Tuesday, July 31, 2007

வெள்ளம்


என்ன செய்வது ? வெள்ளம் வந்துவிட்டது. முழங்கால்வரையிருந்தது, கிடுகிடுவென இடுப்பு வரை உயர்ந்துவிட்டது. மேலும் உயருமாம்; பேட்டரி தீரப்போவதுபோல இருந்தாலும், அப்போதிலிருந்தே வானொலி இதை தேய்ந்த குரலில் கூறிவருகிறது. அவசரத்திற்கு வாழை, ஒதியன் போன்றவற்றை வெட்டி அப்பாவும் தம்பியும் மூன்று கட்டுமரங்களை செய்தனர். புறப்பட்டுவிட்டோம். இல்லை, சும்மா மிதந்து கொண்டிருக்கின்றோம். எங்கே புறப்படுவது ? அப்பாவும் அம்மாவும் அதிலே. இந்த ஆடும் நானும் இதிலே. கொஞ்சம் ரொட்டியும், பாத்திரங்களும், துணிகளும் இரு மூட்டை முடிச்சுகளில். அந்த கால்சியம் பாஸ்பேட் பையில் கொஞ்சம் தழைகள். தம்பி, அவன் பாட புத்தக மூட்டையையும், கோழியையும் ஏற்றிக் கொண்டு பின்னே மிதக்கிறான். எப்போ இந்த வெள்ளம் வடியும்னு தெரியலையே.

(Picture is from aljazeera: http://english.aljazeera.net/NR/exeres/9A61DE8A-C815-4F2E-B2B4-9F417D55FBBC.htm )