Friday, August 10, 2012

இஸ்லாமிய நாடுகளில் சிறந்தவை துருக்கியும் ஈரானுமே


 அறிவியல் துறைகளில் ஆராய்ச்சி செய்பவர்கள் ஒரு விஷயத்தினைக் கவனிக்கலாம். அறிவியல்ஆராய்ச்சி வெளியீடுகளில், இஸ்லாமிய நாடுகளின் பங்களிப்பு மிக மிகக் குறைவு என்றாலும், அந்த இஸ்லாமிய நாடுகளில் சிறந்து விளங்குபவை ஈரானும் துருக்கியும்தான். அதற்கு அடுத்த நிலையில் எகிப்தியர்களைக் கருத்தில் கொள்ளலாம். ஆனால் வஹ்ஹாபிசம் ஆட்சி செய்யும் நாடுகள் ஒன்று அல்லது இரண்டினைக் கூடப் பார்க்க முடியாது. இத்தனைக்கும், வஹ்ஹாபிச நாடான சவுதி அரேபியா பல பில்லியன் செலவில் ஒரு பல்கலைக் கழகத்தினைக் கட்டிய பிறகும் இந்த நிலை நீடிக்கிறது.

 இதை இந்த நேரத்தில் நான் நினைவுக் கூறுவதற்க்கு காரணம், ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் பதக்கப் பட்டியல். ஈரான் 4 தங்கமும் 4 வெள்ளிகளும் ஒரு வெங்கலமும் பெற்றுள்ளது. ஒரு ஒப்பீட்டிற்காக சவுதி அரேபியாவை நாம் கருத்தில் கொள்வோமானால், அது 0000000000 தங்கப் பதக்கங்களையும், அதே அளவிற்கான வெள்ளிப்பதக்கங்களையும் ஒரு வெங்கலத்தினையும் பெற்றுள்ளது.

 ஒரு ஆண் தனது ஆளுமைத் திறனைக் காட்டுவதற்கு ஊக்கமளிப்பது பெண்களின் முன்னிலையில் கிடைக்கும் பேரே என்று மன ரீதியான காரணியாக அடையாளம் காணலாம். அது இயற்கையே. அந்த காரணிகள் வஹ்ஹாபிச நாடுகளில் இல்லாத பட்சத்தில், எந்த ஆணும் தனது திறனை வெளிப்படுத்த காரணமற்று போய்விடுவான். தன்னை மேம்படுத்தவும் மாட்டான்.

 இந்தக் காரணம் விளையாட்டுத்துறையில் மட்டுமல்லாமல், கல்வி மற்றும் ஆராய்சித்துறையிலும் வஹ்ஹாபிய நாடுகள் பின் தங்குவதினை விளக்குகிறது. ஆஃபிரிக்க நாடுகளைப் போலல்லாமல், பண வசதிகள் இருந்தும் இந்த நாட்டு மக்களுக்கு தனது திறனை வெளிக்கொணரும் ஆர்வம் இல்லாமல் இருப்பது ஆச்சரியப்படத்தக்கதொன்றல்ல.

3 comments:

Dr.Anburaj said...

இந்த ஆண்டும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.அரேபியர்களோ அரபி அல்லாத முஸ்லீம்களோ யாரும் தேர்வு செய்யப்படவில்லை. ஒரு யுதர் உண்டு. முஸ்லீம் சமூகம் தவறான அடிப்படையில் அமைந்துள்ள சமூகம்.குரானையும் முகம்மதுவையும் காப்பாற்ற நியாயப்படுத்த -மேற்படி நியாயங்கள் தனது சமூக அடையாளமாக கொண்டிருப்பதால் விஞ்ஞான ஆய்வுக்கான அடிப்படை கருத்து -மனாநிலை முஸ்லீம்களிடம் இல்லை.பரிணான தியரியை முஸ்லீம்கள் ஏற்று விளக்கினால் ”மததுரோகி ” என்று பட்டம் கிடைக்கும். 1400 ஆண்டுகளுக்கு முன்னர் அரேபிய மண்ணின் கருத்துக்களை நியாயப்படுத்துவதைத்தவிர முஸ்லீம்கள் வேறு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடுவதில்லை. இந்து மதம் எந்த ஒரு புத்தகத்தையும் அடிப்படையாகக் கொள்ளவில்லை. புதிய வேதங்கள் தோன்ற வேண்டும் என்ற கருத்தை உடையது. பதிய சிந்தனைக்கு இது மிகவும் அவசியம். ஒரு இந்துவுக்கு பகவத்கீதையை நியாயப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. 5000 ஆண்டுகள் வயதான கீதையில் சில கருத்துப்பிழைகள் உருவாக வாய்ப்புள்ளது. திருக்குறளில் ராகு -கேது பாம்புவிழுங்கும் உதாரணத்தைகையாள்கிறாள். தாம் வாழ்ந்த காலத்து வெகுஜன கருத்தை திருக்குறளில் திருவள்ளுவர் கையாள்கிறார் ஆனால் இன்று ராகு-கேது -பா்ம்பு விழுங்கும் கதையெல்லாம் கட்டுக்கதை என நீருபணம் ஆகிவிட்டது. ஆக திருக்குறளில் ஒரு கருத்துப்பிழை உள்ளது. இதற்கான திருவள்ளுவரை யாரும் முட்டாள் என்று சொல்லக்கூடாது. பழையன கழிதலும்ப பதியன சேர்தலும வழுவன்று வாழும் வகை.ஆனால்யுதர்களைப்பற்றி புரியவில்லை.விஞஞான துறையில் யுதர்களின் பங்களிப்பு மிக அதிகம்.ஏன் ? தங்களிடம் கருத்து ஏதும் உள்ளதா ? தெரிவிக்கலாமே ?

Anonymous said...

islam oru matham illai valvatharkana vali ithai patri arivu illamal ethum pesakudathu

Anonymous said...

No one is able to argue about islam without knowledge in islam..