Thursday, October 11, 2012

நோயுறுதலும் பிரார்த்தித்தலும்

 நம்மில் பலர் நோயுறுதலை இறைவனின் சோதனை எனக் கருதுகின்றனர். ஆனால் அது சோதனையாகவும் இருக்கலாம் அல்லது இறைவனின் தண்டனையாகவும் இருக்கலாம். நோயுறுதல் மட்டுமின்றி எந்த ஒரு துன்பமும் அவ்வாறுதான்.

 உதாரணத்திற்கு பிரபாகரனுக்கு நேர்ந்ததினை யாராவது சோதனை என்று சொல்வார்களா? பிரபாகரன் எப்படிப் பட்டவர் என எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

நோயுறுதலால், அல்லது எந்த ஒரு துன்பத்தினாலும், ஆன்மாவிற்கு தூய்மையே. உங்கள் புண்களின் வழியேதான் இறைவனின் ஒளி (நூர்) நுழைகிறது என்பது சூஃபிஞானி ரூமி அவர்களின் கூற்றாக ஒரு இடத்தில் படித்ததுண்டு. அந்த துன்பம் தண்டனையினால் நிகழ்கிறதோ அல்லது சோதனையால் நிகழ்கிறதோ. இரு வகையிலும் ஆன்மா தூய்மை அடைகிறது. துன்பக் காலங்களில் நாம் இறைவனுக்கு நெருக்கமானவர்களாக இருக்கிறோம்.

 ஒருவர் நோயுற்றுள்ளார் என மற்றவர்கள் கேட்டதும், அவருக்காகப் பிரார்த்திக்கிறோம் என அவர்கள் அறிவிக்கின்றனர். ஆனால் உண்மையில் இவ்வாறு பிரார்த்தித்தலென்பதில், பிரார்த்திப்பவரின் மனம் கசடற்றதாகவும் மாறலாம், அதே சம்யத்தில் பலப் புதிய கசுடுகள் வந்தும் சேரலாம்.

 நோயுற்றவரின் செயல்களை நாம் கவனிக்கவேண்டும். அவர் தகாத செயல்களைச் செய்திருந்தால், அதற்காக அவர் பாவமன்னிப்புத் தேடியவரா எனப்பார்க்க வேண்டும். இல்லாவிட்டால், "இறைவனே நீயே போதுமானவன்" என்று சொல்லிவிட்டு சென்றுவிடுவதே மேலானது. நோயுற்றவர் தகாத செயல்களைச் செய்பவர் என அறிந்தும் அதற்காக இன்னும் வருத்தமடையாமல் அச்செயல்களைச் செய்பவர் என அறிந்தும். அவருக்காக அவர் குணமாக வேண்டி பிரார்த்திப்பவர்களின் மனதில், நோயுற்றவர் மற்றவருக்கு செய்கின்ற குற்றங்கள் எல்லாம் "மிகச் சாதாரணவை" என்ற கசடு சேர்ந்து அந்தப் பிரார்த்திப்பவரும் தீயவர்களில் உள்ளவராகிறார்.

 தீயவன் ஒருவன் நோயுற்றால், 'அவன் தண்டனை அடைகிறான்' எனப் பார்த்து, பாடம் பெறவேண்டும். அந்தத் தீயவன் வேறு ஏதாவது காரணத்தினால் உங்களுக்கு வேண்டப்பட்டவராயின், அவ‌ர் திருந்தி குண‌ம‌டைய‌ பிரார்த்திக்க‌லாம். வெறும‌னே குண‌ம‌டைய‌ப் பிரார்த்தித்த‌லால், பிரார்த்திப்ப‌வ‌ருக்குத் தான் கேடு.

 பிஜே விஷ‌ய‌த்தில் நான் இதை நினைவுக் கூர்கிறேன்.

 முஜீப் என்ப‌வ‌ருட‌ன் நிக‌ழ்ந்த‌ விவாத‌த்தின் போது, விவாதத் தலைப்பிற்கு அப்பால் பட்டு, பிஜே அவ‌ர்க‌ள் முஜீபை, "பால் குடி ஹ‌தீஸ்" என்ப‌து ப‌ற்றிப் பேசி, முஜீபின் குடும்ப‌த்தினையெல்லாம் விவாத‌த்தில் இழுத்து இவ் இவ்விஷ‌ய‌த்தில் திமிர்த‌ன‌மாக‌ப் பேசிய‌த‌ற்கு இறைவ‌ன் புற‌த்திலிருந்தி எந்த த‌ண்ட‌ன‌யும் வ‌ராம‌ல் இருக்குமா?

 இத‌னை ஒரு உதார‌ண‌த்திற்கு தான் நினைவுக் கூறுகிறேன்.
 ஃபைஜி ஷா அவ‌ர்க‌ளை க‌த்தியைக் காட்டி மிர‌ட்டுவேன் என‌ மேடையில் ஆக்க்ஷ‌ன் செய்துக் காட்டிய‌த‌ற்கு, ஒருவ‌ரை அவ‌மான‌ப் ப‌டுத்துவ‌தைத் த‌னது உரிமை என‌க் க‌ருதிய‌வ‌ருக்கு, த‌ண்ட‌னை இறைவ‌ன் புற‌த்திலிருந்து வ‌ராம‌ல் இருக்குமா?

 ஒரு ஃபோட்டோவினை அடிப்ப‌டையாக‌க் கொண்டு, ஒருவ‌ரை இன்னொருவ‌ர் காலில் விழுந்த‌வ‌ர் என‌க் கூறி அவ‌மான‌ப் ப‌டுத்த‌ உரிமை எடுத்துக் கொண்ட‌வ‌ருக்கு த‌ண்ட‌னை வ‌ராம‌ல் இருக்குமா?

 இவைக‌ள் உதார‌ண‌ங்க‌ள்தான். உண்மையில் பிஜே இவைக‌ளுக்கு ம‌ன‌ம் வருந்தினால் நான் கூட‌ பிரார்த்திக்க‌ த‌யாராக‌வே உள்ளேன்.

4 comments:

விஜய் said...

பிறவியிலேயே குறைபாடு உள்ளவர்களுக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கும் நடக்கும் கொடுமைகளுக்கும் விபத்துகளுக்கும் காரணம் சோதனையா அல்லது தண்டனையா?

மு மாலிக் said...

விஜய் அவர்களே,

நாம் அனைத்திற்கும் விடைத் தேட முயன்றால், தேடி மாள இயலாது. விடைத் தேட வேண்டிய வினாக்கள் எல்லையற்றவை. நாம் நம்மை ஒரு குழந்தை என்று கருதிப்பழகிக் கொள்ளவேண்டும். வினாக்களுக்கு விடைத் தெரியாமல் இருப்பதை இயற்கை என்று எடுத்துக் கொள்ளவேண்டும். இருப்பினும் நீங்கள் கேட்டது தொடர்பாக நான் சொல்ல நினைப்பது இதுதான்:

1. பிறவி நொடுக்கங்களால் குழந்தைகள், அக்குழந்தைகளின் சுய பார்வையில் துயறுகின்றன என்பது ஒரு யூகம் மட்டுமே. நமது பார்வையில் அவர்கள் துயறுகிறார்கள் என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் அவர்களது சுயபார்வையில் ? திட்டவட்டமாகக் கூறமுடியாது ?

2. சூஃபிக் களின் பார்வையில் படைத்தலும் அழித்தலும், இறைவனின் மூச்சு என்கிறார்கள். படைக்கப் பட்டவைகள் அனைத்தும் இறைவனைக் காட்டும் திரை. அப்படைப்புகள் மற்றப் படைப்புகளின் பார்வையில் குறையுடையதாக இருந்தாலுமே.

Barari said...

குராபிகள் எந்த தன்மையில் இருப்பார்கள் என்பதற்கு நீங்கள் மிக சிறந்த உதாரணம் நண்பரே '

Anonymous said...

///பிரபாகரனுக்கு நேர்ந்ததினை யாராவது சோதனை என்று சொல்வார்களா? ////

அதெல்லாம் பார்ப்பவர்களின் பார்வையைப் பொறுத்தது. அமெரிக்காவைக் கேட்டால், ஒசாமாவுக்கு நேர்ந்தது சோதனை என்றா சொல்லும்? ஆர்.எஸ்.எஸ்ஸைக் கேட்டால் பாபர் மசூதி விவகாரம் முஸ்லிகளுக்கான சோதனை என்றா சொல்லும்?