Friday, February 21, 2014

ராஜீவ் கொலை சம்பந்தப்பட்டோரின் விடுதலையில் எங்கு தவறு நடக்கிறது?

1. ராஜீவ் காந்தி அவர்கள் இந்திய ராணுவத்தினை அனுப்பும் போது அதை ஒரு கற்பழிப்பு எந்திரமாகக் கருதி அனுப்பவில்லை. ஒரு கொல்லும் இயந்திரமாகக் கருதியே அனுப்பினார். கற்பழிப்புகளுக்கு ராஜீவினைப் பொறுப்பாக்குவதைவிட இந்திய ராணுவத்தினை போர்களத்தில் வழி நடத்தியவர்களைத்தான் பொறுப்பாக்கவேண்டும். இராணுவத்தினை ஒரு கொல்லும் இயந்திரமாகக் கருதி மற்றொரு கொல்லும் இயந்திரத்தினைச் சந்திக்க அனுப்புவது தார்மீகமான செயல். இராஜீவினைக் கொல்லும் அளவிற்கு திட்டம் தீட்டும் ஆற்றலுள்ள விடுதலைப் புலிகள், இந்திய இராணுவத்தின் சம்பந்தப்பட்டவர்களை இந்தியாவில் எதிர்கொள்ள ஆற்றலுடையவர்களே.

2. ராஜீவ்காந்தியின் செயலாகிய படையனுப்புதலை ஒரு கொல்லும் இயந்திரத்தினை அனுப்பும் செயலென்று நோக்கினால், ராஜீவ் அவர்கள் விடுதலைப் புலிகளின் தார்மீகமான இலக்கே ஆகும். அதே சமயத்தில் அவரைக் கொல்லப் பயன்பட்டவர்கள், விடுதலைப் புலிகள் அழிக்கப்படவேண்டியவர்களென்ற நியாயத்தின் அடிப்படையில் மரணதண்டனைப் பெறுவதே நியாயம்.

3. மரணதண்டனைப் பெற்றோர் மன்னிப்புக் கோரவில்லையென்றே கருதுகிறேன். கருணை மனு, அதாவது கருணை காட்டச் சொல்லிக் கெஞ்சுதல், மன்னிப்புக் கோருதலுக்கு நிகராகாது. மன்னிப்புக் கோருதல் என்பதில் செய்த செயலினைத் தவறென்றுக் கருதி மனவருத்தம் கொள்ளலும் உள்ளடக்கம். கருணை மனு என்பதில், "நீ கருணையுடைவனாக இரு" எனும் அறிவுரைதான் வெளிப்படும்.

4. மன்னிப்புக் கோரி இருந்தால், அவர்களை மன்னிப்பது ராஜீவின் குடும்பத்தினரது செயலுக்குட்பட்ட விஷயமட்டுமல்ல. அவருடன் இறந்த மற்ற 14 பேர்களின் குடும்பத்தினரது மன்னிப்பும் முக்கியம்.

8. சட்டப் படி ஜனாதிபதிக்கு கருணை காட்டும் அதிகாரமிருந்தாலும், ஆன்மீகத்தின் அடிப்படையில் அவரால் மன்னிக்க முடியாது. எனவே, "ஜனாதிபதியிடம் கருணை மனு" எனும் சட்ட அனுமதி நகைப்புக்குறியது.

9. சம்பந்தப்பட்டோர் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கோருவதுதான் முறை. அவர்கள் மன்னித்தால் மட்டுமே விடுதலை அளிக்கவேண்டும். இல்லையென்றால் அவர்கள் கடவுளிடம் மன்னிப்புக் கோரிவிட்டு, கடவுளைச் சந்திப்பதுதான் முறை. மன்னிப்புக் கோருதலென்பது தண்டனையிலிருந்து விடுதலை பெறுவதுடன் சம்பந்தப்பட்டதென்று கருதுவதே கூடாது. மன்னிப்புக் கோருதலென்பது மனவருத்தத்தினை மட்டுமே சம்பந்தப் படுத்திய ஒரு விஷயம்.

9 comments:

Pararajasingham Balakumar said...

## ராஜீவ் ஒரு கொலைகார எந்திரத்தை எதிர்கொள்வதற்கு இன்னொரு கொலைகார எந்திரத்தை அனுப்பியது தவறல்ல ##

இந்திய கொலைகார எந்திரம் நீங்கள் குறிப்ப்டும் கொலைகார எந்திரத்தை மட்டும் எதிர் கொண்டிருந்தால் எந்தப்பிரச்சனையும் இல்லை .
மூன்று வருடங்களாக அந்த இந்தியக்கொலைகார எந்திரத்தை தமிழ் கொலைகார எந்திரம் நன்றாக கவனித்தே அனுப்பியது .

தமிழ் கொலைகாரா எந்திரத்தினை சாமாளிக்க முடியாத இந்திய கொலைகார எந்திரம் அப்பாவி தமிழ் மக்கள் பலரை பெண்கள் , குழந்தைகள் , வயோதிபர் என்றில்லாமல் அயிரக்கணக்கில் கொன்றிருக்கிறது . பலியல் வல்ல்லுறவுகளையும் மேற் கொண்டது. இந்தியப்படைகள் தமிழ் பொது மக்கள் மீது மேற்கொண்ட படுகொலைகல் பாலியல் வல்லுறவுகள் குறித்தே ராஜிவ் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அதற்கு இன்று வரை எந்த விசாரணையும் கிடையாது .

அப்பாவி மக்களின் கொலைகளோ அல்லது பாலியல் அத்து மீறல்களோ இந்திய கொலைகார படைகளை ஈழத்துக்கு அனுப்பி வைத்தவர் என்ற வகையில் ராஜீவே அனைத்திற்கும் பொறுப்பேற்க வேண்டியவர்..
அனுப்பி வைக்க வேண்டும் ?

அனைத்து வன்முறைகளுக்கும் ராஜீவ் தான் காரணம்
இலங்கையில் உள்ள கொலைகார எந்திரம் இந்தியாவில் தனி நாடு கேட் கவுமில்லை , போராட்டம்நடத்தவுமில்லை .

அப்படியிருக்க ராஜீவ் இந்திய கொலைகாரப்படையை ஏன் இலங்கைக்கு அனுப்ப வேண்டும் .

அனைத்து வன்முறைகளுக்கும் ராஜீவ் தான் காரணம்..

மு மாலிக் said...

பரராஜசிங்கம் அவர்களே,

அங்கு நடந்தது பற்றி நீங்கள் அனைவருக்கும் தெரிந்ததைத்தான் சொல்கிறீர்கள். நான் பதிவில் கூறியுள்ள கருத்துவேறு.

அங்கு நடந்த மனித உரிமை மீறல்களை நோக்கமாகக் கொண்டு செய்ததல்ல ராஜீவின் செயல். ராஜீவ் அவர்கள் விடுதலைப் புலிகளெனும் கொல்லும்-இயந்திரத்தினை எதிர் கொல்ல தனது கொல்லும்-இயந்திரத்தினை (இராணுவத்தினை) அனுப்பினார். அவ்வாறு அனுப்புவது அவரது பணிக்கு உட்பட்ட செயல். அவரது எண்ணம் தூய்மையானது. அதனால் இந்திய ராணுவத்தால் நிகழ்த்தப் பட்ட மனித உரிமை மீறல்களுக்கு அவரைப் பொறுப்பாக்க முடியாது.

செயல்கள் எண்ணத்தினைப் பொறுத்தே மதிப்பிடப் படவேண்டும்.

Anonymous said...

இவர்கள் எப்படி குற்றவாளி ஆக்கப்பட்டார்கள் என்பது ஆராயப்பட வேண்டும்.
கொலை சம்பவத்துடன் நேரடியாக தொடர்ப்புபட்டவர்கள் என்றோ தற்கொலை செய்து விட்டார்கள். இவர்கள் எப்படி கொலையுடன் நேரடியாக சம்மந்தபட்டிருப்பார்கள் என்பது தெரியவில்லை.

புலிகளின் அணுகுமுறையை நன்றாக கவனித்தால் அவர்கள் இந்த மாதிரி சம்பவங்களில் ஈடுபடும் போது உயர் ரகசியத்தை பேணுவார்கள். ராஜீவை கொல்ல போகும் விடயம் பிரபாகரன் , பொட்டு தவிர்ந்த வேறு தளபதிகளுக்கு தெரிந்திருக்க வில்லை. இவர்கள் பொட்டு தலைமையில் ஒரு ரகசிய அணியை உருவாக்கி தாக்குதல் செய்திருக்கின்றார்கள்.

சாந்தன் முருகன் புலிகள் பணி தொடர்பாக இந்தியாவில் இருந்த குழு. இவர்கள் தாக்குதல் அணியுடன் தொடர்புபட்டவர்கள் அல்ல. ஆனால் தாக்குதல் அணிக்கு தேவையான உதவிகளை செய்து கொடுப்பார்கள். (வீடு வாடகைக்கு எடுப்பது )
இவர்களுக்கு தாக்குதல் அணியின் நோக்கம் தெரிந்திருக்காது.
இவர்களை விடுவோம்.

பற்றி வாங்கி கொடுத்த காரணத்துக்காக ஒரு இந்தியர் தண்டிக்கபட்டு இருக்கின்றார். பற்றி வாங்கி கொடுக்கும் போது எதற்க்காக வாங்கி கொடுக்கிறோம் என்று நிச்சயம் தெரிந்திருக்காது.
அடுத்து இவர் பற்றி வாங்கி கொடுத்தமைக்கு எந்த ஆதாரம் கிடையாது

இந்திய தமிழன் said...

Nicely written.

At least some have brain,common sense and the guts to speak out.

பரராஜசிங்கம்,

Two wrongs don't make a right.

Pararajasingham Balakumar said...

மாலிக் அவர்களுக்கு ,

ராஜீவின் நோக்கத்தில் தவறில்லை , தூய்மையானது என்றுநீங்கள் இங்கு முன் வைக்கும் கருத்துகள் கூட ஒன்றும் புதியவை
அல்ல . ஏற்கனவே இந்திய காங்கிரஸ் காரர் சொல்லி புளித்துப்போன கருத்துதான் .

ராஜீவ் என்னநோக்கத்துக்காக படைகளை அனுப்பினார் என்பது இங்கு முக்கியமல்ல . அனுப்பிய அந்த படைகள் என்ன கொடுமைகள் புரிந்தது . அதன் விளைவுகள் என்ன என்பதே இங்கு முக்கியமானது.

இந்தியப்படைகள் அங கு ஒரு மாத காலமோ அல்லது இரு மாத காலமோ தங்கியிருந்து இந்த கொடுமைகளை புரியவில்லை. சுமார் இரண்டரை வருடங்கள் தங்கியிருந்து படுகொலைகளையும் கற்பழிப்புகளையும் மேற்கொண்டார்கள் .எனவே இவை ராஜீவிற்கு தெரியாமல் நடந்தவையாக இருக்க முடியாது. எனவே நடந்த குற்றங்களுக்கு அவரும் உடந்தையாக இருந்துள்ளார் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இதனை தன்னுடைய நாட்டுக்குள் செய்திருந்தாலாவது ஒரளவு ஒப்புக்கொள்ளலாம் . ஆனால் இன்னொரு வெளினாட்டுக்கு தனது படைகளை அனுப்பி அங்குள்ள சிறு பானமை இன மக்கள் மீது இவ்வாறான கொடுமைகளை புரிந்தது சாதாரண விடயமல்ல . இது சர்வெதேச பயங்கரவாதமாகும்.

இன்று வரை இது பற்றிய விசாரணை குறித்த பேச்சே இல்லை .தமிழர்க்கு ஏற்பட்ட உயிரழிவு , கற்பழிப்புகள் , மற்றும் சொத்தழிவு பற்றி பேச்சே இல்லை.

கேட்டால் ராஜீவின்நோக்கம் தூய்மையனது . ஏனையவை பற்றி பேச தேவையில்லை எனப்பதில் வருகிறது.

நீங்கள் சொல்வது போல் சம்பவங்களின்நோக்கத்தை மட்டும் பார்த்து அதன் விளைவுகளை கணக்கில் எடுக்காது விட்டால் , இந்திய குற்றவியல் சட்டத்தின் படி பல தூக்கு தண்டனை கைதிகளும் , ஆய்ள் தண்டனை கைதிகளும் தண்டிக்கப்படாமல் சுதந்திரமாக உலா வந்து கொண்டல்லவா இருந்திருப்பார்கள் ?

பல கொலைகல் , பிள்ளைகளை , பொண்டாட்டியை , தாய் தகப்பனை காப்பாற்றுவதற்காக மேற்கொள்ளப்படவில்லயா ?

அவர்களை எல்லலாம் நீதி மன்றம் அவர்களது நோக்கம் தூய்மையானதென்று விடுவித்து கொண்டா இருக்கிறது ?

ஆய்ள் தண்டனையோ , தூக்கு தண்டனையோ கொடுத்து தண்டித்துதானே இருக்கிறது ?

இன்னும் சொல்லப்போனால் , 2009 ஆம் ஆண்டு சிங்களப்படைகள் நடத்திய தமிழின படுகொலைக்கு முன்னோடியாக , முன்மாதிரியாக விளங்கியவர்களே இந்திய கொலைகார்ப்படையினர்தான்..

நந்தவனத்தான் said...

//அப்படியிருக்க ராஜீவ் இந்திய கொலைகாரப்படையை ஏன் இலங்கைக்கு அனுப்ப வேண்டும் .//

தமிழ் உணர்வாளர்களுக்கு மறதி ரொம்பத்தான் அதிகம்!

ராஜிவ் இலங்கைக்கு ராணுவத்தை அனுப்ப காரணமே அப்போது தமிழ்நாட்டில் இருந்த ஈழத்தமிழ் ஆதரவும் அதனால் விளைந்த இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பு என்கிற கோரிக்கையும்தான்! பிராந்திய வல்லரசு என்கிற நினைப்பில் இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பி அதற்கு விலையாக உயிரையும் கொடுத்தார் ராஜிவ். அப்போது இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பு என எங்கு பார்த்தாலும போஸ்டர் அடித்து ஒட்டியதை அமைப்புகள் மறந்துவிட்டது ஆச்சர்யமே!

சகோ மாலிக் நன்றாக சுட்டிக்காட்டியது போல ராஜிவ் அட்டூழியம் செய்ய ராணுவத்தை அனுப்பவில்லை. உண்மையில் முன்பு இலங்கை ராணுவத்தின் யாழ்பாண முற்றுகையின் போது தமிழர்களுக்காக இந்திய படைகள் மூலம் உணவு வீச செய்தவர்தான் ராஜிவ். அவரது நோக்கம் மோசமானதாக இருக்கவில்லை. தமிழரை காப்பதுதான் அவரது நோக்கம். ஆனால் இலங்கையின் பிரிவில் அவருக்கும் எந்த இந்திய அதிகாரிக்கும் விருப்பமும் இல்லை- எப்படியும் ஒருதரப்பு எதிரியாக மாறிவிடும் அபாயத்தை அவர்கள் விரும்பவில்லை.

ஜெயவர்த்தனே திறமையாக தமிழரை காக்க வந்த ராணுவத்தை தமிழர்க்கு எதிராக திருப்பினார். ராஜதந்திரத்தில் ஒண்ணாங்கிளாஸில் கூட பெயிலாகிவிடும் விடுதலைபுலிகள் ஜெயவர்த்தனேவின் புத்திசாலிதனத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் இந்திய ராணுவத்தை தாக்கி - அவர்கள்தான் முதலில் இந்திய ராணுவத்தை தாக்கி வம்புகிழுத்தார்கள்- தங்கள் முடிவுரையில் முதல் வார்த்தையை எழுதினர்.ராஜீவும் ஜெயவர்த்தனே முன்பு ராஜதந்திரத்தில் பெயில்தான்! இருவரும் பெயில் ஆனதற்கு கொடுத்த விலை மிக அதிகம்!

Pararajasingham Balakumar said...


ராஜதந்திரத்தை பற்றி ஒன்றுமே தெரியாத விமான ஒட்டி ராஜிவ் பழுத்த ராஜதந்திரியான ஜெயவ்வர்த்தனாவின் வலையில் வீழ்ந்து தனது உயிரையும் இழந்தார்.

இதனை ஜெயவர்த்தனாவே ஒரு முறை இப்படி குறிப்பிட்டிருந்தார்

இந்தியப்பிரதமரின் ( ராஜீவ் ) பாட்டன் , தாயார் காலத்திலிருந்தே நான் அரசியலில் இருக்கிறேன் .அனது அனுபவத்திற்கு முன் இவர் ஒரு பொடிப்பயல் small boy

வேகநரி said...

நல்ல கட்டுரை சகோ மாலிக்.
நீங்களும் சகோ நந்தவனத்தானும் சொன்ன மாதிரி ராஜீவ் நல்ல நோக்கத்திற்கே படை அனுப்பினார். அதை அத்தனையும் நாசமாக்கியது புலி இயக்கம். இப்போ மறுபடியும் கெஞ்சல் இந்தியா தலையிட வேண்டும் என்று தொடங்கியுள்ளது.மறுபக்கத்தால் இந்தியாவை நோக்கி உத்தரவும் போடுறாங்க நீ இலங்கையில நடக்கும் மகாநாட்டுக்கு போக கூடாது அது செய்ய கூடாது இது செய்ய கூடாது என்று.

'நெல்லைத் தமிழன் said...

மிகச் சரியான கருத்து. வாழ்துக்கள்.