Tuesday, July 27, 2010

பொய்யன் பிஜே ஆராய்ச்சி செய்யப் போகிறாராம் !

பிஜே என அழைக்கப்படும் பி. ஜெயினுல்ஆபிதீன் ஒரு பொய்யன் என்பதினை, அவரது இணையதளத்தில் உள்ள வீடியோகள் மூலமாகவே எனது கடந்த பதிவு ஒன்றில் நிரூபித்திருந்தேன்.

அந்த வீடியோவில் அவரது வாதங்களில் உள்ள பொய்/தில்லுமுல்லுகள் தவிர அபத்தங்கள் வேறு நிறைந்திருந்ததினையும் அதில் பார்த்தோம்.

என்ன காமெடியென்றால், இப்போது அந்த பொய்யன்-பிஜே, தனது வியாக்கியானங்கள் பல "தவ்ஹீது" சகோதரர்களிடம் செல்வாக்குப் பெறுவதாகவும், பலர் இந்த பொய்யன்-பிஜேயாகிய தனது வியாக்கியானங்கள் மூலமாக மட்டுமே "இறைவனுக்கு உருவம் உண்டு" என அறிந்துக் கொண்டதாகவும், அவ்வாறு பலர் தனக்கு எழுதுவதாகவும், தனது இணையதளத்தில் தனக்குத் தானே விளம்பரம் எழுதிக்கொள்கிறார்.

மேலும், இப்போது "ஆய்வு" செய்யப் போவதாக வேறு சூளுரைக்கிறார். வேறு எந்த அரசியல்களிலும் ஈடு படமாட்டாராம். அப்படியானால், "சாமியார் காலில் காதர் மொய்தீன் விழுந்தார்" என்பது போன்ற பொய்களையும், "எனது மாநாட்டில் தீவுத்திடல் நிரம்பி வழிந்து அதைவிட பல மடங்கு கூட்டத்தினர் திடலுக்கு வெளியே நின்றனர்" என்று கூறியது போன்ற கூற்றுக்களையும் ஆறு மாதத்திற்கு நிறுத்தப் போவதாக சொல்கிறாரோ ? அல்லது ஜெயலலிதாவைப்பார்ப்பது, மன்மோகன்சிங்கைப் பார்ப்பது போன்ற செயல்களை ஆறுமாதத்திற்கு நிறுத்தப்போகிறாரா ? சரி, தமிழ்நாட்டில் எப்போ எலக்க்ஷன் ? அடுத்த ஆறு மாதத்திற்குள் இல்லையல்லவா ? ஹி ஹி.

கடந்த காலங்களில் "பன்றியின் எலும்புகளைச் சாப்பிடலாம்", "அரைக்கால் சட்டை போட்டுத் தொழலாம்", "ஜும்மாவிற்கு முன் சுன்னத் தொழுகை கிடையாது" போன்ற தடால் புடலான அதிரடி ஃபத்வாக்களை வழங்கியபின், பொய்யன் பிஜே, பிறகு தான் கூறியவைகள் தவறானதென்றுக் கூறித் திரும்ப நக்கி, அவைகளை வாப்பஸ் பெற்றுக் கொன்றார்.

இந்தப் பொய்யன் பிஜே தான் "இறைவனுக்கு உருவம் உண்டு" என்று அறிவித்துள்ளார். இப்போ ஆறு மாதம் ஆராய்ச்சி வேறு செய்யப் போவதாக சொல்கிறார். ஆராய்ச்சியின் முடிவில் இதை வாப்பஸ் வாங்கப் போகிறாரா இல்லை அடுத்த அதிரடி அறிவிப்புகள் செய்யப்போகிறாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

22 comments:

nagoreismail said...

பி ஜே யும் பிஜேபி யும் சரி, இஸ்லாத்துக்கு உதவாது என்றே கருதுகிறேன்.

keep an eye on him - என்ற வாசகத்தை மொழி பெயர்க்க சொன்னால் பிஜே அவர்கள் கண்ணை அவர் மீது அல்லது அவர் மேல் தோண்டி எடுத்து வைப்பது என்று மொழி பெயர்ப்பார் போலிருக்கிறது.

என்னை பொறுத்த வரை ஆறு மாதம் ஆராய்ச்சி செய்து விட்டு வந்து விடாமல் இனி காலம் பூராவும் ஆராய்ச்சியிலேயே கழித்தால் ஊர் உலகத்துக்கு நல்லதாக இருக்கும்

அல்லாஹ் போதுமானவன்

பி.ஏ.ஷேக் தாவூத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் சகோதரர் மு. மாலிக் அவர்களுக்கு (பொதுவாக நான் இஸ்லாமல்லாத எல்லா சகோதர சகோதரிகளுக்கும் ஸலாம் சொல்லுவேன். அந்த அடிப்படையில் சில இஸ்லாமிய வடிவங்களை உள்வாங்கியிருக்கும் சூபி மதத்தை சார்ந்த உங்களுக்கும் ஸலாம் சொல்லியிருக்கிறேன்)

உங்களுடைய பதிவுகளில் எல்லாம் உங்களுடைய அறியாமையும் சூபியிசம் இஸ்லாத்தில் இல்லை என குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் மக்களிடம் பிரச்சாரம் செய்கின்ற இஸ்லாமிய அறிஞர்களிடம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற அதீத வெறுப்பையும் நன்றாக அவதானிக்க முடிகின்றது. மற்றபடி பதில் சொல்ல தகுதியான கேள்விகள் நீங்கள் தூக்கிப் பிடிக்கும் "சூபி" மதத்தை சார்ந்த ஷேக் அப்துல்லா ஜமாலி (சமாளி அல்லது கோமாளி என்றும் படிக்கலாம்) இடமோ அல்லது உங்களிடமோ கூட இல்லை.

மற்றபடி நீங்க நம்புகின்ற மத்ஹப் அடிப்படையில் பராஹத் இரவு பற்றி பின்வரும் பின்னூட்டங்களை போட்டிருக்கின்றேன். முடிந்தால் அபுதலாயில் (ஆதாரங்களின் தந்தையாம். ஒருவேளை ஆதாரங்களை இவரே உருவாக்குவாரோ) இடம் (அதாங்க கோமாளி ஷேக் அப்துல்லா விடம் ) ஆதாரம் வாங்கி மறுப்பு கொடுங்கள்.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

”நம்முடைய மார்க்கத்தில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி (2697)

மற்றொரு ஹதீஸில் வருகிறது

நபி (ஸல்) அவர்கள் : ” என் சமுதயாத்தில் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள். ஏற்க மறுத்தவரைத் தவிர.” என்று கூறினார்கள். மக்கள் ” அல்லாஹ்வின் தூதரே ஏற்க மறுத்தவன் யார்? என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ” எனக்கு கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்.எனக்கு மாறு செய்தவர் (சத்தயத்தை) ஏற்க மறுத்தவர் ஆவார்.” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹ‎ுரைரா (ரலி) நூல் : புகாரி (7280)

பி.ஏ.ஷேக் தாவூத் said...

” பராஅத் இரவு” என்ற பெயரில் மூன்று யாசீன்கள் ஓதுகிறீர்களே இவ்வாறு நபி (ஸல்) செய்தார்கள் என்பதற்கு ஒரே ஒரு ஆதாரப் பூர்வமான ஹதீஸாவது இருக்கின்றதா? அல்லது ஸஹாபாக்கள் இவ்வாறு செய்திருக்கிறார்களா? அல்லது மத்ஹபு இமாம்கள் என்று கூறுகின்றீர்களே அந்த நான்கு இமாம்களாவது இவ்வாறு செய்திருக்கிறார்கள் என்று உங்களால் கூறமுடியுமா? நிச்சயமாக ஒருபோதும் அவ்வாறு உங்களால் கூறமுடியாது. வேறு எந்த ஆதாரங்களின் அடிப்படையில் இவ்வாறு செய்கிறீர்கள். சற்று சிந்தித்துப் பாருங்கள்,

மேலும் ”பராஅத் இரவு” என்பதற்கு அரபியில் ”லைலத்துல் பராஅத்” என்று கூறப்படும். நபி (ஸல்) அவர்கள் தம்முடைய வாழ்நாளில் இப்படி வார்த்தையைக் கூட கூறியது கிடையாது. இவையெல்லாம் நபியவர்களுக்குப் பின் உருவாக்கப்பட்ட வழிகேடுகளாகும்.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

மேலும் பிறை பதினைந்தாம் நாள் அன்று மட்டும் சிறப்பாக நீங்கள் ” பராஅத் நோன்பு” என்று வைக்கிறீர்களே இதையாவது நபி (ஸல்) அவர்கள் செய்துள்ளார்கள் என்று உங்களால் , காட்ட முடியுமா?நிச்சயமாக முடியாது . மாறாக இதற்கு மாற்றமாக ஒவ்வொரு மாதமும் வழமையாக நோன்பு வைப்பவர்களைத் தவிர வேறு யாரும் அன்றைய தினத்திலிருந்து நோன்பு நோற்கக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

இவ்வாறு நீங்கள் ஏற்றுள்ள மத்ஹப நூல்களிலேயே கூறப்பட்டுள்ளது. ஷாஃபி மத்ஹப் நூலான இஆனதுத் தாலிபீன் என்ற நூலில் கூறப்பட்டிருப்பதைப் பாருங்கள்

وكذلك يحرم الصوم بعد نصف شعبان لما صح من قوله صلى الله عليه وسلم إذا انتصف شعبان فلا تصوموا ( إعانة الطالبين ج: 2 ص: 273)

ஷஅபான் பாதிக்குப் பிறகு நோன்பு நோற்பது ஹராம் ஆகும். ஏனென்றால் ” ஷஅபான் பாதியயை அடைந்து விட்டால் நோன்பு நோற்காதீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹீஹான ஹதீஸில் வந்துள்ளது. (நூல் : இஆனா பாகம் : 2 பக்கம் : 273)

மத்ஹபைப் பின்பற்றுபவர்கள்தான் பள்ளிவாசலுக்குத் தொழவரவேண்டும் என்று ஒவ்வொரு பள்ளியிலும் போடு மாட்டி வைத்துள்ளிர்களே நீங்கள் உங்கள் மத்ஹபிலேயே ஹராம் எனக் கூறப்பட்ட ஒரு காரியத்தை எப்படிச் செய்கிறீர்கள். இவ்வாறு மத்ஹப் நூற்களில் உள்ளது உண்மைதானா? என்று உங்களுடைய ஆலிம் பெருமக்களிடம் கேட்டுப்பாருங்கள். உண்மையை நிலையை உணர்வீர்கள்.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

270)

ரஜப் மாத்தின் முதல் வெள்ளிக் கிழமை இரவில் மஃரிப் , இஷாவிற்கு மத்தியில் பன்னிரண்டு ரக்அத்துகள் தொழுவதும். ஷஅபான் பதினைந்தாம் இரவில் நூறு இரக்அத்துகள் சிறப்பாக தொழுவதும் பழிக்கப்படவேண்டிய பித்அத்துகளாகும். அவ்வாறு தொழுபவன் பாவியாவான். இதை செய்பவனை தடுப்பது ஆட்சியாளர்கள் மீது கடமையாகும். (ஷாஃபி மத்ஹப் நூல் : இஆனா பாகம் : 1 பக்கம் : 270 )

பி.ஏ.ஷேக் தாவூத் said...

ومن البدع المذمومة التي يأثم فاعلها ويجب على ولاة الأمر منع فاعلها صلاة الرغائب اثنتا عشرة ركعة بين العشاءين ليلة أول جمعة من رجب وصلاة ليلة نصف شعبان مائة ركعة (إعانة الطالبين ج: 1 ص:

فائدة أما الصلاة المعروفة ليلة الرغائب ونصف شعبان ويوم عاشوراء فبدعة قبيحة وأحاديثها موضوعة (فتح المعين ج: 1 ص: 270)

(ரஜப் மாதத்தின்) குறிப்பிட்ட ஒரு இரவிலும், ஷஅபான் பதினைந்தாம் இரவிலும் , ஆஷுரா உடைய நாளிலும் தொழப்படும் குறிப்பிட்ட தொழுகைகள் மோசமான பித்அத்களாகும். அவைகளைப் பற்றி வரக்கூடிய ஹதீஸ்கள் இட்டுக் கட்டப்பட்டவையாகும் (ஷாஃபி மத்ஹப் நூல் : ஃபத் ஹுல் முயீன் பாகம் : 1 பக்கம் : 270 )

பி.ஏ.ஷேக் தாவூத் said...

وإسراج السرج الكثيرة في السكك والأسواق ليلة البراءة بدعة وكذا في المساجد (البحر الرائق ج: 5 ص: 232)

பராஅத் இரவில் தெருக்களிலும், கடைவீதிகளிலும், அவ்வாறே பள்ளிவாசல்களிலும் அதிகமான விளக்குகளை எரிய வைப்பது பித்அத்தான காரியமாகும். (ஹனபி மத்ஹப் நூல் அல் பஹ்ருர் ராயிக் பாகம் : 5 பக்கம் : 232)

உங்களுடைய ஆலிம்கள் எந்த மத்ஹபை பின்பற்ற வேண்டும் என் உங்களுக்குப் போதிக்கிறார்களோடு அந்த மத்ஹப் கிரந்தங்களில்தான் நாங்கள் எடுத்துக்காட்டிய மேற்கண்ட கருத்துக்கள் இடம்பெற்றுள்ளது. இதனை என்றைக்காவது உங்களுடைய ஆலிம் பெருமக்கள் உங்களுக்கு எடுத்துக் கூறியுள்ளார்களா? சற்று சிந்தித்துப் பாருங்கள். உங்கள் மத்ஹப் நூற்களிலேயே செய்யக் கூடாது . பித்அத், தடுக்கப்படவேண்டிய மோசமான காரியம் என்று கூறப்பட்ட விஷயங்களைத்தான் உங்களோடு சேர்ந்து உங்களுடைய ஆலிம் பெருமக்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்தே இவர்கள் மார்க்கத்தை மட்டுமல்ல மத்ஹபையும் சேர்த்தே மறைக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

மு மாலிக் said...

சரியாக சொன்னீர்கள் இஸ்மாயில். இன்ஷா அல்லாஹ் பார்ப்போம் பிஜேயின் கீழிறக்கத்தினை, இனி வரும் நாட்களில்.

மு மாலிக் said...

பி ஏ ஷேக் தாவுத்,

உங்களைப் பிஜே எந்த அளவிற்கு வழிகெடுத்து, பிரிவினை எண்ணங்களையும் குழப்பங்களையும் (ஃபித்னா) உங்களுள் புகுத்தி, சகமுஸ்லீம்கள் உங்கள் பார்வையில் முஸ்லீம்கள் இல்லை என்று நினைக்கவைத்துவிட்டார் என்பதினைப் பார்த்தீர்களா ?!! அதுதான் பிஜே !

"சூஃபி மதம்" என்று நீங்கள் எதைச் சொல்கிறீர்கள் ? உலகில் சூஃபி வழியினைப் பின்பற்றுகிறோம் என்று கூறி, பல வகையான குரூப்கள் உள்ளன. நீங்கள் என்னை எதில் வைத்துப் பார்க்கிறீர்கள் ? சூஃபிய்யாக்களின் இஸ்லாமிய சித்தாந்தங்களிலிருந்து இஸ்லாமிய அடிப்படைகளை அகற்றி, அவைகளை மேற்கத்திய அல்லது "ஓரியன்டல்" சித்தாந்தங்களைப் போன்ற சித்தாந்தம் என்ற வகையில் ஆக்கி அதன் மீது பற்றுள்ளவர் என நினைக்கிறீர்களா ?

பராத் இரவு பற்றி நீங்கள் கூறியவைகளுக்கு எதிராக எனக்கோ ஜமாலி அவர்களுக்கோ எந்த அளவுக்கு மாற்றுக்கருத்து இருக்கிறது என்பதினைப் பற்றியதல்ல இப்பதிவு. மத்ஹபு/ஹதீஸ் கருத்துக்களுக்கு எதிராக ஜமாலி இந்த இரவினைக் கொண்டாடுங்கள் என்று அவர் கூறியிருந்தால், அவரது இணையதளமான jamalinet.com-ல் கேட்டுத் தெரிந்துக் கொள்ளலாம்.

(இருப்பினும் நீங்கள் கேட்டுள்ள விஷயத்தில் என் சில அபிப்ராயங்கள். ஜமாலி அவர்கள் அவர் சார்ந்துள்ள ஹனஃபி மத்ஹபின் படி கூறியிருக்கலாம். ஷாஃபீ மத்ஹபில் நோன்பு நோற்பது தடை செய்யப்பட்டிருந்தால் தடை செய்யட்டும். நபி(ஸல்) அவர்களது ஹதீஸ் படி ஷஃபான் 16-லிருந்து பிறகு நோன்பு நோற்கக்கூடாது என்று தான் பொருள் பெறுகிறது. ஒரு மாதத்தின் பாதியினை, இருபாதிகள் சந்திக்கும் பிறை 16 ன் துவக்கத்தினயும் பிறை 15 ன் முடிவினையும் தான் கொள்ள முடியும். மேலும் ஜமாலி அவர்கள், 'மக்கள் வீடுகளில் விளக்கெறிக்க வேண்டும்' எனக் கூறியதில்லை. அவரது இணையதளத்தில் ஒரு பக்கம் பராஅத் இரவு பற்றி உள்ளது. யாஸீன் ஓதுவது பற்றி கூறவேண்டுமானால், அது நிய்யத்தினைப் பொருத்தது. ஒருவர் "மார்க்கத்திற்கு விரோதமானது இந்த யாஸீன் ஓதுதல்; அதை மீறிச்செய்துதான் பார்ப்போமே" என்ற பட்சத்தில் அது நிராகரிக்கப்படலாம். ஏனெனில் நிய்யத்தின் அடிப்படையிலேயே ஒருவர் எடைபோடப்படுவார் என்பது ஒரு ஹதீஸ். அதுபோலவே அதிகப்படையான வணக்கங்களும். "மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்படுபவைகள் நிராகரிக்கப்படும்" என்ற ஹதீஸிற்கு முரணானதல்ல இந்த யாஸீன் ஓதுதலும் அதிகப்படியான வணக்கங்களும், நோன்பு நோற்றலும். காரணம் இவைகள் நேரங்காலமின்றி குர்ஆனால் வலியுறுத்தப்படுபவைகள். நபி(ஸ்ல்) அவர்களால் போதிக்கப்பட்ட வணக்க வழிபாடுகளை அவர்கள் தடைசெய்துள்ள தருணங்கள் தவிர எப்போதும் செய்யலாம். அவைகள் பித்அத் ஆகாது. அஃகோர்ஸ், தீமிதித்தல், பித்அத் அல்லாதவைகளை பித்அத் என்றல், பெண்களைப் பள்ளிவாசலுக்கு வரவழைத்து அவர்களுக்கு முன்னால் அரை டவுசரில் நின்றல், பெண்களைப் பொதுக்கூட்டங்களுக்கு அழைத்துப் படங்காட்டுதல் போன்றவைகள் பித்அத்.)

இந்தப் பதிவு பொய்யன் பிஜே பற்றியது. பொய்யன் பிஜேயைப் பொய்யன் என நான் நிரூபித்திருக்கிறதாக நான் கோரியுள்ளேன். நான் அவ்வாறு சொல்வது தவறு என்றால், அது விஷயத்தில் நாம் விவாதிக்கலாமா ? உங்கள் பிஜேயைப் பாதுகாக்க நீங்கள் விருப்பப்பட்டால், திசைத் திருப்பாமல் நேரடியாக பிஜேபற்றியும், அவர் பொய்யன் இல்லை என்று நீங்கள் கருதினால் அவ்விஷயத்திலும் விவாதிக்கவும்.

மு மாலிக் said...

பி ஏ ஷேக்தாவுத்,

பராஅத் இரவு பற்றி ஜமாலி அவர்கள் சொல்ல நினைக்கும் கருத்துக்கள் இதோ

http://www.jamalinet.com/about-barath-night.html

பி.ஏ.ஷேக் தாவூத் said...

ஏற்கெனவே கூறியது போன்று உங்களின் பதில் பின்னூட்டங்கள் கூட பதில் சொல்ல தகுதியற்ற, ஜமாலியின் உளறல்களை போன்றே இருக்கின்றன. கொஞ்சம் சிம்பிளா சொன்னா தனிமனித காழ்ப்புணர்ச்சி மட்டுமே உங்களின் உளறல்களில் இருக்கின்றன. நான் பராஹத் இரவு பற்றி எடுத்து வைத்த வாதங்களுக்கு முடிந்தால் அபுதலாயிலை பதில் கொடுக்க சொல்லவும்.

மு மாலிக் said...

அப்படியா ?!! ஆமா சொல்லிக்கிட்டாங்க ஷேக் தாவுதுதான் உளறாமல் இருப்பாரு; ஆனா பேசும்பொருள் அறியாமப் பேசுவாரு என்று.

திரும்ப சொல்றேன். பிஜே ஒரு பொய்யன் என நான் நிரூபித்துள்ளேன். அப்படி அவர் பொய்யன் இல்லை என்று உங்களுக்குத் தெரிந்தால், என் வாதங்களை எதிர்கொள்ளவும்.

nagoreismail said...

”அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் சகோதரர் மு. மாலிக் அவர்களுக்கு (பொதுவாக நான் இஸ்லாமல்லாத எல்லா சகோதர சகோதரிகளுக்கும் ஸலாம் சொல்லுவேன். அந்த அடிப்படையில் சில இஸ்லாமிய வடிவங்களை உள்வாங்கியிருக்கும் சூபி மதத்தை சார்ந்த உங்களுக்கும் ஸலாம் சொல்லியிருக்கிறேன்)”

அலைக்கும் சலாம்..

(நான் ராமசாமி முனுசாமி சலாம் சொன்னாலும் திரும்ப பதில் சொல்லி விடுவேன்..)

nagoreismail said...

அறிவார்ந்த ஷேக் தாவூத் அவர்களே..!

நாங்கள் யாசீன் ஓதுவதற்கும் நோன்பு நோற்பதற்கும் இன்னும் நாங்கள் செய்கின்ற ஒவ்வொன்றுக்கும் ஆதாரம் கொடுத்துக் கொண்டிருக்க முடியாது.

ஏனெனில் நாங்கள் எந்த வஹ்ஹாபியையும் ஓத சொல்ல வில்லை.

நாங்கள் எங்களுக்குள் ஒரு நிய்யத்தை வைத்துக் கொண்டு இந்த அமல்களை இறைவனுக்காக செய்கிறோம்.

இதை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாமல் நிராகரிப்பதும் (அதாவது மஹ்ஷரில் யாசீன் ஓதியதற்கும் நோன்பு நோற்பதற்கும் ஆதாரம் கேட்பதும்) இறைவனின் விருப்பத்தை பொறுத்தது.

நாங்க செய்றோம். முடிவை இறைவனே எடுக்கட்டுமே.. நீங்களே இறைவனுக்காக முடிவெடுத்து உங்களை நீங்களே ஏன் இணை வைத்துக் கொள்கிறீர்கள்..?

அதுவும் நீங்கள்ளாம் இணை வைக்கிறதுக்கு தான் ரொம்ப பயப்படுவீங்க வேற..?

பித்அத் என்றால் புதுமை என்று அர்த்தம். இன்றைக்கு இஸ்லாம் புதுமைக்கு எதிரானது போல் உங்களால் பிரச்சாரம் செய்யப்படுகிறது.

அறிஞர்கள் பித்அத்தை இரண்டாக பிரிக்கிறார்கள். பித்அத் சய்யிஆ மற்றும் பித்அத் ஹஸனா என்று.

நாங்கள் பராஅத் இரவில் யாசீன் ஓதுவதையும் நோன்பு நோற்பதையும் பித் அத்தாக இருக்கும் பட்சத்தில் பித்அத் ஹஸனா என்று நம்பி செய்கின்றோம்.

வேறு எந்த நோக்கமும் கிடையாது. இறைவன் உங்களை போல் செயல்களையோ சொற்களையோ பார்க்காதவன் உள்ளத்தை மட்டுமே பார்ப்பவன்.

அல்லாஹ் போதுமானவன்..

அதுவும் தவிர.. சூஃபியிசம் பற்றிய தங்களின் அறிவு மெய்சிலிர்க்க வைக்கிறது..

பிஜே அவர்களின் ‘இறைவனுக்கு உருவம் உண்டு’ என்பது தான் அவர் எவ்வளவு பெரிய சிந்தனையாளர் என்றும் அவர் எவ்வளவு பெரிய அறிஞர் குழுக்களுக்கு (?) கண்மூடித்தனமான தலைவராக (?) இருக்கிறார் என்பதையும் இந்த உலகிற்கு உரைத்திற்று..

nagoreismail said...

அறிவார்ந்த ஷேக் தாவூத் அவர்களே..!

நாங்கள் யாசீன் ஓதுவதற்கும் நோன்பு நோற்பதற்கும் இன்னும் நாங்கள் செய்கின்ற ஒவ்வொன்றுக்கும் ஆதாரம் கொடுத்துக் கொண்டிருக்க முடியாது.

ஏனெனில் நாங்கள் எந்த வஹ்ஹாபியையும் ஓத சொல்ல வில்லை.

நாங்கள் எங்களுக்குள் ஒரு நிய்யத்தை வைத்துக் கொண்டு இந்த அமல்களை இறைவனுக்காக செய்கிறோம்.

இதை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாமல் நிராகரிப்பதும் (அதாவது மஹ்ஷரில் யாசீன் ஓதியதற்கும் நோன்பு நோற்பதற்கும் ஆதாரம் கேட்பதும்) இறைவனின் விருப்பத்தை பொறுத்தது.

நாங்க செய்றோம். முடிவை இறைவனே எடுக்கட்டுமே.. நீங்களே இறைவனுக்காக முடிவெடுத்து உங்களை நீங்களே ஏன் இணை வைத்துக் கொள்கிறீர்கள்..?

அதுவும் நீங்கள்ளாம் இணை வைக்கிறதுக்கு தான் ரொம்ப பயப்படுவீங்க வேற..?

பித்அத் என்றால் புதுமை என்று அர்த்தம். இன்றைக்கு இஸ்லாம் புதுமைக்கு எதிரானது போல் உங்களால் பிரச்சாரம் செய்யப்படுகிறது.

அறிஞர்கள் பித்அத்தை இரண்டாக பிரிக்கிறார்கள். பித்அத் சய்யிஆ மற்றும் பித்அத் ஹஸனா என்று.

நாங்கள் பராஅத் இரவில் யாசீன் ஓதுவதையும் நோன்பு நோற்பதையும் பித் அத்தாக இருக்கும் பட்சத்தில் பித்அத் ஹஸனா என்று நம்பி செய்கின்றோம்.

வேறு எந்த நோக்கமும் கிடையாது. இறைவன் உங்களை போல் செயல்களையோ சொற்களையோ பார்க்காதவன் உள்ளத்தை மட்டுமே பார்ப்பவன்.

அல்லாஹ் போதுமானவன்..

அதுவும் தவிர.. சூஃபியிசம் பற்றிய தங்களின் அறிவு மெய்சிலிர்க்க வைக்கிறது..

மு மாலிக் said...

ஷேக் தாவுத், பராஅத் இரவு பற்றி ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி அவர்களின் வீடியோக்களைக் காணவும்:

http://tamilmuslimtube.magnify.net/video/12-29863006299729903021-2986301http://tamilmuslimtube.magnify.net/video/22-29863006299729903021-29863-2

நீங்கள் இது பற்றி மேலும் பேசுவதைவிட, பிஜே ஒரு பொய்யனா இல்லையா என்பது பற்றி பேசுவோமே ! நான் அதைத் தானே இந்த பதிவில் கூறியுள்ளேன். வாருங்கள் விவாதிப்போம்.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர் மு.மாலிக்,

நான் பராஹத் இரவு பற்றி எடுத்து வைத்த வாதத்திற்கு இதுவர நீங்களோ அல்லது கோமாளி ஷேக் அப்துல்லாவோ பதில் கொடுக்கவில்லை.

இஸ்லாமிய அறிஞர் சகோதரர் பி.ஜைனுல் ஆபிதீன் பொய்யரா என்பதை பற்றி நீங்கள் விவாதிக்க வேண்டுமெனில் அவருடன் தான் விவாதிக்க வேண்டும். ஏனெனில் மாலிக் பொய்யன் என்று நான் சொல்லிவிட்டு நான் வேறொருவருடன் எவ்வாறு விவாதிக்க முடியும். ஆனால் பிஜெவுடன் விவாதிக்கின்ற அளவிற்கு உங்களுக்கு தகுதியும் இல்லை, அறிவும் இல்லை என்பது உங்களின் கட்டுரையிலே நன்றாக தெரிகின்றது.

உங்களுடைய அறியாமையையும் தனிமனித காழ்ப்புணர்வையும் உங்களுக்கு விளங்க வைக்க வேண்டுமென்பதற்காகவே இங்கு பின்னூட்டமிட்டேன். நீங்கள் எந்த அளவிற்கு அறியாமையில் இருக்கின்றீர்கள் என்பதற்கு உங்களுடைய எழுத்துக்களே சாட்சியாக இருக்கின்றது. முடிந்தால் நான் பராஹத் இரவு பற்றி எடுத்து வைத்த கேள்விகளுக்கு கோமாளியிடமிருந்து பதிலை பெற்று தர முயற்சி செய்யுங்கள்.

மு மாலிக் said...

ஷேக் தாவுத் அவர்களுக்கு,

நான் காழ்ப்புணர்வுடன் சொல்கிறேன் என்றால், நான் வெறுமனே அவரைப் பொய்யன் என்று மட்டும் சொல்லிவிட்டு விளக்கம் கொடுக்காமல் இருந்திருக்க வேண்டும்.

ஆனால், அவர் பொய்யன் என நான் நிரூபித்திருப்பதாகச் சொல்லியிருக்கும் பதிவில், அவர் பொய்யன் என்பதினை நான்கு இடங்களில், அவர் பொய் சொல்லுவதினைச் சுட்டிக் காட்டி நிரூபித்திருக்கின்றேன்.

அப்படி இருக்க, நான் காழ்ப்புணர்வுடன் சொல்வதாக நீங்கள் கூறுவது ஏன் என நீங்கள் விளக்கவேண்டும்.

அவ்வாறு அவர் பொய்யன் என்று நான் கூறும் போது, நீங்கள் அவரை டிஃபண்ட் செய்வதால், நீங்கள் அவரைப் பொய்யன் இல்லை என்று நிரூபிக்கக் கடமை பெறுகிறீர்கள்.

நீங்கள் அவருக்கு வக்காலத்து வாங்காவிட்டால், நான் அவரிடம் மட்டுமே பதிலை எதிர்பார்ப்பேன். ஆனால் நீங்கள் வக்காலத்து வாங்கிய பிறகு, அவரை நிரபராதி என நிரூபியுங்கள் என நான் உங்களிடம் கூறுவதினை நீங்கள் என்னுடைய அறியாமை என்று கூறுவது எந்தவிதத்தில் நியாயம் ?

இப்போது சொல்லுங்கள், நான் காழ்ப்புணர்வுடன் காரணமின்றி அவரைப் பொய்யன் என சொல்கின்றேனா ?

வீடியோ ஆதாரம் பிஜேயின் இணையதளத்திலேயே உள்ளது. பார்த்து சொல்லலாமே. அவர்தான் பதில் சொல்லவேண்டும் என்று கிடையாது. நாம் கூட எடை போடலாம்

ibhnu said...

assalam alaikum pjin valatikale arasiyal athaythukku pj solvatheelam sariyentru sollum sembariattu kuutangale islathukkul irukkum arumpigalai kalai etukka vendum

muturmict said...

தயவு செய்து பீ ஜே அவர்களை பெய்யன் என்று சொல்ல வேண்டாம்
Mr.Imran