Friday, July 30, 2010

சென்னை விவாதம்: பிஜே பொய்யனாகியத் தருணங்கள்



"இறைவனுக்கு உருவம் உண்டா ?" என்ற விவாதத்தில், பொய்யன் பிஜே பொய்கள் சொல்லுவதை இந்தப் பதிவில் வீடியோக்கள் மூலமாக எடுத்துக்காட்டப்படுகின்றன. ஜமாலி அவர்களின் இணையதளத்தில் இவ்விவாத வீடியோக்கள் யூடியூப் வீடியோக்களாக ஏற்றப்பட்டுள்ளதால், சுலபமாக இங்கே சுட்டப் பயன்படுத்தப் படுகின்றன. ஆனால், சில வீடியோக்களின் தொடர்ச்சி விடியோக்கள், தொடர்ச்சியாக நம்பர் இடப்படாமல் இருப்பதால், தேடுவது சிரமாக உள்ளது. உதாரணத்திற்கு இப்னு தைமிய்யாவின் வரிகள் எனப் பிஜே படிக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ அதற்குறிய இடத்தில் காணப்படவில்லை. எங்கே என்றும் தெரியவில்லை. நம்பர் jumble ஆகி இருக்க வேண்டும். அதனால் பிஜே செய்யும் மோசடியினைச் சுட்டிக்காட்டி அதற்கான வீடியோவினைப் போடமுடியவில்லை. (ஜமாலி அவர்களின் தள நிர்வாகிகள் அதைச் சரி செய்தால் நல்லது.) ஆனால் அந்த காட்சி பிஜேயின் இணையதளத்தில், தொடர்ச்சியாக உள்ளது.

சரி, இப்போ பிஜே யின் பொய்களுக்கு வருவோம்.


பொய் 1. ஹதிஸில் இருப்பது போலல்லாமல், பிஜே திரித்துக் கூறும் வாசகம் "மறுமை நாளில் அல்லாஹ்வினை மக்கள் சூரியனைக் காண்பது போலவும் சந்திரனைக் காண்பது போலவும் காணுவார்கள்" என்றல். இதன் மூலம் உருவத்தினைக் காண்பார்கள் என்றத் தோற்றத்தினை பொய்யாக ஏற்படுத்தல். இந்த பொய், கீழே உள்ள வீடியோவில் 3:30 நேரத்துளியிலிருந்து 3:50-ம் வினாடிவரை சொல்லப்படுகிறது.

வீடியோ 1:



ஹதீஸில் இருப்பதுவோ, "சூரியனையும் சந்திரனையும் காணுவதை சந்தேகிகிறீர்களா ?" என்று நபி அவர்கள் வினா எழுப்பி, இறைவனைக் காணுவதினை உண்மைப் படுத்துகிறார்கள். இதைச் சிலர் பொய்யல்ல என்று கூறினால், அதாவது, பிஜே இதனை உணர்ந்து செய்யவில்லை எனக் கூறினால், நான் உடன் படத் தயாராக இல்லை. இதனை இவர் அறிந்தே திரிக்கிறார். ஏனெனில், இவ்வாறு இவர் திரித்த செய்தியை, தனது இரண்டாம் பொய்யைக் கூறப் பயன்படுத்துகிறார்.

பொய் 2. இந்தப் பொய் மேலே உள்ள அதே வீடியோவில் 6:50 நிமிடத்துளியிலிருந்து சொல்லப்படுகிறது. இதில் இவர் கூறும் பொய்: அல்லாஹ்விற்காகக் காத்திருக்கும் மக்கள் அவனுடைய வருகையினை எதிர்நோக்கி காத்திருக்கும் போது, அவர்களிடத்தில் அவன் "ஒரு உருவத்தில்" (அதாவது, பிஜே-மொழிபெயர்ப்பின்படி, "ஒரு உருவத்தில்") வருவதற்கு முன்னரே, மக்கள் அவனைச் சூரியனைப் போலவும் சந்திரனைப் போலவும் கண்டுவிட்டார்கள் என்று கூறுவது. இது ஒரு மாபெரும் பொய். இது அந்த ஹதீஸில் இல்லாத ஒன்று. அவனை இந்த நிகழ்வுக்கு முன்னால் மக்கள் கண்டுவிட்டதாகக் கூறி ஹதீஸில் இல்லவே இல்லை, எனவே பொய்யைத் தவிர வேறொன்றும் இல்லை.

பொய் 3. இப்போது நான் சுட்டிக்காட்டப் போவதினைப் பொய் என்பதினைவிட மறைத்தல் எனலாம். ஆனால் தான் கூறும் பொய்க்கு வலுசேர்க்க இந்த மறைத்தலை இவர் செய்வதினால், நாம் இவரின் இந்த செயலினைப் பொய் என்றே சொல்வோம். அப்படி என்ன மறைக்கிறார் ? இவர் அந்த ஹதீஸினை தனது பானியில் மொழிபெயர்த்துச் சொல்லும்போது, இவரது வாதங்களைச் சீர்குலைக்கும் அம்சங்களை மறைத்துவிடுகிறார். என்ன அது ? இதுதான்: "இறைவன் காத்திருக்கும் மக்களிடத்தில் ஒரு உருவத்தில் (பிஜே மொழிபெயர்ப்புப்பட் உருவம் என்ற சொல் கையாளப்படுகிறது) வரும்போது மக்களால் அடையாளம் காண முடியாது. பிறகு இறைவன் மீண்டும் ஒருமுறை அவர்கள் ஏற்கனவே பார்த்திருந்த உருவத்தில் வருவான்", ஹதீஸில் இவ்வாறு வருவதினைப் பிஜே மறைத்துவிடுகிறார். நீங்கள் வேண்டுமானால் பிஜேயின் பேச்சில் பார்த்துக்கொள்ளுங்கள். அவரது பேச்சு நான் மேலே சொன்ன வீடியோவிலும் (வீடியோ 1), அதன் தொடர்ச்சி கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவிலும் (வீடியோ 2) உள்ளன.

வீடியோ 2"



இதனைச் சரிபார்க்க வேண்டுமானால், பிஜே தனது இணையதளத்தில் போட்டுள்ள வீடியோவுடன் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம். அதன் மூலம் நான் சுட்டிக்காட்டிய வீடியோக்களில் எதுவும் வெட்டப்படவில்லை என்பதினை அறியலாம். பிஜேயின் இணையதளத்தில் உள்ள வீடியோக்களில் இவைகள் "பாகம் 1"-ல் உள்ளன.

சரி, ஏன் இவைகளை மறைக்கிறார் பிஜே ? ஏனெனில், இவருடைய வாதப்படி இறைவனுக்கு உருவம் இருக்கிறது என்றால், "அவனுக்கு எத்தனை உருவங்கள் ?" என்ற கேள்வி எழும். இது இவருடைய மொழிபெயர்ப்பினையும் வாதத்தினையும் கேள்விக்குறியதாக்கிவிடும். மேலும் "ஏற்கனவே பார்த்த உருவத்தில் வருவான்" என்றவாறு இவர் மொழிபெயர்க்க வேண்டி இருக்கும். அவ்வாறு அந்த வாக்கியத்தினை மொழிபெயர்த்து சொன்னால், ஏற்கனவே மக்கள் இறைவனை எங்கே பார்த்தார்கள் என்ற கேள்வி வரும். எனவே அவைகளை மறைக்கிறார் அந்தப் பொய்யன்-பிஜே.


பொய் 4.
மேலே சொன்னப் பொய்களை தவிடுபொடியக்கும் விஷயங்களை ஹதீஸிலிருந்து மறைத்து விட்டு, "நேரமின்மைக்காக சுருக்கிச் சொன்னேன்" என்றல். இது பொய். அவர் சுருக்கிச் சொன்னதே இருட்டடிப்பு செய்வதற்காகத்தான். இதை எப்படி உணரலாம் என்றால், இவரது சுருக்கிச் சொல்லல், அவருடைய பொய்களுக்கு வலுசேர்க்கின்றன. இதை ஏதேச்சையாக நடந்ததாக ஏற்றுக் கொள்ளமுடியாது. அவருடைய இந்தச் சுருக்கிச்-சொல்லும் செயல் மீது மக்களுக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக, அவர் மேலும் ஒரு பொய்யினைச் சேர்க்கிறார். அந்தப் பொய்யில், "இந்தச் சுருக்கத்தினால் பொருள் மாறாது" என்கிறார். இவருடைய இந்தப் பொய்கள் "வீடியோ 2"-ல் 1:57 நிமிடத்துளியிலிருந்து சொல்லப்படுகின்றன.


பொய் 5. தனது வாதத்திற்கு துணை சேர்க்க இப்னு தைமிய்யாவினைத் துணைக்கு அழைத்தல். இதில் ஏதோ இப்னு தைமிய்யாவே இறைவனுக்கு உருவம் உண்டு எனக் கூறியுள்ளது போன்றத் தோற்றத்தினைத் தருவது. ஆனால், ஜமாலி அவர்கள் அதற்கான ஆதாரத்தினைக் கேட்ட போது, பிஜே அதனைக் கொடுத்தபோது, இப்னு தைமிய்யா அவ்வாறு சொல்லவில்லை என்பது வெளிச்சமாகி பிஜே ஒரு பொய்யன் என்று ஆனது.

பொய் 6. இப்னு தைமிய்யாவின் வரிகள் எனப் பிஜே படிக்கும் வரிகள் இதோ: "அல்லாஹ்வைப் பற்றி நம்புவது என்பது அவன் தனது நூலில் (குர்ஆன்) தன்னைப் பற்றி எப்படி விவ்ரித்திருக்கின்றானோ அப்படி நம்பவேண்டும். ரசூல்(ஸல்) அவர்கள் அவனைப் பற்றி எப்படி சொல்லி இருக்கிறார்களோ அப்படி நம்ப வேண்டும். அதில் மாற்றம் இல்லாமல், அவைகளைப் பொருளற்றதாக்கி விடாமல், அதற்கு குறிப்பிட்ட இந்த முறை என்று ஒரு முறையினைக் கற்பிக்காமல், கற்பனையாக ஏதும் சொல்லிவிடாமல் இருக்கவேண்டும். அவனைப் போல எதுவுமில்லை என்றும் நம்பவேண்டும். உருவம் இருக்குது ஆனால் மற்ற உருவம் போல இல்லை. கண் இருக்கிறது ஆனால் மற்றக் கண்ணைப் போல இல்லை. கை இருக்கிறது ஆனால் மற்ற கையைப் போல இல்லை என்பதையும் நம்பவேண்டும். அவனை மறுத்துவிடக் கூடாது. தனக்கு என்ன இருப்பதாக அவன் வர்ணித்திருக்கின்றானோ அதை மறுத்து விடக் கூடாது". இவைதான் இப்னு தைமிய்யாவின் வரிகள் என அவர் மொழிபெயர்த்துக்கூறுவார். ஆனால் பிஜே செய்யும் மோசடி என்னவென்றால், இவரது இந்த மொழிபெயர்ப்பில், "உருவம் இருக்குது ஆனால் மற்ற உருவம் போல இல்லை. கண் இருக்கிறது ஆனால் மற்றக் கண்ணைப் போல இல்லை. கை இருக்கிறது ஆனால் மற்ற கையைப் போல இல்லை என்பதையும் நம்பவேண்டும்", என்ற வரிகள் மட்டும் இப்னுதைமிய்யா கூறுவது இல்லை. இது பிஜேயைப் பற்றித் தெளிவாகக் கூறுகிறது: பொய்யன்

இப்போது, நடந்து முடிந்த இரண்டாம் விவாதமாகிய "இணைவைப்பாளர்கள் மற்றும் பித்அத்வாதிகள் யார் ?" என்பதன் வீடியோக்களை எதிர்பார்த்து இருக்கிறேன். பொய்யன் அதில் என்னப் பொய்கள் சொல்கிறார் எனப்பார்ப்போம்

7 comments:

ABDULLAH said...

அன்பின் தம்பி மாலிக்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

இது போன்ற பதிவுகள் நம்மை பொதுவில் மற்ற சமூகத்தினரிடையே நம் சமூகத்தை பற்றி தாழ்வு உணர்வுகளையே உருவாக்குமே அல்லாது தாங்களின் எண்ணங்களை அடைய முடியாது.

மாற்றி யோசியுங்கள்.

மாற்று சமுகத்தினர் முன்னிலையில் நம் வீட்டில் நாறும் குப்பைகள் ஏதும் இருந்தால் அதை எல்லோரிடமும் வலிய நாமே சென்று காட்டுவதில் என்ன பலன் அடைய முடியும்?

remove this post if possible.

MAY ALLAH S.W.T GUIDE YOU.

nagoreismail said...

இப்படி பொய் சொல்லி அவருக்கு என்ன லாபம்?

மு மாலிக் said...

அன்புச் சகோதரர் அப்துல்லாஹ்,

வ அலைக்கும் ஸலாம் வரஹ்மதுல்லாஹி

உங்கள் நல்லெண்ணம் புரிகிறது. ஆனால் நீங்கள் சொல்வதைவிட சற்று மாற்றி யோசிக்கிறேன். நம் வீட்டை நாம் சுத்தமாக்க வேண்டும், மற்றவர்கள் நம் வீட்டிற்கு வருவதற்கு முன்.

பிஜே போன்றவர்களால், நம் சமூகம் சின்னாபின்னமாகி இருக்கிறது. பலர் கண்ணில் அவர் ஒரு சீர்திருத்தவாதியாகத் தெரிகிறார். ஆனால் பல பிரிவுகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்தி நம் மக்களை பலச் சமூகங்களாக ஆக்குகிறார்.

தன்னைச் சீர்திருத்தவாதியாக காண சிலர் இருப்பதால், பிஜேக்கு தன் சுயவிளம்பரமும் புகழும் மார்க்கத்தினைவிட அதிமுக்கியமாகத் தெரிகிறது.

பிஜே இயக்க்த்தினைச் சேர்ந்தவர்கள் அல்லது அவர் சார்ந்த வஹ்ஹாபியர்கள் யாரிடமாவது ஒரு சகோதரத்துவ உணர்வினை நீங்கள் கண்டதுண்டா ? உண்மையைச் சொல்லுங்கள். அவர்களுக்கு அருகில் சென்றதுமே அவர்களிடம் இருந்து வீசுவது வெறுப்பு எனும் துர்நாற்றமே. பிறகு நானும் துர்நாற்றத்தினை வெறுக்க வேண்டியதாயிற்று. அவர்களில் யாரிடமும் தாழ்மையையோ, தன்மையையோ, இறையச்சத்தினையோ, அமைதி எண்ணத்தினையோ, பெரியவர்களை மதிக்கும் பண்பினையோ கண்டதுண்டா ?

சமூகத்தில் உள்ள நோய்தான் அவர்களின் கொள்கை.

இஸ்லாத்தின் தொழுகைக்கு அவர்களிடம் முக்கியத்துவம் இருக்கிறதா ? ஒருவன் தொழுதாலே அவனிடம் குற்றம் காண வஹ்ஹாபிகள் தலைப்படுகிறார்கள். ஒருவன் திக்ரு செய்தாலும் அவர்கள் குறைக்காணத் தலைப்படுகிறார்கள். தொழுகையில் அவர்கள் வணங்குவது தன்னுடைய இறுமாப்பினைத்தான் என்பதினை அவர்களுடன் தொழும்போது நீங்கள் உணர்வதில்லையா ? அவர்களுடைய பயான்களில் அவர்கள் வெறுப்பினைத்தவிர வேறெதையும் அவர்கள் கொட்டுவதில்லை என்பதினை அறியவில்லையா ?

மு மாலிக் said...

வாருங்கள் இஸ்மாயில்.

அவர் மற்றவர்களுக்குத் தெரியாவண்ணம் பொய் சொல்லுவதன் மூலம், அவர் வாதத்தில் மேலோங்கிய நிலையினைத் தோற்றுவித்து, ரசிகர்களைத் தக்கவைத்துக்கொள்ள முடியும். தனது ஆணவத்திற்கும், தற்புகழ்ச்சிக்கும் இரை வழங்க முடியும்.

மு மாலிக் said...

சகோதரர் அப்துல்லாஹ்,

இந்த விவாதத்தில் கூட நான் சொன்ன கூறுகள் உள்ளன. கவனியுங்கள். நபி(ஸல்) அவர்களைக் கூட இந்த பிஜே ஒருமையில் அழைக்கிறார். உதாரணத்திற்கு, பிஜே ஒரு இடத்தில் சொல்கிறார்: இவர்(ஜமாலி), ரசூலுல்லாஹ்விடமே, "நீ என்ன இறைவனுக்கு உருவம் இருக்கு என்று சொல்கிராய்" என்று கேட்பாரோ ? என்று கேட்கிறார். மரியாதை குறைவாகப் பேசுவதைச் சாதாரணமாக்குகிறார்.

Ibrahim said...

Maasha Allah

மதுரை நாபிஈ said...

உங்களின் முயற்சி பாராட்டத்தக்கது, சுன்னத் ஜமாஅத்தின் நிலைப்பாட்டை குறை சொல்ல முடியாமல் வஹ்ஹாபிகள் இரண்டாவது விவாதத்தில் தோல்வி கண்டதை விரைவில் http://www.jamalinet.com இல் காணலாம். பொய் பேசி திரியும் PJ வின் பொய் முகத்தை காட்டியதற்கு நன்றி.

Admin
http://this-is-truth.blogspot.com/