Thursday, October 11, 2012

இசைக்கு மொழி இல்லை என்பதற்கான நிரூபணம் இந்த கவ்வாலி உர்து பாடலுக்கு அர்த்தம் வேண்டிக் கிடக்கா உங்களுக்கு? வேண்டியதே இல்லை. எனக்கு எந்த வரியும் புரியவில்லை. புரியவேண்டும் என்றும் எனக்குத் தோனவே இல்லை. உங்களுக்கு?

நீங்கள் முற்றிலும் சில நிமிடங்கள் மற்ற எல்லாவற்றையும் மறக்க, இந்த வீடியோவினைப் பாருங்கள்.

நன்றி: நாகூர் இஸ்மாயில்


நோயுறுதலும் பிரார்த்தித்தலும்

 நம்மில் பலர் நோயுறுதலை இறைவனின் சோதனை எனக் கருதுகின்றனர். ஆனால் அது சோதனையாகவும் இருக்கலாம் அல்லது இறைவனின் தண்டனையாகவும் இருக்கலாம். நோயுறுதல் மட்டுமின்றி எந்த ஒரு துன்பமும் அவ்வாறுதான்.

 உதாரணத்திற்கு பிரபாகரனுக்கு நேர்ந்ததினை யாராவது சோதனை என்று சொல்வார்களா? பிரபாகரன் எப்படிப் பட்டவர் என எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

நோயுறுதலால், அல்லது எந்த ஒரு துன்பத்தினாலும், ஆன்மாவிற்கு தூய்மையே. உங்கள் புண்களின் வழியேதான் இறைவனின் ஒளி (நூர்) நுழைகிறது என்பது சூஃபிஞானி ரூமி அவர்களின் கூற்றாக ஒரு இடத்தில் படித்ததுண்டு. அந்த துன்பம் தண்டனையினால் நிகழ்கிறதோ அல்லது சோதனையால் நிகழ்கிறதோ. இரு வகையிலும் ஆன்மா தூய்மை அடைகிறது. துன்பக் காலங்களில் நாம் இறைவனுக்கு நெருக்கமானவர்களாக இருக்கிறோம்.

 ஒருவர் நோயுற்றுள்ளார் என மற்றவர்கள் கேட்டதும், அவருக்காகப் பிரார்த்திக்கிறோம் என அவர்கள் அறிவிக்கின்றனர். ஆனால் உண்மையில் இவ்வாறு பிரார்த்தித்தலென்பதில், பிரார்த்திப்பவரின் மனம் கசடற்றதாகவும் மாறலாம், அதே சம்யத்தில் பலப் புதிய கசுடுகள் வந்தும் சேரலாம்.

 நோயுற்றவரின் செயல்களை நாம் கவனிக்கவேண்டும். அவர் தகாத செயல்களைச் செய்திருந்தால், அதற்காக அவர் பாவமன்னிப்புத் தேடியவரா எனப்பார்க்க வேண்டும். இல்லாவிட்டால், "இறைவனே நீயே போதுமானவன்" என்று சொல்லிவிட்டு சென்றுவிடுவதே மேலானது. நோயுற்றவர் தகாத செயல்களைச் செய்பவர் என அறிந்தும் அதற்காக இன்னும் வருத்தமடையாமல் அச்செயல்களைச் செய்பவர் என அறிந்தும். அவருக்காக அவர் குணமாக வேண்டி பிரார்த்திப்பவர்களின் மனதில், நோயுற்றவர் மற்றவருக்கு செய்கின்ற குற்றங்கள் எல்லாம் "மிகச் சாதாரணவை" என்ற கசடு சேர்ந்து அந்தப் பிரார்த்திப்பவரும் தீயவர்களில் உள்ளவராகிறார்.

 தீயவன் ஒருவன் நோயுற்றால், 'அவன் தண்டனை அடைகிறான்' எனப் பார்த்து, பாடம் பெறவேண்டும். அந்தத் தீயவன் வேறு ஏதாவது காரணத்தினால் உங்களுக்கு வேண்டப்பட்டவராயின், அவ‌ர் திருந்தி குண‌ம‌டைய‌ பிரார்த்திக்க‌லாம். வெறும‌னே குண‌ம‌டைய‌ப் பிரார்த்தித்த‌லால், பிரார்த்திப்ப‌வ‌ருக்குத் தான் கேடு.

 பிஜே விஷ‌ய‌த்தில் நான் இதை நினைவுக் கூர்கிறேன்.

 முஜீப் என்ப‌வ‌ருட‌ன் நிக‌ழ்ந்த‌ விவாத‌த்தின் போது, விவாதத் தலைப்பிற்கு அப்பால் பட்டு, பிஜே அவ‌ர்க‌ள் முஜீபை, "பால் குடி ஹ‌தீஸ்" என்ப‌து ப‌ற்றிப் பேசி, முஜீபின் குடும்ப‌த்தினையெல்லாம் விவாத‌த்தில் இழுத்து இவ் இவ்விஷ‌ய‌த்தில் திமிர்த‌ன‌மாக‌ப் பேசிய‌த‌ற்கு இறைவ‌ன் புற‌த்திலிருந்தி எந்த த‌ண்ட‌ன‌யும் வ‌ராம‌ல் இருக்குமா?

 இத‌னை ஒரு உதார‌ண‌த்திற்கு தான் நினைவுக் கூறுகிறேன்.
 ஃபைஜி ஷா அவ‌ர்க‌ளை க‌த்தியைக் காட்டி மிர‌ட்டுவேன் என‌ மேடையில் ஆக்க்ஷ‌ன் செய்துக் காட்டிய‌த‌ற்கு, ஒருவ‌ரை அவ‌மான‌ப் ப‌டுத்துவ‌தைத் த‌னது உரிமை என‌க் க‌ருதிய‌வ‌ருக்கு, த‌ண்ட‌னை இறைவ‌ன் புற‌த்திலிருந்து வ‌ராம‌ல் இருக்குமா?

 ஒரு ஃபோட்டோவினை அடிப்ப‌டையாக‌க் கொண்டு, ஒருவ‌ரை இன்னொருவ‌ர் காலில் விழுந்த‌வ‌ர் என‌க் கூறி அவ‌மான‌ப் ப‌டுத்த‌ உரிமை எடுத்துக் கொண்ட‌வ‌ருக்கு த‌ண்ட‌னை வ‌ராம‌ல் இருக்குமா?

 இவைக‌ள் உதார‌ண‌ங்க‌ள்தான். உண்மையில் பிஜே இவைக‌ளுக்கு ம‌ன‌ம் வருந்தினால் நான் கூட‌ பிரார்த்திக்க‌ த‌யாராக‌வே உள்ளேன்.

Sunday, October 07, 2012

"குர் ஆனில் எழுத்துப்பிழை" விவாதத்தில் பிஜேக்கு பயங்கரமான‌ அடி


 பிஜே எனும் அந்தப் பொய்யனுக்கும் (இவர் பொய்யன் என நான் இரு வருடங்களுக்கு முன்பே நிரூபித்து வீடியோ ஆதரங்களுடன் பதிவு எழுதியுள்ளேன்) ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி மற்றும் அவரது நண்பர்கள் அணியினருக்கும் இடையே விவாதம் தூத்துக்குடியில் நடைபெற்றுள்ளது. விவாதத்தின் தலைப்பு: "குர்ஆனில் எழுத்துப்பிழைகளா?". ஜமாலி &  Co -ன் நிலைபாடு, "இல்லை" என்பதாகும். பொய்யன்-பிஜேயின் நிலைபாடு, "எழுத்துப் பிழை உண்டு" என்பதாகும். பொய்யன் பிஜேயுடன் வேறு யார் யாரோவும் கலந்து கொண்டு பிஜேக்கு சப்பைக்கட்டுக் கட்டிக்கொண்டிருந்தனர். ஜமாலி அவர்களுடன் முஹம்மது முஸ்தஃபா மஸ்லஹி என்பவர் அணிசேர்ந்திருந்தார்.

 இந்த விவாதத்தின் வீடியோக்களை பிஜே தனது இணையதளத்தில் ஏற்றியுள்ளார். ஆனால் வழமைக்கு மாறாக அதிக தம்பட்டமில்லாமல் ஏற்றியுள்ளார். முந்தைய, மற்றவர்களுடன் செய்த‌ விவாதங்களின் வீடியோக்களை தனது தளத்தில் ஏற்றும்போது அதிக இரைச்சல், தம்பட்டம், அறிவிப்புகள் என தனது தளத்தின் முதல் பக்கத்தினை நிரப்புவது அவரது வழக்கம். ஆனால் இந்த தடவை அவ்வாறு செய்யவில்லை. கீழே உள்ள ஸ்கிரீன்ஷாட்டினைக் கவனிக்க. இந்த வீடியோக்கள் பற்றி ஒரு ஓரத்தில் சிறிதாகப் போட்டுவிட்டு போயுள்ளார். அதைப் பற்றி தனது தளத்தின் மையப் பகுதிகளில் எந்த ஆரவாரமோ அல்லது அறிவிப்புகளோ செய்யவில்லை என்பதினைக் கவனிக்க. இது வழமைக்கு மாறானது. இதிலிருந்து இந்த விவாதத்தில், பிஜேயின் சுய மதிப்பீடே பாதாளத்தில் உள்ளது என்பது தெரிகிறது. இல்லாவிட்டால் ஏன் எந்த ஆராவாரமும் இல்லாமல் வீடியோக்களை ஏற்றவேண்டும்? சரி, மேலே செல்லும் முன் ஸ்கிரீன்ஷாட்டினைப் பார்த்து நான் சொன்னதினை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த வீடியோக்கப் பற்றி பிஜே போட்டுள்ள ஒரு ஓர குறிப்பினை பச்சை வண்ணக் கட்ட‌மிட்டுக் காட்டியுள்ளேன்.


பிஜே அப்படி என்னத் தான் அடிவாங்கினார் இந்த விவாதத்தில்? முழுமையாக எழுத எனக்கு நேரம் போதவில்லை. நீங்கள் அந்த வீடியோக்களைப் பார்க்கவேண்டும். அப்போதுதான் புரியும்.

 இருப்பினும் சில குறிப்புகள் கீழே உள்ளன.

1. "நுன்ஸி" எனும் அரபு வார்த்தை, "நுஸி" என்று குர்ஆனில் எழுதப்பட்டுள்ளது. ஆனால் அதை "நுன்ஸி" என்று அனைவரும் படிக்கிறார்கள். இதனை, எழுத்துப்பிழை என்று பிஜே சொல்கிறார். பிஜேக்கு எதிரணியில் அமர்ந்திருந்த முஸ்தஃபா என்பவர் இந்தக் குற்றச்சாட்டினைத் தகர்க்கிறார். "நுன்ஸி" எனும் வார்த்தையினை " நுஸி" என்று எழுதுவது அரபி இலக்கணத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதென்பதினைக் காட்டுகிறார். "முக்கண்ண" எனும் இலக்கண‌ நூலினை ஆதாரமாகக் காட்டுகிறார்.

2. பிஜேயின் மற்றொரு வாதம்: நுன்ஸி போன்ற பல வார்த்தைகள் மற்ற இடங்களில் " நுஸி" என்பது போலல்லாமல் பிழை இன்றி எழுதப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் மட்டும் நுஸி என்று பிழையாக இருப்பதால், அது பிழைதான். இது பிஜேயின் வாதம். இதற்கு முஸ்தஃபாவின் பதில்: நுஸி என்பதற்கு எழுத அனுமதி இருக்கு என்று இலக்கண புத்தகத்தினையே கொடுத்தோமே, மீண்டும் ஏன் அதைப் பிழை என்கிறாய் ?. இப்படி முஸ்தஃபா அவர்கள் கேட்டுவிட்டு, "ஒரு இடத்தில் மட்டும்" என்று பிஜே சொன்னதினை மறுக்கிறார். பல இடங்களில் "நுன்ஸி" போன்றமற்ற  வார்த்தைகள் " நுஸி" என்பது போல் எழுதப்பட்டுள்ளதினைப் பட்டியல் இடுகிறார். பற்பல வார்த்தைகள். இவைகளைப் பட்டியலிட்ட பிறகு, இவை அனைத்தும் அந்த "முக்கண்ண" எனும் இலக்கணப் புத்தகத்தில் உள்ள சட்டத்தின் படியே உள்ளன என நிரூபிக்கிறார். ஆனால் பிஜேயோ முஸ்தஃபா அவர்கள் கொடுத்தப் பட்டியலைத் தனக்கு சாதகமாகத் திருப்பி, இவை அனைத்தும் பிழைகள் என்கிறார். என்று கூறிவிட்டு முஸ்தஃபா தனது வேலையை சுலபமாக்கிவிட்டாரெனக் கூறுகிறார். ஆனால் முஸ்தஃபா அவர்கள் சுட்டிக் காட்டிய இலக்கண அனுமதியினைப் பற்றி ஏது பேசாமல் "முரட்டு முட்டாள்" என்று உட்கார்ந்திருந்தார் பிஜே. "முக்கண்ண" என்ற அந்த இலக்கணப் புத்தகத்தினைப் பற்றி எந்த வார்த்தையையும் பிஜே பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

3. "இபுசித்து" எனும் வார்த்தையில், "சீன்" எனும் அரபி எழுத்திற்கு பதிலாக "ஸாத்" எனும் அரபி எழுத்துப் போட்டு எழுதப்பட்டுள்ளதினைப் பிஜே பிழை என்கிறார். அவ்வாறு எழுத "லிஸான் அல் அராப்" எனும் இலக்கணப் புத்தகத்தில் அனுமதி உள்ளது என்பதினைச் சுட்டுகிறார் முஸ்தஃபா.

4. 786 பற்றிய விவாதம் அருமை. காணத்தவறாதீர்கள். ஜமாலி அவர்கள் பிஜேயைத் தோலுரிக்கிறார். பிஜேயும் அவரது ஆதரவாளர்களும் எந்த சமயத்திலும், "அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயரால்" என்று முழுமையாக எழுதமாட்டார்கள். அவர்கள் "அல்லாஹ்வின் திருப்பெயரால்" என்று மட்டும்தான் எழுதுவார்கள். ஜமாலி அவர்கள் அதனைச் சுட்டிக்காட்டி, பிஜே கும்பலின் அந்த செயல், இஸ்லாத்திற்கு முந்தைய மக்காவாசிகளின் செயல் எனச் சுட்டுவார்கள். பிஜே அதற்கு பதிலளிக்கும் போது அந்த மக்காவாசிகளின் அந்த செயலினை நபி அவர்கள் அனுமதித்தார்கள், எனவே அதைச் செய்கிறோம் எனக் கூறுவார். ஆனால் மக்காவாசிகள் "அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயரால்" என்று எழுத மறுக்கும் போதுதான் நபி அவர்கள், மக்காவாசிகளின் விருப்பப் படி, "அல்லாஹ்வின் திருப்பெயரால்" என்று எழுத அனுமதிப்பார்கள். ஆனால் நபியும் அவரது தோழர்களும் "அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயரால்" என்றுதான் எழுதினார்கள் என்று ஜமாலி அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

 இந்த விவாதத்தில், பிஜே அவ்வப்போது மூர்க்கனாகி, வெறி நாயை போல அடிக்கடி கோபம் கொண்டு, மற்றவர்களை மரியாதை இன்றி குதறுவதினை நீங்கள் கண்டு ரசிக்கலாம்.


Thursday, October 04, 2012

ஐன்ஸ்டீனின் "யூத எதிர்ப்பு வெறி" ("Antisemitism")

இஸ்ரேலுக்கு எதிராக யார் கருத்துக் கூறினாலும், அவர்களை "யூத எதிர்ப்பாளர்கள்" (Antisemitic) அன்று அழைப்பது இஸ்ரேல் மற்றும் அதன் ஆதரவாளர்களின் வழக்கம். ஒரு யூதர் இஸ்ரேலினை எதிர்த்துக் கருத்துக் கூறினால், அவரை, "தன்னைத்தானே வெறுக்கும் யூதன்" என்று அழைப்பார்கள் இஸ்ரேல் ஆதரவாளர்கள். அந்த வகையில், "தன்னைத் தானே எதிர்க்கும் யூதர்" ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

அவர் எழுதியக் கடிதம் ஒன்று கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது


Thanks: http://angryarab.blogspot.com/2012/10/albert-einstein-on-israeli-terrorism.html

Monday, October 01, 2012

இஸ்ரேலிய மொஸாத் உளவுத்துறையின் திறமைஈரானின் அணுஆயுதத்தின் வரைபடத்தினை இஸ்ரேலிய மொஸாத் உளவுத்துறை ரகசியமாக பெற்று இஸ்ரேலிய பிரதம மந்திரி நெத்தான்யாஹுவுக்கு அளித்தது. பிரதம மந்திரி நெத்தான்யாஹுவும் அந்த வரைபடத்தினை ஐக்கிய நாட்டு சபையில் காட்டினார். புகைப்படம் கீழே:


Thanks: http://www.angryarab.blogspot.com/2012/09/iranian-bomb-design.html