Thursday, January 31, 2008

வகாபிசத்தின் தோற்றத்தில் அறிவியலின் வீழ்ச்சி

எனது உள்ளத்தில் உள்ள கருத்துக்களை கூற நிகழும் சம்பவங்களைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.
ஒரு காலத்தில் மத்திய கிழக்குப் பகுதியில் 'ஓகோ' என்று வளர்ந்திருந்த அறிவியல், நலிவடைந்தது ஏன் ?

இக்கட்டுரையைப் படிக்க : http://www.guardian.co.uk/commentisfree/story/0,,2248970,00.html

இதில் கட்டுரையாளர் (இவர், அழகிய படங்களுடன் குவான்டம் இயற்பியலை விளக்கும் புத்தகத்தின் ஆசிரியர்) 11 ம் நூற்றாண்டுக்கு பிறகுதான் இப்பகுதியில் அறிவியல் நலிவடைய ஆரம்பித்தது என்றும் அதற்கு காரணம் மங்கோலியர்கள் படையெடுப்பு என்று சிலாகிக்கப்படுகின்றதென்றும் கூறுகிறார்.

ஆனால் நான், அது வகாபிசத்தின் தந்தை இப்னு தைமியா தோன்றிய நூற்றாண்டு என்று தெரிவிக்க விரும்புகின்றேன்

Tuesday, January 29, 2008

ஐரோப்பாவில் மத மேலாண்மைப் பூசல்கள்

நமது வாழ்வியலை நமக்குள் மட்டும் சுருட்டிக் கொண்டு வாழ்வது இயலாத ஒன்று. சமூகம் என்ற அமைப்பு உருவாக நமது வாழ்வியலின் ஒரு பகுதியைபொதுவில் நீட்டியே ஆகவேண்டும். ஒவ்வொருவரும் "பொதுநலன்" என்று தான் கருதியவற்றை தனது புறவாழ்க்கையாகக் காட்ட முயற்சிக்கிறார். இவ்வாறு அவரவர்கள் காட்டும் புறவாழ்க்கைகளில் ஒத்த கருத்து காண்பவர்கள் அவ்வாறு காணதவர்களிடம் பலப்பரீட்சையினை மேற்கொள்ள முனைகின்றனர்.

ஐரோப்பாவில் உள்ள நாடுகளில் சில சமீப காலங்களாக சகிப்புத் தன்மையில் தாழ்ந்து காணப்படுகின்றன. உதாரணம்: நெதர்லாந்து, டென்மார்க், பெல்ஜியம், ஃபிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி.

பெல்ஜியத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான பேரணி ஒன்று தடையை மீறி நடத்தப் பட்டு ஒரு சிறு ரகளையாகியிருந்ததை நீங்கள் அறிந்திருக்கலாம். அனைவரின் கவனத்தையும் ஈர்த்த அம்சம் எதுவெனில், அதில் பங்கேற்றவர்கள் அணிந்திருந்த 'டி சட்டை'. அதில் மிக வெளிப்படையாகவே ஒரு பள்ளிவாசலின் படத்தினையும் அச்சடித்து அதன் மீது சிவப்பு வண்ணத்தில் குறுக்குக் கோடிட்டு தனது மதத்துவேசத்தினை வெளிப்படுத்தி இருந்தனர் அப்பேரணியின் அமைப்பாளர்களான "ஃப்ளெமிஷ் நலன்" எனும் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

டென்மார்க் பற்றி சொல்லவேண்டியதில்லை. மேற்கண்ட கோணத்திலான "கருத்துச் சுதந்திரம்" அபரிமிதமாக உள்ள நாடு.

ஃபிரான்ஸ் பற்றியும் அனைவரும் படித்திருப்பீர்கள். வேலைவாய்ப்புகளிலும் கல்வியிலும் புறக்கணிக்கப் படுவதோடு அடக்குமுறைகளுக்கும் ஆளான குடியேறிய வர்க்கத்தினர் ஒரு வார கால நீண்ட போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர். ஆனால் என்ன பிரச்சனை என்றால் இவர்கள் ஆயிரக்கணக்கான கார்களைக் கொழுத்தி, அதனால் சாதாரண மனிதனையும் சர்கோசி போன்ற நிறவெறிக் கொள்கையை உடையவர்களை ஆதரிக்கும் நிற்பந்தத்திற்குத் தள்ளிவிட்டனர்.

பிரிட்டன். "தொழிற்கட்சி" எனும் இடதுசாரித் தோற்றத்தை பெயரளவில் வெளிப்படுத்தும் இதன் ஆட்சியைப் பற்றி மிக அறிந்திருப்பீர்கள். டோனி பிளேர் ஒருவர் போதுமானவர். ஆனால் இதனைவிட தோரிக்கள் அதிக மதவாதமும் இனவாதமும் உடையவர்கள். இவர்களையும் விட "பிரிட்டிஷ் தேசியக் கட்சி"யினைச் சேர்ந்தவர்கள் உச்சனிலையிலான மதவெறியையும் இனவெறியையும் உடையவர்கள்.

நெதர்லாந்து. அயான் ஹிர்சி அலியைப் பற்றி அறியாதவர்கள் யாரும் உள்ளனரா ? சோமாலியாவில் பிறந்து நெதர்லாந்தில் குடியேறியர். பிறகு அவரும் வான்காஃப் என்பவரும் சேர்ந்து இஸ்லாத்திற்கு எதிராக சில குறும்படங்களைத் தயாரித்து புகழ்பெற்று பாராளுமன்ற உறுப்பினரானவர். பெண் குழந்தைகளுக்கு பெண்ணுறுபினை சேதப்படுத்தும் சடங்கு ஆஃப்ரிக்காவிலுள்ள பழங்குடி மக்களிடையே உள்ள ஒன்று. இருப்பினும் அதனையும் இஸ்லாத்தினையும் தொடர்பு படுத்தி நெதர்லாந்தில் புகழின் உச்சியை அடைந்தார்.
தனக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்ததாகவும் குற்றம் சாட்டியவர் இவர்.

ஆனால் சமீபகாலத்தில் இவர் செய்த வண்டவாள‌ங்கள் தண்டவாளம் ஏறின.

சோமாலியாவிலிருந்து அவர் நெதர்லாந்த்திற்கு குடியேற விண்ணப்பித்த மனுவில் அவர் காட்டிய காரணம் சோமாலியாவில் நிகழும் உள்நாட்டுப் போர். ஆனால் உண்மை என்னவெனில் இந்த அம்மையார் சோமாலியாவில் உள்நாட்டுப் போர் துவங்கும் முன்பே கென்யாவிற்கு குடியேறியவர். அவர் விண்ணப்பிக்கும் போது இத்தகவலை வெளிப்படுத்த மறைத்துவிட்டார். மேலும் இவரது உண்மையான பெயர் அயான் ஹிர்சி மாகன் என்பதாகும். அதையும் அம்மையார் மறைத்துவிட்டார்.

இவைகள் வெளியில் தெரியவந்ததும் அம்மையாருக்கு வழங்கப்பட்ட அடைக்கலத்தினை திரும்பப் பெற்றுகொள்வது பற்றி நெதர்லாந்து விவாதிக்க ஆரம்பித்தது.

உடனே அமெரிக்க அண்ணன் அம்மையாரின் துணைக்கு வந்தார். "அமெரிக்கன் எண்டர்பிரைஸ் கழகம்" எனும் திட்டம் தீட்டுபவர்களின் கழகத்தில் வேலைக்கிடைத்தது. தற்போது அம்மையார் அமெரிக்க தொலைக்காட்சிகளில் இஸ்லாத்தினைத் தூற்றுவதோடல்லாமல் அவ்வப் போது இஸ்ரேலையும் புகழ்ந்து வருகிறார்.

ஆனால் நெதர்லாந்தில் ஓய்ந்தபாடில்லை. மற்றொரு பாராளுமன்ற உறுப்பினர் குர்ஆனைத்தாக்கி ஒரு திரைப்படம் தயாரித்துள்ளதோடு அதனை ஒளிபரப்பு செய்ய அனுமதியும் பெற்றுவிட்டார். இந்த முழு பதிவுமே இந்த செய்தியினை அறிமுகப்படுத்தான். இங்கே அழுத்தவும்