Tuesday, August 03, 2010

தராவீஹ் தொழுகை: பொய்யன் பிஜேக்கு மறுப்பு

பிஜேயைப் பொய்யன் என எனது பழைய பதிவுகளில் நான் சுட்டிக்காட்டிவிட்டதாலும், அதற்கு ஆட்சேபனை இதுவரை வராததாலும், அவரைப் பொய்யன் என்றே அடையாளம் காண்போமாக.

முஸ்லீம்களின் வருடக்கணக்கில் ரமலான் மாதம் நெருங்குகிறது. இந்த வருடத்தில், இந்தப் பொய்யனின் கூட்டத்தினரின் குழப்ப விளைவிப்புகள் ஏராளம்.

சற்று தெளிவு பெறுவதற்காக, ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி அவர்களின் வீடியோவினைப் பகிர்ந்து கொள்கிறேன்

12 comments:

Anonymous said...

1. பைஹகியை ஆதாரமாக எடுக்கமுடியும் ஆனால் புஹாரி, முஸ்லிமை ஆதாரமாக எடுக்க முடியாது ஜமாலி அவர்களுக்கு??? 2.கத்தம் பாதிஹா இல்லயென்று சொன்னால் சுன்னத் வல் ஜமா அத் உலமாக்களின் வருமான இல்லாதுபோகும் என்பது ஜமாலி அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையா??????

மு மாலிக் said...

anonymous,

ஜமாலி அவர்கள் புகாரி ஹதீஸ்களையும் பற்றித்தானே பேசுகிறார். புகாரி இமாமின் "கித்தாபுத் தராவீஹ்" என்ற பகுதியினை வைத்தும் தானே தராவீஹ் தொழுகை உண்டு என நிறுவுகிறார். சரியாக வீடியோவினைப் பார்க்க. பொய்யன் பிஜேயின் மாயையிலிருந்து விடுபடுக.

கத்தம் ஃபாத்திஹா (இறந்தவர்களின் நன்மைக்காகக் குர்ஆன் ஓதி ஹதியா செய்வது) நபிவழி என்பதற்கு ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன. வஹ்ஹாபிகளுக்கு எதிராக நடந்த விவாதங்களில் இதுவும் ஒன்று. ஜமாலியின் வாதங்களை இது குறித்து அறிய அவரது தளத்தில் உள்ள ஏராளமான வீடியோக்களைப் பார்க்க: http://www.jamalinet.com/category/iranthavargalukku-katmul-kuran-othalama

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும். நான் இதுவரை யாருக்கும் கமென்ட் போட்டது இல்லை. காரணம், வீணான விவாததிற்கு வழியாகி விடுமோ என்ற அச்சம். தாங்கள் தயவு செய்து நடுநிலையுடன் இருவர் கூறுவதையும் (உஸ்தாத் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி மற்றும் பொய்யன் பி.ஜே) கேட்டு, நன்கு ஆய்வு செய்து உங்கள் தளத்தில் பதிவு செய்தால் நன்றாக இருக்கும். இரவு தொழுகை சம்மந்தமாக இந்த பி.ஜே பொய்யன் என்ன சொல்கிறார் என்று இந்ததள முகவரியில் படித்து, முடிந்தால் ஹதிஸ்களை ஆய்வு செய்து கட்டுரை எழுதவும்.

http://onlinepj.com/books/tharaaveeh-oor-aayvu/

எல்லாம் வல்ல அல்லாஹ் எனக்கும், உங்களுக்கும், மற்றும் எல்லோருக்கும் நேர்வழியை காட்டுவானாக! ஆமீன்.

மு மாலிக் said...
This comment has been removed by the author.
மு மாலிக் said...

அலைக்கும் ஸலாம்,

பிஜேயின் புத்தகத்தினைப் பார்வையிட்டேன். புத்தகத்தின் விலை 15 ரூபாய் என்று நிர்ணயித்து, 80 பக்கங்கள் என்றும் நிர்ணயித்துவிட்டதால், பக்கங்களை நிரப்ப அவர்படும் பாடு தெரிகிறது. சம்பந்தமில்லாத ஹதீஸ்கள் படிப்பவரைச் சலிப்படையச் செய்கின்றன.உதாரணத்திற்கு 4+5=9 என்றத் தலைப்பின் கீழ் பிஜே எழுதுவதைப் பாருங்கள். அவைகளுக்கும் தராவீஹ்க்கும் என்ன தொடர்பு ?

பொய்யனின் புத்தகத்தில், ரமலான் சம்பத்தப்பட்ட ஹதீஸ்கள் மிகக் குறைவு. பொய்யன் சுட்டிக்காட்டிய அவைகள் பற்றி ஜமாலியே தனது பேச்சில் சுட்டிக்காட்டிவிட்டார். "நபி(ஸல்) அவர்கள் ரமலான் மாதத்திலும், ஏனைய மாதங்களிலும் 11 ரக்அத்துகளுக்கு மேல் தொழுததில்லை" எனக்கூறும் ஹதீஸ்கள். இதற்கு ஜமாலி பதிலில், இது வித்ரு சம்பந்தப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு ஆதாரமாக ஆய்ஷா(ரலி) அவர்களது மேலுள்ள ஹதீஸின் தொடர்ச்சி முழுமையாக உள்ளது. அது வித்ரு பற்றிய அறிவிப்பாகும்.

பிறகு பொய்யனின் புத்தகத்தில், ரமலான் சம்பந்தப்பட்ட ஹதீஸாகவும், தராவீஹ் சம்பந்தப்பட்ட ஹதீஸாகவும், பைஹக்கி/தப்ரானி ஹதீஸ் பற்றிக் கூறப்படுகிறது. ஜமாலி இந்த ஹதீஸ் பற்றிக் கூறியே 20 ரக்அத்துக்கள் என்றுக் கூறுகிறார். பிஜே இதனை பலவீனமானதெனக் கூறுகிறார். இதற்கான பதிலை ஜமாலி அவர்களேக் கூறவேண்டும். (எனது தனிப்பட்ட அபிப்ராயத்தில், ஒரு ஹதீஸினைப் பற்றி ஆராயும்போது, அதற்கு மாற்றமான ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இல்லாத பட்சத்தில், அதன் கூற்றை வைத்துத் தான் தரம் பிரிக்க வேண்டும். அறிவிப்பாளர்களைக் கொண்டல்ல. இந்த பைஹக்கி ஹதீஸுக்கு மாற்றமான சஹீ ஹதீஸ் இல்லாததால், ஏற்றுக் கொள்ளவேண்டும்.)

மேலும் பொய்யனின் புத்தகத்தில் ஒரு ஹதீஸினைப் பொய்யாக்கி இருக்கிறார். அது உமர் அவர்களின் காலத்தில் 20 ரக்ஆத்துக்கள் தொழுததாக அறிவுக்கும் ஹதீஸ். காரணம் அதை அறிவிப்பவர் உமர் ரலியல்லாஹு காலத்தில் வாழ்ந்தவரல்ல என்று. இவர் இப்படி முடிவு எடுப்பது சரியா ? இந்த அறிவிப்பாளரைப் பற்றி ஏதேனும் குறை சொல்லப்பட்டுள்ளதா என்று ஆராய்ந்து அவ்வாறு இல்லை என்றால் அவர் கூறுவதை ஏற்றுக்கொள்ளவேண்டியதுதானே. இந்த வகையில் ஏற்றுக்கொள்வதால் தவறு ஏற்படலாம், ஆனால் அவர் அறிவிப்பாளர் வரிசையில் முதலாமானவராக இருக்கும் பொருட்டு, அதில் தவறு ஏற்படமுடியாது. அப்படித் தவறு ஏற்படும் என்றால், அவரைப் பற்றிய மதிப்பீட்டிற்குக் கோளாறு. பொய்யன் சிந்திக்கட்டும்.

பொய்யனின் புத்தகத்தில் மற்றவை எதுவும் தராவீஹ் சம்பந்தப்பட்டதல்ல. 15 ரூபாய்க்காக 80 பக்கங்கள் "தராவீஹ்" என்ற பொருந்தாதத் தலைப்பில் எழுதியுள்ளார்

Anonymous said...

அன்பார்ந்த சகோதரரே, தாங்கள் "பொய்யன்" பி.ஜேயின் தளத்தை பார்வையிட்டமைக்கு மிக்க சந்தோஷம்.

உங்கள் வீடியோவில் "தராவீஹ்" என்ற சொல்லுக்கு "உஸ்தாத்" ஜமாலி அவர்கள் அர்த்தம் சொல்கிறார்கள். எந்த சஹீ ஹதீஸில் இந்த "தராவீஹ்" வார்த்தை இடம் பெறுகிறது என்று "உஸ்தாத்" அவர்களிடம் கேட்டு எழுதினால் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவான். அப்படி இல்லாத பட்சத்தில், இந்த "பொய்யன்" பி.ஜே இரவு தொழுகை, வித்ரு, தஹஜ்ஜுத் என்று தான் இருக்கிறது என்று சொல்வதை நடுநிலையாளர்கள் ஏற்று கொள்ள நேரிடும்.

"உஸ்தாத்" ஜமாலி அவர்களின் வீடியோவில், இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் பைஹகியில் உள்ளது, இதை வஹ்ஹாபிகள் படித்திருக்க மாட்டார்கள் என்ற தோரணையில் குறை கூறினார்கள். "பொய்யன்" பி.ஜேயின் தளத்தை பார்த்தால், வஹ்ஹாபிகளுக்கும் ஜமாஅத்துல் உலமாவினருக்கும் (நிஜாமுதீன் மன்பயீ) இந்த "பலவீனமான" ஹதீஸை பற்றி நன்றாகவே தெரியும் போல தெரிகிறது. இப்போது ஒன்று மட்டும் எனக்கு புரிகிறது, "உஸ்தாத்" ஜமாலி அவர்களும், சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவையினரும், வஹ்ஹாபிகள் என்ன சொல்கிறார்கள்
என்று கேட்பது கிடையாது, அல்லது தெரிந்து கொண்டே ஜமாலி "பொய்" கூறுகிறார் என்று தான் நடுநிலையாளர்கள் எடுத்து கொள்வார்கள். பாருங்கள், இப்போது யார் "பொய்யன்" என்று குழப்பம் மிகுகிறது. எல்லாம் வல்ல அல்லாஹ்வே மிக அறிந்தவன், ஞானம் மிக்கவன். எனவே தாங்கள் ஒருதலைப் பட்சமாக யாரையும் "பொய்யன்" என்று கூறாதீர்கள். அல்லாஹ்வுக்கும் மறுமைக்கும் பயந்து கொண்டு இரு பக்கமும் கேட்டு, சிந்தித்து நடுநிலையாக கருத்தை பதியுங்கள்.

பிரிண்டிங் செய்யப்பட்ட புத்தகத்தை, அதற்க்கு உண்டான செலவுகளுக்காக பி.ஜே விலை நிர்ணயம் செய்தார் என்று நினைத்திருந்தேன். பி.ஜேயின் கொள்ளையை உங்கள் கமெண்ட் பார்த்தபிறகு தான் புரிகிறது. ஆனால் நான் இலவசமாக தான் பி.ஜே ஆன்லைனில் முழுமையாக படித்தேன். எண்பது பக்கத்திற்கு எழுதியது வீண், குறைந்த பக்கத்தில் எழுதியிருந்தால் உற்பத்தி செலவு குறைந்து இருக்கும், பி.ஜே. இன்னும் அதிகமாகவாவது கொள்ளை அடித்திருக்கலாம். பி.ஜேயின் சொத்து எவ்வளவு என்று இந்த முகவரியில் பாருங்கள்...

http://poyyantj.blogspot.com/2010/05/blog-post_67.html

தங்களுடைய இந்த கமெண்ட்இல் உங்கள் அபிப்ராயம் புரிந்தது.

// இந்த பைஹக்கி ஹதீஸுக்கு மாற்றமான சஹீ ஹதீஸ் இல்லாததால், ஏற்றுக் கொள்ளவேண்டும். //

உண்மைதான், "பலவீனமான" பைஹக்கி ஹதீஸுக்கு மாற்றமாக ஆயிஷா (ரலி) அறிவிக்கும் சஹீஹான ஹதீஸ் இருப்பதால் அதையே இப்போதைக்கு பின்பற்றலாம் என்று என் சிற்றறிவு சொல்கிறது.

எல்லாம் வல்ல அல்லாஹ் எனக்கும், உங்களுக்கும், மற்றும் எல்லோருக்கும் நேர்வழியை காட்டுவானாக! ஆமீன்.

வஸ்ஸலாம்!

மு மாலிக் said...

"தராவீஹ்" என்ற சொல்லினை சஹீஹ் ஹதீஸில் பார்த்தால் தான் ஏற்றுக்கொள்வேன் என்று நீங்கள் கூறினால் அது உங்கள் நிலைப்பாடு. ஹதீஸில் கையாளப்பட்டுள்ளது என்பதினை அந்த வீடியோ எடுத்து சொல்லிவிட்டது.


இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கும் பைஹக்கி ஹதீஸினை பலவீனமானது என ஒதுக்குவதற்கு முன், அதற்கு மாற்றமான சஹீ ஹதீஸ் உள்ளதா என்று பார்க்கவேண்டும் என்றேன். நீங்கள் உண்டு என்று கூறி ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கும் புகாரி ஹதீஸினைச் சுட்டுகிறீர்கள். ஆனால், அந்த புகாரி ஹதீஸ், பைஹகி ஹதீஸிற்கு மாற்றமானதல்ல என்றும், அந்த புகாரி ஹதீஸ் வித்ரு தொழுகைப்பற்றியது என்றும் ஜமாலி வீடியோவில் விளக்குகிறார். எனவே நீங்கள் கூறியது போல அது பைஹகி ஹதீஸிற்கு மாறானதல்ல. எனவே பைஹகி ஹதீஸினை ஏற்றுக்கொள்ள நடுநிலையாளர்கள் தயாராகவே இருப்பார்கள்.

பிஜேயைப் பொய்யன் என நான் கூறுவது இந்த தராவீஹ் சம்பந்தமாக அல்ல. அவரைப் பொய்யன் என நான் நிறுவியுள்ளதற்கு எனது பழைய பதிவுகளைப் பார்க்க. குறிப்பாக:

http://vilambi.blogspot.com/2010/07/blog-post_30.html .

இதில் உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம். அந்த பதிவினைப் பார்த்துவிட்டு நான் ஒருதலைப் பட்சமாக சொல்கிறேனா, அல்லது நடுநிலையுடன் சொல்கின்றேனா என்றுப் பார்க்கலாம்.

பொய்யன் தான் எழுதியப் புத்தகத்திற்கு "இரவுத் தொழுகைகள்" என்று தலைப்பிட்டிருந்தால், அது ஏற்றுக் கொள்ளத்தக்கது. தராவீஹ் பற்றி அவர் எழுதும் ஹதீஸ்களும் அது சார்ந்த விமர்சனங்களும் 3 பக்கங்களுக்கு மேல் மிகாது. 80 பக்க புத்தகத்திற்கு இந்த பேர் வைத்தது காரணம், மக்கள் தராவீஹ் என்ற சொல்லை பரவலாக அறிந்து வைத்திருப்பதனால் புத்தகம் விற்கும் என்பதற்காகவோ அல்லது தராவீஹ் விஷயத்தில் குழப்பம் விழைவிக்க அவர் கொண்டுள்ள கங்கணமோ காரணமாக இருக்கலாம் என்பதினையும் நடுநிலையாளர்கள் கவனிக்கத் தவறமாட்டார்கள். அந்தப் புத்தகத்திற்கு தராவீஹ் என்று பேர்வைக்க வேறு காரனம் இருந்தால் பகிர்ந்துக் கொள்ளலாம்.

தராவீஹ் விஷயத்தில், பொய்யன் தான் எழுதிய புத்தகத்தில், உமர்(ரலி) அவர்கள் சம்பந்தப்பட்ட புகாரி ஹதீஸினை மறைத்துவிட்டார்(volume 3, book 32, number 227). அவர்காலத்தில் மக்கள் தொழுததையும் கூறுகிறது.


மேலும் ஒரு முஸ்லிம் ஹதீஸ் (book 4, Number 1663)

உங்களுக்கு பிஜேயை நான் பொய்யன் எனச் சொல்வதில் ஆட்சேபனை இருந்தால், நான் எனது கடந்த பதிவில் அளித்த ஆதாரத்தினை எதிர் கொள்ளலாமே. தராவீஹ் விஷயத்தில் அவர் பொய் கூறுவதாக நான் கூறமுடியாது. அவர் தனது மன ஓட்டத்தினை வெளிப்படுத்துகிறார். அவ்வளவுதான். இதில் அவர் பொய்கூறவில்லை என்பதற்காக அவரைப் பொய்யனல்ல என நிறுவ முயலாதீர்கள்.

nagoreismail said...

ஸலாமலைக்கும் பாய்

இணைவைப்போரும் பித்அத்வாதிகளும் யார்..?

வீடியோ பார்த்து விட்டீர்களா?

ஜமாலிநேட் டாட் காமில் 74 பகுதிகளாக உள்ளது..

Anonymous said...

அன்பார்ந்த சகோதரரே, உங்கள் கமென்ட்டில் தங்களுடைய நிலைப்பாடு மாற்றத்திற்கு நன்றி.

// தராவீஹ் விஷயத்தில் அவர் பொய் கூறுவதாக நான் கூறமுடியாது. //

பொய்யன் என்று ஒட்டு மொத்தமாக தலைப்பிட்டுவிட்டு, இப்போது இந்த விஷயத்தில் இல்லை, அந்த விஷயத்தில் என்கிறீர்கள். அட்லீஸ்ட் இந்த பதிவையாவது திருத்துங்கள். அல்லாஹ் உங்களுக்கு முழுமையான தெளிவை ஏற்படுத்துவானாக, ஆமீன்!!!

அல்லாஹ் நாடினால், நான் பிளாக் தொடங்கி சமீபத்திய சென்னை விவாதங்களை நேர்மையான முறையில் அலசலாம் என்று எண்ணியுள்ளேன். நடுநிலையாளர்கள் முழு விவாத விடியோவையும் பார்க்க தேவையில்லை, இந்த ப்ளாக்கில் உள்ள வீடியோவில் “உஸ்தாத்” ஜமாலி அவர்கள் நோன்பாளிக்கு சொர்க்கத்தில் உள்ள ஸ்பெஷல் பரிசாக அல்லாஹ்வை “பார்ப்பார்கள்” என்று கூறுகிறார். (குறிப்பு: பண்பில் உணருவார்கள் என்று அல்ல!!!). இது ஒன்றே போதும், “பாதில்” எது, “ஹக்” எது என்று அறிந்து கொள்ள. அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்! 

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஆதாரபூர்வமான ஹதீஸ் வித்ருவை பற்றியது என்றால், ஏன் மூன்று ரகத் தொழ வைக்கிறார்கள், வித்ரு பதினோரு ரகத் அல்லவா “உஸ்தாத்” ஜமாலி & குரூப் தொழ வேண்டும். அவர்கள் கூற்றுப்படி அதிகம் தொழுதால் நன்மை தான் அல்லவா!! எனக்கு தெரிந்த பள்ளிகளில், so called “தராவீஹ்” இருபது ரகத் தொழுதுவிட்டு சங்கடமான அறிவிப்பு வரும். “ஷாபி” மத்ஹபை சேர்ந்தவர்கள் இங்கும், “ஹனபி” மத்ஹபை சேர்ந்தவர்கள் கீழே போய் வித்ரு தொழவும் என்று. வஹ்ஹாபிகள் தான் இந்த குழப்பத்திற்கும், இரண்டு ஜமாஅத்தாக தொழுவதிர்க்கும் காரணம் என்று நினைக்கிறேன். So sad!!!

மு மாலிக் said...

அஸ்ஸலாமு அலைக்கும் இஸ்மாயில் பாய். நான் ஏற்கனவே பார்த்துவிட்டேன். வழக்கம்போல நல்ல முறையில் கருத்துக்களை எடுத்தாள்கிறார். நேரம் கிடைக்கும் போது அதைப் பற்றி எழுதுகிறேன், இன்ஷா அல்லாஹ் நோன்பிற்கு முன்பு.

மு மாலிக் said...

எனது நிலையில் எந்த மாற்றமும் இல்லை அனானிமஸ். பதிவினை எழுதும்போது பொய்யனைப் பொய்யன் என்று அழைத்தேன். இப்போதும் அப்படியே அவரை அழைக்கிறேன்.

வித்ரு 11 ரக்அத்துக்கள் தொழுதார்கள் என்பதற்காக 11 ரக்அத்துக்களை வலியுறுத்தும் இமாம்களும் இருந்துள்ளார்கள் என்றுதான் ஜமாலியின் பேச்சில் பார்த்தோமே. வீடியோவைப் பார்க்கவில்லையா ?!! 3 ரக்அத்துக்கள் தொழுதார்கள் என்பதற்காக சில இமாம்கள் இதனை வலியுறுத்துகிறார்கள் என்பதினை அறிந்துள்ளீர்களா ?

பொய்யனுக்கு ஆதரவான நீங்கள் என்ன "நடு நிலை"யினை எடுக்கப் போகிறீர்கள் ? ஹக்குக்கும் பாத்திலுக்கும் இடையேயான "நடுநிலை"யா ?!! வாழ்த்துக்கள் !!

அல்லாஹ்வினைப் பார்ப்பது பற்றி: நாங்கள் அனைவரும் அல்லாஹ்வினைப் பார்ப்பதில் ஈமான் கொண்டுள்ளோம். ஜமாலியும் ஈமான் கொண்டுள்ளதாகவே கூறுகிறார். ஆனால் உருவத்தில் அல்ல. அவனுக்கு ஏற்ற, அவன் நாடிய விதத்தில் அவனைப் பார்ப்போம் (அறிவோம், உணர்வோம்).

வித்ருவினைத் தனித் தனியாக தொழுவது பற்றி:
ஷாஃபியாக்களும், ஹனஃபிய்யாக்களும் தனித் தனியாகத் தொழுவதினை "குழப்பம்" என்று ஹனஃபிய்யாக்களோ ஷாஃபிய்யாக்களோக் கூறினார்களா ? வஹ்ஹாபிகளுக்கு அது பற்றி குழப்பமாக இருப்பது பற்றி கவலைக் கிடையாது.

உங்கள் முதல் கமென்டின் தொடக்கத்தில், "நான் இதுவரை யாருக்கும் கமென்ட் போட்டது இல்லை. காரணம், வீணான விவாததிற்கு வழியாகி விடுமோ என்ற அச்சம்" என்றீர்கள். ஆமாம் நாங்கள் நம்பிட்டோம் !! எப்போ நீங்கள் "poyyantj" வலைப்பதிவினைச் சுட்டினீர்களே, அப்போதே தெரிந்துவிட்டது, நீங்கள் ஃபித்னாவாதியா இல்லையா என்று. தாராளமாக உங்கள் வலைப்பதிவைத் தொடங்கி ஹக்குக்கும் பாத்திலுக்கும் இடையேயானநடுநிலையினைப் பின்பற்றி ஆராயுங்கள். ஆமாம் இந்த லட்சனத்தில், "வீண்விவாதத்திற்காக நான் கமென்ட் போட அச்சமுடையவன்" என்ற பில்டப் வேறு உங்களுக்கு :(

அல்லாஹ் போதுமானவன்

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் மு.மாலிக் சகோதரரே,

“Anonymous” ஆக கமென்ட் போடுவதற்கு என்னை மன்னியுங்கள். கொஞ்சம் பொறுத்து கொள்ளுங்கள், விரைவில் பிளாக்கர் அக்கௌன்ட் ஓபன் பண்ணி விடுகிறேன்.

என்னுடைய முதல் கமென்ட்டில் “onlinepj.com” லிங்க் அனுப்பும்போதே நான் “பித்னாவாதி” என்று உங்களுக்கு புரியவில்லை, இரண்டாவது கமென்ட்டில் “poyyantj” லிங்க் அனுப்பும்போது தான் புரிந்து கொண்டீர்களோ!!! விந்தையாக உள்ளது!!!

“நடுநிலை” என்றால் என்னவென்று உங்களுக்கு புரிய வைக்க முயற்சி செய்கிறேன். உதாரணத்திற்கு “இரவு தொழுகை” சம்மந்தமாக “உஸ்தாத்” ஜமாலி என்ன சொல்கிறார் என்றும், “பொய்யன்” பி.ஜே என்ன சொல்கிறார் என்றும் கேட்டு எது அறிவுக்கும் மார்க்கத்திர்க்கும் சரியாக வருகிறது என்று சீர்தூக்கி பார்த்து முடிவு எடுப்பது தான் “நடுநிலை”.

நான் ஆன்லைன் பி.ஜே லிங்க் அனுப்பும் வரை “இரவு தொழுகை” சம்மந்தமாக பி.ஜே நிலைப்பாடு என்னவென்று நீங்கள் அறிந்து கொண்டிருக்கவில்லை. அல்லது யாரோ பி.ஜே பற்றி சொன்னதை செவியால் கேட்டு வைத்து இருந்தீர்கள். ஆனால் நானோ, தமிழ்மணத்தில் “பொய்யன் பி.ஜே” என்று தலைப்பிட்டு நீங்கள் இணைத்து இருந்தபோதும், உங்கள் ப்ளாக்கிற்கு வருகை புரிந்து “உஸ்தாத்” ஜமாலி என்ன சொல்கிறார் என்று கேட்டு “என் சிற்றறிவிற்கு” ஏற்ப முடிவு எடுத்தேன். குறைந்தபட்சம் எவர் மீதும் வெறுப்பை உமிழாமல், “பொய்யன்”, “மட சாம்பிராணி” என்று திட்டாமல் முஸ்லிமாக இருக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன். இது தான் தௌஹீத்.

“நேர்மையான முறையில் அலசலாம்” என்று கூட எழுதியிருந்தேன். “நடுநிலை”க்கு விளக்கமிட்டது போல், “நேர்மை”க்கும் விளக்கமளிக்க வைத்து விடாதீர்கள். உங்கள் வீடியோவில் எந்த இடத்திலாவது, “பைஹக்கீ” ஹதீஸ் விமர்சனத்திற்கு உட்பட்டது தான், இருந்தாலும் இதை தான் நாம் பின்பற்ற வேண்டும் என்று “உஸ்தாத்” ஜமாலி அவர்கள் நாசுக்காகவாவது மக்களுக்கு விளக்கம் கூறுகிறாரா? அதிகம் தொழுதால் நன்மை என்று கூறுபவர்கள் என்றைக்காவது பதினோரு ரகத் வித்ரு தொழுகையை (ஆதாரபூர்வ ஹதீஸ் இருப்பதால்!) ஊக்குவித்து இருக்கிறார்களா? ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு? நெஞ்சில் கை வைத்து சொல்லுங்கள், எது நேர்மை, யார் பொய்யன் என்று.

“பிஜேயைப் பொய்யன் என எனது பழைய பதிவுகளில் நான் சுட்டிக்காட்டிவிட்டதாலும், அதற்கு ஆட்சேபனை இதுவரை வராததாலும், அவரைப் பொய்யன் என்றே அடையாளம் காண்போமாக” என்று உங்கள் ப்ளாக்கில் எழுதி உள்ளீர்கள். நான் ஆட்சேபம் செய்யவில்லை, தயவுசெய்து மனதை இலேசாக ஆக்கி கொள்ளுங்கள். கடுமையான வார்த்தை பிரயோகம் தேவையற்றது என்பது என் தாழ்மையான கருத்து.

“ஷாஃபியாக்களும், ஹனஃபிய்யாக்களும் தனித் தனியாகத் தொழுவதினை "குழப்பம்" என்று ஹனஃபிய்யாக்களோ ஷாஃபிய்யாக்களோக் கூறினார்களா ? வஹ்ஹாபிகளுக்கு அது பற்றி குழப்பமாக இருப்பது பற்றி கவலைக் கிடையாது” என்று எழுதியுள்ளீர்கள். மன்னிக்கவும், சிரிப்பு வருகிறது! ஷாஃபியாக்களும், ஹனஃபிய்யாக்களும் எப்படி தங்களை தாங்களே குழப்பவாதிகள் என்று கூறவில்லையோ, அதுபோல வஹ்ஹாபிகளும் தாங்கள் குழப்பவாதிகள் தான் என்று கூறுவது இல்லை. நான் அச்சப்பட்டது போலவே வீண் விவாதத்திற்கு இட்டு செல்வது கவலை அளிக்கிறது.

“(அறிவோம், உணர்வோம்)” என்று ஏன் அடைப்பு குறிக்குள் போட்டு உள்ளீர்கள்? “நாங்கள் அனைவரும் அல்லாஹ்வினைப் பார்ப்பதில் ஈமான் கொண்டுள்ளோம்.” என்று எழுதியுள்ளீர்கள், இது தான் “ஹக்” ஆன வார்த்தைகள். இதையே தான் சிறிய மாற்றத்துடன் “நாங்கள் அனைவரும் மறுமையில் அல்லாஹ்வினைப் பார்ப்பதில் ஈமான் கொண்டுள்ளோம்” என்று பி.ஜே.யும் கூறுகிறார்.