Monday, November 19, 2007

வகாபிச தேசத்தின் சோப்பு போடும் செயல்

குடிமக்களின் உரிமைகளைப் பற்றி அவர்கள் ஏதும் பேசாத வண்ணம், அவர்களை அடக்குமுறை செய்வதற்கு சர்வாதிகாரிகளும் பாசிசர்களும் பயன்படுத்தும் ஆயுதமாக பெரும்பாலும் இருப்பது, உரிமைமீறல்களை உள்ளடக்கிய அடிப்படைவாத மதவாதம் அல்லது எளியவர்களின் பண்பாடுகளையும் உரிமைகளையும் அழிக்கும் "தேசியவாதம்" அல்லது ஆட்சியாள‌ர்களை விமர்சிப்பவர்களை அழிக்கும் கொள்கைகள் உள்வாங்கப்பட்ட "கம்யூனிசம்". இவைகள் பரவலாக பல இடங்களிலும் மக்கள் மீது ஏவி விடப்பட்டிருப்பதைக் காணலாம்.

சவுதி இளவரசன் பந்தர் பின் சுல்தான் தனது நாட்டு மக்கள் வகாபிச பிடியில் வாடும்போது, தான் மட்டும் சொகுசாக பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களை அமெரிக்காவில் வாங்கி அங்கு ஒரு மாளிகையை நிர்மாணித்து சொகுசாக வாழ்ந்து வருவது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். சமீபத்தில் சவுதி அரசாங்கம் "பிரிட்டீஷ் ஏரோஸ்பேஸ்" எனும் கம்பெனியிடமிருந்து வாங்கிய ஆயுதங்களின் பேரத்தில் இந்த "இளவரசன்" 1 பில்லியன் டாலர் கமிஷன் பெற்றதையும் நீங்கள் அறிவீர்கள்.

இந்தியா, இலங்கை, இந்தோனேசியா போன்ற பகுதிகளிலிருந்து அரபு நாடுகளில் வேலைப் பார்க்கும் பணிப்பெண்கள் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட கொடுமைகளுக்கு ஆளாவதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். அவர்களுக்கு நீதி வழங்க வகாபிகள் தங்களுக்குத் தானே ஆதாரபூர்வமானதெனக் கூறிக்கொள்ளும் ஹதீஸ்களில் இடமில்லை போலும். அறிவியல் முறைப்படி புலனாய்வு செய்வதை "மார்க்கத்தில் உள்ள பித்தத்துகள்" (பிற்கால சேர்க்கைகள்) என வகாபிகள் நினைகின்றனரோ என்னவோ. இவர்களைக் கொடுமைப் படுத்தும் ஆண்குற்றவாளியின் செயலுக்கு சாட்சியமளிக்க அக்குற்றவாளியின் குடும்பத்திலிருந்து யாரும் முன்வரமாட்டார்கள். சாட்சி எனப் பார்க்கப் போனால் இது போன்ற நிலைகளில் குற்றவாளியின் குடும்பத்திலிருந்துதான் கொண்டு வரவேண்டிய அவல நிலை உள்ளது.

பெண்கள் கார் ஓட்டக் கூடாது; கல்விக்காக அவர்கள் தனியாக வெளி நாடுகளுக்கு செல்லக் கூடாது; போன்ற கெடுபிடிகள். "பெண்கள் எங்கே உடலுறவு கொண்டு விடுவார்களோ ?" என்பது மட்டுமே இந்த வகாபிகளின் எப்போதுமான சிந்தனையாக உள்ளது. "அவர்களும் மனிதர்கள்; மனிதம் என்பது பல செயல்பாடுகளை உள்ளடக்கியது" என சிந்திப்பதில்லை. "உடலுறவு மட்டுமே வாழ்க்கை. தவாறான உடலுறவு ஏற்பட சந்தேகமான சூழ்னிலைகள் எது இருந்தாலும் அதனைத் தடுக்கவேண்டியது மட்டும் தான் பெண்கள் விஷயத்தில் நாம் செய்ய வேண்டியது" என தலையாய மடமையாக (மன்னிக்கவும்.. கடமையாக) வகாபிகள் உணர்கின்றனர் போலும். உடலுறவு மட்டும்தான் பெண்களின் பணியென எண்கின்றனர் போலும்.

இது பற்றி இதற்கு முன்பு நான் எழுதிய பதிவு ஒன்று இங்கே

அது போகட்டும்... நான் முதன்மையாக சொல்ல வந்த விஷயம் வேறு...

வகாபிச அரசுகள் தங்கள் நாடுகளில் இவ்வாறு இருக்க, வெளினாடுகளில் தங்களது ஆட்சியின் அங்கீகாரம் வேண்டி அவர்களின் தேவைக்கேற்ப தங்கள் பிராந்தியத்தில் மக்கள் கொல்லப்படுவதற்கு துணைபோகின்றன. கத்தார், சவுதி, குவைத் உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்காவின் படைகளுக்கான தளங்கள் உள்ளன.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட‌ ஹமாஸையும் ஈரானையும் அமெரிக்காவின் நலனுக்காக அவர்கள் வெறுக்கின்றனர்.

இப்போது அமெரிக்காவின் பொருளாதாரத்தைக் காப்பதற்கு சவுதி போடும் சோப்பு பற்றிய செய்தி ஒன்று இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

(குறிப்பு: இந்த செய்தியினை சங்-கூட்டத்தினர் தங்கள் வலைபதிவுகளில் ஏற்றி விமர்சிப்பதற்கு என்னுடைய இந்தப் பதிவுக்கு சுட்ட (cite) வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். நான் சங்-சித்தாந்தத்திற்கு விரோதி.)

No comments: