Monday, August 06, 2012

அரபு தேசங்களின் "வசந்தம்"-மும் நம் உள்ளூர் புண்ணாக்குகளும்

பல அரபு நாடுகளில், "அரபு-வசந்தம்" என்று செல்லமாக அழைக்கப்படும் புரட்சிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. துனீசியா, எகிப்து, லிபியா ஆகிய நாடுகளில் ஆட்சிகள் தூக்கியெறியப்பட்டு புதிய ஆட்சிகள் வந்துள்ளன.

 நம் உள்ளூர் முஸ்லீம் மக்களுக்கு, அந்தப் புரட்களைப் பற்றி சரியான புரிதல்கள் இல்லை என்பதினை, அவர்கள் பகிர்ந்து கொள்ளும் கருத்துக்கள் அடிப்படையில் அறியலாம். இதையே இந்த வெள்ளைக்-கைலி மக்களின் இணையதளங்களைப் படிக்கும்போதும் அறியலாம்.

 பலர் இந்த புரட்சிகளை, "கருப்பு" அல்லது "வெள்ளை" என்ற வகையில் இருப்பது போல பார்க்கிறார்கள். நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும் இடையேயான போர் என்று கருதிவிடுகிறார்கள். இது ஒரு சில நாடுகளில்தான் உண்மை. எகிப்தினைப் பொறுத்தவரை உண்மை. ஆனால் சிரியாவினைப் பொறுத்தவரை உண்மைக் கிடையாது.

 மேலும் பலருக்கு இந்தப் புரட்சிகளின் பிண்ணணி இனவாதமென்று கருதுமளவுக்கு அறியாமையுள்ளது. பஹ்ரைனில் அந்த ஆட்சிக்கு எதிரான புரட்சியினை, "ஷியாக்களின் புரட்சி" என்று ஊடகங்கள் சித்தரித்ததிலிருந்து, அவர்கள் அந்தப் புரட்சியின் நேர்மைதன்மையினை மறைக்க முயல்வதினை அறியலாம். பஹ்ரைனின் ஆட்சி ஒரு இன கீழ்தரமான இனவெறி பிடித்த ஆட்சி. பஹ்ரைனின் பெரும்பான்மையான மக்கள் ஷியாக்கள். அவர்களை ஓரம் கட்டிவிட்டு இந்தியா பாக்கிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து ரவுடிகளை இறக்குமதி செய்து, போலிஸ்காரர்களாக ஆக்கி அந்த நாட்டுக் குடிமக்களை பாடோ படுத்தும் நாடு. அவர்கள் ஷியாக்கள் எனும் ஒரே காரணத்தினால். நமது உள்ளூர் வெள்ளைக்கைலி புண்ணாக்குகளும் அதே காரனத்தினால், பஹ்ரைன் அரசினை ஒரு புனிதமான அரசாக காண்கின்றன.

 மேலும் இந்த மக்களுக்கு (அதாவது நமதூரைச் சேர்ந்த பல‌ முஸ்லீம்களுக்கு) கடாஃபி மீது ஒரு பெருமதிப்பு. அவரை அமெரிக்காவின் எதிரியாகக் கருதி அவர் மீது மதிப்புக் கொண்டுள்ளனர். ஆனால் இந்த கூமுட்டைகளுக்கு, கடாஃபி மேற்குலகின் அபிமானியாக பிற்காலத்தின் ஆனாரென்பது தெரியாது. க‌டாஃபி த‌ன‌து குடும்பத்தின், மற்றும் குல‌த்தின் ந‌ல‌னுக்காக‌ ஆட்சி செய்துவந்த‌ ச‌ர்வாதிகாரி. அவ‌ர் ஒரு ப‌ழ‌ங்குடிப் பிரிவின் த‌லைவ‌ர். அவ‌ர் நாட்டின் த‌லைவராக‌ இருக்க‌ த‌குதிய‌ற்ற‌வ‌ர். மேலும் அவ‌ர‌து ஆட்சி அவரது சுய‌த‌ம்ப‌ட்ட‌த்தின் காட்சிய‌க‌மாக‌ இருந்த‌து. ஆனால் அதே ச‌ம‌ய‌த்தில் புர‌ட்சியாள‌ர்களின் தலைவர்கள் ஒன்றும் புனித‌ர்க‌ளில்லை. அந்த‌ புர‌ட்சியாள‌ர்களின் தலைவர்கள் மேற்குல‌ நாடுக‌ளுட‌ன் ஒப்ப‌ந்த‌ம் செய்துகொண்ட‌தாலேயே, மேற்குல‌க‌ம் அந்த‌ப் புர‌ட்சியாள‌ர்க‌ளுக்கு உத‌வி செய்த‌ன‌. மேலும் க‌டாஃபி என்ன‌தான் மேற்குல‌கிற்கு ஆத‌ர‌வாள‌ராக‌ மாறி இருந்தாலும், ச‌வுதி அள‌விற்கோ அல்ல‌து ஜோர்டான் அள‌விற்கோ அல்ல‌து க‌த்தார் அள‌விற்கோ மாறவில்லை.

 ஏம‌ன் எனும் நாட்டிலும் புர‌ட்சி. ச‌வுதி வ‌ஹ்ஹாபிக‌ள் ஏம‌ன் நாட்டு அர‌சுக்கு ஆத‌ர‌வு. ம‌க்க‌ள் போராடுகிறார்க‌ள். உள்ளூர் த‌வ்கீது ஜ‌மாத்து புண்ணாக்குக‌ளுக்கு ஏம‌ன் ப‌ற்றி அவ்வ‌ள‌வாக‌ அக்க‌றைக் கிடையாது. கார‌ண‌ம் அது ஒரு ஏழை நாடு. அந்த‌ ஜ‌மாத்துக‌ளுக்கு ப‌ண‌ம் அனுப்புவோர்க‌ள் அந்த‌ நாட்டில் இல்லை.

 த‌ற்போது சிரியா. உல‌க‌ ஊட‌க‌ங்க‌ள், அங்கு நடக்கும் போராட்டத்திற்கு "இன‌வாத‌ம்" எனும் பெய‌ரைச் சூட்டுகின்ற‌ன‌. சிரிய‌ அதிப‌ர் ஆசாத் "அலாவி" எனும் பிரிவினைச் சேர்ந்த‌வ‌ர். அத‌னால் அவ‌ர் பெரும்பான்மையான‌ "சுன்ன‌த்" பிரிவினைச் சேர்ந்த‌ ம‌க்க‌ளை அட‌க்கியாள்கிறார் என்று அந்த‌ ஊட‌க‌ங்க‌ள் வ‌ண்ண‌ம் தீட்டுகின்ற‌ன‌. ஆனால் உண்மையில், சிரியா இஸ்ரேலுக்கு எதிரான‌ நாடு என்ப‌தாலேயே மேற்குல‌க‌ம் ஆசாத்துக்கு எதிராக‌ உள்ள‌ன‌.

 வ‌ஹ்ஹாபிய‌ அர‌சான‌ ச‌வுதி அரேபியாவோ, இஸ்ரேலுக்கு எதிராக‌ சிரியா இருப்ப‌தாலும், ஈரானிட‌ம் ந‌ட்புற‌வில் இருப்ப‌தாலும், சிரியாவின் ஆசாத்தினைக் க‌விழ்க்க‌ ஐக்கிய‌ நாட்டு ச‌பை மூல‌மும், ஆயுத‌ங்க‌ள் ம‌ற்றும் ப‌ண‌ உத‌விக‌ளை புர‌ட்சியாள‌ர்க‌ளுக்கு அனுப்புவ‌த‌ன் மூல‌மும் ப‌ங்காற்றுகிற‌து.  இஸ்ரேல் தூத‌ர‌க‌ங்க‌ளான‌ த‌வ்கீது ஜ‌மாத்துக‌ள், சிரியாவினைக் க‌ண்டித்து வெகு சீக்கிர‌ம் புண்ணாக்கு அறிக்கைக‌ள் விடுவார்க‌ள் என‌ எதிர்பார்க்க‌லாம்

1 comment:

குட்டிபிசாசு said...

சிரியாவின் நிலை குறித்து நான் படித்தவரை சன்னிப் பிரிவினரின் புரட்சியாகத் தான் சொல்லப்படுகிறது.