Thursday, March 04, 2010

பயணிகளின் உடல் காட்டி: வெள்ளைக்காரர்களைவிட அசிங்கமானவர்கள் யார் ?

அமெரிக்க விமான நிலையங்களில், பயணிகள் மீது "Body Scanners" எனும் கருவிகளைக் கொண்டு, ஒருவரை ஆடைகளின்றிப் பார்த்துப் பரிசோதிக்கிறார்கள். அவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்தப் படவேண்டிய பயணிகளென எல்லோரையும் இன்றி யாரையாவது அவர்கள் தேர்ந்தெடுத்து, தங்களது அம்மணக் காட்சிக்கு உட்படுத்துகின்றனர்.

இதில் பல சிக்கல்கள் இருக்கின்றன என்று கூறப்படுகிறது. இதில் மேற்குலக மக்களின் கவலை என்னெவென்றால் பல பிரபல சினிமா, இசை மற்றும் பொழுதுபோக்கு நட்சத்திரங்களின் அம்மணப்படங்கள், இணையதளத்தில் பகிந்துகொள்ள வாய்ப்பு உண்டு என்பது.

இந்த மேற்குலக மக்களின் கவலையை தவிர்த்து, சாதாரணமாக ஒரு மனிதன் என்று நினைக்கும்போது, இவ்வாறு அம்மணமாகப் பார்ப்பது,ஒரு மனிதனை இழிவு படுத்தும் செயல். ஒருவன் தன்னை தன்மானம் உடையவனாகக் கருதினால், அவன் அதை இழக்க முன்வந்தே விமானங்களில் பயணிக்க முன்வரவேண்டும்.

மேற்குலக மக்களைவிட அசிங்கமானவர்கள் வேறு யார் ?

இதனை முதன்மையாகக் கைவிடவேண்டும். குறைந்தபட்சம் இதில் சில சீர்திருத்தங்களைக் கொண்டுவரவேண்டும். இப்போது நடைமுறையில் உள்ள படிகள்/முறைகள்/விதிகள் யாது எனத் தெரியவில்லை.

1. பெண்களை பரிசோதிப்பவர்கள், பெண்களாகவும், ஆண்களைப் பரிசோதிப்பவர்கள் ஆண்களாகவும் இருத்தல் அவசியம்.

2. பரிசோதிக்கப் படவேண்டிய பயணிகளை ஏதேச்சையாக தேர்ந்தெடுக்கும் போது, அந்தத் தேர்ந்தெடுப்பைக் கருவியினைக் கொண்டே செய்யவேண்டும். அந்த கருவிக்கு பயணியின் பால், மதம், நிறம், நாடு மற்றும் வயது போன்ற எந்த விவரத்தினையும் கொடுத்து அவைகளைப் பயன்படுத்துமாறு பணிக்கப்பட்டதாக இருக்கக் கூடாது.

3. அக்கருவிகள் பயணிகளின் உடல் காட்சிகளை சேமிக்கக் கூடியதாக இருக்க இருக்கக் கூடாது.

ஒரு பாக்கிஸ்தானிய பெண், இந்த சோதனைக்கு மறுத்து, பயணத்தினை ரத்து செய்துவிட்டு வெளியேறிவிட்டதாக ஒரு செய்தி வந்துள்ளது. வெள்ளைக்காரனின் வக்கிரங்களுக்கு அளவே இல்லை.

9 comments:

Ravi said...

It is your choice to travel to these countries. If you do not like the rule, you can choose not to travel to these countries.

மு மாலிக் said...

ஏற்கனவே அங்கு போயி இருந்துவருபவர்களை என்ன பண்ண சொல்றீங்க ? அவர்கள் தங்கள் தாய்நாட்டுக்கு திரும்புவது கூட மானக்கேடாக்கி விடுவார்கள் போலுள்ளதே. நான் கொடுத்த செய்தியைப் படித்தீர்கள் என நினைக்கிறேன்

Robin said...

வெள்ளைகாரனுக்கு உயிரை பற்றிய கவலை, அதனால சோதனை பண்ணுகிறான்.
//மேற்குலக மக்களைவிட அசிங்கமானவர்கள் வேறு யார் ?// அப்படி அசிங்கமானவர்கள் இருக்கும் நாட்டிற்கு ஏன் போகிறீர்கள்? அவர்களா உங்களை வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தார்கள்?
//ஏற்கனவே அங்கு போயி இருந்துவருபவர்களை என்ன பண்ண சொல்றீங்க ? // ஏற்கனவே அங்கு போயிருப்பவர்களில் யாரும் தாய்நாட்டிற்கு வர விரும்புவதில்லையே, அது ஏன்?

மு மாலிக் said...

அந்த அசிங்கமானவர்கள் இருக்கிற நாடுகள் எல்லாம் அவர்களுடையது அல்ல. திருடப்பட்ட நாடுகள். ராபின், நீங்கள் இருக்கும் ஆஸ்திரேலியா கூடத் தான்.

அந்த வெள்ளைக்காரார்கள் மற்ற உலகுடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்தால், ஆஹா, அதுவல்லவோ சிறப்பு. அந்த அசிங்கமானவர்கள் எங்கும் மூக்கை நுழைத்து விடுவதால் மற்றவர்களுக்கும் அவர்கள் இருக்கும் ஊர்களில் சில செய்யவேண்டியவைகள் ஏற்பட்டேவிடுகின்றன.

அமெரிக்கா அசிங்கமானவர்கள் அதிக பட்சமாக வாழும் ஊராகிவிட்டது. பூர்வீக அமெரிக்கர்களை அந்த அசிங்கமானவர்கள் கொன்றுவிட்டனர். அத்தோடில்லாமல், மற்ற நாடுகளில் வெள்ளையரல்லாத மக்கள் சீராக வாழ முடியாத வண்ணம் அந்த நாடுகளின் ஸ்திரத்தன்மையினையும் பொருளாதாரத்தினையும், மக்களின் பாதுகாப்பையும் அந்த அசிங்கமான வெள்ளையர்கள் குலைக்கின்றனர். இதனால், இங்குள்ள மக்கள் அந்த அசிங்கமானவர்கள் வாழும் நாடுகளுக்கு செல்லவேண்டிய கட்டாய நிலையினை ஏற்படுத்துகின்றனர். பின்பு அந்த அசிங்கமானவர்கள் அவர்களை அசிங்கமாக நடத்துகின்றனர். சில சமயங்களில் அந்த அசிங்கமானவர்கள் அசிங்கமற்ற மக்களை பிடித்துச் சென்று அசிங்கமாக நடத்துகின்றனர். பழங்காலத்தில் ஆஃபிரிக்காவில் நிகழந்தது. தற்காலத்தில் கூட இப்பிள்ளைபிடிக் கூட்டம் "சாட்" (Chad) எனும் ஆப்பிரிக்க நாட்டிலும், ஹைத்தி எனும் நாட்டிலும் கை வரிசையைக் காட்டியது.

சில சமயங்களில், ஆஸ்திரேலியா போன்ற அசிங்கமானவர்களின் கூடாரத்திற்கு அசிங்கமானவர்களல்லாத நாடுகளிலிருந்து சிலர் சென்று, அசிங்கமானவர்களுக்கு ஊழியம் செய்து, அவர்களது விசுவாசிகளாகின்றனர். ஏனெனில், சில மனநோய் ஆட்கள், அசிங்கமாக நடத்தப் படுவதை விரும்புகின்றனர்.

Robin said...

மாலிக்,
வரலாறை நன்றாக படியுங்கள். அமெரிக்கர்கள் மட்டுமல்ல, பல நாடுகளும் மற்ற நாடுகளுக்கு படை எடுத்துள்ளன, மக்கள் குடியேற்றமும் நடந்துள்ளது. ஏன், அரேபியர்கள் வட ஆப்பிரிக்காவிற்கு செல்லவில்லையா, அங்குள்ள மக்களை அடிமைபடுத்தவில்லையா? ஏன் அமெரிக்காவின் மேல் மட்டும் உங்களுக்கு இவ்வளவு கோபம்? தீவிரவாதம் எங்கும் பரவியுள்ள இந்த நாட்களில் பாதுகாப்பு விஷயத்தில் எந்த நாடும் சமரசம் செய்ய முடியாது. அமெரிக்காவிற்கு மக்கள் விரும்பி செல்வதற்கு காரணம் அதிக பணம் சம்பாதிக்க மட்டுமல்ல அங்கு அவர்களால் வசதியாக சுதந்திரமாக வாழ முடிகிறது என்பதால்தான். ஒரு உதாரணம் மட்டும் சொல்கிறேன், இன்று அமெரிக்காவில் இருக்கும் மத சுதந்திரம் சவூதி அரேபியாவில் உண்டா?

மு மாலிக் said...

ராபின்,

வெள்ளைக்காரர்களை அசிங்கமானவர்கள் என நான் கூறியது, வெள்ளைக்கார மக்களை மையமாக வைத்து. நீங்கள் சவுதி அரேபியா பற்றிக் கூறிய உதாரணம், சவுதி அரசின் அசிங்கமானத் தன்மையைக் காட்டும். அராபியர்களை அசிங்கமானவர்கள் எனக் காட்டாது. ஏனெனில் சவுதி அரசாங்கத்தின் செயல்களுக்கு அந்த நாட்டு மக்கள் பொறுப்பாக முடியாது. ஏனெனில் சவூதி அராபியாவில் ஜனநாயக ஆட்சியில்லை. அசிங்கமான சவுதி அரசாங்கம என்பது, அசிங்கமான வெள்ளைக்கார நாடுகளின் உதவியுடன், அந்த நாட்டை அசிங்கமாக ஆண்டு வருகிறது. அதைப் பற்றி பேசாதீர்கள்.


வட ஆஃப்ரிக்க நாடுகளை வரலாற்றின் படி அராபியர் ஆக்கிரமித்ததென்னவோ உண்மைதான். ஆனால், அவர்களை அடிமையாக நடத்தியதாகவோ, அல்லது வெள்ளைக்கார அசிங்கமானவர்களைப் போல காலனியாதிக்கம் ஏற்படுத்தியதாகவோ வரலாறு இல்லை.

Robin said...

//வட ஆஃப்ரிக்க நாடுகளை வரலாற்றின் படி அராபியர் ஆக்கிரமித்ததென்னவோ உண்மைதான். ஆனால், அவர்களை அடிமையாக நடத்தியதாகவோ, அல்லது வெள்ளைக்கார அசிங்கமானவர்களைப் போல காலனியாதிக்கம் ஏற்படுத்தியதாகவோ வரலாறு இல்லை.// தவறு.
அரபியர்கள் தங்கள் அடிமைகளை காயடித்துள்ளார்கள்.

Islamic Arab slave traders enslaved Africans from about the 9th to the 19th century, primarily before traders from Europe arrived. The Arabian enslavement was extensive and cruel as many of the male slaves were castrated and made eunuchs so they could not reproduce. This was despite the fact that castrating went against the Koran (the scriptures of the Islamic religion) and other Islamic laws. The Arab slave trade to the east was said to involve about 14 million blacks from the time of Muslim conquest. The Koran elevates virgins and polygamy to such a status that thousands of virgin girls were kidnapped for Arab harems. According to dogma, free men could not be enslaved, and people who were faithful to foreign religions could live under some protection. However, the spread of the Islamic empire caused the people to be more brutal and interpret the Koran in harsher ways. The Arabs began to use slaves mainly as body guards and soldiers as they competed against African slave traders who supplied European ships. Slavery grew in sub-Saharan Africa through war captives.

http://www.hyperhistory.net/apwh/essays/comp/cw25slavery.htm

ராம்ஜி_யாஹூ said...

Ravi and Robin has told very clearly the answer.

Why should we go to USA, Cananda, asutrlia.

dont encourage these migration agents

மு மாலிக் said...

ராபின்,

நீங்கள் சுட்டிக்காட்டிய தளத்தின் முகப்புப் பக்கத்தினைப் (main page) பார்த்தீர்களா ? இதோ அது:

http://www.hyperhistory.net/

அதில் காணப்படும், சிலுவைப் படத்திற்கு அருகில் எழுதப்பட்டுள்ளவைகளைக் காணவும்.

அதில் அவர்களே கூறியுள்ளார்கள்: அவர்கள் உலக வரலாற்றை, பைபிளின் பார்வையில் பார்க்கிறார்களாம் !! அவர்களுடைய வரலாற்று நோக்கு "A Christian worldview of history". நான் சொல்லவில்லை. நீங்கள் சுட்டிக்காட்டிய தளம்தான் சொல்கிறது.

அத்தளத்தினர் தங்கள் பணியினை, கிறிஸ்தவக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்காக செய்கிறார்களாம்.

இதையெல்லாம் பெரிசா நினைச்சுத் தூக்கிக்கிட்டுவந்து, இங்கே கொட்டுறீங்களே !! போங்கய்யா போங்க.