Friday, February 14, 2014

பிஜேயின் கடவுளின் விலங்கியல் பெயர் : ஹோமோ செடென்டேரியஸ்-செடெஸ் (Homo Sedentarius-Sedes)


தமிழக வஹ்ஹாபிகளின் தலைவர்களில் ஒருவரான "பிஜே" எனும் பி.ஜெயினுல் ஆபிதீன் அவர்கள் ஒரு சமயம் தான் பங்கேற்ற விவாதத்தின் போது, தனது கடவுள் எப்படிப்பட்டெதென‌ விவரித்தார். இந்த விவரிப்பு 2010-ல் நிகழ்ந்தது. அவரது விவரிப்பின் படி அவரது கடவுள் கீழ்காணும் அம்சங்களைப் பெற்றுள்ளது.

1. கடவுள் வானத்தில் ஒரு திசையில் தொலைதூரத்தில் உள்ளது
2. அது ஒரு நாற்காலி போன்ற ஆசனத்தில் அமர்ந்துள்ளது.
3. அந்த நாற்காலியை 8 ஜின்கள்/வானவர்கள் தூக்கிக் கொண்டுள்ளனர்
4. அதற்கு கைகள் மற்றும் கால்கள் உண்டு
5. அது மனிதனை தனது சாயலில் படைத்துள்ளது. அதாவது கடவுள் மனிதனின் சாயலில் இருக்கிறது.
6. ஆனால், அந்த மனிதக் கடவுளுக்கு சாவு கிடையாது.

விலங்கியல் படி அவரது அந்த கடவுள் எனும் விலங்கிற்கு பெயரிடவேண்டும். அதுதான் முறை. ("விலங்கு" எனும் வார்த்தையை நான் "மிருகம்" எனும் தரம் தாழ்ந்த பொருளில் பயன்படுத்தவில்லை. விலங்கியல் அம்சங்களைப் பெற்ற அனைத்து உறுப்பினர்களும் விலங்குகள் தான். மனிதர்கள் உட்பட விலங்குகள்தான்.)

 அவரது கடவுள், மனிதனைப் போல இருப்பதால், "ஹோமோ" ஜீனஸ் (Genus) வகையைச் சேர்ந்தது. ஆசனத்தில் அமர்ந்துள்ளதென்பதினை இலத்தீனில் மொழிபெயர்த்து அதன் இனப் பெயரினைக் கூறலாம். (அதாவது Species பெயர்). இலத்தீனில் மொழிபெயர்ப்பதென்பது, அறிவியல் மரபிற்க்காக.

"ஆசனத்தில் அமர்ந்துள்ளது" என்பதினை, இலத்தீனில் "செடென்டேரியஸ்-செடெஸ்" (Sedentarius-Sedes) எனக் கூறலாம். இதனை "Google Translator" உதவிகொண்டு மொழிபெயர்த்தேன்.

எனவே பிஜேயின் கடவுளின் அறிவியல் பெயர்: "ஹோமோ செடென்டேரியஸ்-செடெஸ்" Homo Sedentarius-Sedes.

எனது இந்த அறிவியல்-பணிக்காக சன்மானங்களை வழங்க விரும்புவோர்கள் 123456 என்ற ஸ்டேட் பேங்க் அக்கெளண்டிற்கு அனுப்பும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.

3 comments:

Anonymous said...

கடவுளின் சாயலில் மனிதன் உள்ளான் எனில் மனித சாயலில் கடவுளை வரைவதில் ஏன் தடை வைத்துள்ளார்கள் ஆபிரகாமிய மதத்தினர். கடைசியில் பிஜே கடவுளையும் மிருகமாக்கிட்டார். கடவுள் என்னும் மிருகத்துக்கு அறிவியல் பெயரிட்ட தங்களின் முயற்சியை ஆங்கில கட்டுரையாக்கி பல்கலைகழங்களில் சமர்பித்தால் முனைவர் பட்டம் கூட கிடைக்கலாம். கய்டாக பிஜே -வின் பெயரைச் சேர்த்துவிடுங்கள். :))

மு மாலிக் said...

விவரணன் அவர்களே, நீங்கள் ஒரு விவரணம் தயாரிக்கலாம். பிஜேயின் நம்பிக்கைக்கு "Anthromorphism" என்பது சரியான வார்த்தை. இது பிஜே என்பவர் மற்றவர்களிடம் இருந்து காப்பி அடித்த ஐடியா.

எனது அறிவியல் பங்களிப்பைப் பாராட்டியதற்கு நன்றி. வஹ்ஹாபிகளும் என்னைப் பிற்காலத்தில் புகழ்வார்கள். ஏனெனில், அவர்களது நம்பிக்கையினை நான் அறிவியல் பூர்வமானது என்று தோன்றச் செய்ததற்காக.

islam moomin said...

பீஜே போன்ற உளறு வாயர்கள் அரைகுரைகள் சொல்வதை கேட்டு அதை பெரிசாக எடுக்க வேண்டாம். மனதில் தோன்றுவதை பேசும் மடையனின் பேச்சை விட்டுத்தள்ளுங்கள்