Friday, August 24, 2012

"பிஜே" என்பவருக்காகக் குழிதோண்டியாச்சா இல்லையா?

 பிஜே எனப்படும் பி ஜெயினுல் ஆபிதின் தனது இணையதளத்தில் ஒரு அறிவிப்பு செய்துள்ளார்: "ஷைஃபுத்தீன் ரஷாதியுடன் இன்ஷா அல்லாஹ் 26.8.2012 அன்று விவாத ஒப்பந்தம் நடைபெறவுள்ளது. விவாத ஒப்பந்தத்தில் பி.ஜே அவர்கள் கலந்து கொள்கிறார்கள்". இப்படி ஒரு அறிவிப்பினைப் போட்டுள்ளார்.

 மீண்டும் கவனிக்க: "பி.ஜே அவர்கள் கலந்து கொள்கிறார்கள்" என்று பன்மையுடன் கூறப்பட்டுள்ளது. பிஜே என்றாவது மற்றவர்களை பன்மையில் கூறியுள்ளாரா? ரஷாதி என்பவருடைய பேரைக் கூறும்போது கூட ஒருமையில் தான் கூறுகிறார். அதுவும் அதே வாக்கியத்தில் கூறுகிறார். "ரஷாதி அவர்களுடன்" என்று அவர் கூறவில்லை என்பதினைக் கவனிக்க. ஆனால் தனக்கு மட்டும் "அவர்கள்" என்று மரியாதைவேண்டுமாம். சரி, ரஷாதியை விட்டுத்தள்ளுங்கள். அவர் மதிக்கும் கல்வியாளர்களையாவது, எப்போதாவது, அவர் "அவர்கள்" என்று பன்மையில் அழைத்திருக்கிறாரா? உதாரணத்திற்கு, இப்னு தைமிய்யாவை, "இப்னு தைமிய்யா அவர்கள்" என்று அழைத்திருக்கிறாரா ?

 நான் மேலேக் கூறியதை சும்மா போகிற போக்கில் தான் கூறினேன். நான் சொல்ல வந்த விஷயம் வேறு.

அதே இணையதளப்பக்கத்தில் சற்று கீழே "பீஜேயின் முக்கிய அறிவிப்பு" என்று ஒன்று எழுதப்பட்டுள்ளது. தனது "தனிப்பட்டக் காரணங்களால்" விடுப்பு எடுத்துக்கொள்வது பற்றி அறிவிப்பு எழுதப்பட்டுள்ளது. அது என்ன "தனிப்பட்ட காரணங்கள்"? அந்த தனிப்பட்டக் காரணத்தினைப் பற்றி, அவர் அந்த அறிவிப்பில் கூறியதைப் போல, ஏற்கனவே ஒரு அறிவிப்பு செய்துள்ளார். நான் கூட அந்த பழைய அறிவிப்பினைப் பற்றி ஒரு பதிவு ஒன்று போட்டேன். அவரது தனிப்பட்டக் காரணம் என்பது அவரது உடல்-நிலைக் குறைபாடு என்பதுதான்.

 தனது உடல்-நிலைக் குறைபாடு பற்றி அவர் அறிவித்து சில மாதங்கள் கடந்த பிறகும் அவருக்கு அந்த காரணத்தினால் விடுப்பு எடுக்க வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து என்ன தெரிகிரதென்றால், அவருடைய வியாதி குறையவில்லை என்று தெரிகிறது. எனவே நான் எனது முந்தையப் பதிவில் கூறியது போல, ஆர்வலர்கள் மம்பட்டியை எடுத்து குழுதோண்ட ஆரம்பிக்கலாம்.

Friday, August 17, 2012

இவர்தான் சவுதி ராஜாவாம்இந்த ஃபோட்டோவில் பாருங்கள். தட்டுத்தடுமாறி நடக்கிறார். ஆனால் பதவி ஆசை விடவில்லை. இவர் மட்டுமல்ல. இவருக்கு பின்னால் வரிசையில் நின்று கொண்டிருக்கும் இளவரசர்களெல்லாம் கிழட்டு பன்றிகள். பதவி ஆசை. ராஜா சீட்டு எப்போ காலியாகும் என்று எதிர்பார்த்து தள்ளாத வயசிலேயும் தனது உயிரைப் பிடித்து வைத்துக்கொண்டு நிற்கின்றனர். வரிசையில் நின்று கொண்டிருந்தவர்களில் இரண்டு இளவரசர்கள் ஏற்கனவே மண்டையப் போட்டுவிட்டனர். அவர்களின் பெயர்கள் சுல்தான் மற்றும் நாயஃப்.


இதுக்கு யாரைக் குத்தம் சொல்லனும்னா. 'சவுத்' என்னும் ராஜாவைத்தான் குத்தம் சொல்லனும். பல மனைவிகள் மூலமாக அவர் உருவாக்கிய எலி-வளைதான் இன்றைய சவுதி அரசக்குடும்பம்.

Image taken from: http://www.presstv.ir/detail/2012/08/17/256681/saudi-shame-on-islamic-world/

ஒரு தற்செயலான விஷயம் என்னெவென்றால், இந்த பிரஸ்டிவி இணையதளத்தின் கட்டுரையின் தலைப்பு நான் இந்த வலைப்பதிவில் இட்ட‌ ஒரு சமீபத்திய தமிழ் இடுகையின் தலைப்பு: http://vilambi.blogspot.com/2012/04/blog-post_12.html

Saturday, August 11, 2012

அறிவுத்-திருடலில் பிடிபட்ட ஃபரீத் ஜக்காரியா,

 நமது தெற்காசியா மக்களுக்கு, "அறிவுத்-திருடல்" (plagiarism) எனப்படும் காப்பி-பேஸ்ட் ஒரு குற்றம் எனத் தெரிவதில்லை. இதற்குக் காரனம், இதனைக் குற்றம் எனக் கருதும் பாங்கு பள்ளிகளில் தெரியப்படுத்தப்படுவதில்லை. இதன் காரணமாக இந்த தெற்காசிய மக்கள், அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்தாலும் இதே குற்றத்தினைச் செய்து பிடிபட்டுவிடுகிறார்கள்.

 காவ்யா விஸ்வனாதன் என்ற எழுத்தாளருக்குப் பிறகு இப்போது பிடிபட்டிருப்பவர் ஃபரீத் ஜக்காரியா என்பவர். ஃபரீத் ஜக்காரியா, அமெரிக்காவின் அறிவுஜீவிகளில் ஒருவராகக் கருதப்பட்டவர். இந்தியாவில் பிறந்தவர். சி.என்.என் தொலைக்காட்சியில் பல மிகப்பெரிய வித்தகர்களை பேட்டிக்காணும் ஒரு பெரும்புகழடைந்த பத்திரிக்கையாளர். அரசியல் ஞானம் உடையவர் எனக் கருதப்பட்டு வந்தவர்.

 இவர் இப்போது அறிவுத்திருடல் குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ளதோடல்லாமல், சி-என்-என் நிறுவனத்தால் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஃபரீத் ஜக்காரியாவும் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

 மேலே உயந்துவிட்டால் மிகக் கவனமாக இருக்கவேண்டும் எனும் பாடம் இதிலிருந்து தெளிவாகிறது. ஃபரீத் ஜக்காரியா சொல்லவேண்டியதெல்லாம் சொல்லி கருத்துக்கள் தீர்ந்தவுடன், மீண்டும் அரங்கில் இருக்கவேண்டிய நிர்பந்தத்தில் இந்தக் குற்றத்தினைச் செய்திருக்கவேண்டும். சுயமாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்றால் அமைதியாக இருக்கவேண்டும். அல்லது "அவர் சொல்கிறார்" என்றுக் கூறி சுயமாகக் கூறியவர் யாரோ அவரது பெயரினைக் குறிப்பிட்டுவிடவேண்டும்.

 முக்கியமாக அறிவுத்-திருடல் பற்றிய‌ பாடம்  கல்லூரிகளில் வழங்கப்பட வேண்டும். சமீபத்தில் சி என் ஆர் ராவ் என்ற புகழ்பெற்ற விஞ்ஞானியே நமது நாட்டில் இந்த குற்றச்சாட்டுக்கு ஆளானார் என்பது கருத்தில் கொள்ளவேண்டியது.

Friday, August 10, 2012

இஸ்லாமிய நாடுகளில் சிறந்தவை துருக்கியும் ஈரானுமே


 அறிவியல் துறைகளில் ஆராய்ச்சி செய்பவர்கள் ஒரு விஷயத்தினைக் கவனிக்கலாம். அறிவியல்ஆராய்ச்சி வெளியீடுகளில், இஸ்லாமிய நாடுகளின் பங்களிப்பு மிக மிகக் குறைவு என்றாலும், அந்த இஸ்லாமிய நாடுகளில் சிறந்து விளங்குபவை ஈரானும் துருக்கியும்தான். அதற்கு அடுத்த நிலையில் எகிப்தியர்களைக் கருத்தில் கொள்ளலாம். ஆனால் வஹ்ஹாபிசம் ஆட்சி செய்யும் நாடுகள் ஒன்று அல்லது இரண்டினைக் கூடப் பார்க்க முடியாது. இத்தனைக்கும், வஹ்ஹாபிச நாடான சவுதி அரேபியா பல பில்லியன் செலவில் ஒரு பல்கலைக் கழகத்தினைக் கட்டிய பிறகும் இந்த நிலை நீடிக்கிறது.

 இதை இந்த நேரத்தில் நான் நினைவுக் கூறுவதற்க்கு காரணம், ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் பதக்கப் பட்டியல். ஈரான் 4 தங்கமும் 4 வெள்ளிகளும் ஒரு வெங்கலமும் பெற்றுள்ளது. ஒரு ஒப்பீட்டிற்காக சவுதி அரேபியாவை நாம் கருத்தில் கொள்வோமானால், அது 0000000000 தங்கப் பதக்கங்களையும், அதே அளவிற்கான வெள்ளிப்பதக்கங்களையும் ஒரு வெங்கலத்தினையும் பெற்றுள்ளது.

 ஒரு ஆண் தனது ஆளுமைத் திறனைக் காட்டுவதற்கு ஊக்கமளிப்பது பெண்களின் முன்னிலையில் கிடைக்கும் பேரே என்று மன ரீதியான காரணியாக அடையாளம் காணலாம். அது இயற்கையே. அந்த காரணிகள் வஹ்ஹாபிச நாடுகளில் இல்லாத பட்சத்தில், எந்த ஆணும் தனது திறனை வெளிப்படுத்த காரணமற்று போய்விடுவான். தன்னை மேம்படுத்தவும் மாட்டான்.

 இந்தக் காரணம் விளையாட்டுத்துறையில் மட்டுமல்லாமல், கல்வி மற்றும் ஆராய்சித்துறையிலும் வஹ்ஹாபிய நாடுகள் பின் தங்குவதினை விளக்குகிறது. ஆஃபிரிக்க நாடுகளைப் போலல்லாமல், பண வசதிகள் இருந்தும் இந்த நாட்டு மக்களுக்கு தனது திறனை வெளிக்கொணரும் ஆர்வம் இல்லாமல் இருப்பது ஆச்சரியப்படத்தக்கதொன்றல்ல.

Monday, August 06, 2012

அரபு தேசங்களின் "வசந்தம்"-மும் நம் உள்ளூர் புண்ணாக்குகளும்

பல அரபு நாடுகளில், "அரபு-வசந்தம்" என்று செல்லமாக அழைக்கப்படும் புரட்சிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. துனீசியா, எகிப்து, லிபியா ஆகிய நாடுகளில் ஆட்சிகள் தூக்கியெறியப்பட்டு புதிய ஆட்சிகள் வந்துள்ளன.

 நம் உள்ளூர் முஸ்லீம் மக்களுக்கு, அந்தப் புரட்களைப் பற்றி சரியான புரிதல்கள் இல்லை என்பதினை, அவர்கள் பகிர்ந்து கொள்ளும் கருத்துக்கள் அடிப்படையில் அறியலாம். இதையே இந்த வெள்ளைக்-கைலி மக்களின் இணையதளங்களைப் படிக்கும்போதும் அறியலாம்.

 பலர் இந்த புரட்சிகளை, "கருப்பு" அல்லது "வெள்ளை" என்ற வகையில் இருப்பது போல பார்க்கிறார்கள். நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும் இடையேயான போர் என்று கருதிவிடுகிறார்கள். இது ஒரு சில நாடுகளில்தான் உண்மை. எகிப்தினைப் பொறுத்தவரை உண்மை. ஆனால் சிரியாவினைப் பொறுத்தவரை உண்மைக் கிடையாது.

 மேலும் பலருக்கு இந்தப் புரட்சிகளின் பிண்ணணி இனவாதமென்று கருதுமளவுக்கு அறியாமையுள்ளது. பஹ்ரைனில் அந்த ஆட்சிக்கு எதிரான புரட்சியினை, "ஷியாக்களின் புரட்சி" என்று ஊடகங்கள் சித்தரித்ததிலிருந்து, அவர்கள் அந்தப் புரட்சியின் நேர்மைதன்மையினை மறைக்க முயல்வதினை அறியலாம். பஹ்ரைனின் ஆட்சி ஒரு இன கீழ்தரமான இனவெறி பிடித்த ஆட்சி. பஹ்ரைனின் பெரும்பான்மையான மக்கள் ஷியாக்கள். அவர்களை ஓரம் கட்டிவிட்டு இந்தியா பாக்கிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து ரவுடிகளை இறக்குமதி செய்து, போலிஸ்காரர்களாக ஆக்கி அந்த நாட்டுக் குடிமக்களை பாடோ படுத்தும் நாடு. அவர்கள் ஷியாக்கள் எனும் ஒரே காரணத்தினால். நமது உள்ளூர் வெள்ளைக்கைலி புண்ணாக்குகளும் அதே காரனத்தினால், பஹ்ரைன் அரசினை ஒரு புனிதமான அரசாக காண்கின்றன.

 மேலும் இந்த மக்களுக்கு (அதாவது நமதூரைச் சேர்ந்த பல‌ முஸ்லீம்களுக்கு) கடாஃபி மீது ஒரு பெருமதிப்பு. அவரை அமெரிக்காவின் எதிரியாகக் கருதி அவர் மீது மதிப்புக் கொண்டுள்ளனர். ஆனால் இந்த கூமுட்டைகளுக்கு, கடாஃபி மேற்குலகின் அபிமானியாக பிற்காலத்தின் ஆனாரென்பது தெரியாது. க‌டாஃபி த‌ன‌து குடும்பத்தின், மற்றும் குல‌த்தின் ந‌ல‌னுக்காக‌ ஆட்சி செய்துவந்த‌ ச‌ர்வாதிகாரி. அவ‌ர் ஒரு ப‌ழ‌ங்குடிப் பிரிவின் த‌லைவ‌ர். அவ‌ர் நாட்டின் த‌லைவராக‌ இருக்க‌ த‌குதிய‌ற்ற‌வ‌ர். மேலும் அவ‌ர‌து ஆட்சி அவரது சுய‌த‌ம்ப‌ட்ட‌த்தின் காட்சிய‌க‌மாக‌ இருந்த‌து. ஆனால் அதே ச‌ம‌ய‌த்தில் புர‌ட்சியாள‌ர்களின் தலைவர்கள் ஒன்றும் புனித‌ர்க‌ளில்லை. அந்த‌ புர‌ட்சியாள‌ர்களின் தலைவர்கள் மேற்குல‌ நாடுக‌ளுட‌ன் ஒப்ப‌ந்த‌ம் செய்துகொண்ட‌தாலேயே, மேற்குல‌க‌ம் அந்த‌ப் புர‌ட்சியாள‌ர்க‌ளுக்கு உத‌வி செய்த‌ன‌. மேலும் க‌டாஃபி என்ன‌தான் மேற்குல‌கிற்கு ஆத‌ர‌வாள‌ராக‌ மாறி இருந்தாலும், ச‌வுதி அள‌விற்கோ அல்ல‌து ஜோர்டான் அள‌விற்கோ அல்ல‌து க‌த்தார் அள‌விற்கோ மாறவில்லை.

 ஏம‌ன் எனும் நாட்டிலும் புர‌ட்சி. ச‌வுதி வ‌ஹ்ஹாபிக‌ள் ஏம‌ன் நாட்டு அர‌சுக்கு ஆத‌ர‌வு. ம‌க்க‌ள் போராடுகிறார்க‌ள். உள்ளூர் த‌வ்கீது ஜ‌மாத்து புண்ணாக்குக‌ளுக்கு ஏம‌ன் ப‌ற்றி அவ்வ‌ள‌வாக‌ அக்க‌றைக் கிடையாது. கார‌ண‌ம் அது ஒரு ஏழை நாடு. அந்த‌ ஜ‌மாத்துக‌ளுக்கு ப‌ண‌ம் அனுப்புவோர்க‌ள் அந்த‌ நாட்டில் இல்லை.

 த‌ற்போது சிரியா. உல‌க‌ ஊட‌க‌ங்க‌ள், அங்கு நடக்கும் போராட்டத்திற்கு "இன‌வாத‌ம்" எனும் பெய‌ரைச் சூட்டுகின்ற‌ன‌. சிரிய‌ அதிப‌ர் ஆசாத் "அலாவி" எனும் பிரிவினைச் சேர்ந்த‌வ‌ர். அத‌னால் அவ‌ர் பெரும்பான்மையான‌ "சுன்ன‌த்" பிரிவினைச் சேர்ந்த‌ ம‌க்க‌ளை அட‌க்கியாள்கிறார் என்று அந்த‌ ஊட‌க‌ங்க‌ள் வ‌ண்ண‌ம் தீட்டுகின்ற‌ன‌. ஆனால் உண்மையில், சிரியா இஸ்ரேலுக்கு எதிரான‌ நாடு என்ப‌தாலேயே மேற்குல‌க‌ம் ஆசாத்துக்கு எதிராக‌ உள்ள‌ன‌.

 வ‌ஹ்ஹாபிய‌ அர‌சான‌ ச‌வுதி அரேபியாவோ, இஸ்ரேலுக்கு எதிராக‌ சிரியா இருப்ப‌தாலும், ஈரானிட‌ம் ந‌ட்புற‌வில் இருப்ப‌தாலும், சிரியாவின் ஆசாத்தினைக் க‌விழ்க்க‌ ஐக்கிய‌ நாட்டு ச‌பை மூல‌மும், ஆயுத‌ங்க‌ள் ம‌ற்றும் ப‌ண‌ உத‌விக‌ளை புர‌ட்சியாள‌ர்க‌ளுக்கு அனுப்புவ‌த‌ன் மூல‌மும் ப‌ங்காற்றுகிற‌து.  இஸ்ரேல் தூத‌ர‌க‌ங்க‌ளான‌ த‌வ்கீது ஜ‌மாத்துக‌ள், சிரியாவினைக் க‌ண்டித்து வெகு சீக்கிர‌ம் புண்ணாக்கு அறிக்கைக‌ள் விடுவார்க‌ள் என‌ எதிர்பார்க்க‌லாம்