Tuesday, December 04, 2007

சிப்ஸ், பிஸ்கெட், புற்றுநோய்

சிப்ஸ், பிஸ்கட்ஸ், ஃபிரென்ச் ஃப்ரைஸ், அப்பளம் ஆகியவைகளை தினமும் உட்கொண்டால் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது.

"அக்ரில்அமைட்" எனும் புற்றுநோயை ஏற்படுத்தும் வேதிப்பொருள் அப்பொருட்களைத் தயாரிக்கும்போது உருவாகுகிறது

குறிப்பாக தீய்ந்து போன பொருட்களை உண்ணவேண்டாம். மொறு மொறு தோசையின் மீது வைத்திருக்கும் ஆசையினை விட்டுவிடுவது நலம். கிரில் சிக்கனை மறந்துவிடுங்கள். ஷீக் கபாபினையும் மறந்துவிடுங்கள். தந்தூரி வகைகள் பற்றி என்ன சொல்வது என்று தெரியவில்லை (அதுவும் அவ்வப்போது தீய்ந்துதான் காணப்படுகிறது). பூரிகளையும் தவிர்க்கலாம்.

இது நெதர்லாந்து ஆராய்ச்சியாளர்களின் முடிவு. இது 120000 மக்கள் பங்கெடுத்துக்கொண்ட புள்ளியீட்டு ஆய்வு. புள்ளியீட்டு ஆய்வுதான் எனினும் இதில் பங்கெடுத்துக் கொண்ட பேர்களில் எண்ணிக்கையால் இதன் நம்பகத்தன்மை அதிகமாகிறது. மேலும் "அக்ரிலமைட்" புற்றுநோயை ஏற்படுத்தும் என்பது ஆராய்ச்சியாளர்களுக்கு மத்தியில் மிக அறியப்பட்ட உண்மையாம். புற்று நோயில் ஆராய்ச்சி செய்யும் ஒருவரிடம் நான் கேட்ட போது, சோதனைக்கூடத்தில் எலிகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தி ஆராய‌ இவ்வேதிப்பொருளைத்தான் பயன்படுத்துகிறார்களாம்.

ஆகவே கவனம் தேவை.

எதையும் மஞ்சள் மசாலா கலந்து குழம்பாக சமைத்து சாப்பிட்டால் நன்று. வேறொரு சமயத்தில் மஞ்சளினால் புற்றுநோய் வராமல் இருக்க வாய்ப்புண்டு என படித்துள்ளேன். (படிக்க. இதையும் படிக்க)

3 comments:

இம்சை said...

நன்றி

Baby Pavan said...

அங்கிள் பிளிஸ் எங்க பிளாக் பார்க்கவும், உங்க உதவி தேவை.

Uncle please check http://kuttiescorner.blogspot.com/2007/11/teach-to-educate-child_16.html

we request you to give this article as a PPT or Word document so that we could reach it to 3500 school/college students who do not access Internet.
Please check www.focpune.blogspot.com & www.vidyaposhak.org

மு மாலிக் said...

நன்றி 'இம்சை' அவர்களே,

பேபி பவன், உங்களது கூட்டு முயற்சிக்கும் தொண்டுக்கும் வாழ்த்துக்கள். நான் ஒரு இயற்பியலான். எனக்கும் உங்களுடன் இணைந்து கொள்ள விருப்பமுண்டு. ஆனால் என்னால் 3 மாதங்களுக்குப் பிறகுதான் முடியும். நானே உங்களைத் தொடர்புகொள்கிறேன். என்னை அழைத்தமைக்கு நன்றி.