Thursday, January 09, 2014

பிஜேயிடம் கேள்வி கேட்கும் கோமாளிகள்


 பிஜே எனும் பி. ஜெயினுல்லாபிதீனை ஒரு பெறிய அறிஞர் எனக் கருதி அவரிடம் கேள்வி கேட்டு அவரது பதில்களைக் கேட்கும் அவரது வாசகர்கள், அடிமட்ட மூடத்தனத்தில் இருக்கின்றனர் என்பதினை, அவர்களது கேள்விகளிலிருந்து அறிந்து கொள்ளலாம். மேலும் பிஜே எனும் அந்த நபர், மூடர்களின் தலைவர் அல்லது "அபூ ஜாஹில்" என்று அரபியில் அழைக்கத் தக்கவர் எனவும் புரிந்து கொள்ளலாம்.

 அவரிடம் கேட்கப்படும் கேள்விகள் சிலவற்றைப் பார்ப்போம்:

  "கொசுவை அழிக்க எலக்ட்ரிக் பேட் பயன்படுத்தலாமா?" இந்த கேள்வியினை மதஅடிப்படையிலான பதிலினை எதிர்பார்த்து அவரிடம் ஒருவர் கேட்டிருக்கிறார். அவர் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருப்பார் என யோசித்துப் பாருங்கள். இந்தக் கேள்வியினை ஒரு அறிவுபூர்வமான கேள்வியாகக் கருதி பிஜெயும் தனது இணையதளத்தில் அந்தக் கேள்விக்கு பதி கூறியிருக்கிறார். ஒரு வஹ்ஹாபிய இஸ்லாம் என்பது இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் சொல்வதில் தான் இருக்கிறது. இவர் சொல்லும் பதிலின் அடிப்படையில், இந்த கொசுக்கடி விஷயத்தில் செயல்பட்டால், ஆன்மீக முன்னேற்றம் ஏற்படும் என்று அந்த கேள்வி கேட்டவர் கருதுகிறார். என்ன ஒரு கொடுமை !

 "மோசடியாக பொருளாதாரம் சேர்த்த ஒருவரின் வாரிசுகளுக்கு அவரின் சொத்து ஹலாலா?" ("ஹலால்" என்ற அரபி வார்த்தைக்கு "ஏற்றுக்கொள்ளத்தக்கது" அல்லது "ஆகுமானது" என்று பொருள்.) இந்தக் கேள்வியும் அவரது இணையதளத்தில் காணப்படுகிறது. இந்த கேள்விக்குக் கூட பதில்தெரியாத மூடராக கேள்வி கேட்டவர் இருக்கிறார். இவர்களது வஹ்ஹாபிய இஸ்லாத்தில் இறையச்சம் என்றால் என்ன என்று தெரியாத நிலை இருக்கிறது என்பதினை அறிய முடிகிறது. ஃபத்வாக்களின் மூலம் ஆன்மீகத்தினைப் பெறமுடியும் எனும் மூடத்தனத்தினை நாம் இந்த கேள்வியில் காணுகிறோம். இந்த மூடத்தனமான, பத்தாம் பசலியான‌ கேள்விகள் பிஜேயிடம் முக்கியத்துவம் பெறுவதால், அவர் எவ்வளவு பெரிய அறிவாளி என்பதினையும் நாம் காண்கிறோம்.

 கேட்கப்பட்டுள்ள மற்றொரு கேள்வி: "அரசு தரும் உதவிகளை நாம் வாங்கலாமா". ஒரு மூடனுக்கு இந்தக் கேள்விக்குக் கூட ஆன்மீக அடிப்படையில் பதில் தெரியவில்லை. அந்த மூடனுக்கு பதில் சொல்லும் மூடன் இந்தப் பிஜே. வஹ்ஹாபிய இஸ்லாம் பலரையும் மூடர்களாக்கும் என்பதற்கு இது மற்றொரு ஆதாராம்.

மூடர்களின் கேள்விகளைப் பட்டியல் போட்டுள்ளேன்:

"வட்டி வாங்குபவரின் நோன்பு கஞ்சி ஹலாலா?"

"முஸ்லிம் அல்லாதவர்களை இஸ்லாத்திற்கு வந்த பிறகு திருமணம் செய்து கொள்ளலாமா ?"
"குழந்தைகளை தத்து எடுக்கலாமா?"

"பெண் வீட்டார் மார்க்கத்திற்கு முரணாக செயல்படும் போது அவர்களுடன் சேருவது பாவமா வழிகேடா?" (இந்த வஹ்ஹாபியர்களிடம் மட்டும்தான் பாவமான காரியமும் வழிகேடான செயலும் வெவ்வேறானது போலும்.)

"வீட்டோடு மாப்பிளையாக இருப்பது சரியா?"

"மருமகன் தனது மாமனார் மாமியாரை கவனித்துக் கொள்வதும் கடமையா ?" (கேள்வி கேட்ட மூடனுக்கு அவனது வஹ்ஹாபிய இஸ்லாம் எப்படி ஆன்மீக முன்னேற்றத்தினைத் தரும்?)

"நிச்சயம் செய்யபட்ட பிறகு மணப் பெண்ணிடம் உடல் ரீதியாக குறை உள்ளதை அறிந்தால் திருமணத்தை நிறுத்திக் கொள்ளலாமா ?" (இந்த கேள்விக்கு தன்னிடம் பதில் இல்லாத மூடன் வஹ்ஹாபியாக இருப்பதினால் தான் பிஜேயிடம் கேள்விக் கேட்கின்றான்).

"மனைவியிடம் பாலருந்துவதன் சட்டம்?"

"மூத்த பெண்ணை திருமணம் செய்யலாமா?"

"பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை மறுக்கலாமா" (இது ஒரு மூட வஹ்ஹாபியப் பெண்ணின் கேள்வி போலும்)

"பெற்றோருக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக மனைவியை தலாக் சொல்லலாமா?" (தலாக் சொல்லுதல் என்றால் விவாகரத்து செய்தல் சென்று பொருள்)

"மனைவிக்காக தாயைத் திட்டலாமா" (மாபெரும் மூடனின் கேள்வி இது என்று சொல்லவேண்டும்.)

இது போன்ற மூடத்தனமான கேள்விகள், அந்த மூடன் பிஜேயின் இணையதளத்தில் மலிந்து கிடக்கின்றன. இது போன்ற மூடத்தனத்திடம் இருந்து மக்கள் விடுபடவேண்டுமானால், வஹ்ஹாபிசம் ஒழிந்தால்தான் சாத்தியம். ஆன்மீக இஸ்லாம் மட்டுமே முஸ்லீம்களுக்கு சிறந்த வழி.

9 comments:

nagoreismail said...

ஸலாமலைக்கும் ஜி, 2014ன் முதல் பதிவு அதிரடியாவுல இருக்கு...

மு மாலிக் said...

அலைக்கும் ஸலாம் இஸ்மாயில் பாய். ஒரு கவலையில் தான் இந்தப் பதிவினை எழுதினேன். 2014 -ல் இது எனது முதல் பதிவு என்பதினை நீங்கள் சுட்டிய பின்பு தான் உணர்ந்தேன்.

viyasan said...

உண்மையில் எனக்கு boring ஆக இருக்கும் போது பிஜே அவர்களின் காணொளிகளைப் பார்ப்பது வழக்கம். சில நேரங்களில் சிரிப்பையூட்டினாலும்,இப்படியான கேள்விகளையுமா பொது மேடையில் அதுவும் இளைஞர் முதல் முதியோர் வரை கேட்பார்கள் என்று நினைத்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன். அவரது காணொளிகள் மூலம் இஸ்லாத்தைப் பற்றி அறிய முயன்றது தவறென்று, இப்பொழுது தான் தெரிகிறது. அவர் பதில் சொல்லாத கேள்விகளே கிடையாதெனலாம் . :)

மு மாலிக் said...

இஸ்லாம் பற்றி அறிமுகம் கொள்வதற்கு, ஏதேனும் துருக்கிய எழுத்தாளரின் இணையதளத்தினைப் பார்க்கவும் நண்பரே.

உஸ்மான் நூரி டொப்பாஸ் (Osman Nuri Topbas) என்பவரது புத்தகங்கள் சிறந்தவை. ஃபெதுல்லாஹ் குலென் (Fethullah Gulen) என்பவரது இணையதளத்தில் ( http://en.fgulen.com/ ) சூஃபிசம் பற்றி நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் உள்ளன. அவைகளைக் காணலாம். ஆனால் சமீபத்தில் அவரது அரசியல் செயல்பாடுகள் சர்ச்சைக்குறியவை. அவரது துருக்கிய அரசியல் கட்டுரைகளை தவிர்த்துவிட்டு, மற்றவைகளைப் படிக்கலாம்.

Anonymous said...

அன்புள்ள வியாசன், தங்களின் மீது சாந்தியும் சமாதானமும் உரித்தாகட்டுமாக!

முஸ்லிம்களின் துரதிர்ஷ்டம் காலம் காலமாக இஸ்லாமிய நெறி முறைகள் அவர்களுக்கு கற்று கொடுக்கப்படாமல், எளிமையான மார்க்கத்தை இருட்டடிப்பு செய்து எங்கள் மத குருமார்கள் மிகவும் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டார்கள். தங்களுக்கு முஸ்லிம் குருமார்களின் குழப்பங்கள் தெரிய வாய்ப்பு இல்லையாதலால் முஸ்லிம்களின் கேள்விகள் வித்தியாசமாகபடலாம்,

திரு. மு.மாலிக் போன்றே எங்கள் நபியவர்களின் காலத்தில் வாழ்ந்த பேகன்'களும் (குறைஷ்) கிண்டல் செய்தார்கள், "உங்கள் நபி சிறுநீர் கழிப்பதை கூடவா! கற்று தருகிறார்" என்று. அது மட்டுமில்லாமல், குர்ஆனையும் கூட "உங்கள் இறைவன் கொசுவை கூடவா உதாரனமாக்குகிறான்" என்று கிண்டல் செய்தார்கள்,

அற்பமான விஷயம் என்று மற்றவர்களுக்கு தோன்றும் கேள்விகள் நபியவர்களின் காலத்தில் தோழர்கள்/தோழிகளால் கேட்கப்பட்டது, தற்காலத்தில் அந்த கேள்விகளை, சம்பவங்களை பி.ஜைனுல் ஆபிதீன் போன்ற அறிஞர்களிடம் கேட்டு, ஹதிஸ் என்ற பெயரில் விளக்கம் பெறுகிறோம். இறைவனின் கருணையால் உண்மையான இஸ்லாமை அறிந்து கொள்கிறோம்.

எளிய மொழி நடையில் உள்ள குர்ஆன் ஒன்றை மட்டுமே நீங்கள் படித்து பார்த்து இஸ்லாத்தை அறிந்து கொள்ளலாம். தயவுசெய்து முயற்சி செய்யுங்கள். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நேர்வழியை காட்டுவானாக!

இறைவனை தேடி said...

அன்புள்ள வியாசன், தங்களின் மீது சாந்தியும் சமாதானமும் உரித்தாகட்டுமாக!

முஸ்லிம்களின் துரதிர்ஷ்டம் காலம் காலமாக இஸ்லாமிய நெறி முறைகள் அவர்களுக்கு கற்று கொடுக்கப்படாமல், எளிமையான மார்க்கத்தை இருட்டடிப்பு செய்து எங்கள் மத குருமார்கள் மிகவும் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டார்கள். தங்களுக்கு முஸ்லிம் குருமார்களின் குழப்பங்கள் தெரிய வாய்ப்பு இல்லையாதலால் முஸ்லிம்களின் கேள்விகள் வித்தியாசமாகபடலாம்.

திரு. மு.மாலிக் போன்றே எங்கள் நபியவர்களின் காலத்தில் வாழ்ந்த பேகன்'களும் (குறைஷ்) கிண்டல் செய்தார்கள், "உங்கள் நபி சிறுநீர் கழிப்பதை கூடவா! கற்று தருகிறார்" என்று. அது மட்டுமில்லாமல், குர்ஆனையும் கூட "உங்கள் இறைவன் கொசுவை கூடவா உதாரனமாக்குகிறான்" என்று கிண்டல் செய்தார்கள்.

அற்பமான விஷயம் என்று மற்றவர்களுக்கு தோன்றும் கேள்விகள் நபியவர்களின் காலத்தில் தோழர்கள்/தோழிகளால் கேட்கப்பட்டது. தற்காலத்தில் அந்த கேள்விகளை, சம்பவங்களை பி.ஜைனுல் ஆபிதீன் போன்ற அறிஞர்களிடம் கேட்டு, ஹதிஸ் என்ற பெயரில் விளக்கம் பெறுகிறோம். இறைவனின் கருணையால் உண்மையான இஸ்லாமை அறிந்து கொள்கிறோம்.

எளிய மொழி நடையில் உள்ள குர்ஆன் ஒன்றை மட்டுமே நீங்கள் படித்து பார்த்து இஸ்லாத்தை அறிந்து கொள்ளலாம். தயவுசெய்து முயற்சி செய்யுங்கள். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நேர்வழியை காட்டுவானாக!

Dr.Anburaj said...

தங்களது வலைதளம் வித்தியாசமானது.வஹரபித்தனமான இஸ்லாம் உலக அமைதிக்கு சமூக இணக்கத்திற்கும் ஆபத்தானது என்பதை தெளிவாக எடுத்து இயன்பி வருகின்றீர்கள். மேலும் நிறைய கட்டுரைகள் வெளியிட வேண்டும்.காயல்பட்டணம் சென்ற நான் அங்குள்ள கடையில்ஒரு வஹாபிச பத்திரிகையில் ” முஸ்லீம் பெண்கள் பொடடு வைக்கலாமா? என்ற கேள்விக்கு காபீர்களின் பழக்கங்களை முஸலீம் பெண்கள் கைக்கொள்ளலாகாது” என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது.நான் காபீர் என்ற வார்த்தைக்கு பொருள் அறிய அரேபிய மத பத்தகங்களை நிறைய படித்தேன். இந்துக்களை காபீர் என்று சொலவ்து நியாயமற்றது என நம்புகிறேன்ஃதங்களின் கருத்து என்வோ? பாராட்டுக்கள்

Anonymous said...

பிஜே-க்கு தான் ஏதோ ஷர்புதினத்து இளவரசன் என்று நினைப்புதான்.

ஜானிப்

islam moomin said...

பிஜே என்கிற இந்த பித்தலாட்டக்காரனின் திறமையே இவனுடைய வாய் சூனியம் தான். இது சில பேருக்கு தான் அமையும். இப்படிப்பட்ட வாய்சூனியத்தை வைத்து ஒரு கூட்டத்தை சுவற்றில் முட்டிக்கொள்ள வைக்கலாம் பாழும் கிணற்றில் குதிக்க வைக்கலாம். இதில் ஒரு கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால் பள்ளிக்கூட பக்கமே போகாதவன். மதர்ஸாவிலும் மக்கு என்று முத்திரை குத்தப்பட்டவன். இப்போது இவன் நைச்சியமான பேச்சினால் நிறைய பேரை வசப்படுத்தி வைத்திருக்கிறான். இவனிடம் கேள்வி கேட்டு பதில் தெரிந்து கொள்ளவிரும்புபவை போல் ஒரு மூடன் யாரும் இருக்க முடியாது.