Thursday, September 16, 2010

கேஷுவல் பதிவு: தமிழக முஸ்லீம்களின் நிலை

"இட ஒதுக்கீடு". இதுதான் தீர்வு என்று முஸ்லீம்களில் பலர் எண்ணுகிறார்கள். இதைக் காரணமாகக் காட்டிக் கூட்டப்படும் மாநாடுகளில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் திரண்டுவிடுகிறார்கள். மாநாட்டு அமைப்பாளர்களின் அரசியல் நோக்கங்களுக்கு பகடைக் காய்களாக ஆகிவிடுகிறார்கள். அந்த மாநாட்டு அமைப்பாளர்கள் தங்கள் இருப்பினைக் காட்டிக்கொள்வதற்காகவும், தங்களின் ஜீவியத்திற்கான முதலாகவும், அரசியல் அரங்கில் அவர்கள் செய்யும் பேரத்திற்காகவும், இவைத்தவிர தனது மார்க்கக் கொள்கைகளுக்கான விளம்பரத்திற்காகவும் இந்த மாநாடுகளை நடத்துகிறார்கள். இதனை அப்பாவி முஸ்லீம்கள் அறிவதில்லை.

முதலில் "இட ஒதுக்கீடு" என்ற ஒன்று தேவையா என்பதினைப் பிறகு சொல்கிறேன். ஆதாவது அது தேவையில்லை எனும் என் அபிப்ராயத்தினைப் பிறகு சொல்கிறேன். அதற்கு முன், நான் மேலே சொல்லியிருந்த பட்டியலில், "அரசியல் அரங்கில் அவர்கள் செய்யும் பேரத்திற்காக"வும் மாநாடுகளை நடத்துகிறார்கள் என்பதினை எப்படி விளங்கிக் கொள்ளலாம் ?

அந்த மாநாடுகளின் முடிவுகளில் அவர்கள் எடுக்கும் அரசியல் சார்ந்த முடிவுகள், எந்த கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதென்ற தங்கள் நிலைப்பாடுகள் ஆகியவைகளைக் கொண்டு விளங்கலாம். முந்தைய மாநாட்டின் முடிவில் அவர்கள் எந்தக் கட்சியினை ஆதரிக்க முடிவு எடுத்தார்களோ, அதற்கு முற்றிலும் மாறான கட்சியினை ஆதரிக்க, அடுத்த மாநாட்டின் முடிவில் முடிவெடுப்பார்கள். அல்லது மாநாடு நடந்து முடிந்து அடுத்த சில காலத்தில் அந்த முடிவினை எடுப்பார்கள். இப்போது நாம் கவனிக்கவேண்டியது என்னவென்றால், எந்தக் அரசியல் கட்சியினரை எதிர்க்க அவர்கள் வாதங்களை முன்வைத்தார்களோ அதே அரசியல் கட்சியினை அவர்கள் ஆதரிக்க முடிவெடுப்பார்கள். அந்த அரசியல் கட்சிக்கு எதிராக அவர்கள் வைத்த வாதங்கள் என்னாயிற்று ? என்று விழித்துக் கொண்டுள்ள பாமரன்கூட கேட்பான்.

இதே விதமான அரசியலைத்தான் இராமதாஸின் பாட்டாளி-மக்கள்-கட்சியும், வைகோவின் மதிமுகவும் செய்யும். இப்போ முஸ்லீம்களில் சிலரும் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

பிஜேயின் உணர்வு பத்திரிக்கையில் ஜெயலலிதாவை ஆதரிக்கவேண்டாம் என ஆரம்பத்தில் பிரச்சாரம் செய்தார்கள். ஏனென்றால் பாபரி மஸ்ஜிதை இடிக்க ஜெயலலைதா ஆட்கள் அனுப்பினார் என்று காரணம் கூறப்பட்டது. ஆனால் கடந்த எலெக்க்ஷனில் ததஜவின் பிஜே ஜெயலலிதாவினை ஆதரித்தார். கடந்த எலெக்ஷனில் தமுமுக ஜெயலலிதாவினை எதிர்த்தது. பிஜே ஜெயலலிதாவிற்கு ஆதரவு தருவதை தமுமுக விமர்சித்தது.

தமுமுக கடந்த எலெக்ஷனில், ஜெயலலிதாவினை எதிர்த்ததோடல்லாமல் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்தது. ஆனால் கருணாநிதியோ, தமுமுகவின் அரசியல் பிரிவான மமகவிற்கு ஒரு சீட் கூடத்தராமல், "மனதில் இடமுண்டு" என்று கூறியதால், தமுமுக தனித்துப் போட்டியிட்டது.

வரும் தேர்தலில் தமுமுக ஜெயலலிதாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அது முன்பு செய்த விமர்சனங்களை என்ன செய்வது ? அந்த விமர்சனப் பக்கங்களைத் தமுமுக தனது இணையதளத்திலிருந்து அழித்துவருவதாகத் தெரிகிறது. அந்த அளவிற்கு அரசியல் ஆட்டம் அவர்களைப் பாடாப் படுத்துகிறது. மோடியை வரவேற்ற ஜெயலலிதாவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக பிஜேயின் ததஜவினை விமர்சித்ததெல்லாம் அப்போ சும்மாவா ? என்று பாமரன் கேட்பது காதில் விழுகிறது.

அதே சமயம் ததஜ ஆதரவாளர்களிடம் தங்கள் தலைவர் பிஜே மீது வைக்கப்பட்ட விமர்சனத்திற்கு பதில் ஏதும் இல்லாவிட்டாலும், இப்போது தமுமுக அதே தவறினை வெட்கமின்றி செய்யும் போது, அவர்கள் மீது ததஜவினர் அதே விமர்சனத்தினை வெட்கமின்றி வைக்கின்றனர்.

மேலும் வரும் தேர்தலில் தமுமுகவிற்கு எதிராக, காங்கிரஸ்-திமுகக் கூட்டணியிற்கு ஆதரவாக பிஜே செயல்பட எத்தனித்திருப்பது போல அவர்கள் ஸ்டாலினைச் சந்த்திப்பதும், மன்மோகன்சிங்கைப் பார்ப்பதுமாக இருக்கின்றனர். ததஜ மாநாடு நடந்து முடிந்த அடுத்த நாட்களிலேயே இவைகள்.

இவைகளின் அடிப்படையில், இவர்கள் நடத்தும் மாநாடுகளைப் புரிந்து கொள்ளலாம். மாநாடுகளின் முடிவுகளில், இவர்கள் ஆதரிக்க முடிவு செய்யும் கட்சிகளை இவர்கள் ஆதரிப்பது, இவர்கள் காட்டும் காரணங்களுக்காக அல்ல என்பதினை மக்கள் புரிந்துக் கொள்ளலாம்.

அடுத்து தான் கொண்டுள்ள மார்க்கக் கொள்கைக்கான விளம்பரமாகவும் இதைச் செய்கிறார்கள் என்று நான் சொன்னதினை எளிதில் புரிந்துக் கொள்ளலாம். அவர்கள் அனைத்து முஸ்லீம்களுக்கான காரணத்தின் பேரில் அவர்கள் செய்தாலும், அவர்கள் "தவ்ஹீது" என்ற அமைப்பின் கீழ் செய்கிறார்கள். அந்த அமைப்பின் பெயரை பயன்படுத்தாமல், அனைத்து தரப்பிலிருந்தும் பேச்சாளர்களைப் பயன்படுத்தி அவர்கள் அனைவருக்கும் சமமான அந்தஸ்து கொடுத்து மாநாடு அமைக்க முன்வருவதில்லை. ஆனால் விளம்பரம் செய்யும் போது அனைத்துதரப்பினரும் வரவேண்டுமென விளம்பரம் செய்து கூட்டத்தினைக் கூட்டிவிடுவார்கள். அது அவர்களது கொள்கை சார்ந்த அமைப்பிற்கான விளம்பரமாகவும், அவர்களின் அரசியல் நகர்வுக்காகவும் மட்டுமே பயன்படுகின்றன.

இட ஒதுக்கீடு தேவையா ?
----------------------

தேவை என்பவர்கள் சச்சார் கமிட்டியின் ரிப்போர்ட்டை ஆதாரமாக வைப்பார்கள். சச்சார் கமிட்டியின் ரிப்போர்டில் முஸ்லீம்கள் வேலை வாய்ப்புகளில் ஒதுக்கப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் "இடஒதுக்கீடே தீர்வு" என்று கூறுவதற்கு முன் அந்த இடஒதுக்கீட்டினால் நிகழும் அநீதிகளுக்கு எப்படி பதில் சொல்லவேண்டும் என்பதினை யோசிக்கவேண்டும். இடஒதுக்கீடு ஏற்பட்டால் திறமைகளுக்கான மதிப்பீடு, இடஒதுக்கீடு செய்யப்பட்ட குழுவிற்குள் மட்டுமே நடக்கும் (அதாவது இனம்/மதம்/சாதி போன்ற குழுக்கள்). அந்த குழுவிற்கு வெளியே திறமையினை ஒப்பிட்டு வேலை வாய்ப்புகள் வழங்க இயலாது. எனவே இந்த அநீதிக்கு பதில் சொல்லிவிட்ட பின்பே இடஒதுக்கீடு பற்றிப் பேசவேண்டும். குறைந்த பட்சம் முஸ்லீம்கள் இந்த அநீதி பற்றி பேசியே ஆகவேண்டும். இது மார்க்க அடிப்படையில் நம் மீது கடமையாகிறது.

இட ஒதுக்கீடு பற்றி வாய்கிழிய பேசும் பிஜே மற்றும் ததஜவினர் பற்றி: இவர்கள் நிலைப்பாட்டின் அடிப்படையில், ஜமாத்தே இஸ்லாமியும், இக்ஹ்வானுல் முஸ்லிமீனும் தவறு செய்பவர்கள். ஏனென்றால் இவ்விரு இயக்கங்களும், இஸ்லாமிய ஆட்சி அமைய பாடுபடுகின்றனவாம். ததஜவின் நிலைப்பாட்டின் அடிப்படையில் இஸ்லாமிய ஆட்சி தேவையற்றதாம். காரணம் நபி(ஸல்) அவர்களது காலத்தில் அபிசீனியாவில் குடியேறிய முஸ்லீம்கள் அந்த மன்னரின் ஆட்சியின் கீழேயே வாழ்ந்திருந்தார்கள் என்பது. அது போல ததஜவினர், அபிசீனியாவில் குடியேறிய முஸ்லீம்களுக்கு இட-ஒதுக்கீடு வழங்கப்பட்டது என்பதற்கான ஆதாரத்தையோ அல்லது வேறு இடங்களில் வழங்கப்பட்டதென்பதற்கான ஆதாரத்தினையோ தந்தால் நல்லது.

இட ஒதுக்கீடு மட்டும்தான் தீர்வா ?
-----------------------------

இல்லை. கிறிஸ்தவர்கள் இட ஒதுக்கீட்டிற்காக அழுகிறார்களா ? இல்லை. ஏனெனில் அவர்களிடம் சொந்தமான கல்வி நிடுவனங்கள் இருக்கின்றன. அவைகளில் அவர்கள் படித்து தனியார் துறைகளில் தங்கள் வேலை வாய்ப்பினைத் தேடிக்கொள்கிறார்கள்.


முஸ்லீம்களின் இந்த நிலைக்கு மாற்று-சமுதாயத்தினர்தான் காரணமா ?
----------------------------------------------------------

இல்லை. மற்ற சமுதாயத்தினருடன் ஒப்பிடும்போது, முஸ்லீம்களிடம் தங்களது முன்னேற்றத்தினைப் பாதிக்கும் கூறுகள் அவர்களது வாழ்க்கைமுறைகளில் தென்படுகிறது. தமிழகத்தினைப் பொருத்தவரை, நான் கீழ்காணும் கூறுகளை அடையாளம் காணுகிறேன்.

குடும்பத்தலைவன் மட்டும் வெளிநாடுகளுக்கு சென்று பொருள் ஈட்டி தாய்நாட்டில் வாழும் தனது குடும்பத்திற்கு அனுப்புவதால் பல சிக்கல்கள் இருக்கின்றன.

முதலில், சுயமாக ஒரு சிறுவியாபாரத்தினையோ அல்லது தொழிலையோ தான் குடும்பத்துடன் வாழும் ஊர்களில் துவக்காமல் வெளிநாடுகளில் வேலையாளாகப் பணியாற்றுவதால், அவர்கள் தனது பூர்வீக நாட்டில், சமுதாயத்திலிருந்து காணாமல் போய்விடுகிறார்கள். இதனால் மாற்று மத/சமுதாய மக்களிடையே கலந்து வாழும் வாய்ப்புகள் அற்று, அவர்கள் நம்மை விநோதமாகப் பார்க்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. அது அவர்களிடம் நம்மை அநியாயமாக ஒதுக்க எண்ணங்களைத் தூண்டுகிறது. ஏனெனில் அவர்களைப் பொருத்தவரை நாம் ஒருவிதமான "புதியவர்கள்" (strangers). நம்மைப் பற்றி அவர்கள் கொண்டுள்ள தவறான அபிப்ராயங்கள் அவர்களது மனதிலிருந்து அகலாமல் அப்படியே இருக்கக் காரணமாகின்றோம்.


அடுத்து, குடும்பத்தலைவனின் பார்வையில் இல்லாத குடும்பங்களில், குழந்தைகளின் வாழ்வு சின்னாபின்னமாகிறது. அவர்களை மேற்பார்வை செய்ய வழியில்லை. அவர்கள் கெட்ட நட்புகளைப் பெறுகிறார்கள். குழந்தைகளுக்கு மத்தியில் கெட்டவார்த்தைகளைப் பயன்படுத்தும் சொற்கள் அதிகமாக இருப்பது இதை ஊர்ஜிதப்படுத்துகிறது. மேலும் சில கிராமப் புறங்களில் சிறு வீதத்தினர் பாலியல் சீரழிவும் அடைகிறார்கள். அவர்களிடையே ஓரினச்சேர்க்கை ஒழுக்கக்கேடுகள் கூட தென்படுகின்றன. இவைகள் கீழக்கரை முஸ்லீம்களிடம் அதிக வீதத்தில் இருப்பதினை கிரெஸென்ட் பள்ளி, புதுக்கல்லூரி போன்ற இஸ்லாமிய கல்வி நிலையங்களில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களை கவனிக்கும்போது அறியலாம். இதனை ஒரு காரணமாக நான் ஏன் கூறுகின்றேன் என்றால், அது அவர்களது முன்னேற்றத்திற்கான கேடு என்பதில் ஐயமில்லை. அவர்களது கவனம் திரும்புகிறது. இந்த கெட்டப்பழக்கங்கள் மற்ற சமுதாய மக்களிடம் குறைவு. உதாரணத்திற்கு பிராமணச் சிறுவர்கள் ஒழுக்க சீலர்களாக இருப்பதினைக் காணலாம். இது தமிழக முஸ்லீம்களிடம் இருக்கிற இந்த வெளிநாட்டில்-வேலை-செய்யும் வாழ்க்கை முறையே ஆகும். அதாவது குடும்பத்தைப் பிரிந்து வாழும் குடும்பத்தலைவனால் இப்பிரச்சனை ஏற்படுகிறது.

அடுத்தப் பிரச்சனை, நமது குடும்பங்களில் காணப்படும் அதிகப்படையான விழாக்கள்/விசேஷங்கள். இச்சமயங்களில், சிறுவர்களின் கல்வி பாதிப்படைகிறது. சிறுவர்களின் தாய்மார்கள், நமது சமுதாயத்தினைப் பொறுத்தவரை, தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் அந்த விழாக்களில் பங்கேற்கச் செய்கின்றனர். இதனால் அவர்களது கவனம் திரும்புகிறது. பிறகு தனது தந்தையைப் பின்பற்றி வெளிநாடுகளுக்கு வேலை செய்ய குடும்பத்தினைப் பிரிந்து செல்கின்றனர். மேலும் இத்தகைய விழாக்களின் போது சமைக்கப்படும் பாத்திரங்களில் ஈயம் பூசப்பட்ட பாத்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் உணவுகளில் உலோகவிஷத்தன்மை அதிகமாகி அவர்களது மூளை வளர்ச்சியும்/பகுப்பாய்வுத் திறனும்(analytical skill) பாதிக்கப்படுகிறது.

இது போன்ற நமது கலாச்சாரம்/வாழ்வியல் சார்ந்த கூறுகள் கலையப்படவேண்டும் அல்லது சீர்திருத்தம் பெறவேண்டும். மற்ற சமுதாயத்தினரோடு கலந்து பழக வேண்டும். குழந்தைகளை அருகில் இருந்து கவனித்து வளர்க்கவேண்டும். அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தவேண்டும். இவ்வாறு செய்தால் நம் சமுதாயத்தில் மனிதவளம் மேம்படும். மக்கள் வெறுத்து ஒதுக்கும் அளவிற்கு நாம் விநோதகர்களாக இருக்கமாட்டோம். மேலும் நாம் நம் கடமையை ஆற்றிய திருப்தியுடன் இன்பமான இல்லற அமைய வாய்ப்புள்ளது.

அடுத்து, ததஜ/தமுமுக போன்ற கும்பல்களை ஒதுக்கிவிட்டு, பள்ளிக்கூடங்களை, கல்லூரிகளை ஏற்படுத்தவேண்டும். தொழில் பயிலும் கல்விக் கூடங்களையும் ஏற்படுத்தவேண்டும். செல்வங்களை ததஜவினருக்கு அனுப்பினால் அவர்கள் யாரோ ஒருவருக்கு ஒரு நெருப்பு-அயன்பாக்ஸ் போன்றவற்றை பரிசலித்துப் புகைப்படமெடுத்து தங்கள் இணையதளத்தில் விளம்பரம் தேடிக்கொள்வார்கள் (கவனிக்க: ஒருவருக்கு உதவி அளித்து, உதவி பெற்றவரது மானத்தினை மூலதனமாகப் பயன்படுத்துவது எந்த அளவிற்கு மானக்கேடான செயல்); அரசியல் நகர்வு நோக்குடன் மாநாடுகளை நடத்துவார்கள்; மக்கள் ஒரு நோக்குக்காக அளித்தப் பணத்தில் இஃப்தார் நிகழ்ச்சி நடத்துவார்கள்.

10 comments:

கோவி.கண்ணன் said...

ரொம்ப நல்லா நிதனமாக எழுதி இருக்கிறீர்கள்

அரபுத்தமிழன் said...

நல்ல சிந்தனை மற்றும் ஆய்வுடன் கூடிய தேவையான பதிவு.
JazaakALLAHu khairan.

வால்பையன் said...

//ததஜ/தமுமுக போன்ற கும்பல்களை ஒதுக்கிவிட்டு, பள்ளிக்கூடங்களை, கல்லூரிகளை ஏற்படுத்தவேண்டும். தொழில் பயிலும் கல்விக் கூடங்களையும் ஏற்படுத்தவேண்டும்.//


மிக்க மகிழ்ச்சியாக உள்ளது தோழர்!
எண்ணம் போல் வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்!

வால்பையன் said...

பாலோ அப்புக்காக!

கும்மி said...

நல்ல கட்டுரை நண்பரே! வாழ்த்துகள்!

இஸ்லாமியர்கள் தொடங்கும் கல்வி நிறுவனங்கள் பற்றி சில வார்த்தைகள். இஸ்லாமியர்களால் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வரும் கல்வி நிறுவனங்கள் மீது இஸ்லாமியர்கள் மத்தியிலேயே நல்லெண்ணம் இல்லை என்பதை அறிவீர்கள் என்று எண்ணுகின்றேன். அத்தகைய நிறுவனங்களில், சாப்பாட்டிற்கு அளிக்கும் முக்கியத்துவம் கல்விக்கு இல்லை என்பது பொதுவான கருத்து. (திருச்சி ஜமால், முத்துப்பேட்டை ரஹ்மத் போன்றவை சில விதிவிலக்குகள்.)

சுயமோகித் தலைவர்கள் 'அனைவரையும்' புறம்தள்ளி, வாழும் பகுதியில் அனைவரோடும் இணைந்து அமைதியாக வாழ மக்கள் முன்வரவேண்டும்.

Mohamed Musthafa.R said...

your thought may be good but your comments on muslim childrens are very bad (example) new college students by musthafa

தருமி said...

//மாற்று மத/சமுதாய மக்களிடையே கலந்து வாழும் வாய்ப்புகள் அற்று, அவர்கள் நம்மை விநோதமாகப் பார்க்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. அது அவர்களிடம் நம்மை அநியாயமாக ஒதுக்க எண்ணங்களைத் தூண்டுகிறது. ஏனெனில் அவர்களைப் பொருத்தவரை நாம் ஒருவிதமான "புதியவர்கள்" (strangers). நம்மைப் பற்றி அவர்கள் கொண்டுள்ள தவறான அபிப்ராயங்கள் அவர்களது மனதிலிருந்து அகலாமல் அப்படியே இருக்கக் காரணமாகின்றோம்.//

நல்ல புரிதல் ........

வளர வாழ்த்துகள்

Mohamed Rafi said...

Bhai assalamu alaikum varah, நம்மை நாமே அசிங்கபடுத்தலாமா . மல்லாக்க படுத்து மேல எச்சி துப்புனா நம்ம மேலதான் விழும்.சலாம் சொல்லுறதுல அர்த்தமே இல்லாமப் போய்டும்

Mohamed Rafi said...

Assalamu alaikum bhai,
நம்மை நாமே அசிங்கபடுத்தலாமா . மல்லாக்க படுத்து மேல எச்சி துப்புனா நம்ம மேலதான் விழும். சலாம் சொல்லுறதுல அர்த்தமே இல்லாமப் போய்டும்

* நித்திலன் * said...

//// கிறிஸ்தவர்கள் இட ஒதுக்கீட்டிற்காக அழுகிறார்களா ? இல்லை. ஏனெனில் அவர்களிடம் சொந்தமான கல்வி நிடுவனங்கள் இருக்கின்றன. அவைகளில் அவர்கள் படித்து தனியார் துறைகளில் தங்கள் வேலை வாய்ப்பினைத் தேடிக்கொள்கிறார்கள். /////

ஆக, மனித முன்னேற்றம் என்பது சமூகக் கட்டமைப்பைப் பற்றிய மனிதனின் புரிந்துணர்வையும், மனித முயற்சியையும் மனித உழைப்பையும் சார்ந்து இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா? இறையன்பில் முஸ்லீம்கள் கிறித்தவர்களுக்குச் சளைத்தவர்களா? அல்லது முஸ்லீம்கள் முன்னேறவேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திப்பதில்லையா?