Saturday, September 29, 2012

அப்துல் நாசர் மதனியும், கோவை குண்டுவெடி பாஷாவும்

 அப்துல் நாசர் மதனி அவர்கள் சிறையில் படும் இன்னல்களைப் பற்றி அவர் கொடுத்தப் பேட்டியினைப் படிக்க நேர்ந்தது. இப்போது எனது கல்லூரி வாழ்க்கையினைத் திரும்பிப்பார்க்கிறேன்.

 அவர் படும் இன்னல்களை நான் கடவுளின் சோதனை என்று கருதுவதை விட, கடவுளின் தண்டனை என்றுதான் பார்க்கிறேன். அவருக்கும் கோவை குண்டு வெடிப்பிற்கும் சம்பந்தம் இருக்கா இல்லையா என எனக்குத் தெரியாது. ஆனால் அவர் ஒரு டெமாகாக் (Demagogue) எனக்குத்தெரியும். பிஜே போன்ற ஒரு டெமாகாக். அப்துல் நாசர் மதனி அவர்களின் தற்போதைய நிலை பற்றி அனுதாபப்படுகிறேன், ஆனால் இறைவனின் ஆற்றலையும் நான் கவனிக்கிறேன். 1993-96 ஆகிய வருடங்களில், "PDP-அயோத்தியை நோக்கி" என கொட்டை எழுத்துக்களில் எழுதப்பட்ட நோட்டீஸுகளை நான் நினைவுக் கூறுகிறேன். மக்களைத் தூண்டிவிடுதல், "உரிமை" எனப் போலியாக சித்தரித்து மக்களை தனது அடையாளத்துக்காக இரத்தம் சிந்தத் தூண்டுதல் ஆகியவைகளுக்காக இறைவன் கோபம் கொள்ளக் கூடியவன் எனத் தெரிந்துகொள்கிறேன்.

 குண்டுவெடி புகழ் பாஷா அவர்களும் கஷ்டப் படுகிறார். அவர் உண்மையிலேயே மனம் வருந்துபவராக இருந்தால், இறைவன் அவரை மன்னிக்க வேண்டுகிறேன். ஆனால் "அல் உம்மா" வின் திமிர்தனமான் செயல்களை நான் நினைவுகூறுகிறேன். சென்னையில் பல்லவன் பேருந்தின் உள்புறங்களில், தனது மதத்தின் நூலில் உள்ள வாசகங்களை  நோட்டிஸாக (அதுவும் ஸ்டிக்கர் நோட்டீஸாக‌) ஒட்டிச் சென்ற திமிர்தனத்தினை நான் அப்போதே நினைத்து உள்ளுக்குள் மலைத்தேன். அந்த வாசங்களின் மீது யாரும் கேலியாக ஏதும் எழுத மாட்டார்களா? அல்லது மற்றவர்களும் ஏதாவது கண்டித்து எழுதமாட்டார்களா? என்ற சிந்தனையெல்லாம் கிடையாது.

 சமுதாய ஒழுங்கினைச் சீர்கெடுத்து இரத்தம் சிந்துவதற்காக மக்களின் மனதுகளை தயார்படுத்தும் டெமாகாக்குகள் இறைவனின் கோபத்திற்கு ஆளாவார்கள் எனப் படிப்பினைப் பெறுகிறேன். அப்துல் நாசர் மதனீயின் பேட்டியினை சில வலைப்பதிவுகளில் இட்டப் பின்னூட்டங்கள் வாயிலாகப் படிக்கக் கொடுத்த UNMAIKAL எனும் நபருக்கு நன்றி

1 comment:

Ayesha Farook said...

அப்பாவி மக்களை மதத்தின் அல்லது சாதியின் பெயரால் மூளை சலவை செய்து பின்னால் இருந்துகொண்டு அப்பாவிகளை மனிதவெடி குண்டுகளாக ஏவி உலகில் அமைதியை குலைக்கும் எந்த ஒரு மதவெறி, ஜாதிவெறி செயலும் ஆதரிக்கப்படக்கூடாது.