Saturday, February 20, 2010

குர்ஆனில் இதயம், இரத்த மண்டலம்: சர்வதேச சஞ்சிகையின் கட்டுரை

குர்ஆன் மற்றும் ஹதீஸில் காணப்படும் தகவல்களில், இதயம் மற்றும் இரத்த சுற்று மண்டலம் சம்பந்தப்பட்ட எடுத்தாள்வுகள், மிகச் சரியாக இருப்பதாக அத்துறைகளில் ஆராய்ச்சி செய்யும் சில மருத்துவ வல்லுணர்களால் உணரப்பட்டுள்ளது. அவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளைக் கட்டுரையாக தீட்டியுள்ளனர். அக்கட்டுரை, அதே துறைகளில் சிறந்து விளங்கும் வேறு சிலரால் சரிபார்க்கப்பட்ட பின்னர், "இரத்த சுற்று மண்டலத்திற்கான சர்வதேச சஞ்சிகை"யில் வெளியிட்டுள்ளனர். (International Journal of Cardiology).

(அந்த கட்டுரையை அதே சஞ்சிகையில் படிக்க, பணம் கட்டவேண்டும். எனவே அதனை இங்கு படித்துக் கொள்ளலாம். அந்தக் கட்டுரையை அந்த சஞ்சிகை ஏற்றுக்கொண்டு இணையதளத்தில் பதித்துள்ளது. தாள் வடிவில் வெளியிடுவதற்காக தற்சமயம் அச்சில் உள்ளது. )


தருமி (அவர் ஒரு வலைப் பதிவர்) அந்தக் கட்டுரையைப் படித்தால் குதிக்க ஆரம்பித்துவிடுவார். முடிந்தால் அவர் அதற்கு மறுப்பு எழுதி அதே சர்வதேச சஞ்சிகையில்வெளியிட முடியுமா அவரால் ?

அது மிக அருமையானக் கட்டுரை. யாராவது மொழிபெயர்த்து வெளியிட்டால் பலருக்கும் பயனுடையதாகவும், பல தவறான அபிப்ராயங்களை மாற்றிக் கொள்வதற்கும் உதவுவதாகவும் இருக்கும்.

Friday, February 19, 2010

தருமி கவனிக்க, தருமி கவனிக்கப் பட ஒரு பதிவு

குர்ஆனில் குற்றம் காண சிண்டு முடிந்து அயராது உழைக்கும் தருமியின் சில குற்றச்சாட்டுகள்:

"ஒளி சிந்தும் சந்திரன்" என்று குர் ஆன் கூறுவதாக குற்றம் சாட்டுகிறார். அந்த வசனம் 7:15-16. அது "சிந்தும்" என்று கூறுவதாக இவர் கூறுவது இவரது வர்ணிப்பு. அப்துல்லாஹ் யூசுஃப் அலியின் மொழிபெயர்ப்போ மற்றவர்களது மொழிபெயர்ப்போ அவ்வாறாகக் கூறுவதில்லை. பல மொழிபெயர்ப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Yusuf Ali:

[071:015] "'See ye not how God has created the seven heavens one above another,

[071:016] "'And made the moon a light in their midst, and made the sun as a (Glorious) Lamp?

Dr. Munir Munshey

[071:015] “Do you not see how Allah has created the seven heavens in tiers.”

[071:016] “In the heavens, He created the moon to be light, (while) He set the sun up as a lamp _ (a source of light).”

Sher Ali:

[071:015] `See you not how ALLAH has created seven heavens in perfect harmony,

[071:016] `And has placed the moon, therein a light, and made the sun a lamp ?

Shakir:

[071:015] Do you not see how Allah has created the seven heavens ,~ one above another,

[071:016] And made the moon therein a light, and made the sun a lamp?

Pickthall:

[071:015] See ye not how Allah hath created seven heavens in harmony,

[071:016] And hath made the moon a light therein, and made the sun a lamp ?

Sale:

[071:015] Do ye not see how God hath created the seven heavens, one above another;

[071:016] and hath placed the moon therein for a light, and hath appointed the sun for a taper?

Muhammad Al-Hilali & Muhsin Khan:

[071:015] See you not how Allah has created the seven heavens one above another,

[071:016] And has made the moon a light therein, and made the sun a lamp?

Palmer:

[071:015] Do ye not see how God has created the seven heavens in stories,

[071:016] and has set the moon therein for a light, and set the sun for a lamp?

Arberry:

[071:015] Have you not regarded how God created seven heavens one upon another,

[071:016] and set the moon therein for a light and the sun for a lamp?

Khalifa:

[071:015] Do you not realize that GOD created seven universes in layers?

[071:016] He designed the moon therein to be a light, and placed the sun to be a lamp.

Rodwell:

[071:015] See ye not how God hath created the seven heavens one over the other?

[071:016] And He hath placed therein the moon as a light, and hath placed there the sun as a torch;

அப்படியே சந்திரன் ஒளி தருவதாக ஒருவர் கூறியிருந்தாலும், அதில் தவறு உள்ளது என குதிக்கிறார் இந்த கோமாளி.

அடுத்து, "தேனீ பழம் தின்கிறது" என்று குர்ஆன் கூறுவதாகக் குற்றம் பிடித்தார். (குர்ஆன் வசன எண்: 16:68-69). ஆங்கில மொழியில் கூட "fruit" எனப்படும் சொல், அதன் மூல வரலாற்றினைப் பொருத்த வரை, அது பூ, காய், கனி ஆகிய எதனையும் குறிக்கும். "Fruit" என்றால் "விளைவிக்கப்படும் பொருள்" அல்லது "பயனாகத் தரப்படும் பொருள்" எனப் பொருள். ஆங்கிலப் பேராசிரியாக தருமி பணியாற்றியிருந்தாலும், இங்கும் தருமி கோமாளியாகவே தென்படுகிறார். அவர் ஆங்கிலம் அறிந்து கொள்ள முயற்சிப்பது நல்லது. (http://dictionary.reference.com/browse/fruit).

அது போலவே அரபி வார்த்தை "தமராத்" என்பதும், என்று கூறப்படுகிறது. அந்த வசனத்தின் மொழிபெயர்ப்பினை அப்துல்லா யூசுஃப் அலி யிடமிருந்து பார்க்கவும்:
[016:069] Then to eat of all the produce (of the earth), and find with skill the spacious paths of its Lord: there issues from within their bodies a drink of varying colours, wherein is healing for men: verily in this is a Sign for those who give thought.

அடுத்து தருமி வைத்தக் குற்றச்சாட்டு: "பூமி விரிக்கப்பட்டுள்ளதாகக் குர்ஆன் கூறுகிறது". யாராவது இந்த கோமாளியிடம் "பரந்த பூமி" என்று சொன்னாலும் குதிக்க ஆரம்பித்துவிடுவார். பூமி விரிந்துதானே காணப்படுகிறது. விசாலமாக இல்லையா ? தருமி டாய்லெட் போக இடமில்லாமல் குறுகலாகவா இருக்கு ?

அடுத்து, தருமி வைக்கும் குற்றச்சாட்டு: "சூரியன் தஞ்சமடைகிறது" என்று குர்ஆன் கூறுகிறதாம். இது எந்த வசனம் என்றோ அல்லது, எந்த மொழிபெயர்ப்பு என்றோ அவர் கூறவில்லை. சரி, இருக்கட்டும். "சூரியன் தஞ்சமடைகிறது" என்று ஒரு மொழிபெயர்ப்பில் எழுதப்பட்டிருப்பதாகவே கொள்வோம். இதற்காக குதிக்கும் இந்த கோமாளி, "சூரியன் மறைகிறது" என்று சொன்னால் குதிக்காமல் இருப்பாரா என்ன ?

அடுத்து "முதுகுத் தண்டுக்கும் விலா எலும்புக்குமிடையே இருந்து வெளிப்படும் திரவத்தால் மனிதன் பிறக்கிறான்" என குர்ஆன் "தவறாகக்" கூறிவதாக இருபதிவுகளைப் போட்டார். "டெஸ்டிஸ்" எனும் உறுப்பிலிருந்து வருகிறது என்று இவருக்கு சொல்லவேண்டுமாம். இப்பதிவில் உள்ள அவரது பின்னூட்டத்தினை கவனிக்க (http://suvanappiriyan.blogspot.com/2009/09/1.html) அதில் அவர் கூறியுள்ளார்: "விலாவுக்கும் முதுகெலும்புக்கும் என்பதற்குப் பதில் testis அப்டின்னோ, ஒரே வார்த்தையில் விந்து என்றோ சொல்ல முடியாதா என்ன?" இந்த கோமாளிக்கு இப்படி தப்பா சொன்னாதான் ரைட்டாம். டெஸ்டிஸ் எனப்படும் விரையிலிருந்து உயிரணுக்கள் மட்டும்தானே வருகிறது. குர்ஆன் பொதுப்படையாக "திரவம்" என்று கூறுகிறது. அந்த திரவத்தினை டெஸ்டிஸிலிருந்து வருகிறது என்று கூறும் இந்த கோமாளி, தனது பதிவில் படங்கள் எல்லாம் போட்டு காட்டுகிறார். அவருக்கு "நல்லடியார்" எனும் பதிவர் ஒரு பதிவு போட்டு விளக்கினார். அந்த திரவத்தின் பெரும்பகுதியானது, முதுகுத்தண்டுக்கு அருகில் உள்ள "செமினல் செசிக்கிள்" எனும் பகுதியிலிருந்து வருகிறது என்று இந்த கோமாளிக்கு விளக்கினார். ப்ரோஸ்டேட் கிளாண்ட் (prostate gland) என்ற ஒன்றும் பணியாற்றுகிறது என இந்த கூமுட்டைக்கு விளக்கப்பட்டது.

பிறகு கோமாளி தனது ராகத்தினை மாற்றினார். "செமினல் வெசிக்கிள்" முதுகுத் தண்டுக்கும் விலாயெலும்புக்கும் இடையில் இல்லை என்று ராகம் மாற்றப்பட்டது. விலாயெலும்புக்கும் கீழே உள்ளப்பகுதியில் இருப்பதாக அந்த கோமாளி கூறியது. நான் கூறினேன், குர்ஆன் ஒரு பகுதியினை அதன் பக்க எல்லைகளைக் கூறி வரையறுத்து, "அந்த பகுதியிலிருந்து வருகிறது" என்று குர்ஆன் கூறுவாதாகக் கூறினேன். குர் ஆன் கூறும் அப்பகுதி மொத்த "அப்டாமனை"யும் குறிக்கும் எனக் கூறினேன். (நம்மில் பலர் அப்டாமன் எனும் ஆங்கில வார்த்தையானது, அடிவயிற்றினைக்குறிக்கும் என நினைக்கின்றனர். கோவி. கண்ணன் எனும் பதிவர் இதே கருத்தைத் தெரிவித்திருந்தார். அது தவறு. அப்டாமன் எனப்படும் பகுதியினை விக்கிப்பீடியாவிலிருந்து, அது எது எனத் தெரிந்துக் கொள்ளலாம்.)

பிறகு அந்த கூமுட்டை, "வால்பையன்" எனும் பதிவரிடமிருந்து கீழ்தரமான விமர்சனங்களை அனுமதித்து, மற்றவர்கள் விவாதம் செய்வதைத் தடுக்கிறது. "வால்பையன்", தனது பின்னூட்டத்தில் ஒரு முறை "நல்லடியார்" எனும் பதிவரிடம், ஒருவர் தலையினை மெக்காவிற்கு எதிர்திசையில் சாய்த்துத் தொழலாமா ? என்று கேட்பதற்கு பதில், மெக்காவை நோக்கிக் குண்டியைக் காட்டித் தொழலாமா ? எனக் கேட்டார். இதனைத் தருமி அனுமதித்தார். (இது பற்றி நல்லடியார் புகார் செய்தபோது, வால் பையன் பதில் கூறினார். அப்போது "குண்டியை நமது உடலின் ஒரு அங்கம் எனக் காணும் முதிர்ச்சி நல்லடியாரிடம் இல்லை" என்று தத்துவம் பேசினார். வால்பையனுக்கு குண்டி என்பது தலை என்பது போல ஒரு சமத்துவமான அங்கம் தான் என்றால், அவர் தனது பெற்றோருக்கு மரியாதை செய்யும்போது சற்று வித்தியாசமாக மரியாதை செய்வாரோ ? இதில் இன்னும் அல்டிமேட் எப்படி இருக்குமென்றால், அவர் தனது மனைவியுடன் சேர்ந்து தனது பெற்றோருக்கு மரியாதை செய்யவேண்டும். ஹி ஹி ... ) இதை அனுமதித்த தருமிக்கும், அவரது வயதிற்காகவாவது, வால்பையன் மரியாதை செய்யட்டும்.

தருமியின் நேர்மை இத்தோடு முடியவில்லை. அவர் தான் ஒருவிஷயத்தினைப் படிக்காமலேயே, படித்தது போல நடித்து, மற்றவர்களைப் படிக்காதவர் போல காட்டுவார். இவரது இப்பதிவில், நான் இட்டிருக்கும் இப்பின்னூட்டத்தினைப் பார்க்கவும் (நீல வண்ணத்தில் காட்டியுள்ளேன்):


"பரந்த பூமி" என்றாலோ, "சூரியன் மறைகிறது", "sun sets" என்று சொன்னால் கூட தருமியால் குற்றம் காணமுடியும்.

அதென்ன தருமி, "sin of khalwa" ? அப்படியென்றால் என்னெவென்று தான் சொல்லுங்களேன். அதைக் குர்ஆனில் உள்ள தவறு என்று ஏன் சொல்கிறீர்கள் ? கொஞ்சம் நேர்மையோடு குர்ஆன் வசன எண்ணைக் குறிப்பிடவும். பிறகு பார்ப்போம் அது என்னவென்று.

(சும்மா வெறுமனே இணையதள முகவரியை மட்டும் குறிப்பிடுவதை தவிர்க்கவும். ஏனெனில், நீங்கள் ஏதோ அவைகளைப் படிப்பது போல குறிப்பிடுகிறீர்கள். ஆனால் அது பற்றி உங்களிடம் விவாதித்தால், அவைகளை நீங்கள் படிப்பதில்லை என தெரிகிறது. உங்கள் 353-ஆவது பதிவில், sin of khalwa பற்றி எழுதியவரை முன்னால்-முஸ்லிம் என அவிழ்த்து விட்டீர்கள். எப்படி சொல்கிறீர்கள் ? எனக் கேட்டேன். ஆனால் பதில் இல்லை.

"why i am not a Muslim ... 1" என்ற பதிவில், ஏதோ நீங்கள் படித்தது போல ஒரு ஆங்கில தளத்தின் சுட்டியை கொடுத்து ஒரு விஷயத்தினை விவாதித்துவிட்டு, பிறகு ஹதீதுகளை எப்படி "weak" என பிரிக்கிறார்கள் என தெரியவில்லையென முனுமுனுத்தீர்கள். அது அந்த பதிவிலேயே உள்ளது என சுட்டிக்காட்டப்பட்டது. சல்மான் ருஷ்டியின் "Satanic verses" படிக்காமலேயே "Rushdie Affairs" என ஏதோ விவாதிக்கிறீர்கள். அது பற்றி விவாதித்தால் அவர் புத்தகத்தினைப் படிக்கவேயில்லை எனத் தெரிகிறது. கேட்டால் 'காசு கொடுத்து புத்தகம் வாங்கிவைத்துள்ளேன்; இனிமேல்தான் படிக்கனும்' என்கிறீர்கள் :) இதைவிட கொடுமையென்னவென்றால், உங்களிடம் விவாதிப்பவரிடம் Satanic verses படித்துள்ளீர்களா எனக் கேட்கிறீர்கள் :)

எனவே நீங்கள் படித்ததை ஊர்ஜிதம் செய்யும் பொருட்டு, நீங்கள் என்னத்தினைப் புரிந்துகொண்டீர்கள் என எங்களுக்கு தெரியப்படுத்தும் பொருட்டு, முழுமையாக விவாதிக்கவும். வெறுமனே இணையதள முகவரியை மட்டும் சுட்டுவதைத் தவிர்க்கவும்.)

நான் முன்பு கேட்டிருந்தேன்: //குர்ஆனில் நூற்றுக்கும் மேல் தவறுகள் உள்ளதினை நீங்கள் கண்டு உணர்ந்தது போலோவோ அல்லது படித்து அறிந்ததுபோலோவோ ஆமோதிக்கும் தொனியில், நீங்கள் அதனைத் தேர்ந்தெடுத்து காட்டியிருப்பதால், அவைகள் யாது என அறியத்தருவது உங்கள் நேர்மைக்குட்பட்ட செயல்.// என நான் கேட்டதற்கு, தருமி அவர்கள், //அந்த நூலில் கண்டதைச் சொல்லியுள்ளேன். இனிமேல் அந்த தவறுகள் பற்றிய விளக்கங்கள் அந்த நூலில் வரும்; என் பதிவுகளில் தொடரும்// எனக் கூறினார். இதைத் தருமி அவர்கள், நேர்மையாக சொன்னாரா ? இல்லையா ? என அவரது பதிவுகளைத் தொடர்ந்து படித்து தெரிந்துகொள்வோம். வாசகர்கள் கவனிக்க: தருமி அவர்கள் நூறு தவறுகளைக் குறிப்பிட இருக்கிறார்; எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள் :)

தருமி, நீங்கள் பதிவில் எழுதிய, //Pipes என்பவர் தன் நூலில் சொல்வது: முமார் அல் கடாபி என்ற லிபியன் தலைவர்
வெளிப்படையாக குரானைப் பற்றியும், நபியையும் பற்றி் சொன்னவைகள் இதுவ்ரை சொல்லப்பட்டவைகளை விடவும் மிகவும் மோசமான கடவுள் தூஷணமாக இருக்கும்// என்ற வரியினை மேற்கோள் காட்டி, //இவைகளின் உண்மைத்தன்மையை ஆராய்ந்துவிட்டீர்களா ? நபிகளாரின் மனைவியரை, விலைமாதர்கள் போல் சித்தரித்த ருஷ்டியின் தூஷண‌த்தினைவிட கடாஃபியின் தூஷணம் எந்த அளவிற்கு மோசமானது என அறியத்தரவும்.
// எனக் கேட்டிருந்தேன். இன்னும் நீங்கள் பதில் சொல்லவில்லையே !

அப்புறம், நீங்கள் சுட்டிக்காட்டிய 22-ம் கேள்வியை வாசித்தேன். அதில் கேட்டிருந்தீர்கள்: //22.) ஒரு பானைக்கு ஒரு சோறு: Satanic verses என்பது முகமது சாத்தானால் சோதிக்கப்பட்டு, அல்லாஹ் கூறாத ஒரு வசனத்தைக் குரானில் சேர்த்ததாகவும், பின்பு மனம் கசிந்து அதை எடுத்ததாகவும், இல்லை அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்றும் இரு தரப்பு வாதங்கள் உண்டு. முகமதின் வாழ்க்கையில் நடந்த இந்த நிகழ்வுக்கு சர் வில்லியம் முய்ர் என்பவர் வைத்த பெயரே இது. இதை ஒரு நாவலுக்கு தலைப்பாக வைத்தார், சல்மான் ருஷ்டி. அதற்கு ஏன் இத்தனை வன்மம்? //

இதைப் படித்தபோது, அந்தப் புத்தகத்தினைப் படிக்காமலேயே விவாதிக்கும் மேதாவி நீங்கள் எனப் புரிந்தது.

}

Thursday, February 04, 2010

கடவுளின் இருப்பிற்கான ஆதாரம்

ஒரு நல்ல கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. அதன் சாரம்சத்தினை மொழிபெயர்த்து சற்று விளக்கியுள்ளேன்.

கடவுள் இருப்பதற்கு நான்கு விதமான வாதங்களை வைக்கலாம்.

(கீழே Universe என்பதினை 'அகிலம்' என எழுதாமல், 'உலகம்' என எழுதுகிறேன். இங்கே உலகம் என்பது பூமி என்று மட்டும் இல்லை. அனைத்துமே)

1. உலகில் (Universe) உள்ள விதிகளின் படி அதன் தோற்றத்திற்கான காரணம் ஏதேனும் இருந்தே ஆக வேண்டும். அக்காரண கர்த்தாவே கடவுள்

(குறிப்பு: இதே வாதத்தினை கடவுளின் தோற்றத்திற்கு வைக்கமுடியாது. ஏனெனில், "ஒரு தோற்றத்திற்கு காரணம் தேவை" எனும் கூற்றானது உலகில் நாம் காணும் உண்மை. அவ்வுலகம் தோன்றுவதற்கு முன்பு உள்ள நிலையில் இது சரியான கூற்றா என நமக்குத் தெரியாது. ஏனெனில் நாம் உலகின் ஓர் அங்கம். இது பற்றி எனது முந்தைய பதிவினைப் படிக்கவும். )

2. இவ்வுலகத்தில் எண்ணற்ற அமைப்புகள் உள்ளன. விளைவுகள் நிகழ்கின்றன. உலகம் மிகச் சிக்கலான பெருவமைப்பாக உள்ளது. ஆனால் அவைகளில் ஒர் ஒருங்கு தென்படுகிறது. இது ஒரு மிகச்சிறந்த வடிவமைப்பாளனாலேயே சாத்தியம்.

3. மேலே உள்ள இரண்டு வாதங்களும் ஒரு விதத்தில் ஒத்தவை. விளைவுகளைச் சுட்டிக்காட்டி, காரணத்தினை அனுமானித்தல் அல்லது ஏற்றல் எனும் வகையைச் சார்ந்தது. ஆனால் இப்போ கூறப்போகும் மூன்றாவது வாதம் சற்று வேறுபட்டது. விளைவினைத் துணைக்கு அழைக்காமலேயே, விளைவுடன் காரணம் சேர்ந்து இயங்குகிறது என்பதாகும். இந்த வாதத்தின் மூலம் இப்னு சினா எனும் இஸ்லாமிய அறிவியல் அறிஞர் ஆவார். அவரது "அஷ் ஷிஃபா" எனும் மருத்துவ நூலில் கூறி இருப்பதாக இந்த பக்கம் கூறுகிறது. இப்போது அந்த வாதத்தினைப் பார்ப்போம்:

பொருட்களின் இருப்பு என்பதினை, "இருக்கக் கூடியது" என்றும் "இருக்க சாத்தியமானது" என்றும் பிரிக்கலாம். இது அரிஸ்டாட்டிலின் வகைப்படுத்தல் ஆகும். இந்த வகைப்படுத்தலில், தற்போது இருப்பவைகளையும், எதிர்காலத்தில் இருக்கப்போவைகளையும் உள்ளடக்க முடியும். இப்போது இப்னு சீனாவின் வாதம் இவ்வாறாக செல்கிறது: இருக்கின்றவைகள் இருக்கின்றன. சாத்தியமானவகள் என்பவைகளும் இருக்க முடியும், ஆனால் அதை இருக்கச் செய்ய ஒரு செயல்பாடு தேவை. அந்த செயல்பாடு தற்போது இருப்பவைகளின் மீது செயல்பட்டு, அந்த சாத்தியமானதினை இருக்கச் செய்யும். தற்போது இருப்பவைகளும் அவ்வாறே இருப்பிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அந்த இருப்பிற்கு காராணமான செயல்பாடு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஏனெனில் புது சாத்தியமான பொருட்கள் இருக்கக்கூடியவைகளாக ஆகுகின்றன. எனவே விளைவுகளை உணரும் நாம் அச்செயல்பாடுகளுடன் அல்லது காரணத்துடன் இணைந்தே வாழ்கிறோம் எனக் கூறுகிறார். இது நேரடியாக கடவுளின் இருப்பு என்பதினை மிகத் தெளிவாக சுட்டாவிட்டாலும், அதனை கீழ்கண்டவாறு உணரலாம். அதாவது பொருட்கள் இருக்கக்கூடியவைகளாக ஆகுகின்றன. ஆனால் அவைகள் காலத்திற்குட்பட்டவைகளாகுகின்றன. ஆனால் செயல்பாட்டுத் தொடரோ காலவரையற்றதாக இருந்து வருகிறது. எனவே செயல்பாட்டின் காரணம், அந்த செயல்பாடுகளினால் இருக்கக்கூடியவைகளாக ஆகும் சாத்தியமானவைகளுக்கு அப்பாற்பட்டது. எனவே அந்த 'அப்பாற்பட்டது' இருக்கிறது.

4. நான்காவது வாதம் "நேர்மை மதிப்புகள்" (moral values) பற்றியது. அடிப்படையான நேர்மை உணர்வுகள் எங்கும் ஒரே விதத்தில் உள்ளன. அது நிறம், மதம், இடம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டுள்ளன. ஒருவனின் மனைவியினை மற்றான் திருடுவது எங்கும் நேர்மையற்ற செயல்தான். ஒருவனின் பொருளை மற்றவன் திருடுவது எங்கும் நேர்மையற்ற செயல் தான். இது இவ்வாறாக இருக்கக் காரணம் கடவுள் மட்டுமே ஆகும். இதில் ஒருவருக்கு இந்த நேர்மைவிதிகள் ஏற்றுக்கொள்ளத்தக்கதா இல்லையா என்பதைப் பொருத்தல்லாமல், இவ்விதிகளால் அவர் ஆளப்படுகிறார் என்பது ஓர் ஆதாரம். இந்த நான்காவது வாதம் பற்றி மேலும், இந்த தளத்தில் படித்துக்கொள்ளலாம்.

Tuesday, February 02, 2010

ஹெச்.ஜி. ரசூல் திண்ணையில் எழுதிய “சூரியனும் சந்திரனும்” பற்றி

ஹெச்.ஜி. ரசூல் திண்ணையில் எழுதிய “சூரியனும் சந்திரனும்” பற்றி

ஹெச். ஜி. ரசூல் அவர்களின், “சூரியனும் சந்திரனும்” எனும் கட்டுரையைத் திண்ணை இணையதளத்தில் வாசித்தேன் (http://www.thinnai.com/?module=displaystory&story_id=21001281&format=html).

முதலில் ஒரு திருத்தம்:

அதில் அவர் கடைசியாக, “அல்லா பாலினம் கடந்த சொல் என்பது குறித்தும் உயர்மரபு சூரியன் என்பதால் மொழியியல் அடிப்படையில் அல்லா என்ற சொல் ஆண்பாலின அடையாளமாக குறிப்பிடப்படுகிறது என்பது குறித்ததுமான வரையறைகள் இன்னும் புது தெளிவுகளுக்காய் மறுவிவாதத்திற்கு உட்படுகின்றன” என்று எழுதி முடித்திருந்தார். இதில் “சூரியன்” என்ற வார்த்தையை நுழைத்திருப்பதால் அவர் என்ன சொல்லவருகிறார் என்பது விளங்கவில்லை. ஒரு சமயம் அவர் தவறுதலாக, தட்டச்சுப் பிழையாக, வேறு ஏதோ ஒரு வாக்கியத்தினை எழுத எத்தணித்து “சூரியன்” என்று எழுதிவிட்டு, பின்பு அதற்கு மாறாக மற்றொரு வாக்கியத்தினை எழுத நினைத்து, அவ்வாறு எழுதியும் விட்டு, பின்பு “சூரியன்” என்ற வார்த்தையினை அழிக்க மறந்துவிட்டார் எனக் கொள்வோம். எனவே, அர்த்தமே வராமல் உள்ள அவரது பிழையுள்ள வாக்கியம், நான் கீழே கொடுத்துள்ளவாறு, இதுவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்:

“அல்லா பாலினம் கடந்த சொல் என்பது குறித்தும், உயர்மரபு என்பதால் மொழியியல் அடிப்படையில் அல்லா என்ற சொல் ஆண்பாலின அடையாளமாக குறிப்பிடப்படுகிறது என்பது குறித்ததுமான வரையறைகள் இன்னும் புது தெளிவுகளுக்காய் மறுவிவாதத்திற்கு உட்படுகின்றன”.

அதாவது அவரது வாக்கியத்தில், “சூரியன்” என்ற சொல்லை மட்டும் எடுத்துவிட்ட பிறகு அவர் என்ன சொல்லவருகிறார் என அறியமுடிகிறது.

இப்போது எனது விமர்சனம்:

ஹெச். ஜி. ரசூல், தனது கட்டுரையில் கொடுத்துள்ள விவரங்கள் அடிப்படையில், “ ‘அல்லா’ எனும் சொல் ‘பாலினம் கடந்த சொல்’ எனும் வரையறை இன்னும் புது தெளிவுக்காய் மறுவிவாதத்திற்கு உட்படுகின்றது” என்ற அவரது கடைசி வாக்கியத்தின் ஒரு பகுதிக்கு உடன்படும் வகையில் குறிப்புகள் உள்ளன.

ஆனால், அவரது கடைசி வாக்கியத்தின் மற்றொரு பகுதியான, “, உயர்மரபு என்பதால் மொழியியல் அடிப்படையில் அல்லா என்ற சொல் ஆண்பாலின அடையாளமாக குறிப்பிடப்படுகிறது என்பது குறித்த வரையறை இன்னும் புது தெளிவுக்காய் மறுவிவாதத்திற்கு உட்படுகின்றது” என்பதினை முடிவு செய்யும் வகையில் அவரது கட்டுரையில் ஏதுமே காணப்படவில்லையே !

அரபு மொழியில், பால் சாரா உயர்திணைச் சொல் இல்லாததால், “ஆண்” எனும் பால் கொண்ட உயர்திணைச் சொல் பயன்படுத்தப்படுவதாக அம்மொழி அறிந்தவர்கள் கூறுகின்றனர். “அவன்”, “செய்தான்” என்று ஆண்பால் சொற்களே பயன்படுத்தப் பட்டுள்ளன. இந்த நிலை அரபி மொழிமட்டுமின்றி, அநேக மொழிகளிலும் இதுதான் நிலை.

அவரது கட்டுரையில் இரு வித பொருள்-நடைகள் உள்ளன. சந்திரன் அரபி இலக்கியத்தின் படி ஆண்பால் என்பதால், அல்லாஹ் ஆண்பால் என்று வாதிடும், அல்லது வாதிடுபவரின் வாதத்தினை முன்வைக்கும் ஹெச். ஜி. ரசூல், சந்திரனைத் தான் அல்லாஹ் என்று இஸ்லாம் கூறுகிறதா எனக் கூறவில்லையே ! இருப்பினும், சந்திரனைத்தான் முஸ்லீம்கள் அல்லாஹ் என்று கூறுவதாக மறைமுகமாக ஒரு வாதத்தினை முன் வைத்துள்ளார். சந்திரனை அல்லாஹ் என்று முஸ்லிம்கள் கருதுவதால் தான், பிறைச்சந்திரன் முஸ்லீம்களின் அடையாளமாகிவிட்டது எனக் கூறுகிறார். அல்லது அவ்வாறு கூறுபவரின் வாதத்தினை முன்வைத்து, ஹெச். ஜி. ரசூல், “ உயர்மரபு என்பதால் மொழியியல் அடிப்படையில் அல்லா என்ற சொல் ஆண்பாலின அடையாளமாக குறிப்பிடப்படுகிறது என்பது குறித்த வரையறை இன்னும் புது தெளிவுக்காய் மறுவிவாதத்திற்கு உட்படுகின்றது” என்று கூறுகிறார்.

“அல் – இலாஹ்”, அதாவது, “கடவுள்” என்ற சொல்லை சில அரபுக்கள் சந்திரனுக்கும் பயன்படுத்துகின்றனர். அனுமாருக்கும் பிள்ளையாருக்கும் கூட அவர்களது நம்பிக்கையைப் பொருத்து பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்காக இஸ்லாம் கூறும் கடவுள் “இதுதான்” “இத்தகையதுதான்” “பிள்ளையார்தான்”, “அனுமார்தான்” அல்லது “சந்திரன்தான்” என யாராலும் கூறமுடியுமா ? இதற்காக ஹெச். ஜி. ரசூல், “ உயர்மரபு என்பதால் மொழியியல் அடிப்படையில் அல்லா என்ற சொல் ஆண்பாலின அடையாளமாக குறிப்பிடப்படுகிறது என்பது குறித்த வரையறை இன்னும் புது தெளிவுக்காய் மறுவிவாதத்திற்கு உட்படுகின்றது” என்று கூறுவதற்கு தேவையென்னவென்று தெரியவில்லை.

இஸ்லாம் கூறும் இறை ஆண்பால், பெண்பாலுக்கு அப்பாற்பட்டது என்பதினை, இஸ்லாத்தின் நூலான குர்ஆன் மூலமாகவே அறியலாம்:
“அவனைப் போன்று எதுவும் இல்லை” – குர்ஆன் 112:4

இறைவன் எப்படியிருப்பான் என இஸ்லாமிய கண்ணோட்டத்தில் கூறவேண்டுமானால், சிறந்த வழி, நாம் பார்ப்பதெல்லாவற்றையும் இறைவன் இல்லை என்பதுதான். சந்திரனைப் பார்த்து “அதுவும் இறைவனில்லை” என்றால் அது ஒருவகையான விளக்கம். குர்ஆன் இதனை மிக வெளிப்படையாகவேக் கூறுகிறது:

“சூரியனையும் சந்திரனையும் வணங்காதீர்கள்; நீங்கள் கடவுளை வணங்குபவர்களாக வேண்டுமெனில் அவைகளைப் படைத்தவனை வணங்குங்கள்” – குர்ஆன் 41:37