Friday, August 24, 2012

"பிஜே" என்பவருக்காகக் குழிதோண்டியாச்சா இல்லையா?

 பிஜே எனப்படும் பி ஜெயினுல் ஆபிதின் தனது இணையதளத்தில் ஒரு அறிவிப்பு செய்துள்ளார்: "ஷைஃபுத்தீன் ரஷாதியுடன் இன்ஷா அல்லாஹ் 26.8.2012 அன்று விவாத ஒப்பந்தம் நடைபெறவுள்ளது. விவாத ஒப்பந்தத்தில் பி.ஜே அவர்கள் கலந்து கொள்கிறார்கள்". இப்படி ஒரு அறிவிப்பினைப் போட்டுள்ளார்.

 மீண்டும் கவனிக்க: "பி.ஜே அவர்கள் கலந்து கொள்கிறார்கள்" என்று பன்மையுடன் கூறப்பட்டுள்ளது. பிஜே என்றாவது மற்றவர்களை பன்மையில் கூறியுள்ளாரா? ரஷாதி என்பவருடைய பேரைக் கூறும்போது கூட ஒருமையில் தான் கூறுகிறார். அதுவும் அதே வாக்கியத்தில் கூறுகிறார். "ரஷாதி அவர்களுடன்" என்று அவர் கூறவில்லை என்பதினைக் கவனிக்க. ஆனால் தனக்கு மட்டும் "அவர்கள்" என்று மரியாதைவேண்டுமாம். சரி, ரஷாதியை விட்டுத்தள்ளுங்கள். அவர் மதிக்கும் கல்வியாளர்களையாவது, எப்போதாவது, அவர் "அவர்கள்" என்று பன்மையில் அழைத்திருக்கிறாரா? உதாரணத்திற்கு, இப்னு தைமிய்யாவை, "இப்னு தைமிய்யா அவர்கள்" என்று அழைத்திருக்கிறாரா ?

 நான் மேலேக் கூறியதை சும்மா போகிற போக்கில் தான் கூறினேன். நான் சொல்ல வந்த விஷயம் வேறு.

அதே இணையதளப்பக்கத்தில் சற்று கீழே "பீஜேயின் முக்கிய அறிவிப்பு" என்று ஒன்று எழுதப்பட்டுள்ளது. தனது "தனிப்பட்டக் காரணங்களால்" விடுப்பு எடுத்துக்கொள்வது பற்றி அறிவிப்பு எழுதப்பட்டுள்ளது. அது என்ன "தனிப்பட்ட காரணங்கள்"? அந்த தனிப்பட்டக் காரணத்தினைப் பற்றி, அவர் அந்த அறிவிப்பில் கூறியதைப் போல, ஏற்கனவே ஒரு அறிவிப்பு செய்துள்ளார். நான் கூட அந்த பழைய அறிவிப்பினைப் பற்றி ஒரு பதிவு ஒன்று போட்டேன். அவரது தனிப்பட்டக் காரணம் என்பது அவரது உடல்-நிலைக் குறைபாடு என்பதுதான்.

 தனது உடல்-நிலைக் குறைபாடு பற்றி அவர் அறிவித்து சில மாதங்கள் கடந்த பிறகும் அவருக்கு அந்த காரணத்தினால் விடுப்பு எடுக்க வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து என்ன தெரிகிரதென்றால், அவருடைய வியாதி குறையவில்லை என்று தெரிகிறது. எனவே நான் எனது முந்தையப் பதிவில் கூறியது போல, ஆர்வலர்கள் மம்பட்டியை எடுத்து குழுதோண்ட ஆரம்பிக்கலாம்.

1 comment:

மு மாலிக் said...

பிஜே எனும் பொய்யனின் இணையதளத்தில் வந்த அந்த வாக்கியத்தினை எடுத்துவிட்டு வேறு அறிவிப்பினைப் போட்டுள்ளார்கள். அதை எடுக்க வேண்டிய நிர்பந்தத்தினை உணர்ந்துள்ளார்கள். தற்போது பொய்யன் பிஜேக்கும் ரஷாதிக்கும் ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் பொய்யன் பிஜேயின் இணையதளத்தில் உள்ளது. அதில் பொய்யன் பிஜே தன்னை "அவர்கள்" என்று பன்மையில் கூறவில்லை என்பதினைக் கவனிக்க. எனவே பொய்யன் பிஜே தன்னை அவர்கள் என்று தனது இணையதளத்தில் மட்டுமே பன்மையில் கூறிக்கொள்ளமுடியும் என்றும், மற்றவர்களது ஒப்புதலில் அது ஏற்படாது என்றும் தெரிகிறது.

(குறிப்பு: பொய்யன் பிஜேயை பொய்யன் என்று அழைக்கக் காரணம், அது என் வலைப்பதிவில் ஒரு பழைய பதிவிடுகையில் நிரூபிக்கப்பட்டிருப்பதாலேயே ஆகும்.)