Friday, July 03, 2009

ஹாண்டுராஸில் ஒரு சீர்திருத்த கூ (Coup), ஹி ஹி

இஸ்ரேல் செய்துவரும் பாலஸ்தீன இனஒழிப்பினை துரிதப்படுத்தும் நோக்கத்துடன், அதற்குத் தடையாக இருக்கும் ஈரானில் சீர்திருத்தம் வேண்டி மேற்கு நாடுகள் ஆர்வத்துடன் இருந்தபோது, ஈரானில் சீர்திருத்தவாதிகளின் ஆர்பாட்டம் நிகழ்ந்தது.

ஈரான் சீர்திருத்தவாதிகள், மேற்கு விரும்பும் சீர்திருத்தத்தினைத்தானா கொண்டுவரப்போகிறார்கள் என்பது தெளிவாக தெரியாவிட்டாலும், தற்போதைய அரசினை கவிழ்ப்பதில் இருவரும் ஒத்த கருத்து கொண்டுள்ளதால், மேற்கின் ஊடகங்களும் அரசுகளும், ஈரான் சீர்திருத்தவாதிகளுக்குப் பின் அணிவகுத்தன.

அமெரிக்காவால் நிறுவப்பட்ட ஷாஹ்வின் சர்வாதிகார ஆட்சி கவிழ்க்கப்பட்ட தினத்திலிருந்து, மேற்கு நாடுகள் அனைத்தும் அகமேனியக் காலத்துக்கும் முற்பட்ட தனது பாரசீக எதிர்ப்பினை மீண்டும் துவக்கியது. அவைகள் ஏதேனும் வாய்ப்பினை எதிர்நோக்கி உள்ளன.

இந்த நிலையில், ஷாவின் வாரிசான மற்றொரு ஷா அமெரிக்காவிலிருந்து சீர்திருத்தவாதிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகிறார். ஈரானின் கலாச்சாரத்தினை Reading Lolita in Tehran எனும் நூலைக் கொண்டு தாக்கி எழுதிய, மற்றும் ஷாவின் அரசில் தனது குடும்பமே பணியாற்றிய பெருமையையுடைய, மற்றும் ஈரான் அரசு எதிர்ப்பு சிந்தனை உருவாக்க மையங்களில் (think tank) பணியாற்றுபவரும் எழுத்தாளருமான அஸார் நஃபிசி அமெரிக்காவிலிருந்து ஈரான் மக்களுக்காகக் குரல் கொடுக்கிறார். ஈரான் மீது குண்டுகள் போட ஆசித்த மெக்கெய்ன் எனும் வலதுசாரி அரசியல்வாதியும், ஈரான் நாட்டு மக்கள் மீது தான் புதுக் கவலையுடன் இருப்பதாகக் கூறுகிறார்.


இவ்வாறு மேற்கு நாடுகள் அனைத்தும் "ஜன நாயகம், ஜன நாயகம்" எனப் போலிக் கூக்குரலிட்டாலும் அது உலகில் ஆதரவு அளித்துவரும் சர்வாதிகாரர்கள் தான் எத்தனைப் பேர் !!

ஈரானில் 1950களில் ஜன நாயக ஆட்சியினை வீழ்த்தி 1979 வரை நீடித்த‌ ஷாவின் சர்வாதிகார முடியாட்சியினை ஏற்படுத்தியது யார் ? தற்போது அவர்கள் ஆதரவு அளித்துவரும், எகிப்தின் முபாரக் யார் ?

மேலும் கடாஃபி யார் ?

மேலும் கஸக்ஸ்தான் அதிபர் யார் ?

ஜோர்டான் மன்னர் யார் ?

கத்தார், சவுதி மற்றும் ஐக்கிய அரபு நாடுகளின் மன்னர்கள் யார் ?

மேலும் ஈராக்கின் மாலிக்கியும், ஆஃகானிஸ்தானின் கர்சாயும் நேர்மையான தேர்தலில் தான் வந்தவர்களா ?

பெரு நாட்டில் நடப்பது என்ன ? அங்கு அரசினை எதிர்த்துப் போராடிய பூர்வீக குடிமக்கள் மேற்கு சார்பு ஐரோப்பியர்களின் அரசால் நூற்றுக் கணக்கில் சுட்டுகொல்லப்பட்டதை மீடியாக்கள் எப்படி மூடி மறைத்தன ? அவைகளை ஈரான் வீச்சு அளவிற்காவது பரப்பினார்களா ?

தற்போது ஹாண்டுராசில் நடந்துள்ள, மேற்கு-ஆதரவு இராணுவப்-புரட்சியை ஊடகங்கள் எப்படி மிருதுவாக காண்கிறது ? அல்லது அதற்கு மீடியாக்கள் தரும் முக்கியத்துவம் தான் என்ன ?

சிந்தியுங்கள். ஹாண்டுராஸில் இராணுவப் புரட்சியின் மூலம் வந்துள்ள அதிபர் தனக்கு இஸ்ரேல் மற்றும் தைவானின் துணை இருந்ததாகக் கூறுகிறார். முந்தைய அதிபர் மக்கள் நலன் சார்ந்து அமெரிக்க மற்றும் மேற்குக் கம்பெனிகளுக்கு எதிர் உள்ளம் கொண்டவர். மக்கள் நலன் சார்ந்த மற்றைய சில நாடுகளின் அதிபர்களான சாவேஸ், மொராலஸ் போன்றவர்களின் ஆதவினைப் பெற்றவர்.

மேற்கின் ஜனநாயகம் புல்லரிக்கின்றது