Thursday, January 30, 2014

பிஜே மற்றும் TNTJ-வின் நாகரீகத்தினைப் பாரீர்

 சம்சுதீன் காசிமி என்பவர் பிஜே எனும் பி. ஜெயினுல் ஆபிதீன் என்பவருடைய  கூச்சலுக்கு எதிரான கொள்கையை உடையவர் என்பதால், அந்த காசிமியினை எப்படியெல்லாம் திட்டுகின்றனர் அந்த  TNTJ-வினர் என்று பாருங்கள்.

அவைகளின் ஒரு பகுதியினை கீழே கட்-பேஸ்ட் செய்துள்ளேன்:

"தவ்ஹீத் ஜமாஅத் நடத்த உள்ள சிறைசெல்லும் போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசியதோடு, முஸ்லிம் சமுதாயப் பெண்களின் கற்பொழுக்கத்தை கேவலமாக பேசியுள்ளான் சம்சுதீன் விஷமி என்ற சமுதாய துரோகி.

"ஓரினசேர்க்கை செய்து மாட்டிக் கொண்டதால் இந்த சமுதாய துரோகி அவன் இருந்த அமைப்பிலிருந்து நீக்கப்பட்டான்; ஆண்களை கூட தனது காமப்பசிக்கு இறையாக்கத்துடிக்கும் இந்த காமுகன் தான் தவ்ஹீத் ஜமாஅத்தினர் மீதும், நமது போராட்டத்தில் கலந்து கொள்ளும் சகோதரிகள் மீதும் அவதூறை அள்ளி வீசுகின்றான்.

"இடஒதுக்கீடு கேட்பது ஹராம் என்று உளறியுள்ளான். இந்த மனநோயாளியை பள்ளிவாசல் இமாமாக நியமித்து தாங்களும் மடையர்களாகி, மக்களையும் மடையர்களாக்கும் சென்னை மக்கா பள்ளிவாசல் நிர்வாகிகளே! இந்த காமவெறி பிடித்த மிருகத்தால் உங்களது வீட்டிலுள்ள பெண்களுக்கு மட்டுமல்ல; உங்கள் வீட்டிலுள்ள ஆண்களுக்கும் கூட ஆபத்து என்று எச்சரிக்கின்றோம்.

"தான் செய்யக்கூடிய ஈனத்தனமான காரியங்களையெல்லாம் பிறரும் செய்வார்கள் என்று குற்றம் சொல்லும் இந்த அயோக்கியனது லீலைகள் கொஞ்ச நஞ்சமல்ல…."

இப்படி கூறியுள்ளனர் பிஜெயின் இயக்கமாகிய TNTJ-யினர். சம்சுதீன் காசிமியின் பதில் இதோ: 
http://www.makkamasjid.com/index.php?option=com_content&view=article&id=1005%3Apj-araajagam-msq-maruppu&catid=41%3Aothers&lang=en


பின் குறிப்பு:
இதன் பின்புலம் அறியாதவர்களுக்காக இந்த விளக்கம். பிஜே என்பவர் "TNTJ" அல்லது "தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்" எனும் அமைப்பின் நிறுவனர். அந்த இயக்கம் தமிழ்நாட்டு வஹ்ஹாபிகளின் இயக்கம். அவர் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் எனக் கூறுபவர். இவரையோ அல்லது இவரது TNTJ-யினரையோ எதிர்த்து யாரேனும் சொன்னால், TNTJ-யினர் மேடையேறி திட்டுவர். எதிர்த்துக் கருத்து சொன்னவரின் குடும்பத்தினர்களையெல்லாம் விரசமாக ஆபாசமாகப் பேசுவர். எதிர்த்துக் கருத்து சொன்னவரின் உடல்-ஊணத்தினைக் கூட எள்ளி நகையாடுவர். கடந்த காலங்களில், இப்படி நக்கீரன்-கோபால், கமல் ஹாசன், பாரதிராஜா, மனுஷ்யபுத்திரன் ஆகியோரைத் திட்டியுள்ளனர். இவர்களின் தலைவர் பிஜே என்பவர், சாஃட்வேர்திருடல் தர்மத்திற்குட்பட்ட செயலென்று பகிரங்கமாக அறிவித்தவர்.

காசிமி என்பவரோ முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தர்மமாகாது எனக் கூறுபவர். இவர் ஒரு பள்ளிவாசலில் மத-ஊழியராகப் பணியாற்றுபவர்.

12 comments:

தருமி said...

வீட்டை விட்டு ஒரு பெண் தனியே சென்றாலே அவள் ஒரு விபச்சாரி .. இப்படி நபி கூறுகிறார் என்கிறாரே சம்சுதீன் காசிமி.

அப்டீங்களா?

தருமி said...

வீட்டை விட்டு ஒரு பெண் தனியே சென்றாலே அவள் ஒரு விபச்சாரி .. இப்படி நபி கூறுகிறார் என்கிறாரே சம்சுதீன் காசிமி.

அப்டீங்களா?

மு மாலிக் said...

தருமி அவர்களே,

சம்சுதீன் காசிமியின் வீடியோ-பதிலிற்கு நான் இணைப்புக் கொடுத்திருந்தாலும், எனது இன்டெர்னெட் கனெக்க்ஷன் மிக மிக பலஹீனமானதென்பதால் நான் அந்த வீடியோவினைப் பார்க்க முடியவில்லை. சொல்லப் போனால் எந்த வீடியோவினையும் அடுத்த ஒரு மாதத்திற்குப் பார்க்க முடியாது.

சம்சுதீன் காசுமியின் அனைத்துக் கருத்துக்களுக்கும் ஆதரவானதல்ல எனது பதிவு.

சம்சுதீன் காசுமி பயின்ற மத்ரஸா-பள்ளி "தேவ்பந்த்" எனும் தாலிபான்களின் பள்ளி. இந்தப் பள்ளி இந்தியாவில்தான் இருந்தாலும், இது கட்டி அமைத்த கோட்பாடுகள், தாலிபான்களின் கோட்பாடுகளாக பிற்காலத்தில் மாறின. இந்தப் பள்ளியின் கோட்பாடுகள் வஹ்ஹாபிஸம் போல‌ தீவிரமானதுதான் என்றாலும், சவுதி வஹ்ஹாபிஸம் அளவிற்கு இல்லை.

இருப்பினும் இடஒதுக்கீடு கோருவது கீழ்தரமான செயல் என்று கருதுபவர்களில் நானும் ஒருவன்.

மேலும், நீங்கள் சொன்னவாறு சம்சுதீன் சொன்னாரா இல்லையா என்று எனக்குத் தெரியாது. அவ்வாறு சொல்லி இருந்தால் தவறுதான்....

இருப்பினும்,

பெண்கள் ஆண்களுக்கு சமமாக வியாபார, தொழில் ரீதியாக தனியாகவோ அல்லது சக ஆண் ஊழியர்களுடனோ பாதுகாப்பற்ற‌ தொலைதூர ஊர்களுக்கு பயணம் செய்யத்தக்கவர்களில்லை எனும் கருத்தினைக் கொண்டுள்ளேன். இந்த வேறுபாட்டின் ஊற்று, 'இயற்கை' என்றுதான் சொல்லவேண்டும். இதில் பெண்ணியம், புண்ணாக்கு, புல்லரிப்பு ஆகியவற்றுக்கு இடமில்லை.

தருமி said...

//இந்தப் பள்ளியின் கோட்பாடுகள் வஹ்ஹாபிஸம் போல‌ தீவிரமானதுதான் என்றாலும், சவுதி வஹ்ஹாபிஸம் அளவிற்கு இல்லை.//

வஹ்ஹாபிஸம் மிகத் தீவிரமானது என்று நினைத்திருந்தேன். ஆனால் பார்த்த காணொளியில் இந்த தீவிரவாதம் எந்த குழுவையும் விடாது ஆட்கொண்டிருக்கிறது என்றறிந்தேன். அதுவும் நபியே அப்படி சொன்னார் என்றால் அதை ‘இயற்கை’ என்று சொல்லக் கூடாது. அது நீங்கள் சொல்லும் ‘ பெண்ணியம், புண்ணாக்கு, புல்லரிப்பு’ இவைகளுக்குள் தான் எனக்குச் சேர்க்கத் தோன்றுகிறது.

உங்கள் ’தலைமையே’ அப்படி சொன்னதாக மேற்கோளோடு கூறியதால் ஏற்பட்ட பயத்தில் அந்தக் கேள்வியைக் கேட்க நேர்ந்தது.

மு மாலிக் said...

" நபி சொன்னார்" என்று வெறுமனே யாரும் நபி கூறியதாகக் கூறமுடியாது. நபிசொன்னதாக இந்தப் புத்தகம் கூறுகிறதென்று வேண்டுமானால் சுட்டலாம்.

அந்தப் புத்தகங்களின் செய்திகள் மிகச்சரியானவையென்று அனைத்து இஸ்லாமியர்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டதில்லை. இதற்கு ஆதாரம் வேண்டுமானால், நீங்கள் ஒரு உண்மையைக் கவனிப்பதன் மூலம் உங்களுக்கு அந்த ஆதாரம் கிடைக்கும். உலகில் இஸ்லாமியர்கள் பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்துள்ளனர். இந்த புத்தகங்களின் மீது இருக்கும் மரியாதை, மக்கள் மத்தியில் வேறுபடுவதால்தான் இந்தப் பிரிவு.

வஹ்ஹாபிகள் போற்றும் புத்தகங்களின் சில செய்திகளை ஏனையோர் ஏற்பதில்லை. அதே போல, வஹ்ஹாபியல்லாதவர்கள் போற்றும் செய்திகளையும் பல பிரிவு இஸ்லாமியர் மறுக்கவே செய்கின்றனர்.

எனவே, " நபி கூறினார்" என்று யாரேனும் சொன்னால், நபி சொன்னார் என்று அர்த்தமல்ல.

தருமி said...

அது 414ம் ஹதீசுங்களாம்.

நபி அவர்கள் சொன்னதாம்.

’’ " நபி கூறினார்" என்று யாரேனும் சொன்னால், நபி சொன்னார் என்று அர்த்தமல்ல.’’ இதன் பொருளும் புரியவில்லைங்க.

மு மாலிக் said...


பாரதியார் எழுத்துக்களைச் சுட்டிக்காட்டி, "பாரதியார் கூறினார்" என்றால், பாரதியார் கூறியதாகும். ஆனால் நபி எந்த எழுத்துக்களையும் விட்டுச்செல்லாததனால், "நபி கூறினார்" என்று யாரேனும் கூறினால், நபி கூறியதாகாது.


"நபி கூறினார்" என்று யாரேனும் கூறினால், அதன் பொருள், "நபி கூறியதாக அவர் கேட்டதாகவும், அவர் கூறியதாக மற்றொருவர் கேட்டதாகவும், அந்த மற்றொருவர் கூறியதாக அந்த வேறொருவர் கேட்டதாகவும், அந்த வேறொருவர் கூறியதாக, அந்த ஆள் கேட்டதாகவும், அந்த ஆள் கூறியதாக, இன்னார் கேட்டதாகவும், இன்னார் கூறியதாக புத்தக ஆசிரியர் கேட்டதாகவும், புத்தக ஆசிரியர் நபி காலத்திற்குபின் 300 வருடம் கழித்து எழுதிவைத்துள்ள புத்தகத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது" என்றுதான் பொருள்

தருமி said...

//"நபி கூறினார்" என்று யாரேனும் கூறினால், அதன் பொருள், "நபி கூறியதாக அவர்(1) கேட்டதாகவும், அவர்(2) கூறியதாக மற்றொருவர்(3) கேட்டதாகவும், அந்த மற்றொருவர்(4) கூறியதாக அந்த வேறொருவர்(5) கேட்டதாகவும், அந்த வேறொருவர்(6) கூறியதாக, அந்த ஆள் கேட்டதாகவும், அந்த ஆள்(7) கூறியதாக, இன்னார்(8) கேட்டதாகவும், இன்னார்(9) கூறியதாக புத்தக ஆசிரியர்(10) கேட்டதாகவும், புத்தக ஆசிரியர்(11) நபி காலத்திற்குபின் 300 வருடம் கழித்து எழுதிவைத்துள்ள புத்தகத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது" //

ஆக நீங்கள் கூறியதில் நான் எண்ணமிட்ட படி, நபி சொன்னதை பதினோராவது ஆள் கேட்டு, எழுதி வைத்ததை ஹதீஸ் என்கிறீர்கள் என்று தெரிகிறது.

இப்படி எழுதினாலும் (தேவை வரும் போது) அதுசரி என்றும் வாதிடுவீர்கள்; (தேவையில்லாத போது) அதை வீக் ஹதீஸ் என்பீர்கள். நல்லா இருக்கு. :)

இதைத் தான் இப்பதிவில் ஒரே ஒரு கேள்வி கேட்டு எழுதினேன்.

மு மாலிக் said...

தருமி அவர்களே,

எனது பதிலினை மேற்கோள் செய்யும்போது, நீங்கள் (1), (2), (3) என்று எண்களைச் சேர்த்துள்ளீர்கள். அதைக் கூட தப்பும் தவறுமாக செய்துள்ளீர்கள். இப்படி இருக்க நீங்கள் சுட்டும் உங்கள் கட்டுரையைப் படிக்க என் மனம் தயாராக இல்லை.

உங்கள் கேள்வியை நீங்கள் இங்கே கேட்கலாம்.

தருமி said...

ஆஹா...ஹா .. எப்ப்டி ஒரு காரணம் தருகிறீர்கள்! உங்கள் பெரும் அறிவுத் தேடலுக்கு ஒரு சலாம். விவாதிக்கும் திறமைக்கு சல்யூட்.

இன்னொரு ஜோக். ஒரு பதிவில் உள்ள ஒரு கேள்விக்குப் பதில் என்ன என்று கேட்டால் நான் போய் அந்தப் பதிவைப் படிக்க மாட்டேன் என்கிறீர்கள். ஆனால் பல இசுலாமியப் பதிவர்கள் விவாதத்திற்கு ‘நேருக்கு நேர்’ வாருங்கள் என்றுசவால் விடுக்கிறீர்கள்.

நல்லா இருக்குதுங்க ... நடத்துங்க ...

மு மாலிக் said...

தருமி அவர்களே,

நீங்கள் சிரித்துவிட்டு செல்கிறீர்கள். ஒருவர் கூறிய கூற்றை நீங்கள் மேற்கோள் குறிகளுக்குள் காட்டும்போது, அதை எந்த விதமான மாறுதல்களுக்கும் உட்படுத்தக் கூடாது எனும் தார்மீகத்தினை உணரவேண்டும்.

நீங்கள் செய்ததில் என்னப் பிரச்சனை என்றால் நீங்கள் செய்த மாற்றம் தப்பும் தவறுமாக இருக்கிறது. மற்றவர்கள் அதைப் படிக்கும்போது அந்த தவறுகள் என்னுடையவை எனக் கருதவாய்ப்புள்ளது. எனது மேற்கோளில் நீங்கள் செய்த அந்தத் தவறு கோமாளித்தனமானதென்பதால், படிப்பவர்கள் என்னை கோமாளி என்று நினைத்து விடுவார்கள்.

இந்த நுணுக்கங்களைக் கூட நீங்கள் உணரவில்லையெனும் போது, நீங்கள் எழுதும் பதிவுகளும் அந்த நிலையில்தான் இருக்கும் என நான் கருதுவதால், உங்கள் பதிவினை படிக்க எனக்கு ஆர்வமில்லை.

இருப்பினும் உங்கள் ஆர்வத்திற்கும் உங்கள் முயற்சிக்கு நன்றி

islam moomin said...

பிஜே என்பவன் வெகு கால்த்திற்கு முன்பே வெட்டி எறிந்திருக்க வேண்டிய ஒரு விஷ செடி இப்போது மரமாக வளர்ந்து நிற்கிறான். இவன் போன்ற இஸ்லாமிய விரோதிகளை கொல்வதில் தவறில்லை. சமுதாய மக்கள் மனதில் விஷத்தை விதைத்து பள்ளி வாசலுக்குள் அடிதடி, கொலை (திருவிடைச்சேரி) ஏற்பட முக்கிய காரணமானவன். இப்படிப்பட்டவன் சாவதற்கு முன்கூட கேவலப்பட்டு தான் சாகவேண்டும்.