பிபிசியில் ஒரு பிரச்சாரம். அதன் வழக்கமான மேற்குலக பிரச்சாரம். அது ஆஃகானிஸ்தானில் சண்டையில் ஈடுபட்டு இறந்த மூன்று பேர்களின் தாயார்களிடம் கண்ட பேட்டி பற்றியது. இறந்த அம்மூவர்களில், ஒருவர் ஆங்கிலேயர். பிரிட்டிஷ் ஆக்கிரமிப்புப் படைக்காகப் போராடியவர். மற்றொருவர் ஆஃப்கானியர், ஆனால் ஆக்கிரமிப்பு படையின் உதவி-எடுபிடிப் படையான ஆஃகான் இராணுவத்திற்காகப் போராடியவர். மற்றொருவர் தாலிபனுக்காகப் போராடிய ஆஃகானியர்.
இவர்களின் தாயார்களின் பேட்டியின் சுருக்கத்தினை மட்டுமே பிபிசி -யின் இணையதளத்தில் படிக்க முடிந்தது:
பிரிட்டிஷ் வெள்ளைக்காரப் போராளியின் தாயார் சொல்கிறார், அவரது மகன் ஆஃகான் மக்களின் மேம்பாட்டுக்காகப் போராடத்தான் ஆஃகானிஸ்தான் சென்றாராம் :-). இது பல ஜேம்ஸ்பாண்ட், இண்டியானா ஜோன்ஸ் திரைப்படங்களில் காட்டப்படுவது போல, வெள்ளைக்காரர்கள் மற்ற நாடுகளில் சென்று அங்குள்ள குடிமக்களுக்காகப் போராடுவது போலக் காட்டுவதை ஒத்தது.
ஆனால் அந்த பிபிசி தேர்ந்தெடுத்திருக்கும் தாலிபானின் தாயார், தனது மகன் பணத்திற்காகத் தான் தாலிபானிடம் சேர்ந்து போரிட்டாராம் :-) இதை பிபிசி ஆஃகானிஸ்தானின் பாஷ்தோ மொழியில் ஒளிபரப்பு செய்யப்போகிறதாம்.
0 comments:
Post a Comment