Thursday, April 12, 2012

சவுதி அரேபியா: இஸ்லாமியர்களின் சாபக்கேடு

"Custodian of Two Holy Mosques" அல்லது "இரு புனிதப் பள்ளிவாசல்களின் பொறுப்பாளர்" என்ற போர்வையில், இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் பண்ணுகிற அழிச்சாட்டியங்களுக்கு அளவே இல்லை. சவுதி மக்களையே பிச்சைக்காரர்களாக்கி ரோட்டில் பிச்சை எடுக்க விட்டிருக்கும் நாடு அந்த நாடு. உலகத்தின் 25% பெட்ரோலியம் இந்த நாட்டிடம்தான் உள்ளது. இருப்பினும் சவுதி மக்கள் கூட பிச்சை எடுக்கும் நிலை. அந்த அளவிற்கு அதன் ஆட்சியாளர்களின் ஆட்சி. சவுதி இளவரசர் காலித் ஒரு மிகப்பெரிய பணக்காரர். ருப்பர்ட் முர்டோச் எனும் செய்திஊடக தாதாவின் சொத்துக்களில் பங்குகள் உடையவர் இந்த இளவரசர் காலித்.

உலகில் அமைதிவேண்டுமானால், இஸ்ரேல் எனும் நாடு இருக்கக் கூடாது என்பதினை நியாயமான சிந்தனையுடைய யாரும் ஏற்றுக்கொள்வர். அதற்கு முதல்படி சவுதி ஆட்சியாளர்கள் அழியவேண்டும். அது இல்லாமல் இஸ்ரேலிய நாடு எனும் அமைப்பு அழிவது சாத்தியமில்லை. (கவனிக்க: இஸ்ரேலிய நாடு எனும் அமைப்புதான் அழியவேண்டும் என்கிறேனே தவிர அதன் மக்களை அழிக்கவேண்டும் என நான் சொல்லவில்லை)

ஆனால் சவுதி அராபியாவோ இஸ்ரேலினைக் காக்க பல விஷயங்களில் பாடுபட்டு வருகிறது. அதற்குக் காரணம் தனது சவுதி குடும்பத்தின் ஆட்சி நீடிக்கவேண்டும் என்பதுதான். அதற்காக இஸ்ரேல் சார்பாக இருப்பது மட்டுமல்லாமல், இஸ்ரேல் சார்பான பல ஆட்சிகள் பல அரேபிய நாடுகளில் நிகழ பாடுபட்ட நாடு இந்த சவுதி அரேபியா. இந்த நாடுதான் எகிப்தில் முபாரக்கின் ஆட்சியினைப் பேணிவந்தது. துனீசியாவில் "பென் அலி" என்பவரின் ஆட்சியினைப் பேணிவந்த நாடு. இந்த நாடு தான், மக்கள் விரோத ஆட்சியொன்றை ஏமன் எனும் நாட்டில் பேணி வந்தது. இந்த நாடுதான் மக்கள் விரோத ஆட்சியினை பஹ்ரைனிலும் பேணிவருகிறது. தனது முழு மூச்சும் இஸ்ரேலிய பணிக்கே என அர்பணித்து வருகிறது இந்த சவுதி அராபியா. ஜோர்டானின் ஆட்சியையும் இதுவே பேணிவருகிறது. லெபனானின் "ரஃபீக் ஹாரிரி" எனும் இஸ்ரேல் சார்பானவரின் ஆட்சியைப் பேணிவந்தது.

இஸ்ரேலுக்கு எதிரான நாடுகளின் ஆட்சிகளை அழிக்க முயல்வதிலும் இந்த சவுதி அரேபியா பங்காற்றுகிறது. சிரியா எனும் நாடு மக்கள்விரோத ஆட்சியினைக் கொண்டிருந்தாலும், அதன் ஆட்சியாளர்கள் இஸ்ரேலுக்கு விரோதியானவர்கள். அந்த நாட்டின் ஆட்சியினைக் கவிழ்த்து இஸ்ரேலுக்கு சேவகம் செய்ய பெரு அளவிலான ஆயுதக்களை சிரியா ஆட்சிக்கெதிரான கிளர்சியாளர்களுக்கு அனுப்பியதோடல்லாமல், அவர்களுக்கு சம்பளத்தினையும் ஏற்பாடு செய்துள்ளது.

இஸ்ரேலுக்கு எதிரான ஈரானில் அதன் ஆட்சியாளர்களை அழிக்க சவுதி மன்னர் விடுத்த ரகசிய வேண்டுகோளை விக்கிலீக்ஸ் வெளியிட்டதினை மறந்திருக்க மாட்டீர்கள்.

இவ்வாறு தனது ஆட்சியினை உலக வல்லரசுகளிடம் செல்வாக்குப் பெற்றதாக ஆக்க இஸ்ரேல் சார்புடன் செயல்படுகிறது. ஆனால் எப்படி மக்களைக் கட்டுப் படுத்துவது ? அதற்குதான் அது வஹாபிசம் எனும் கருத்துக்களைக் கொண்டு அடக்கியாள்கிறது. "ஆதாரப் பூர்வமான ஹதீஸ்கள்" என்று கூறி மக்களை அடக்குகிறது. "ஆதாரப் பூர்வமானது" என்று பல ஹதீஸ்களை வகைப் படுத்தும்போது, "ஆதாரப்பூர்வமானது" எனும் வார்த்தைக் கான அர்த்தத்தினையும் விதிமுறைகளையும் அந்த வஹாபிகளே நிர்ணையிப்பார்களாம்.

எளிதாக சொல்ல வேண்டுமானால், அவர்கள் ஒரு வகையான‌ பாஸ்டர்டுகள். தமிழில் சொன்னால் கேட்கும் சிலருக்கு கோபம் வரும் என்பதால் விட்டுவிடுகிறேன்.

ஆனால் தமிழ்நாட்டில் உள்ள இந்த வஹாபிய இயக்கங்கள் இந்த சவுதிஅரேபியாவுக்கு ஆதரவானவை. சவுதிஅராபியாவினைப் போலவே, ஷியாக்களின் மீது காழ்ப்புணர்வினைப் பரப்புபவை. இத்தகைய இயக்கங்களில் ஒன்றான "இந்திய தவ்ஹீத் ஜமாத்" பஹ்ரைனிற்கு ஆதரவாக ஒரு கருத்தினை ஒரு சமயம் வெளியிட்டிருந்தது. அவ்வளவு கேவலமான இந்த வஹாபிகள். ஷியாபிரிவினர் என்றால் இவர்கள் இரத்தம் கொதிக்கும்.

பிஜே என்பவன்/ர் (பிஜேயை "அவர்" என அழைக்க வேண்டுமா அல்லது "அவன்" என அழைக்கவேண்டுமா என்பது வாசகர்களுக்கான விருப்பப்படி) ஒரு கடந்தெடுத்த ஷியாபிரிவு மக்களின் விரோதி.

14 comments:

ராஜ நடராஜன் said...

மாலிக் அவர்களுக்கு!

இந்த பதிவு துவங்கி உங்களின் ரயில் கனவுகள் வரை கிட்டத்தட்ட 3 மணிக்கு மேல் உங்கள் பதிவுகளை முதல் முறையாக மேய்ந்திருக்கிறேன்.வைரங்கள் பின்னால் ஒளிந்து கொண்டு மின்மினிகள் மட்டுமே பதிவுலகில் முன்னணியில் நிற்பது எழுத்தின் முரண் நிலையே.

ராஜ நடராஜன் said...

முக்கியமான ஒன்றையும் குறிப்பிட மறந்து விட்டேன்.சிலர் மீதான கோபங்களின் உச்சம் மரணித்துப் போ என்ற சாபமிடும் நிலைக்கான மனநிலையும் எனக்கு உடன்பாட ஒன்றல்ல.

usman said...

பழுத்த மரம் கல் அடிப் படும் என்ற உண்மை அரை வேக்காட்டு தனமா உங்கள் கட்டுரையில் மீண்டும் நிரூபணம் ஆகியிருக்கு. அம்மணமாக இருக்கும் ஊரில் ஆடை அணிந்தவன் பபயித்தியகாரன் என்பதுபோல உன்னைப் போன்ற அரை வேக்கட்டுகாறனைப் பார்த்து ஏன்டா அம்மணமா அலையிற என்று கேட்டால் கேட்டவன் பயித்தியக்காரன் . வைரத்தை பார்த்து உப்பு கல் என்று சொல்லக்கூடிய உன்னுடைய பொட்டைகண்களில்தான் குறைபாடு இருக்கு. வைரம் வைரம்தான்.

nagoreismail said...

பிரதர்.. ஸலாமலைக்கும்
எப்படி இருக்கீங்க..?
காரசாரமா இருக்கு...

சவுதி அரசாங்கத்தை இழித்தால் இஸ்லாத்தையே இழிப்பது போல் ஒரு எண்ணத்தை நிறைய பேர் விதைக்க முயல்கிறார்கள்.

அந்த கட்டமைப்பை உடைத்தெறிக்கின்றது உங்கள் இங்கே சொல்லப்பட்ட இந்த பதிவு

மு மாலிக் said...

நண்பர் ராஜ நடராஜன் அவர்களே. உங்கள் புகழ்ச்சிக்கும் கருத்துக்கும் நன்றி. நான் சிலரின் மரணத்தினை வேண்டுவது, என் சுய நலனுக்காக அல்ல. ஒரு அளவு கடந்த அன்பினால். நன்றி


நண்பர் இஸ்மாயில் அவர்களே. சலாம். நீங்களும் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். நான் ஒரு சமயம் சிங்கப்பூரில் இருந்தபோது உங்களைச் சந்திக்க நினைத்தேன். முடியவில்லை. மீண்டும் வரும்போது உங்களைச் சந்திக்கிறேன்.

மாசிலா said...

நேர்மையுடன் நடுநிலமையுடன் சுடும் உண்மைகளை சூடாகவே அறிய கொடுத்திருக்கிறீர்கள். உங்களது துணிச்சலை பாராட்டுகிறேன்.

சமுதாயத்தில் கீழ்தட்டில் வறுமையில் ஆதரவற்று பாதுகாப்பில்லாமல் திண்டாடும் மக்களுக்கு சில பணக்கார அராஜகர்கள், அரசியல் கொடுங்கோன்மையாளர்கள் கண் மூடித்தனமாக இழைத்துவரும் அநீதிகளை அம்பலப் படுத்துவதற்கு நீங்கள் எழுதிய இந்த பொதுநல விரும்பும் விழிப்புணர்வூட்டும் பதிவை வரவேற்கிறேன்.

பொதுவாகவே சில சமூகத்தினர் இவை போன்ற சுடும் உண்மைகளை மூடி மறைத்து மேல்கட்டாக வெளி உலகத்திற்கு போலிச்சாயம் பூசி "என்னை பார்தாயா, என் அழகை பார்த்தாயா!" எனும் சுய இன்பத்தில் அகமகிழ்வதில் ஒரு ஆனந்தப்படுவர். நல்ல சமுதயம் உருவாவதற்கு இது நல்லதாகாது. சமுதாயத்தில் நடக்கும் அனைத்து நடப்புகளையும் ஒவ்வொருவரும் தத்தம் பார்வையில் அலசி ஆராய்ந்து பார்த்து நல்லது கெட்டதை அறிந்து தங்களுக்கு சரி என்பதை ஏற்றுக்கொள்ளுவதும் தவறுகளை, குறைகளை சுட்டிக்காட்டி திருத்த முயற்சிப்பதுமே சம நிலை வாழ்க்கைக்கு நன்று.

பகிர்வுக்கு நன்றி.

shakiribnu said...

சுத்த உளறல்

குட்டிபிசாசு said...

//இஸ்ரேலிய நாடு எனும் அமைப்புதான் அழியவேண்டும் என்கிறேனே தவிர அதன் மக்களை அழிக்கவேண்டும் என நான் சொல்லவில்லை//

இந்த நேர்மைக்கு உங்களை கட்டாயம் பாராட்ட வேண்டும்.

சாபு said...

நண்பரே, உங்கள் வாதங்களும் பதிவுகளும் சிறப்பாக இருக்கின்றன.

நீங்கள் ஷியா கொள்கையைப் பின்பற்றுகிறவரா?

மு மாலிக் said...

இல்லை நண்பரே. ஆனால் அவர்களை எனக்குப் பிடிக்கும். ஈரானின் அரசியல் நிலைப்பாடு எனக்குப் பிடித்த ஒன்று. மேலும் ஷியாக்களை எனக்குப் பிடித்திருப்பதற்கான காரணங்களில் ஒன்று, அவர்கள் தெள்ளந் தெளிவாக யஜீதினை தூற்றுபவர்கள். நபிகளாரின் குடும்பத்தினரை கண்ணியப்படுத்துபவர்கள். பொறுக்கி பிஜே போன்ற அல்லது அவர் போன்ற வஹ்ஹாபி தேவு.-பயல்கள் போன்ற‌ முனாஃபிக்குகள் இல்லை அவர்கள்.

சாபு said...

சகோதரரே,

வஹ்ஹாபிகள் மற்றும் பிஜே க்களின் வண்டவாளங்களை வெளிப்படுத்துகிற நீங்கள் ஷிஆக்கள் குறித்தும் கவனமாக இருக்க வேண்டும்.

ஷிஆக்கள் குறித்து ஒரு சிறு அறிமுகச் சான்றாக http://www.islamkalvi.com/portal/?p=7433 என்ற தளத்தின் கட்டுரையைப் படியுங்கள். படித்துவிட்டுச் சொல்லுங்கள். நன்றி

மு மாலிக் said...

நீங்கள் காட்டிய கட்டுரையை எழுதியவர், தனது பெயரிலேயே "வஹ்ஹாபி" என்று எழுதியுள்ளார். "ஸலஃபி" என்பதற்கும் "பிஜே" என்பதற்கும் "வஹ்ஹாபி" என்பதற்கும் "பாஸ்ட*ட்" என்பதற்கும் அவ்வளவு வித்தியாசம் கிடையாது.

முதல் பத்தியிலேயே அதை எழுதியவரது புத்திசுவாதீனத்தினைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம். அந்தக் கட்டுரையில் அவர் சொல்கிறார்: ஷீஅத்து அலி என்று அழைக்கப்பட்ட ஷிஆக்களுக்கும் அலி அவர்களுக்கும் தொடர்பு இல்லை என்பதால் நாளடைவில் ஷியா என அழைக்கப்பட்டனர். இப்படிக்கூறுவது சரியா எனப்பாருங்கள். இதன்படி பார்த்தால், ஷியாக்கள் தங்களை "ஷியா" என்று அழைப்பதினை வெறுக்கிறார்கள் என்றும், "ஷியத்து அலி" என்று அழைப்பதுதான் சரி என்றும் கூறுபவர்களாக இருக்கவேண்டும். அப்படித் தான் ஷியாக்கள் செய்கிறார்களா? ஷியாக்கள் தங்களை ஷியா என்று அழைப்பதில்லையா ? ஷியாக்கள் நடத்தும் பிரஸ்டிவியில் ஷியாக்கள் பற்றிய செய்திகளில், ஷியா பிரிவு மக்களை அழைப்பதற்கு "ஷியா" எனும் வார்த்தையினைப் பயன்படுத்துவதில்லையா.

"சலஃபிக்கள்" எனும் சொல், சபலிகள் எனும் சொல்லிலிருந்து வந்தது என்று நான் சொன்னால், அப்போ ஏன் சலஃபிக்கள் தங்களை "சலஃபி" என அழைத்துக்கொள்கிறார்களென்று என்னிடம் நீங்கள் கேட்பீர்கள். அப்படித்தான் நான் மேலே கேட்டிருக்கிறேன்.

சாபு said...

சொல்லப்பட்ட கருத்துகளை விட்டுவிட்டு சொல்பவரை ஆராய்வது ஏன் சகோதரரே?

ஷியா கொள்கை சரியா தவறா? நேரிடையாக பதில் கூற வேண்டுகிறேன்.

Dr.Anburaj said...

இஸ்ரேல் என்ற நாடு ஏன் இருக்கக்கூடாது. சரித்திரக்காலம் தொட்டு யுதர்கள் அங்கே வாழ்ந்து வந்தவர்கள்தானே. முகம்மது என்ற அரேபிய சமயத்தலைவர் அரேபிய சமய சமூக பழக்க வழக்கங்களை மட்டுமே கடவுள் அல்லா ஏற்கிறார் மற்று இன கலாச்சார பண்பாடுகளை எவ்வளவுதான் சிறப்பாக இருந்தாலும் மற்றவைகளை அல்லா ஏற்கவில்லை. நானே இறைவன் தூதர்.நான் அளிப்பதுதான் வேதம். பிற வேதங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டவிட்டன என்று கூறி சிலைகளை அடித்து ஒழிக்க முற்பட்டதன் காரணமாக அரேபியாவில் 45 யுத்தங்களை முகம்மது நடத்தினாரே.அந்தகாலத்தில அரேபியாவில் ஏராளமாக யுதர்கள் வாழ்ந்தார்கள். முகமமதுவின் செல்வாக்கினால் அரேபிய துணைக்கண்டத்தைவிட்டு வன்முறையால் விரட்டப்பட்டார்கள் என்பதற்கு அரேபிய-மகம்மதிய-இஸ்லாமிய வரலாற்றில் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. எனவே யுதர்களுக்கு கொஞசம் இடம் கொடுக்க வேண்டியது அரேபியர்களின் கடமை. யுதர்களிடம் பகையுணர்ச்சியின்றி அரேபியர்களும் உலகத்தில் பிற நாடுகளில் வசிக்கும் முஸ்லீம்களும் வாழ வேண்டும். இந்திய அரசிற்கும் இஸ்ரேலிய அரசிற்கும் பரஸ்பரம் நன்மைதரும் வர்த்தக கல்வி பாதுகாப்பு ஒப்பங்தங்கள் நிறைய உள்ளன. நமது விமானப்படைக்கு மிகநவீனமான ரடார்களுவிகளும்ஏவுகணைகளும்,அவாக்ஸ் விமானங்கள் ஆகிய பல ராணுவதளவாடங்களை இஸ்ரேல் நமக்கு அளித்து உதவி வருகின்றது. பாக்கிஸதான் சார்கோடா என்ற நகரில் அணு குண்டு தயாரிக்க தேவையான பொருட்களை உருவாக்க உலையை அமைத்தபோது, இஸ்ரவேல் விமாணப்படை தனது விமானங்களுக்கு சண்டிகரில்இறங்கி பெட்ரோல் போட்டுக் கொள்ள அனுமதி வழங்கினால் அணுஉலையை அழித்து விடுவதாக உதவிடமுன்வந்து.இந்திய பிரதமர் தேசாய் அவர்கள் அதை மறுத்து விட்டார். எனவே இஸ்ரவேல் இந்தியாவின் நண்பன் என்று சொல்ல தகுதி படைத்த நாடு.