Wednesday, December 09, 2009

அல்லாஹ்வின் "தோற்றம்", "தொடக்கம்", "இருப்பு" பற்றிய கேள்விக்கான என் பதில்

"கடவுள் என்பவன் இவ்வுலகைப் படைத்தான்" எனக் கூறப்பட்டதும், "பகுத்தறிவுவாதிகள்" எனத் தங்களை அழைத்துக் கொள்ளும் சிலர், துள்ளியெழுந்து கேட்கும் கேள்வி: "கடவுளைப் படைத்தது யார் ?"

அடுத்த கேள்வி: "கடவுள் எங்கிருக்கின்றான் ?"

அடுத்த கேள்வி: "கடவுளுக்கு முந்தையவன் யார் ?"

இவைகள் பள்ளிப் பருவத்திலிருந்தே நான் எதிர்கொள்ளும் கேள்விகள்.

இதற்கான பதில், "கடவுள் அனைத்தையும் படைத்தவன்" என்பதிலேயே பொதிந்திருக்கின்றது. அது பற்றி சற்று சிந்திப்போம்.

"உலகம் படைக்கப்பட்டது" எனும் வாக்கியத்தில், அது ஒரு காலப் புள்ளியில் தொடங்கப்பட்ட‌ சம்பவம் எனும் கருத்து உள்ளது. "அதற்கு முன்பு யிருந்த இறைவன் எப்போ படைக்கப்பட்டான் ?" எனும் கேள்விக்கு வேலையில்லை. ஏனெனில், படைப்பு எனும் ஏதும் நிகழ்ந்திருக்காத நிலையில், காலம், இடம், திசை ஆகிய எதற்கும் எந்த வேலையும் இல்லை. அதே சமயத்தில் படைப்புகளுக்கு முன்பு ஏதும் இல்லை என சொல்லவும் முடியாது. அறிவியல் பூர்வமாக, அதனை "ஒன்றுமே தெரியாத நிலை" (singularity) எனக் கூறுவார்கள். இப்போது ஏதேனும் ஒரு சம்பவம் நடக்குமானால் அதனை மற்றொரு சம்பவத்துடன் ஒப்பிட்டு, "அந்த சம்பவத்திலிருந்து இந்த சம்பவம் இத்தனைக் கால இடைவெளிக்குப் பிறகு நிகழ்ந்தது" எனக் கூறமுடியும். தற்போது நடக்கும் ஏதேனும் ஒரு சம்பவத்தினை நமக்கு முன்பு நடந்த ஏதேனும் ஒரு சம்பவத்துடன் ஒப்பிட்டுக் கொள்ளலாம். கவனிக்க, இதற்கு முன்பு நடந்த ஏதேனும் ஒரு சம்பவத்துடன் மட்டும் தான் ஒப்பிடமுடியும். அவ்வாறு ஒப்பிட்டுக்கொள்வதற்கு நமது வசதிக்கு ஏற்ற‌ சம்பவத்தினை எடுத்துக் கொள்ளலாம். ஒரு சம்பவத்தினை அதற்கு பின் நடந்த சம்பவத்திலிருந்து நாம் ஒப்பிட முடியுமானால், அவ்வாறு நாம் ஒப்பிடும் சம்பவம் நமது தற்காலத்திற்கு முன்பு நடந்திருந்தால் மட்டுமே சாத்தியம். நமது தற்காலத்திற்கு பின்பு நடைபெறும் சம்பவத்துடன் நாம் எதையும் ஒப்பிட்டு நாம் எதையும் சொல்லமுடியாது. (இது இயற்பியல் கருத்து; என் சொந்த கருத்தல்ல). அவ்வாறு ஒப்பீட்டலுக்கு நாம் தேர்ந்தெடுக்கும் சம்பவம், "படைப்பு" அல்லது "தோற்றம்" எனும் சம்பவம் அளவிற்கு முற்பட்டதாக இருக்கும் அள‌விற்கு நாம் எடுத்துக் கொள்ளலாம். அதற்கு முற்பட்டதாக நாம் எடுக்க முடியாததன் காரணம், நாம் அந்த படைப்புகளின் ஒரு அங்கம். எனெவே படைப்புக்கு முற்பட்ட இறைவன் "எப்போ தோன்றினான் ?" எனக் கேட்டால் அந்த கேள்வி அனர்த்தமானது.

அது போலவே "இறைவன் எங்கிருக்கின்றான்" எனும் கேள்வியும். "இடம்" என்பது "பொருட்களின் தோற்றம்" எனும் செயலால் தானாக விளைந்த ஒன்று. அவைகள் ஏற்படாத போதே இருந்த இறைவனைப் பற்றி "எங்கு ?" எனக் கேள்வி யெழுப்பவது அனர்த்தம்.

இங்கு நான் சொல்லியிருப்பது சற்று சிந்தித்தால் மட்டுமே புரியும். இல்லாவிட்டால் குழம்பவேண்டியதுதான்.

குர்ஆனில் இறைவன் "பொருட்களை வணங்கவேண்டாம்" எனக் கூறுவதன் காரணத்தினை, இதன் காரணமாகவே நாம் அறிவுபூர்வமாக விளக்கவும் முடியாது. ஆனால் பொருட்கள் இறைவனின் தன்மையை மட்டுபடுத்துகின்றன, என்பது மட்டும் தெளிவு. ஒரு வகை "மன ஒருமைப்படுத்தலுக்காக" எனும் காரணமும், அவனை, "காலம், இடம், தன்மை" போன்றவற்றில் மட்டுப் படுத்திய நிலைக்கான ஒருமைப் படுதலுக்கே உதவும். அதனை ஏன் இறைவன் விரும்பவில்லை என்பது நமக்கு தெரிய வாய்ப்பில்லை. ஏனெனில், நாம் படைப்பின் ஒரு அங்கம் என்பதுவே.

(இது முஸ்லீம்களுக்கு மட்டும்: குர்ஆனில் படைப்பிற்கு பிறகு இறைவன் "அர்ஷின் மீது அமைந்தான்" எனும் வார்த்தையை நான் நன்கு சிந்தித்ததுண்டு. அதற்கான விடையும் "என் அறிவிற்கு அப்பாற்பட்டது" என்பதுதான். அர்ஷ் எனப்படுவது நாம் ஒருதிசையை சுட்டும் இடத்திற்கு உட்பட்டதல்ல. அது மெக்காவிற்கு மேலும் இல்லை, ஜெரூசலத்திற்கு மேலும் இல்லை. ஒரு ஹதீஸில் வருவது போல, நல்ல இறையச்சமுடையவர்களின் மனமாக இருக்க வாய்ப்புள்ளது")

Saturday, October 03, 2009

ஐ லவ் பிரெசிடென்ட் புஷ்: தலாய்லாமா

தலாய்லாமா என்பவர் இந்தியாவிலுள்ள ஹிமாச்சல் மாநிலத்திலுள்ள‌ தரம்ஷாலாவில் உல்லாச‌ விடுதி நடத்தும் ஒரு தொழிலதிபர். இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் அவ்வப்போது இங்கு வந்து ஓய்வு எடுக்கிறார்களாம். மேலும் இவர் பகட்டான வாழ்க்கையின் சிகரம். பொழுதுபோக்கு நச்சத்திரங்கள் எல்லாம் இவருடை விசிறிகள். மேற்கத்திய அரசியல் சிந்தனையில் ஊறித்திளைக்கும் பல சிந்தனையாளர்களின் வாயில் மெல்லப்படும் அவல் இவர். சில சமயங்களில் விளம்பரங்களிலும் நடிக்கும் ஸ்டார். 'வோக்' எனப்படும் ஃபாஷன் பத்திரிக்கையின் கெளவரவ ஆசிரியராகவும் உள்ளவர்

இவர் இந்தியாவுக்கு தஞ்சம் தேடுவதற்கு முன் 1960 களிலேயே 14 மாடிவரைக் கட்டப்பட்ட 1000 (ஆயிரம்) அறைகள் கொண்ட 'பொட்டாலா' அரண்மனையில் வாழ்ந்தவர். சகதிபெத்தியர்கள் வறுமையில் வாடும்போது இவருக்கு மட்டும் இந்த வாழ்க்கை அவருக்கு தேவையானதாக இருந்தது ஏனெனில், இவர் புனிதம் மிகுந்தவர். மேட்டுக்குடியினைச் சார்ந்தவர். எனவே அதில் ஒன்றும் தவறு கிடையாது போலும் ! மேலும் இவர் உலக வாழ்க்கையைத் துறந்த துறவியல்லவா !! அவர் ஒரு 'மான்க்'.

உலகில் பொதுமக்களைக் கொன்று குவிக்கும் போர்களைப் பற்றி எவ்வித மூச்சும் விடாதவர். இருப்பினும் அமைதிக்கான நோபல் பரிசினைப் பெற்றவர். இவர் ஆஃப்கான் மற்றும் ஈராக் போர்களைப் பற்றி எந்த எதிர்ப்பும் சொல்லாதவர். இஸ்ரேல் அனுதினமும் பாலஸ்தீனர்களைக் கொன்று குவித்தாலும், இஸ்ரேலுக்கு சென்று பாலஸ்தீனர்களிடம் அறிவுரைக் கூறியவர். 'வன்முறை வேண்டாம்' என்பது தான் பாலஸ்தீனர்களை நோக்கி அவர்கூறிய அந்த அறிவுரை. அமைதிக்கான நோபல் பரிசினைப் பெற்றவரல்லவா ? அதனால் தான் அந்த அறிவுரை. இவர் சீனாவிடமிருந்து தப்பி வருவதற்கு முன்பு, இவர் ஏதோ சீனாவினை எதிர்த்து வன்முறையில் ஈடுபடாதவர் போல, இவரிடமிருந்து இந்த அறிவுரை.

பிரெசிடெண்ட் புஷ்ஷை நேசிக்கின்றேன் என பறைசாற்றியவர். இப்போது, ஈராக் போரைப் பற்றியும் ஆஃப்கான் போரைப்பற்றியும் ஏதோ மூச்சு விட்டுள்ளாராம். "அப்போர்கள் எந்த வகையைச் சேர்ந்தது என சொல்வது கடினம்" என அருள் பாலித்துள்ளார்.

Friday, July 03, 2009

ஹாண்டுராஸில் ஒரு சீர்திருத்த கூ (Coup), ஹி ஹி

இஸ்ரேல் செய்துவரும் பாலஸ்தீன இனஒழிப்பினை துரிதப்படுத்தும் நோக்கத்துடன், அதற்குத் தடையாக இருக்கும் ஈரானில் சீர்திருத்தம் வேண்டி மேற்கு நாடுகள் ஆர்வத்துடன் இருந்தபோது, ஈரானில் சீர்திருத்தவாதிகளின் ஆர்பாட்டம் நிகழ்ந்தது.

ஈரான் சீர்திருத்தவாதிகள், மேற்கு விரும்பும் சீர்திருத்தத்தினைத்தானா கொண்டுவரப்போகிறார்கள் என்பது தெளிவாக தெரியாவிட்டாலும், தற்போதைய அரசினை கவிழ்ப்பதில் இருவரும் ஒத்த கருத்து கொண்டுள்ளதால், மேற்கின் ஊடகங்களும் அரசுகளும், ஈரான் சீர்திருத்தவாதிகளுக்குப் பின் அணிவகுத்தன.

அமெரிக்காவால் நிறுவப்பட்ட ஷாஹ்வின் சர்வாதிகார ஆட்சி கவிழ்க்கப்பட்ட தினத்திலிருந்து, மேற்கு நாடுகள் அனைத்தும் அகமேனியக் காலத்துக்கும் முற்பட்ட தனது பாரசீக எதிர்ப்பினை மீண்டும் துவக்கியது. அவைகள் ஏதேனும் வாய்ப்பினை எதிர்நோக்கி உள்ளன.

இந்த நிலையில், ஷாவின் வாரிசான மற்றொரு ஷா அமெரிக்காவிலிருந்து சீர்திருத்தவாதிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகிறார். ஈரானின் கலாச்சாரத்தினை Reading Lolita in Tehran எனும் நூலைக் கொண்டு தாக்கி எழுதிய, மற்றும் ஷாவின் அரசில் தனது குடும்பமே பணியாற்றிய பெருமையையுடைய, மற்றும் ஈரான் அரசு எதிர்ப்பு சிந்தனை உருவாக்க மையங்களில் (think tank) பணியாற்றுபவரும் எழுத்தாளருமான அஸார் நஃபிசி அமெரிக்காவிலிருந்து ஈரான் மக்களுக்காகக் குரல் கொடுக்கிறார். ஈரான் மீது குண்டுகள் போட ஆசித்த மெக்கெய்ன் எனும் வலதுசாரி அரசியல்வாதியும், ஈரான் நாட்டு மக்கள் மீது தான் புதுக் கவலையுடன் இருப்பதாகக் கூறுகிறார்.


இவ்வாறு மேற்கு நாடுகள் அனைத்தும் "ஜன நாயகம், ஜன நாயகம்" எனப் போலிக் கூக்குரலிட்டாலும் அது உலகில் ஆதரவு அளித்துவரும் சர்வாதிகாரர்கள் தான் எத்தனைப் பேர் !!

ஈரானில் 1950களில் ஜன நாயக ஆட்சியினை வீழ்த்தி 1979 வரை நீடித்த‌ ஷாவின் சர்வாதிகார முடியாட்சியினை ஏற்படுத்தியது யார் ? தற்போது அவர்கள் ஆதரவு அளித்துவரும், எகிப்தின் முபாரக் யார் ?

மேலும் கடாஃபி யார் ?

மேலும் கஸக்ஸ்தான் அதிபர் யார் ?

ஜோர்டான் மன்னர் யார் ?

கத்தார், சவுதி மற்றும் ஐக்கிய அரபு நாடுகளின் மன்னர்கள் யார் ?

மேலும் ஈராக்கின் மாலிக்கியும், ஆஃகானிஸ்தானின் கர்சாயும் நேர்மையான தேர்தலில் தான் வந்தவர்களா ?

பெரு நாட்டில் நடப்பது என்ன ? அங்கு அரசினை எதிர்த்துப் போராடிய பூர்வீக குடிமக்கள் மேற்கு சார்பு ஐரோப்பியர்களின் அரசால் நூற்றுக் கணக்கில் சுட்டுகொல்லப்பட்டதை மீடியாக்கள் எப்படி மூடி மறைத்தன ? அவைகளை ஈரான் வீச்சு அளவிற்காவது பரப்பினார்களா ?

தற்போது ஹாண்டுராசில் நடந்துள்ள, மேற்கு-ஆதரவு இராணுவப்-புரட்சியை ஊடகங்கள் எப்படி மிருதுவாக காண்கிறது ? அல்லது அதற்கு மீடியாக்கள் தரும் முக்கியத்துவம் தான் என்ன ?

சிந்தியுங்கள். ஹாண்டுராஸில் இராணுவப் புரட்சியின் மூலம் வந்துள்ள அதிபர் தனக்கு இஸ்ரேல் மற்றும் தைவானின் துணை இருந்ததாகக் கூறுகிறார். முந்தைய அதிபர் மக்கள் நலன் சார்ந்து அமெரிக்க மற்றும் மேற்குக் கம்பெனிகளுக்கு எதிர் உள்ளம் கொண்டவர். மக்கள் நலன் சார்ந்த மற்றைய சில நாடுகளின் அதிபர்களான சாவேஸ், மொராலஸ் போன்றவர்களின் ஆதவினைப் பெற்றவர்.

மேற்கின் ஜனநாயகம் புல்லரிக்கின்றது

Thursday, June 25, 2009

பிபிசி தனது புரட்டினை ஒப்புக்கொண்டுள்ளது

ஈரான் தேர்தல் பற்றியும் அங்கு நிகழும் போராட்டங்கள் பற்றியும் பிரிட்டனின் வெளியுறவுக் கொள்கையைச்சார்ந்த நோக்கங்களின் அடிப்படையில் பிபிசி நிறுவனம் செய்திகளை பூரட்டுகளாக மாற்றி வெளியிட்டுவந்தது.

போராட்டங்களின் உண்மைத் தன்மைப் பற்றி 'கார்டியன்' மற்றும் 'டைம்' பத்திரிக்கைகளில் எழுதும் சில பத்திரிக்கையாளர்கள் மூலமாகவும் (இந்த பக்கங்களுக்குச் செல்ல, www.pulsemedia.org எனும் வலைத்தளத்தில் உள்ள பதிவுகளின் மூலமாக செல்லவும்) , மற்றும் பல வலைப்பதிவுகளில் வெளியாகும் செய்திகள் மூலமாகவும் நாம் அறிய முடிந்து, பிபிசியின் சொல்லாடல்களையும் அது மறைக்கும் செய்திகளையும் அறிய முடிந்தது.

அதனது ஒரு செய்தியில் அகமதினேஜாதின் பொதுக்கூட்டத்தினைக் காட்டும் புகைப்படத்தினை வெளியிட்டு, ஆனால் அது அவரது எதிராளரான மெளசவியின் (Mousavi) கூட்டம் எனப் புரட்டியிருந்தது.

அதனை பல வலைப் பதிவர்கள் கண்டுபிடித்து வெளியில் கொணர்ந்ததும், வேறு வழியின்றி பிபிசி அந்த புரட்டினைத் தவறென்று ஒத்துக்கொண்டுள்ளது. அதனை ஒத்துக் கொண்டு அதன் ஆசிரியர்களில் ஒருவர் தனது பிபிசி வலைப்பதிவில் பதிவிட்டுள்ளார். ஆனால் உண்மையில் பிபிசி நேர்மையானதாக இருந்தால் இதனைத் தனது செய்திகள் பிரிவில் வெளியிட்டிருக்கவேண்டும். ஏனெனில் செய்திகள் பிரிவுக்கு செல்லும் வாசகர்கள் அதனது வலைப்பதிவு பிரிவுக்கு செல்லமாட்டார்கள். வேண்டுமானால் மிகக் குறைவானவர்கள் மட்டுமே செல்வர்.

பிபிசியின் இத்தகைய புரட்டுகளால் அதனது பத்திரிக்கையாளர் ஒருவரை ஈரான் வெளியேறச் சொன்னது. உடனே பிபிசி உட்பட்ட பலசெய்தி நிறுவனங்கள், ஈரான் தனது குடிமக்களுக்கு செய்திகளை மறுக்கிறதென்று கூக்குரலிட்டன. ஆனால் அதே பிபிசி உள்ளிட்ட நிறுவனங்கள் ஈரானில் அதிக அதிகாரங்கள் படைத்த 'கமெனி'யின் பேச்சினை முழுமையாக வெளியிடவில்லை. இவ்வாறு அவைகள் உலக மக்களுக்கு செய்திகளை மறுக்கின்றன. இத்தனைக்கும், ஈரானில் தேர்தல் நடந்து முடிந்ததிலிருந்து நேற்றுவரை பிபிசி தளத்தில் தலைப்புச் செய்தியாக ஈரான் செய்தியே இடம்பெற்றிருந்தது. இருப்பினும் கமெனியின் ஓரிரு வாசங்களைத் தவிர மற்ற வாசங்களை அது முழுங்கிவிட்டது.

Thursday, June 18, 2009

"மேம்படுத்தப்பட்ட" சிந்தனைகளும், அதை ஒத்த சிலவைகளும்

மேற்கு எனும் சொல்லிற்கு 'மேலை' அல்லது 'மேல்' எனும் சொற்கள் பயன்படுத்தப்படுவது வழக்கம். எனவே தான் இந்த தலைப்பு. வெறுமனே "மேற்கத்திய சிந்தனை" என்றால் மேற்கில் வாழ்பவர்களின் சிந்தனை என்றாகிவிடும். நான் சொல்ல வருவது அதுவல்ல. நான் சொல்லவருவது, 'மேற்கத்துவப்படுத்தப்பட்ட சிந்தனைகள்' பற்றி.

இத்தகைய சிந்தனைகள் மேற்கத்தியர்களல்லாத பலரிடமும் உள்ளதால் இங்கு சுட்டிக்காட்டப் படுகிறது.

1. ஜன நாயகம். இதை மேற்கத்தியவர்கள் கண்டறிந்ததாகக் கருதி அவர்களை வியந்து நோக்குவது.

2. வழிபாட்டு உரிமைகள். இதில் மேற்கத்திய நாடுகள் அனைத்தும் மிகச் சிறந்து விளங்கிவதாகக் கருதுவது. ஒருவரது வழிபாட்டு சமயத்திற்காக அவர் ஏதோ என்றுமே பெரும்பான்மை சமூகத்தினரால் புறக்கணிக்கப்படுவதில்லை எனக் கருதுவது. அவ்வாறு கருதுவது சில சமயங்களில் வேண்டுமானால் பொறுத்தமாக இருக்கும். மேற்கத்திய பெரும்பான்மைச் சமூகம் கேள்விபடாத அல்லது சற்று வினோதமான மாற்று வழிபாட்டுச் சமயங்கள் வேண்டுமானால் வழிபாட்டு உரிமைகளை அனுபவிக்கலாம்.

3. கருத்துச் சுதந்திரம். இது ஏதோ மேற்கில் சிறந்து விளங்குவதாகக் கருதுவது. 'ஹோலோகாஸ்ட்' பற்றி கேள்வி எழுப்பினாலே போதும். 15 வருடங்கள் அல்லது 30 வருடங்கள் எனக் கம்பி எண்ண வேண்டியதுதான். அப்படி எண்ணுபவர்கள் இருக்கிறார்கள். அல்லது மேற்கத்திய‌ ஆட்சியாளர்களைப் பற்றியோ அரசக் குடும்பத்தினரைப் பற்றியோ ஒரு கார்டூன் வரைந்துப் பாருங்கள். தெரியும் அவர்களது கருத்துச் சுதந்திரம் என்றால் என்னவென்று. அமெரிக்காவில் இஸ்ரேலினை விமர்சித்து ஒரு கருத்தரங்கு நடத்த ஒரு கூடத்தினை உங்களால் முன்பதிவு செய்ய முடியுமா ? அல்லது அப்படியே முடிந்தாலும் நீங்கள் அதனை நடத்துவதற்கு முன்பாக, அக் கூட அமைப்பாளர்களால் அம் முற்பதிவு நீக்கம் பெறாமல் இருக்குமா ? பெரும்பாலும் இத்தகைய சமயங்களில் எவ்வாறு நிகழ்ந்துள்ளது எனப் பார்க்க வேண்டும்.

4. ஓரினச்சேர்க்கையாளர்களின் உரிமை. பெண்களுக்கான சம உரிமையைப் போல இதை ஏதோ மனிதனின் அடிப்படை உரிமையைப் போலக் கருதுவது. ஒரு நாட்டின் பொதுவான உரிமைகளைப் பற்றிப் பேசும் போதெல்லாம், இந்த உரிமையைப் பற்றியும் கேள்வி எழுப்புவது. ஓரினச் சேர்க்கை என்பது தொன்று தொட்ட மேற்கத்திய கலாச்சாரம் சார்ந்தது என்பதை மேல்நோக்கிவிட்டு, இதன் மீதான காப்பு அவர்களது கலாச்சாரத்தின் மீதான அவர்களது காப்பு என்பதினை மறந்துவிட்டு இது ஏதோ அடிப்படையான உரிமை எனக் கருதுவது.


5. மதுவினை விருந்துகளில் வழங்குவதை ஒரு ஃபார்மலாகக் கருதுவது. மது அருந்துவது வேண்டுமானால் உலகின் பல பகுதிகளிலும் இருந்திருக்கலாம். ஆனால் பலரும் கூடும் விருந்துபச்சார நிகழ்ச்சியில் இதனை சாதரணமாக வழங்குவதை ஏற்றுக் கொள்ளும் போக்கு. ( நமது இந்தியாவில், இதை வழங்குவார்கள் ஆனால் அசைவ உணவுகள் வழங்க மாட்டார்கள். அப்போது கலாச்சாரம் பேசுவார்கள் ! )

Monday, June 15, 2009

ஈரான் தேர்தல்-பிபிசியின் வயிற்றெரிச்சல்

ஈரானில் நடந்து முடிந்த தேர்தல் உலக அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.

மேற்குலக நாடுகள் இஸ்ரேல் சார்பாக அணிதிரண்டிருக்க, மத்தியகிழக்கு நாடுகளிலும் பெரும்பான்மை நாடுகள் இஸ்ரேல் சார்பான அரசியல்கொள்கைகளைக் கொண்டிருக்க, ஈரான் மற்றும் சிரியா மட்டுமே சற்று மாற்றுக் கொள்கை கொண்டுள்ளன. எனவே, பலம் ரீதியாக ஈரான் அவர்களுக்கு இணையாக முடியாதெனினும், அதன் மாற்றுக்கொள்கையினால் உலக அரங்கில் அது முக்கியத்துவம் வாய்ந்த நாடாகிறது.

அதில் சில நாட்களுக்கு முன்பு தேர்தல் நடைபெற்று அஹமதினேஜாத் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஒரு மரபுவழியாளர். இருப்பினும் பெரும்பாலான அரபு நாடுகளில் உள்ள மரபு வழியாளர்களைப் போலல்லாமல் வக்கிரசிந்தனைகளை விலக்கியவர். இது ஈரான் வாழ் மரபுவழியாளர்கள் அனைவர்களிடமும் உள்ள ஒரு பண்பு. அரபு நாடுகளில் மட்டுமே தனது கலாச்சாரம் ஒட்டிய வக்கிர சிந்தனைகளை தூய இஸ்லாத்துடன் கலந்து மக்களை அடிபணியச்செய்து முடியாட்சிகளை இஸ்லாத்தின் பெயரால் நிறுவி இஸ்ரேல் சார்பு அரசினை நடத்தி வருகிறார்கள்.

ஈரானிலோ தேர்தல் முறை அமலில் உள்ளது.

எங்கே ஈரானைப் பார்த்து தனது நாட்டு மக்களும் ஜனநாயக முறைக்கு மாற்றம் வேண்டி புரட்சி செய்ய ஆரம்பித்துவிடுவார்களோ என்ற பயத்தில், அரபு நாட்டு ஆட்சியாளர்கள் தங்களது குடி மக்களிடம், வைதீக மற்றும் ஷியா பிரிவுகள் சார்ந்த‌ பேதங்களையும், அரபு மற்றும் பாரசீக பிரிவு சார்ந்த பேதங்களையும் புகட்டி கவனத்தினை திசைத்திருப்பி வருகிறார்கள். இருப்பினும் பலரும் ஈரான் கலை, அறிவியல் இலக்கியத் துறைகளில் அடைந்து வரும் முன்னேற்றத்தினை கவனிக்காமல் போகிறார்களில்லை.

'ஈரானில் சீர்திருத்தவாதிகளே வெற்றிபெறுவார்கள்' என பிபிசி போன்ற மேற்குலக ஊடகங்கள் பிரச்சாரம் செய்தன. அதற்கு காரணமே, அவ்வாறில்லாமல் மரபுவழியாளர்கள் வெற்றிபெற்றால், 'தேர்தல் குறையுள்ளது' எனும் சீர்திருத்தவாதிகளின் கூட்டுக் கூச்சலை பரப்பும்போது ஆமோதிக்கப்படும் என்பதே.

அதேபோல் மரபுவழியாளரான அஹமதினேஜாத் வெற்றி பெற்றுவிட்டார். உடனே பிபிசி போடும் கூச்சல் தாங்க முடியவில்லை. நீங்களே சென்று பாருங்கள். அதன் தொடர்ச்சியான செய்திகள் அனைத்தும் இஸ்ரேல் பிரதமரின் மனக் கருத்தினைப் போலுள்ளது.

உதாரணத்திற்கு இந்த செய்தியப் பாருங்கள்: Iranian protesters call off rally அதில் செய்தியைத் தவிர பிபிசி தனது அபிப்ராயத்தினையும் கலந்துள்ளது. "The BBC understands that Mr Mousavi called off the rally after being warned that militias policing it would be equipped with live rounds" :))

அதே செய்தியில் மேலும் ஒரு இடத்தில், "The BBC's Jon Leyne, in Tehran, says he understands plain-clothed militias had been authorised to use live ammunition for the first time. ", என்று தனது கருத்தினை செய்தியுடன் சேர்த்து கூடு கட்டியுள்ளது.

சீர்திருத்தவாதிகள் ஒன்றும் மோசமானவர்களில்லை. ஆனால் எனது பார்வையில் அஹமதினேஜாத் தற்போதைய உலக அரங்கில் தேவையானவர்.

மத்திய கிழக்கு அரசியல் பற்றி எழுதும் முதுபெரும் பத்திரிக்கையாளர், ராபர்ட் ஃபிஸ்க்கின் கட்டுரையை நான் உங்களுக்குப் பரிந்துரைக்கிறேன். இந்த இணையதளம் சென்று படித்துக் கொள்ளுங்கள்.

Monday, March 09, 2009

அமெரிக்கா ஹா ஹா ஹா

ரஷ்யா அமெரிக்காவிடம் பேசவேண்டிய விதத்தில் பேசியதும், அமெரிக்கா பணிந்துவருவதை பல செய்திகளில் நீங்கள் படித்து இருக்கலாம்.

அமெரிக்காவிற்கு தாலிபன்களிடமும் பேச்சு வார்த்தை நடத்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க மற்றும் தென் கொரியா நாடுகளுக்கு மத்தியிலான‌ போர் ஒத்திகைகளுக்கு மிகக் கடுமையான விமர்சனத்தினை வடகொரியா வைத்துள்ளது.

அது அவ்வாறு இருக்கையில் ..

ஒரு அமெரிக்கக் கடற்படைக் கப்பலை ஐந்து சீன கப்பல்கள் சீண்டிய செய்தியைப் படித்து ரசித்தேன். அமெரிக்கக் கொட்டத்திற்கு போதாக் காலம் நெறுங்குவதை உணர முடிகிறது. பிபிசி செய்தி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இது தவிர ஒரு வருடத்திற்கு முன்பு மற்றொரு அமெரிக்கப் போர்கப்பலுக்கு மிக அருகாமையில் சீன நீர்மூழ்கிக்கப்பல் ஒன்று நீர்மட்டத்திற்கு மேலே தோன்றி ஒரு மிரட்டு மிரட்டியது ஞாபகமிருக்கலாம்.

Chinese ships 'harass' US vessel

Breaking News

Five Chinese ships have manoeuvred dangerously close to a US navy vessel in the South China Sea, the US government has said.

US officials said the incident came after days of "increasingly aggressive" acts by Chinese ships.

These violated international law on respecting other users of the seas, a Pentagon spokesman said.

A protest was expected to be delivered to the Chinese military attache at the Pentagon on Monday.

The ships had "aggressively manoeuvred" around the USNS Impeccable "in an apparent co-ordinated effort to harass the US ocean surveillance ship while it was conducting routine operations in international waters", a Pentagon statement said.

The US ship sprayed the Chinese vessel with water from fire hoses to try to force it away, according to US officials.

But they said the Chinese crew stripped to their underwear and carried on approaching to within 25ft (8m).

No immediate response from the Chinese government was reported.

Friday, March 06, 2009

கொதோர்கோவ்ஸ்கி: அல்ஜசீராக் கதை; பிபிசிக் கதையல்ல‌

கொதோர்கோவ்ஸ்கி என்பவர் ஒரு ரஷ்ய தொழிலதிபர். அவர் பற்றிய செய்திகள் வரும்போதெல்லாம், பிபிசி அதனை மிக வசமாகத் தனது ரஷ்ய எதிர்ப்பு பிரச்சாரத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளும். ரஷ்யாவில் உரிமைமீறல்கள் இருக்கலாம். ஆனால் ரஷ்யாவின் விரோதிகள் அனைவரையும் ஏதோ சாதுக்கள் போல காட்டுவது அதன் வாடிக்கை. செச்சன்யா பிரச்சனையாக இருந்தாலும் சரி, ஜார்ஜியா பிரச்சனையாக இருந்தாலும் சரி, அல்லது யுக்ரைன் நாட்டுடனான பிரச்சனையாக இருந்தாலும் சரி, எல்லாவற்றிலும் பிபிசியைப் பொருத்தவரை, ரஷ்யாவின் விரோதிகள் எல்லோரும் நியாயவான்கள்.

பிபிசியின் இந்த போக்கு ரஷ்யா விஷயத்தில் மட்டுமல்ல. யார் யாரெல்லாம் மேற்குலகின் அரசியல் கொள்கைகளுக்கு எதிரானவர்களோ அவர்கள் அனைவர்கள் விஷயத்திலும் பிபிசி இந்தப் போக்கினையே கடைபிடிக்கும்.

உதாரணத்திற்கு, சீனாவில் திபெத்தியர்களால் ஒரு கலவரம் ஏற்படுத்தப்பட்டு ஒரு நூறு பேர்களைக் கலவரக்காரர்கள் கொன்றால், பிபிசி அச்சமயத்தில் தலாய்லாமாவின் பிரச்சார ஊடகமாகிவிடும். அதுவும் ஒரு வாரக் கணக்கில்.

இஸ்ரேல் நாடோ பாலஸ்தீனக் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட ஆயிரக் கணக்கில் மக்களைக் கொல்லும்போதும், லெபனானில் கொல்லும்போதும் அவைகளைப் பற்றிய செய்திகளைத் தரும்போது இஸ்ரேலிய அதிகாரிகளின் அபிப்பிராயத்தினையும் பேட்டி என்ற பெயரில் கலந்து, அச்செய்திகளை ஒரு விமர்சனமாகத் தரும்.

வெனிசுவேலாவின் ஹ்யூகோ சாவேஸ், ஈரானின் அகமதினேஜாத், வடகொரியாவின் கிம் ஆகியோரெல்லாம் அதன் விரோதிகள். நிகராகுவாவின் ஒர்தேகா, சூடானின் பஷீர், பொலீவியாவின் மோராலஸ், ஈக்குவடாரின் கோரியா, ஜிம்பாப்வேயின் முகாபே, சிரியாவின் பஷார் ஆசாத், பெலாருஸ் அதிபர் ஆகியோரெல்லாம் பிபிசியின் கடைந்தெடுத்தவிரோதிகள். துருக்கி மீது அதன் விரோதம் அடுத்த நிலையில் உள்ளது.

கொலம்பியா பிபிசியின் மிகுந்த நட்புகளில் உள்ள ஒன்று. ஜார்ஜியா மற்றும் யுக்ரைன் போல.

இது விஷயத்தில் நேரடியாக மேற்குலகின் அரசியல் கொள்ககளுக்கு எதிரான நாடுகள் மட்டும்தான் பிபிசியின் விரோதிகள் என்றில்லை. அத்தகைய எதிரான நாடுகளுடன் நல்லுறவில் இருக்கும் நாடுகளுக்கும் அதேகதிதான். சீனாவுடனும் ஈரானுடனும் நல்லுறவில் இருக்கும் மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளும் அதன் விரோதிகள்.

மேலும் தனது நட்பு நாடுகளுக்கு எதிரான ஆயுதக் குழுக்களுக்கு பிபிசியின் கோபப்பார்வை கிட்டாமல் இருக்காது. ஹமாஸ், ஹிஸ்புல்லா, துருக்கிய சைப்ரஸ் குழுவினர், கொலம்பியாவின் ஃபார்க் போராளிகள், வடக்கு அயர்லாந்தின் ஐ.ஆர்.ஏ ஆகியோரெல்லாம் உதாரணம்.

தனது விரோத நாடுகளுக்கு எதிரான ஆயுதக் குழுக்களெல்லாம் பிபிசியின் வீரதீரமான சுதந்திரப் போராளிகள். உதாரணத்திற்கு, விடுதலைப் புலிகள், செச்சன்ய போராளிகள், குர்து இனப் போராளிகள் (இவர்கள் விசயத்தில் ஓரளவு நியாமுள்ளது ஒரு புறம் இருக்கட்டும்), கொசோவோ பிரிவினையாளர்கள் (இவர்கள் விஷயத்தில் நியாயம் உள்ளதா இல்லையா என்பதைவிட நான் பிபிசியின் அரசியல் நிலைப் பாட்டினை மட்டுமே கூறுகிறேன்) ஆகியோரைக் கூறலாம்.

உதாரணத்திற்கு ஒன்றைக் கூறவேண்டுமானால், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, ஐநா கூட்டமைப்பில் பாதுகாப்பு சபையில் விடுதலைப் புலிகள் பற்றி பேசப்பட்டது. விடுதலைப் புலிகளின் மனிதக் கேடயம் பற்றி பேசப்பட்டது. போர் நிறுத்தம் அவசியமல்ல எனக் கருதப் பட்டது. ஆனால் அது பற்றிய செய்தியை பிபிசி வெளியிடவில்லை.

இப்போது பிபிசிக்குப் பிடித்த கொதோர்கோவ்ஸ்கி பற்றியும், அவர் சொத்து சேர்த்த முறையைப் பற்றியும் பேசும் ஒருகட்டுரை. அது ரஷ்யாவின் கடும்போக்கினை மட்டும் விமர்சனம் செய்யாமல் சற்று அடிப்படையையும் கூறுகிறது.

The life and trials of Khodorkovsky

If convicted, Khodorkovsky could face more than 22 years in jail on top of his current term [AFP]

The life and times of Mikhail Khodorkovsky have grabbed the world's attention once again, as Russia's former richest man faces new charges that could see him behind bars into old age.

Khodorkovsky was born in 1963 and grew up in a normal Soviet family, the son of chemical engineers.

At university he was deputy head of the Communist Youth League. The contacts he made there brought him into the ranks of the Soviet apparatchiks and later modern-Russia's political elite.

During Gorbachov's policy of glasnost [openness] and perestroika [restructuring] Khodorkovsky used his contacts to gain a footing in the developing free market.

He set up a computer and software business with fellow students and even a cafe, but it was the foundation of the bank Menatep in 1987 that allowed him and his associates to generate enough money to buy up fertiliser company Apatit and then in 1995 the oil company Yukos for a mere $300m.

With the collapse of the Soviet Union the state had been forced to sell off its assets at bargain prices.

Many became immensely rich but seven individuals, known as the oligarchs, bought up most of Russia's natural resources, often in return for favours from key politicians.

By the late 1990s Mikhail Khodorkovsky was among the richest men in Russia with a personal fortune of between 2 and $2.5bn.

Some of the oligarchs lost their status as a result of the August 1998 financial crisis, others like Khodorkovsky, would see their fortunes change with the arrival of the Vladimir Putin, the new Russian president, who during his first term in office moved to control the Yelstin-era oligarch's ambitions.

On October 25, 2003, Khodorkovsky was arrested at Novosibirsk airport, in Siberia, while his private jet was being refuelled.

Shortly afterwards, government action led to a collapse in Yukos' share price and a major sell off of the company's assets.

The firm was finally dismantled after being hit with massive tax back-claims.

'Political posturing'

Khodorkovsky is currently serving an eight-year sentence for fraud and tax evasion and was denied parole last August.

His critics argue that he is criminally responsible for shady methods used to take advantage of the bargain sell-off of Russia's natural resources by the government.

The Russian general prosecutor's office claims Khodorkovsky and his associates cost the state more than $1bn in lost revenues.

As president, Putin moved to control the ambitions of the Yelstin-era oligarchs [AFP]
But his supporters and activists insist his long detention and the new legal proceedings are a way of silencing potential opponents of Putin.

Khodorkovsky had openly financed opposition parties such as the liberal Yabloko party in the run up to the 2003 parliamentary elections.

He had also become a philanthropist, setting up a number of organisations to promote political reform.

Many of his opponents saw this as political posturing.

At the same time Khodorkovsky's wealth had been steadily growing.

Shortly before his arrest, he announced a merger between Yukos and fellow Russian oil company Sibneft that would have controlled the second largest oil and gas reserves in the world after Exxon Mobil.

Following the arrest of Khodorkovsky, the deal was stopped.

Kremlin critic

Khodorkovsky remains a firm Kremlin critic, recently accusing Putin, now prime minister, of using his power to target political opposition and businessmen like himself

Khodorkovsky, left, and Lebedev are both serving eight-year sentences
The arrival of Dmitry Medvedev as Russia's new president, a lawyer by trade, has brought with it hopes of a more transparent legal system in Russia.

Many think Medvedev will take a softer line than his predecessor, but, as Russia struggles with the financial crisis, the example of Kodorkovsky remains a potent warning to Russia's rich and powerful to keep away from politics.

Khordorkovsky and Platon Lebedev, his former business associate, who is also serving an eight-year sentence, now face new charges.

The trial taking place in Moscow is examining charges that between 1998 and 2003 Khodorkovsky carried out embezzlement and illegal transactions worth $25bn.

Khodorkovsky's defence team have dismissed the charges as absurd, but if convicted he could face another 22 and a half years in prison on top of his former sentence.

Remarkably, despite nearly four years behind bars, Forbes magazine still estimate Khodorkovsky's personal fortune at about $500m.


Source: Al Jazeera

Monday, January 19, 2009

படம் காட்டுதல் என்றால் என்னவென்று தெரியுமா ?

படம் காட்டுதல் என்றால் என்னவென்று தெரியுமா ?

இதுதான் அது. (குறிப்பாக, ராமதாஸ்)


Saturday, January 17, 2009

காசா நடப்புகள்: பிபிசி (BBC) அறிவித்தலில் இஸ்ரேல் சார்பு பற்றி


பிபிசி போன்ற ஊடகங்கள் இஸ்ரேல் சார்பாக செய்தி வெளியிடும்போது சில வலைப்பதிவுகளும் அல்ஜசீராவும் நடப்பதை வெளியிடுகின்றன.

பிபிசியோ, நடப்பதை நடப்பதுபோல் வெளியிடுவதை பாலஸ்தீனர்களின் சார்பானது எனக் கருதுவதால், அது இஸ்ரேல் அதிகாரிகளின் எண்ணத்தினையும் பல நேர்காணலின் மூலம் செய்தியில் கலந்துவிடுகிறது. அதாவது, செய்தியை செய்தியாகத் தராமல் ஒரு விமர்சனமாகத் தருகிறது.

இது பற்றி பலர் விமர்சங்களை எழுப்பியபோதெல்லாம், பிபிசியோ , " நாங்கள் இருபக்க செய்தியினைத் தருகிறோம்" என பூசி மெழுகுகின்றனர்.

இதைத் தான் ஜான் பில்கர் (John Pilger) எனும் ஆஸ்திரேலிய ஊடகர், "ஆக்கிரமித்தவனையும் ஆக்கிரமிக்கப்பட்டவனையும் ஒன்று என பிபிசி கருதுகிறது; திருடனையும் பொருளை இழந்தவனையும் ஒன்று எனக் கருதுகிறது" என விமர்சித்தார்.

கீழே ஒரு தளத்தில் வெளிவந்த கார்ட்டூன் ஒன்றும், மற்றொரு தளத்தில் வெளிவந்த கட்டுரை ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது.


The BBC: Eyeless in Gaza

Muhammad Idrees Ahmad, The Electronic Intifada, 6 January 2009

On 29 February last year the BBC's website reported deputy defense minister Matan Vilnai threatening a "holocaust" on Gaza. Headlined "Israel warns of Gaza 'holocaust'" the story would undergo nine revisions in the next twelve hours. Before the day was over the headline would read "Gaza militants 'risking disaster.'" (The story has since been revised again with an exculpatory note added soft-pedaling Vilnai's comments). An Israeli official threatening "holocaust" may be unpalatable to those who routinely invoke its specter to deflect criticism from the state's criminal behavior. With the "holocaust" reference redacted, the new headline shifted culpability neatly into the hands of "Gaza militants" instead.

One could argue that the BBC's radical alteration of the story reflects its susceptibility to the kind of inordinate pressure the Israel lobby's well-oiled flak machine is notorious for. However, as will be demonstrated in subsequent examples, this story is exceptional only insofar as it reported accurately in the first place something that could bear negatively on Israel's image. The norm is reflexive self-censorship.

To establish evidence of the BBC's journalistic malpractice one often has to do no more than pick a random sample of news related to the Israeli-Palestinian conflict currently on its website. In a time of conflict BBC's coverage invariably tends to the Israeli perspective, and nowhere is this reflected more than in the semantics and framing of its reportage. More so than the quantitative bias -- which was meticulously established by the Glasgow University Media Group in their study "Bad News from Israel" -- it is the qualitative tilt that obscures the reality of the situation. This is often achieved by engendering a false parity by stretching the notion of journalistic balance to encompass power, culpability, and legitimacy as well. The present conflict is no exception.

"Hamas leader killed in air strike," reads last Thursday's headline on the BBC website. Notwithstanding the propriety of extrajudicial murder, there are 14 paragraphs and the obligatory mention of the four dead Israelis before it is revealed that "at least nine other people," including the assassinated leader's family, were killed in the bombing of his home in the Jabaliya refugee camp. The actual number is 16 dead, 11 of them children; 12 more wounded, including five children; 10 houses destroyed, another 12 damaged -- a veritable slaughter. Had a Hamas bombing killed or wounded 28 Israeli citizens including 16 children you'd be sure to see endless coverage -- of the kind the BBC lavished on the disconsolate illegal settlers in 2005 as they were made to relinquish stolen land in Gaza. The BBC's Mike Sergeant, sitting in Jerusalem, would not concern himself with such sentimentality. There is no further mention of Palestinian civilian deaths. Their tragedy was no more than a sanguine message which Sergeant tells us will "be seen as an indication that the Israeli military can target key members of the Hamas leadership."

"Israel braced for Hamas response," blared the ominous headline on next day's front page. With all references to Hamas in its coverage prefixed with "militant" and invariably accompanied by images of blood and debris, the average viewer is very likely to assume the worst. It transpires what the world's fourth most powerful military is bracing itself for is merely a citizen's protest called by Hamas in the Occupied Palestinian Territories. Further on we learn that Israel has been bombing such "targets" as a mosque and a sleeping family. The BBC's next headline on the same day -- "Gaza facing 'critical emergency'" -- is an improvement. It quotes Maxwell Gaylard, the UN's chief aid coordinator for the territory, highlighting the magnitude of the humanitarian crisis. Following this is a warning from Oxfam that the situation is getting worse by the day: clean water, fuel and food in short supply, hospitals overwhelmed with casualties, raw sewage pouring into the streets.

And then we get "balance."

Israel, we learn, has claimed Gaza has "sufficient food and medicines." It of course ought to be easy to verify which of the competing claims is valid, but that presumably would violate the "usual BBC standards of impartiality." There is also a more mundane reason why the BBC won't present its own findings, but it is tucked away in the very last paragraph of the article. Israel, we learn, "is refusing to let international journalists into Gaza" including no doubt those of the BBC. Ethics of reporting would require that the BBC preface each of its reports with the disclaimer that it has no way of knowing what is going on in Gaza other than through the propaganda handouts of the Israeli military.

The final act of chicanery comes in the shape of a sidebar which lists the number of rockets fired by Palestinians for each day of the conflict. This is particularly odd in an article ostensibly about the consequences of the Israeli blockade and bombing, especially since no similar figures are produced for the number of bombs, missiles and artillery shells rained on Gaza. The source the BBC uses is the Intelligence and Terrorism Information Center based in Israel. What it does not mention however is that the "private" think tank is a conveyor belt for Israeli military propaganda which, according to The Washington Post, "has close ties with the country's military leadership and maintains an office at the Defense Ministry." Any Palestinian claim on the other hand would not appear unless enclosed in quotation marks, even if independently verifiable.

The quotation marks are a useful distancing device deployed to show that the characterization may not be one shared by the BBC. This would be understandable if their application were consistent. It isn't. To take one telling example, after the Lebanon war when both Israel and Hizballah were accused by Amnesty International of war crimes only in the case of Israel did the BBC enclose the accusation in quotation marks.

It is through these subtle -- and not so subtle -- manipulations of language that the BBC has shielded its audience from the ugly realities of occupied Palestine. In the BBC's reportage lexicon, Palestinians "die" but Israelis are "killed" (the latter implies agency, the former could have happened of natural causes); Palestinians "provoke," and Israelis "retaliate;" Palestinians make "claims," and Israelis "declare." Moreover, schools, mosques, universities and police stations are part of the "Hamas infrastructure;" militants "clash" with F-16s and Apache helicopters. "Terrorism" is inextricably linked to Palestinians but Israelis merely "defend" themselves -- invariably outside their borders. All debates, irrespective of fact or circumstance, are framed around Israel's "security" -- Palestinian security is irrelevant. If Israel's wall annexing land in the West Bank is mentioned, it is in terms of its "effectiveness." In the odd event that an articulate Palestinian voice represented, the debate is rigged with a set-up video that is meant to put them on the defensive. When all else fails, there is the reliable "both sides" argument -- if reality won't accommodate the image of an even conflict, the BBC figures, language will.

Then there's the framing: Israel's violence is always analyzed in terms of its "objectives;" and Palestinian violence is of necessity "senseless." This is no doubt how it must appear to the average reader since the word "occupation" rarely appears in the BBC's coverage. It hasn't appeared once in the last 20 stories on Gaza on its website. And if occupation is mentioned rarely, then the UN resolutions almost never. The picture is even worse on television, where the Israeli point of view predominates.

While Matan Vilnai's threat of a holocaust is consigned to the memory hole, the statement invented and attributed to the Iranian president about wiping Israel off the map is still in play. It is this double standard which also allowed the BBC to cover the story of a British Jew joining the Israeli military as a human interest story -- which may not be entirely surprising considering the BBC's man in Jerusalem, Tim Franks, is himself a graduate of Habonim Dror, a Zionist youth movement. It is this inhuman devaluation of Palestinian life that allowed the BBC at the peak of the criminal blockade in July 2007 to have two stories up on its website related to the occupied territories, both about animals -- "Israeli paratroopers swoop on pet shop to rescue rare eagles" and "Kidnapped lioness is reunited with her brother in Gaza Zoo."

While the BBC's refusal to by-line its online reports makes it hard to trace stories back to individual journalists, a revealing glimpse of the editorial context in which they work was offered by an article in The Observer by the BBC's Middle East editor Jeremy Bowen -- a man whose modest analytical skills are matched only by his historical illiteracy. With the BBC workhorse -- "both sides" -- weaved into the very headline, Bowen piles inanity upon cliche. Throughout there is no mention of an occupation. Bowen has been conveniently transported to Sderot -- an Israeli public relations ploy to "embed" journalists within range of Hamas rockets in order to make them report with empathy -- and he is happy to oblige. On the other hand there is no mention of those at the receiving end of Israel's lethal ordinance. He mentions civilian casualties only in the context of the "lot of bad publicity" they get for Israel. On the basis of this evidence, he then concludes "it is probably fair to say that [Israel] does not hit every target it wants, otherwise many more would have died." We then end with speculation on Israel's possible objectives. Despite "both sides," there is no similar scrutiny of Hamas's objectives.

At a conference in London in 2004, a BBC journalist based in the Occupied Palestinian Territories told me that when it comes to Israel the editorial parameters are so narrow that journalists soon learn to adapt their stories in order not to upset the editors. Similarly, editors likewise know not to upset their government-appointed managers. Since the days of Lord Reith, the BBC-founder who assured the establishment to "trust [the BBC] not to be really impartial," on foreign policy the corporation has acted as little more than the propaganda arm of the state (whatever independence it had once enjoyed evaporated with the purge carried out by Tony Blair in the wake of the Hutton Inquiry). Contrary to the prevailing view in the US, where progressives don't tire of comparing it favorably against US media, the BBC's record of coverage in the Middle East is dismal. As media scholar David Miller revealed, during the Iraq war the representation of antiwar voices on the BBC was even lower than on its US counterparts. A Frankfurter Allgemeine Zeitung study found the corporation to have the lowest tolerance for dissent of the media in the five countries it analyzed. Just as its correspondents in Iraq celebrated the fall of Baghdad as a "vindication" of Blair, its man in Washington Matt Frei threw all caution to the wind to exult: "There is no doubt that the desire to bring good, to bring American values to the rest of the world, and especially now in the Middle East, is especially tied up with American military power."

The BBC's partiality in the case of the Israeli-Palestinian conflict is a mere reflection of the close affinity of successive British governments with Israel. Both Blair and his successor Gordon Brown have been members of the Israel Lobby group Labour Friends of Israel. The Foreign Minister David Miliband has kin who are settlers in the West Bank. All three major influence-peddling scandals in the past five years that engulfed the leadership of the ruling New Labour party involved money from wealthy Zionist Jews (all linked to the Labour Friends of Israel). If the BBC is not impartial, then the UK government most certainly is not. The BBC, as is its wont, merely reflects the latter's tilt. This is blatant enough that despite pressure from the Israel lobby, the BBC's own Independent Panel concluded that its coverage of the Palestinian struggle was not "full and fair" and that it presented an "incomplete and in that sense misleading picture."

But the gap between the alternate reality that the BBC inhabits and the reality on the ground witnessed and relayed by independent media is so great today that it has compelled John Pilger to write: "For every BBC voice that strains to equate occupier with occupied, thief with victim, for every swarm of emails from the fanatics of Zion to those who invert the lies and describe the Israeli state's commitment to the destruction of Palestine, the truth is more powerful now than ever."

Muhammad Idrees Ahmad is a member of Spinwatch.org. He blogs at Fanonite.org.