Wednesday, February 06, 2013

ஒருவர் இறந்தால் அவரைப் பற்றி நல்லதை மட்டும்தான் பேச வேண்டுமா?

 அப்படித்தான் செய்யவேண்டும் என்று கூறுபவர்களிடம் என் கேள்விகள்

1. ஹிட்லரைப் பற்றி நல்லது பேசுவது சரியா? அப்படிப் பேசினால் அவர் செய்தக் கொடுமைகளை மறைக்கும் குற்றத்திற்கு ஆளாக மாட்டோமா ? ஹிட்லர் இறந்தால், "இரங்கல்" என்ற பேரில், அவர் ஒரு தாவரஉண்ணி என்றும், அவர் ஒரு கட்டுப்பாடு மிக்கவர் என்றும், சிறந்த நாட்டுப்பட்டு மிக்கவர் என்று மட்டும் "இரங்கல்" கூறலாமா?

2. பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதற்காக, அவர் செய்த கொடுமைகளை நினைவுகூறாமல் இருக்கலாமா? சரி உங்களில் சிலருக்கு உள்ள‌ முஸ்லிம்கள்-மீதான-வெறுப்பு மற்றும் சிங்களவர்கள்-மீதான-வெறுப்பினால் அவர்களுக்கு அவர் செய்த கொடுமையினை நினைவு கூறவேண்டாமென்று வைத்துக் கொள்வோம். தமிழர்களை மனிதக் கேடயமாக வைத்து அவர் செய்தக் கொடுமையைக் கூடவா மறைக்கவேண்டும்?

3. பிரபாகரனை ஒரு விடுதலைப் போராளி என்று பார்ப்பவர்களை விடுங்கள். மோடியை தீவிரவாதிகளை சுட்டுக் கொல்பவரென நினைப்பவர்களை விடுங்கள். ஹிட்லரை ஒரு ஏமாற்றுக்காரக் கூட்டதினரை கொன்றவர் எனக் கருதுபவர்களை விடுங்கள். ஆனால், பிரபாகரனையும் ஹிட்லரையும் இஸ்ரேலயும் அவர்களது இனவெறிக்காக ஆதரிப்பவர்களையும், மோடியை அவரது மதவெறிக்காக ஆதரிப்பவர்களையும் கருத்தில் கொள்ளுங்கள். இந்த ஆதரவாளர்கள் அழியவேண்டும் என நினைப்பதில் என்ன தவறு?

4. அத்தகைய ஆதரவாளர்கள் அழியவேண்டும் என நான் நினைத்ததினைக் கண்டித்து, எனக்கு ஒருவர் அறிவுரைக் கூறினார். நான் கூறுவது பிடிக்கவில்லை என்று அவர் நினைத்தால், எனது மரணத்தினை அவர் வேண்டலாமா? என்று என்னிடம் கேட்டார். நான் அவரிடம் கேட்பது இதுதான்: தீமையையும் நன்மையையும் ஒரே விதத்தில் நடத்தலாமா? குழந்தைகளையும் பெண்களையும் கொல்பவர்களைக் கேள்விகேட்காமல் ஆதரிப்பதினைப்பற்றி நன்மையா தீமையா என்று கூறுவதில் இரு நிலைப்பாடு இருக்க வாய்ப்புள்ளதா? அப்படி தீமைதான் எனத் தெரிந்தால், தீமையின் அழிவினை நாடுவதில் ஏன் தயக்கம்?

5. இப்போ, பிஜே இருக்கிறார். அவர் அழியவேண்டும் என நான் நினைப்பதில் எனக்கு எவ்வளவு மன நிம்மதி கிடைக்கிறது தெரியுமா? எனக்கு எவ்வளவு ஆன்மீக உணர்வு அதிகரிக்கிறது என உங்களுக்குத் தெரியுமா? அவரைப் பற்றி கேவலமான உண்மைகளை ஒரு முஸ்லிம் நண்பரிடம் நான் கூறும்போது எனக்கு மயிர்கூச்செறியும் இறை உணர்வு வருகிறது. நான் அப்படி சொன்னதும் ஒரு உருப்படியானக் காரியத்தினைப் பண்ணிய மன நிறைவு ஏற்படுகிறது. அவரது அடிபொடிகள் அடிக்கடி வீடியோக்களில் தோன்றி நக்கீரன், மக்கா மஸ்ஜித் இமாம் போன்றவர்களைப் பச்சை பச்சையாகத் திட்டுவது வழக்கம். அந்தப் பிஜேயின் அடிபொடிகளுக்கு மாறு கை மாறு கால் வாங்குவது போல தியானம் செய்து பாருங்கள். உங்கள் ஆன்மீக அந்தஸ்து உயர்வதினை நீங்கள் உணரமுடியும். தீமையை வெறுக்கவேண்டும். அதன் பலன் நன்மையினை ஆதரிப்பது போலத்தான்.

6. பிரபாகரன் என்கிற பெருச்சாளியை விரட்டி, அவரது பாதாள‌ வளைக்குள் படைகள் நுழைந்தபோது அந்த வளையின் புகைப்படங்கள் வெளிவந்தன. அப்போது அந்த பாதாள வளையில், ஒரு சிறுத்தையின் பொம்மை ஒன்று இருந்தது. இயற்கையான சிறுத்தைவின் அளவில் அந்த பொம்மை. ஒரு தீவிர பிரபாகரன் ஆதரவாளன் பக்கத்தில் இருந்தான். அவனிடம், "உங்கள் பிரபாகரனின் செக்ஸ்-டாய் பிடிபட்டுவிட்டது" என்று சொல்லி, அவனது மனதினை உடைத்தபோது எனது ஆன்மீக உணர்வு எகிறியது.

தீமையினை வெறுப்பதில் எனக்கு அளாதி பிரியம்.

4 comments:

தமிழன் said...

ஒருவர் தவறு செய்திருந்தால், இறந்தவராக இருந்தாலும் சுட்டிக்காட்டலாம். அது உங்கள் கருத்துரிமை.

அதுவே எழவு வீட்டில் அது பற்றிப்பேசினால் அது அநாகரீகம்.
விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் யாருமில்லை.
ஆனால் அந்த விமர்சனம் செய்யும் இடம் எழவு வீடோ மரண அறிவிப்பு பதிவாகவோ இருந்தால், அது கண்ணியம் ஆகாது. நாம் மனிதர்கள்தான் என்பதை மறக்க கூடாது.

viyasan said...

இற‌ந்த‌வ‌னைப் ப‌ற்றி அதிலும் அவ‌ன‌து குடும்ப‌ம் துக்க‌ம் கொண்டாடும் கால‌த்தில் இழிவாக‌ப் பேசாம‌லிருப்ப‌து த‌மிழ்ப்ப‌ண்பாடு ஆனால் அரபுக்க‌லாச்சார‌த்தில் அப்ப‌டியெதுவுமிருப்ப‌தாக‌த் தெரிய‌வில்லை, இர‌த்த‌த்துக்கு இர‌த்த‌ம், ப‌ழிக்குப்ப‌ழி தான் அர‌புக்க‌ளின் ப‌ண்பாடு.

Anonymous said...

உங்கள் கருத்துகளோடு முற்றாக உடன்படுகின்றேன், இருந்தாலோ இறந்தாலோ விமர்சனங்களே முட்டாள் தனங்களை உடைக்கும், அதே சமயம் திடிர் இழப்பில் தவிப்போருக்கு ஆசுவாசம் கொடுக்காமல் குத்தக் கூடாது, கொஞ்சம் மூச்சு இழுத்துக் கொள்ளட்டும் ஹிட்லர், பிராபகரன், ஒசாமா, மோடி, பிஜே வரையில் அனைத்து விசமிகளையும் அவரது விசக் கருத்துக்களையும் தூளாக்க வேண்டும்.

ராசின் said...

உண்மையை சொன்னால் நாம் ஏற்போம்.வெளிச்சம் உங்கள் உள்ளத்தில்!