Sunday, February 09, 2014

பெரியார்தாசனுக்கு ஹமீத் ஜாஃபர் விடுத்த‌ வேண்டுகோள், யுவன்ஷங்கர் ராஜாவுக்கும் பொருந்தும்

பெரியார்தாசன் மதம் மாறிய பிறகு, வஹ்ஹாபிகளின் கையில் சிக்கினார். அவர் நேர்மையானவர் என்றாலும், வஹ்ஹாபிகள் புறம் சூழ்ந்து, அவரது துதிபாடவும் மயங்கிவிட்டார் பெரியார்தாசன். வஹ்ஹாபிய அம்சங்கள் சிலவற்றை அவர் போதிக்கவும் செய்தார். (வஹ்ஹாபிகளின் ஒரு பிரிவிடம் சிக்கினாரென்று சொல்லவேண்டும். மற்றொரு பிரிவினரான பிஜே, தனது பிரிவுக்கு வராத காரணத்தினால், பிஜே அவர் மீது புழுதிவாரி தூற்றிக்கொண்டிருந்தார்).

அப்போது "ஆபிதீன்-பக்கங்கள்" எனும் தளத்தில், ஹமீத் ஜாஃபர் அவர்களது வேண்டுகோளினை படித்தேன். அது பெரியார்தாசன் அவர்களுக்கு விடுத்த வேண்டுகோள். அதனை கீழே எடுத்துப் போட்டுள்ளேன்:

"ஐயா , பேராசிரியர் அவர்களே! நீங்கள் இஸ்லாத்தில் இணந்தது எங்களுக்கு பெருமைதான் என்றாலும் என் மனதுக்குள் ஒரு பயம் நிலவி வருகிறது. இது சுன்னத், அது ஹராம், இதைச் செய்யவேண்டும், அதைச் செய்யக்கூடாது  என்று இலவச அறிவுரை சொல்ல சில அரைகுறை ஆலிம்கள் வருவார்கள். உங்களுக்கே தெரியாமல் உங்களை மூளைச்சலவை செய்வார்கள். நீங்கள் மனோவியல் பேராசிரியர் மட்டுமல்ல சிகிச்சையாளரும்கூட, எனவே குர்ஆனையும் ஹதீஸையும் ஆராய்ந்ததுபோல் அவர்கள் சொல்வதையும் ஆய்ந்து ஆராய்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள். இது ஒன்று.

மற்றொன்று, ‘இறைவன் ஒருவன்தான், அவனுக்கு இணைவைக்கக்கூடாது, அவனுக்கு இணையாக எதுவுமில்லை’ என்ற செய்தி நபிகளாருக்குப் பிறகு இந்திய துணைக்கண்டம் முதல் எல்லா நாடுகளுக்கும் பரப்பியவர்கள் ஒரு சிலர். அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் இறை தியானத்தில் மூழ்கி மக்களின் வாழ்க்கை முறை, உணவு, நாகரீகம், பண்பாட்டுமுறை இவைகள் அனைத்தையும் மாற்றி நேர்வழிப் படுத்தியவர்கள். சுருக்கமாகச் சொன்னால் இறைவன் சொன்னதை, நபிகளார் சொன்னதை மக்களின் அறிவுக்குத் தகுந்தவாறு போதனை புரிந்தவர்கள். சூஃபிகள் என்றழைக்கப்படும் இவர்களை சிலர் தவறாகச் சித்தரிக்கிறார்கள் என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்."

இந்த அறிவுரை யுவன்ஷங்கர் ராஜாவுக்கும் பொருந்தும். இந்த அறிவுரையில் "ஐயா, பேராசிரியர் அவர்களே" என்பதினை, "தம்பி யுவன்ஷங்கர் அவர்களே" என மாற்றி, யாராவது அவருக்கு ஈமெயில் அனுப்புங்கள்.

ஹமீத்-ஜாஃபர் அவர்கள் கூறியபடியே ஏ ஆர் ரஹ்மானுக்கு இலவச அறிவுரையினை நமது இணையதள வஹ்ஹாபிகள் பல கட்டுரைகள் வழியாக வாரி வழங்கினர். இந்த இலவச அறிவுரைகள், அவர் ஆஸ்கார் பரிசினைப் பெற்றபோது உச்சத்தில் இருந்தது. "சமரசம்" எனும் பத்திரிக்கையின் ஆசிரியர் சிராஜுல் ஹஸன், ஜமாத்தே இஸ்லாமி எனும் அமைப்பில் இருப்பவர். அவர் ஏ ஆர் ரஹ்மானுக்கு தனது புண்ணாக்கு அறிவுரைகளை வழங்கி தனது பத்திரிக்கையில் ஒரு கட்டுரையை எழுதினார்.

"கேட் ஸ்டீவன்" (Cat Steven) எனும் இசைக் கலைஞரும் மதமாறிய போது ஆரம்பத்தில் வஹ்ஹாபிய சிந்தனையாளர்களின் கருத்துக்களுக்கு இடமளித்ததால், தனது இசை-வாழ்க்கையினை 27 வருடங்கள் நிறுத்திவைத்தார். பிறகு, கடந்த சில வருடங்களாக மட்டுமே இசைப் பக்கம் திரும்பியுள்ளார்.

ஆனால் இத்தகைய "மதம் மாறுதல்" பற்றிய செய்திகளை, தனது அடையாள மேலோங்குதல் எனும் தொனியில் பரப்புவது நமது சமூகத்தின் மீது மற்ற சமூகத்தினரது வெறுப்பினை வளர்க்கவே உதவும் என்பதினை உணரவேண்டும். இதற்காகக் குதூகலிப்பவர்கள், "ஷேக் சின்ன காசிம்" எனும் இசைக் கலைஞர் வேறு மதத்திற்கு மாறினார் என்பதினையும் உணர்ந்து அடக்கிவாசிக்க வேண்டும்.

9 comments:

kari kalan said...

அருமையான கருத்துகளை மிக அழகாக சொல்லியுள்ளீர்கள்.

வாழ்த்துகள் !

aashiq ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ,

:-) :-)

வேகநரி said...

உங்கள் நேர்மையான கருத்து.

கவிப்ரியன் ஆர்க்காடு said...

புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதையாய் இல்ல இருக்கு!?

Anonymous said...

இந்து மதத்துக்குள் வர விரும்பும் அந்நிய நாட்டவர்களை எந்த சாதிக்குள் இணைத்துக் கொள்வது என்ற குழப்பம் உள்ளது போலவே, இஸ்லாமில் சேருவோர் எப்பிரிவில் சேர்வது என்ற குழப்பமும் உள்ளது. அதிலும் பெற்றோ டாலர் தேசங்கள் தமது அரசியல் நலனுக்காய் உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்களை தம் பிரிவுக்குள் உள் மதமாற்றம் செய்தும், அமைதி வழியை பற்றிய சூபிக்களை அழிக்கும் போக்கினையும் செய்து வருவதோடு, மண் சார்ந்த கலாச்சாரங்களை துறக்கச் செய்து இறக்குமதி செய்யப்பட்ட புர்கா, குறுந்தாடி என பகட்டுத்தனமான மத அடையாளங்களினால் தம் ரத்த பந்தங்களான சொந்த தேசத்தவரோடு பிணக்காகி உரசல் போக்குகளும் வலுத்துவருகின்றதை நினைவில் கொள்ள வேண்டும். அரசியல் கட்சிக்கு ஆள் சேர்பதை போல விளிம்புநிலை மக்களை பொருளாதாரம் கொண்டும், புகழ்பெற்றோரை வேறு வகையிலும் மதம்மாற்றி விளம்பரம் செய்யும் போக்கும் அதிகரித்துள்ளது வருந்த தக்கது. மத உள் மதமாற்றங்கள் தொடர்ந்து இந்து இஸ்லாம் கிறித்தவ பிரிவுகளில் நடத்தப்பட்டும் விள்ம்பரபடுத்தப்படுவது ஜனநாயகத்தை பயன்படுத்தி அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி பணநாயகம் செய்யவே என்ற ஐயமும் எழுகின்றது. நன்றிகள்.

தமிழானவன் said...

யுவன் எந்த பிரிவைத் தழுவினார். சூஃபியிசமா இல்லை வஹாபியமா ?அல்லது எந்த அமைப்பினர் முன்னிலையில் நடந்தது ?

காரிகன் said...

விவரணன் நீலவண்ணன் மிகத் தெளிவாகவே சொல்லியிருக்கிறார்.இளையராஜாவும் கிருஸ்துவ மதத்திலிருந்து தன் தாய் மதத்திற்கு மாறியவர்தான். மேலும் மதம் மாறுவது ஒருவரது தனிப்பட்ட விருப்பம். அதை விளம்பரம் செய்வது மலிவான செயல்.

Dr.Anburaj said...

உலகில் எந்த துறையும் பரிபுரணமாகவில்லை. சமயத்துறையும் அப்படியே. ஒரு விஞ்ஞானி உயிரியலையும் இயற்பியலையும் படித்து உயிரி இயற்பியல் என்ற அற்புதமான துறையைக் கண்டுபிடிக்கின்றாா். அதுபொல் உயிரி வேதியியல் என்ற துறையும் உருவாக்கப்பட்டது. விஞ்ஞானத்தில் குரானும் பைபிளும் தனிதனியாகச் செயல்பட விரும்பி பல கொடுமைகளுக்கு இரத்த களறிகளுக்கு காரணமாக உள்ளனர். ஆனால் இந்தியாவிலோ எந்த ஒரு சமய புத்தகமும் பரிபுரணம் இல்லை என்ற கருத்து ஆழமாக உள்ளது. இந்நிலையில் மதம மாற்றம் என்றது ஆதித்த வெறிதான்.தவிர வேறு இலலை

Dr.Anburaj said...

உலகில் எந்த துறையும் பரிபுரணமாகவில்லை. சமயத்துறையும் அப்படியே. ஒரு விஞ்ஞானி உயிரியலையும் இயற்பியலையும் படித்து உயிரி இயற்பியல் என்ற அற்புதமான துறையைக் கண்டுபிடிக்கின்றாா். அதுபொல் உயிரி வேதியியல் என்ற துறையும் உருவாக்கப்பட்டது. விஞ்ஞானத்தில் குரானும் பைபிளும் தனிதனியாகச் செயல்பட விரும்பி பல கொடுமைகளுக்கு இரத்த களறிகளுக்கு காரணமாக உள்ளனர். ஆனால் இந்தியாவிலோ எந்த ஒரு சமய புத்தகமும் பரிபுரணம் இல்லை என்ற கருத்து ஆழமாக உள்ளது. இந்நிலையில் மதம மாற்றம் என்றது ஆதித்த வெறிதான்.தவிர வேறு இலலை