லுதான்னுப் பார்ப்போம்.

(2) சாஃட்வேரை வாங்கியவர், ஒரு ஒப்பந்தத்தினை (லைசென்ஸ் ஒப்பந்தம்) ஏற்றுக்கொண்டுதானே அதைப் பயன்படுத்துகிறார். அந்த ஒப்பந்தத்தினை ஏற்றுக்கொண்டு, அதற்கு உட்பட்டுப் பயன்படுத்துவேனென்று கூறிவிட்டு அதைப் புறக்கணிப்பதுதான் நீ கற்பிக்கும் மதமா? அந்த ஒப்பந்தத்தினை ஏற்றுக் கோன்டவருக்கு எப்படி அனைத்து உரிமைகளும் உண்டு என்கிறாய்? புண்ணாக்குப்பாண்டி இதற்கும் பதி சொல்லமாட்டார். ஆனால் மக்கள் கவனிக்கவேண்டும்.

(இது போன்ற கேள்விகளால், புண்ணாக்குப் பாண்டி பிறகு தனது அபிப்ராயத்தினை மாற்ற வாய்ப்புள்ளது. இருப்பினும் அவரது மூடத்தனத்தின் உதாரணம் என்று சொல்வதற்காக, அவரது அந்த அபிப்ராயப்பக்கம் ஸ்கிரீன்ஷாட்டாக எனது சேமிக்கப்பட்டுள்ளது. பிஜே மாற்றினால், அந்த ஸ்கிரீன்ஷாட் இங்கே போடப்படும்.)

7 comments:

முத்து நாடார் said...

உலகம் பெரியது, மாலிக். பிஜே என்னும் சின்ன வட்டத்திற்குள் நிறைய சுற்றிக்கொண்டிருப்பதாகப் படுகிறது.

nagoreismail said...

PJ அவர்களுக்கு குரான் ஷரீஃப், ஹதீது தான் சரியா தெரியாது என்று பார்த்தால் "IP" சட்டம் அவ்வளவா தெரியாது (அவ்வளவா அல்ல அவ்வளவும்) போலிருக்கே.. விளங்கிடும்..

Unknown said...

பிஜே தான் சொல்றத சரின்னு நிரூபிக்க ஒரு நாள் முழுக்க கூட பேசுவார். நமக்குதான் BP எகிறும். அவர் சாப்ட்வேர் காபி செய்வதையும் ஒரு புத்தகத்தை இன்னோவோருவருக்கு படிக்க கொடுப்பதையும் ஒன்று போல பேசியிருக்கார். ஒரு புத்தகத்தை இன்னோவோருவருக்கு கொடுப்பதால் ஒரு புத்தகம் இரண்டாவது கிடையாது. ஆனால் ஒரு சாப்ட்வேர் காபி செய்வதால் அது இரண்டாகிறது.

உங்கள் பகிர்வுக்கும் கருத்துக்கும் நன்றி.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சலாம் சகோ மாலிக்,
இதுவரை...
சகோ.மவுலவி பீஜே அவர்கள் பற்றிய 'விமர்சன பதிவு' என்ற பெயரில் மிகவும் கேவலாமான காழ்ப்புணர்வு எழுத்துக்களை குப்பையாக கொட்டினீர்கள்.

ஆனால்,
இன்றுதான் 'ஓரளவுக்காவது' சரியான விமர்சனம் செய்துள்ளீர்கள். இதிலும் கூட... //கூமுட்டை//... //புண்ணாக்குப் பாண்டி//... போன்ற துர்நாற்றம் இல்லாதிருந்திருந்தால்... ஓடை சாக்கடை போல இல்லாதிருந்திருக்கும்..!

காப்பி ரைட் இல்லாமல் வேறொருவரின் புத்தகத்தை பிரிண்ட் போட்டு சம்பாதிப்பது தவறு. அதுபோலவே... இதுவும். கதவில் பூட்டு இல்லாத அல்லது இருந்தும் பூட்ட மறந்த வீடு ஒன்றை நாம் கண்டால் திருடலாம் என்பது போன்ற அக்கருத்து இஸ்லாமுக்கு எதிரானது என்பதை அவர் உணர வேண்டும்..! இன்ஷாஅல்லாஹ் உணர்வார் என்று நம்புவோம்..!

எதையும் அழுத்தி வெட்டு ஒன்று துண்டு இரண்டாக சொல்லும் அவரே கடைசி பாராவில்... 'இது சரியாகவும் இருக்கலாம்... தவறாகவும் இருக்கலாம்... பின்பற்றுவது அவரவர் இஷ்டம்' என்பதாக சொல்லி இருப்பது.. அவரே இது விஷயத்தில் தெளிவின்றி குழப்பத்தில் உள்ளதாகவே எனக்கு படுகிறது.

Thalapthi - தங்களுடையது நல்ல பின்னூட்டம் சகோ..!

nagoreismail said...

உங்களது தலைப்பை பார்த்ததும் எனக்கு ஒரு பழமொழி ஞாபகம் வந்தது, just for sharing purpose, ”அவங்கவங்க தன்னை தானே புத்திசாலின்னு நினைச்சுக்குறதனால தான் உலகத்துல இவ்வளவு முட்டாள்கள் இருக்கிறார்கள்” என்பது தான் அது.

மு மாலிக் said...

நாகூர் இஸ்மாயில் மற்றும் தளபதி அவர்களே, உங்கள் கருத்துக்களுக்கு நன்றி

முகம்மது ஆஷிக் அவர்களே,

நீங்கள் போகும் வழியில், நீங்கள் காணும் சாக்கடையைச் சுட்டிக்காட்டி, "சாக்கடை" என்ற சொல்லைப் பயன்படுத்துவதால், உங்கள் சொல் சாக்கடையாகிவிடுமா ?

மு மாலிக் said...

நித்திலன் நண்பா, தமிழக அளவில் வேண்டுமானால், பிஜே ஒரு சிறிய வட்டம். ஆனால், அவரை ஹீரோவொர்ஷிப் பண்ணுற கூட்டம், ஒரு சுறுசுறுப்பு மிக்கக் கூட்டம். அதை கவனத்தில் கொண்டுதான் எனக்கு இந்த வேலை. பலருக்கும் இவரோட ஃபத்வாக்களின் மீது அதிக மதிப்பு. மக்கள் குழுமத்திலெல்லாம் பகிர்ந்து கொள்கிறார்கள்.