Monday, June 15, 2009

ஈரான் தேர்தல்-பிபிசியின் வயிற்றெரிச்சல்

ஈரானில் நடந்து முடிந்த தேர்தல் உலக அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.

மேற்குலக நாடுகள் இஸ்ரேல் சார்பாக அணிதிரண்டிருக்க, மத்தியகிழக்கு நாடுகளிலும் பெரும்பான்மை நாடுகள் இஸ்ரேல் சார்பான அரசியல்கொள்கைகளைக் கொண்டிருக்க, ஈரான் மற்றும் சிரியா மட்டுமே சற்று மாற்றுக் கொள்கை கொண்டுள்ளன. எனவே, பலம் ரீதியாக ஈரான் அவர்களுக்கு இணையாக முடியாதெனினும், அதன் மாற்றுக்கொள்கையினால் உலக அரங்கில் அது முக்கியத்துவம் வாய்ந்த நாடாகிறது.

அதில் சில நாட்களுக்கு முன்பு தேர்தல் நடைபெற்று அஹமதினேஜாத் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஒரு மரபுவழியாளர். இருப்பினும் பெரும்பாலான அரபு நாடுகளில் உள்ள மரபு வழியாளர்களைப் போலல்லாமல் வக்கிரசிந்தனைகளை விலக்கியவர். இது ஈரான் வாழ் மரபுவழியாளர்கள் அனைவர்களிடமும் உள்ள ஒரு பண்பு. அரபு நாடுகளில் மட்டுமே தனது கலாச்சாரம் ஒட்டிய வக்கிர சிந்தனைகளை தூய இஸ்லாத்துடன் கலந்து மக்களை அடிபணியச்செய்து முடியாட்சிகளை இஸ்லாத்தின் பெயரால் நிறுவி இஸ்ரேல் சார்பு அரசினை நடத்தி வருகிறார்கள்.

ஈரானிலோ தேர்தல் முறை அமலில் உள்ளது.

எங்கே ஈரானைப் பார்த்து தனது நாட்டு மக்களும் ஜனநாயக முறைக்கு மாற்றம் வேண்டி புரட்சி செய்ய ஆரம்பித்துவிடுவார்களோ என்ற பயத்தில், அரபு நாட்டு ஆட்சியாளர்கள் தங்களது குடி மக்களிடம், வைதீக மற்றும் ஷியா பிரிவுகள் சார்ந்த‌ பேதங்களையும், அரபு மற்றும் பாரசீக பிரிவு சார்ந்த பேதங்களையும் புகட்டி கவனத்தினை திசைத்திருப்பி வருகிறார்கள். இருப்பினும் பலரும் ஈரான் கலை, அறிவியல் இலக்கியத் துறைகளில் அடைந்து வரும் முன்னேற்றத்தினை கவனிக்காமல் போகிறார்களில்லை.

'ஈரானில் சீர்திருத்தவாதிகளே வெற்றிபெறுவார்கள்' என பிபிசி போன்ற மேற்குலக ஊடகங்கள் பிரச்சாரம் செய்தன. அதற்கு காரணமே, அவ்வாறில்லாமல் மரபுவழியாளர்கள் வெற்றிபெற்றால், 'தேர்தல் குறையுள்ளது' எனும் சீர்திருத்தவாதிகளின் கூட்டுக் கூச்சலை பரப்பும்போது ஆமோதிக்கப்படும் என்பதே.

அதேபோல் மரபுவழியாளரான அஹமதினேஜாத் வெற்றி பெற்றுவிட்டார். உடனே பிபிசி போடும் கூச்சல் தாங்க முடியவில்லை. நீங்களே சென்று பாருங்கள். அதன் தொடர்ச்சியான செய்திகள் அனைத்தும் இஸ்ரேல் பிரதமரின் மனக் கருத்தினைப் போலுள்ளது.

உதாரணத்திற்கு இந்த செய்தியப் பாருங்கள்: Iranian protesters call off rally அதில் செய்தியைத் தவிர பிபிசி தனது அபிப்ராயத்தினையும் கலந்துள்ளது. "The BBC understands that Mr Mousavi called off the rally after being warned that militias policing it would be equipped with live rounds" :))

அதே செய்தியில் மேலும் ஒரு இடத்தில், "The BBC's Jon Leyne, in Tehran, says he understands plain-clothed militias had been authorised to use live ammunition for the first time. ", என்று தனது கருத்தினை செய்தியுடன் சேர்த்து கூடு கட்டியுள்ளது.

சீர்திருத்தவாதிகள் ஒன்றும் மோசமானவர்களில்லை. ஆனால் எனது பார்வையில் அஹமதினேஜாத் தற்போதைய உலக அரங்கில் தேவையானவர்.

மத்திய கிழக்கு அரசியல் பற்றி எழுதும் முதுபெரும் பத்திரிக்கையாளர், ராபர்ட் ஃபிஸ்க்கின் கட்டுரையை நான் உங்களுக்குப் பரிந்துரைக்கிறேன். இந்த இணையதளம் சென்று படித்துக் கொள்ளுங்கள்.

2 comments:

கையேடு said...

இது பற்றி விரிவாக ஒன்றும் தெரியாது மாலிக், ஆனால், தொடர்ந்து இவர்கள் அங்கு நடந்த தேர்தலுக்கு எதிரான கோஷங்களை முன்னிறுத்திய போதே ஏதோ ஒன்றை கட்டமைக்க முனைகிறார்கள் என்று மட்டும் தோன்றியது.

நீங்கள் அளித்துள்ள சுட்டிகளை வாசித்தால் ஏதாவது புரிகிறதா பார்க்கிறேன்.

மு மாலிக் said...

Thanks Ranjith,

Now I learn from various blog-posts that there were few places for suspicion, as transparency was lacking in the election process.

But they suspect the claim that Moussavi was deprived of his win.