Thursday, June 19, 2014

"தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்"-தின் முட்டள் தனம்

"தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்" எனும் தமிழ்நாட்டு வஹ்ஹாபிகளின் இயக்கம், இலங்கைத் தூதரகத்திற்கு முன்பு ஆர்பாட்டத்தினை செய்து முடித்துள்ளது. அது சம்பந்தமாக தவ்ஹீத் ஜமாத் பல புகைப்படங்களை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அப்புகைப்படத்தின் படி கணிசமான மக்கள் குவிந்திருந்திருக்கின்றனரென்று தெரிகிறது.

இந்த மக்களைக் குவிக்க, அவர்களை அழைத்து அந்த தவ்ஹீத் ஜமாத் வெளியிட்டிருந்த அறிவிப்பு செய்தியும் அவர்களது இணையதளத்தில் காணப்படுகிறது. அந்த அறிவிப்பினைக் கீழே மேற்கோள்-குறிகளுக்கிடயே காட்டியுள்ளேன்:

"
இலங்கையில் பொதுபலசேனா எனும் இன வெறியர்களால், முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள். அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டு வருகின்றன.
இவற்றைத் தடுக்கத் தவறிய சிங்கள ராஜபக்சே அரசைச் கண்டித்து இன்ஷாஅல்லாஹ் நாளை காலை (17.06.2014) 11 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்.

நியாயவான்களே, முஸ்லிம்களின் உயிரைக் காப்பதற்கும், அவர்களின் உடமைகளை மீட்பதற்கும் புயலெனப் புறப்பட்டு வாரீர்.

இப்படிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமையகம்.
"

இவர்களது இந்த அழைப்பு விடுக்கும் அறிவிப்பின் வாசகங்களைப் பார்ப்போம். அதில் உள்ள ஒரு வாசகம்: "முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள்". இதுவரை நான்கு முஸ்லீம்கள் இறந்துள்ளனர். இத்தனைக்கும் அவர்கள் செய்திவெளியிட்ட தேதியன்று மூன்று முஸ்லீம்கள்தான் இறந்துள்ளனர். இப்படியிருக்க, "முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள்"- என்று எழுதுவது சரியா? இவ்வாறு எழுதுவது அபாண்டமல்லவா? இது மதவெறியினைத் தூண்டும் செயலல்லவா? இவர்களது இந்த துல்லியமற்ற மற்றும் ஏகத்திற்கும் உண்மைக்குப் புறம்பான வார்த்தை சோடிப்புகளால், எத்தனைப் பேர்களது மனதில் பதற்றத்தினை அளவுக்கதிகமாக ஏற்படுத்திக் கூட்டத்தினைக் கூட்டியுள்ளனர்? இது முறையா?

மேலும் "சிங்கள ராஜபக்ச அரசைக் கண்டித்து" என்று எழுதியுள்ளனர். அவர் சிங்களராக இருப்பது எப்படி இந்தப் பிரச்சனைக்குப் பொருந்தும். தவ்ஹீத் ஜமாத் முட்டாள்களின் கூடாரம் என்பதற்கு இது சான்றல்லவா? "குரங்கு பார்க்கும் குரங்கு செய்யும்" என்ற பழமொழிக்கேற்றவாறு குரங்குக் கூட்டமாக இருக்கிறதல்லவா இந்த தவ்ஹீத் ஜமாத்?

இது தவிர,

கீழ் கண்டவாறல்லவா முஸ்லீம்களை வழி நடத்திருக்கவேண்டும்:

1. பெருவாரி மக்களிடம் சிறுமான்மையான முஸ்லீம்களே நீங்கள் உங்கள் அடையாளத்தினைத் திணிக்க முயற்சிக்காதீர்கள். அவரகளது கலாச்சாரங்களை அழிக்க முயற்சியெடுக்காதீர்கள். "ஹலால் சர்டிஃபிக்கேட்" போன்ற அடையாள மேலோங்களுக்கான அட்டகாசங்களை விட்டுவிடுங்கள். பெருவாரி மக்களிடம் ஒற்றுமையுடன் நீங்கள் இல்லையென்றால் அழிந்துபோவீர்கள் --- என்று அறிவுறுத்திருக்கவேண்டாமா?

2. இலங்கை வாழ் முஸ்லீம் பெண்களே, உங்களிடம் ஏற்கனவே மதத்திற்குட்பட்ட நல்ல செயலான, "தலைக்குத் துண்டு அணிதல்" எனும் பாரம்பரியம் இருந்து வருகிறது. அது போதுமானது. "புர்கா" அணிவதுதான் மார்க்கமென்று ஒன்றுமில்லை. "புர்க்கா" அணிவதால், பள்ளிகளிலும் பணியிடங்களிலும் பிரச்சனை வருகிறதென்றால், "புர்கா" அணிவதற்கு பதிலாக உங்கள் பாரம்பரியப் படியே நடந்து கொள்ளுங்கள். உங்கள் மதத்தினை நீங்கள் பின்பற்றுவதற்கு ஒற்றுமையான சூழல் கட்டாயம் தேவை.  -- என்று அறிவுறுத்த வேண்டாமா?

4 comments:

நெல்லைத் தமிழன் said...

இப்போதுதான் உங்கள் தளத்தைப் பார்க்கிறேன். நன்றாக எழுதியிருக்கிறீர்களே. அவ்வப்போது நல்ல மதவெறியில்லாத முஸ்லீம்களைப் பார்க்கும்போது (பெரும்பான்மை அப்படித்தான். ஆனால் அவர்கள் வெளிக்காட்டிக் கொள்வதில்லை. வெளிக்காட்டினால்தான் எல்லோருக்கும் தெரியும். எத்தனை பேருக்கு இஸ்லாமிய 'நண்பர்களோடு பழகும் வாய்ப்பு கிடைக்கிறது?

Well Done

Anonymous said...

நான் இதுவரைக் காலமும் எழுப்பும் கேள்வி, ஏன் இந்த தவ்வீது ஜமாத்துக் காரர்கள் சிரியாவில் இறந்துபோன 2 லட்சம் சுன்னி முஸ்லிம்களுக்கு ஆதரவாய் ஒரு மயிர் போராட்டத்தையும் நடத்தவில்லை. முஸ்லிம்களை முஸ்லிம்கள் கொன்றால் பரவாயில்லையா, அல்லது வேற்று மதத்தினர் கொன்றால் மட்டுந்தான் போராட வேண்டும் என குரானில் சொல்லப்பட்டுள்ளதா.

இலங்கை முஸ்லிம்களுக்கு - இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் அனைவருமே தமிழ்நாடு கேரளாவில் இருந்து குடியேறியவர்கள் ஆனால் அங்கு போய்விட்ட பின்னர் தமது தமிழக தொடர்புகளை முற்றாக மறைத்து தாம் தமிழர்களே இல்லை எனக் கூறி இதுவரைக் காலமும் வாழ்ந்தனர். இன்று மீண்டும் சிங்கள பேரினவாதம் இவர்களை குறிவைத்துள்ளது, இப்போது இவர்கள் யாரிடம் உதவிக் கோருவார்கள், சவுதியோ, பாகிஸ்தானோ மிஞ்சிப் போனால் இலங்கையிடம் போன் பண்ணி விசாரிக்கும், நாளைக்கு எதாவது ஒரு பிரச்சனை என்றால் யாரிடம் உதவி கோருவார்கள், எங்கு போவார்கள்,

முதலில் இலங்கை முஸ்லிம்கள் தாம் தமிழர்கள் இல்லை எனக் கூறுவதை நிறுத்தி தமிழ் பேசும் அனைத்து சிறுபான்மை மக்களோடு சேர்ந்து இயங்க தொடங்க வேண்டும்.

மற்றது பதவிக்காக அரசியல் செய்யும் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் கட்சி ஆகியவற்றையும், இதுவரைக் காலமும் சிங்கள தமிழ் மக்களோடு கலாச்சார ரீதியாக இணங்கி வாழ்ந்த இலங்கை முஸ்லிம்களை அரபு மயமாக்கி அடித்துக் கொள்ளத் தூண்டிவிடும் இஸ்ரேலின் வாலான அமெரிக்காவின் கைப்பாவையான சௌதி அரேபியாவின் அடியாட்களாக திகழும் வகாபியக் கூட்டத்தின் போதனைகளை நீக்கி, உண்மையான அமைதியான வாழ்வியல் நெறிகளை பேண நினைக்க வேண்டும்.

சும்மா ஹலால் முத்திரைப் போடுவது, புர்க்கா போடுவது என கிளம்பினால் சிங்கள தமிழ் மக்களிடம் இருந்து அந்நியப்படுவதோடு, ஊருடன் பகைத்து வேருடன் கெடும் கதையாகி முடியும்.

வேகநரி said...

நேர்மையாக நியாயத்துடன் எழுதியிருக்கிறீர்கள்.

//இது மதவெறியினைத் தூண்டும் செயலல்லவா?//
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகளின் ஈழம் என்று வாய்க்கு வந்தபடி கதையளந்து தமிழினவாதத்தை தூண்டி தமிழக பிரச்சனைகளை மறைத்து அரசியல் ஆதாயம் ஆதயமடையும் செயற்பாட்டை தவ்ஹீத் ஜமாஅத் அப்படியே பார்த்து காப்பியடிச்சிருக்காங்க.