Friday, November 23, 2007

தஸ்லிமா நஸ்ரின்: நிகழும் கொடூரம்

எனது கல்லூரி நாட்கள் முதல் இந்த எழுத்தாளரைப் பற்றி நான் பலவாறான செய்திகளை நண்பர்கள் மூலமாகவும் இஸ்லாமிய குழுக்கள் நடத்தும் பத்திரிக்கைகள் மூலமாகவும் நான் கேளிவியுற்றேன். ஆனால் அந்த செய்திகளில் நான் கேள்வியுற்றவைகளுக்கு "அவைகள் உண்மைதான்" என என்னை ஏற்றுகொள்ள வைக்கும் ஆதாரம் எதனையும் நான் இன்னும் காணவில்லை.

"தடையற்ற உடலுறவுக்கு பெண்களுக்கு உரிமை வேண்டும்" என இவர் எழுதியதாக 10 வருடங்களுக்கு முன்பு எங்கோ படித்த ஞாபகம். எனக்கு அதை நம்ப முடியவில்லை. எங்கு, எப்போது அதை எழுதினார் என யாரும் எனக்கு சொன்னால் வரவேற்கிறேன்.

பிறகு "லஜ்ஜா" எனும் அவரது நாவலில் அவர் இஸ்லாத்தைத் தாக்கி எழுதினார் என்று சிலர் கூறினர். அதுவும் உண்மையல்ல என்று தோன்றுகிறது. நான் படிக்கவில்லையானாலும், அது பங்களாாதேஷில் நிகழ்ந்த ஒரு மதக் கலவரத்தை அடிப்படையாகக் கொண்ட நாவல் என மற்றவர்களின் விமர்சனங்களைப் பார்க்கையில் அறிய முடிகிறது.

பிறகு "குர்ஆனில் திருத்தம் செய்யப்படவேண்டும்" என அவர் கூறியதாக முதன்மையான செய்தி ஊடகங்களிலும் கூறப்படுகிறது. கல்கத்தாவிலிருந்து வெளிவரும் "ஸ்டேட்ஸ்மேன்" எனும் ஆங்கில நாளேட்டிற்கு அளித்தப் பேட்டியில் அவர் கூறியிருப்பதாக கூறப்பட்டது. அதை அவர் மறுக்கிறார். "ஷரியத் சட்டங்களைத் தான் மாற்றவேண்டும் என்றேன்" என்றார். உண்மையாக இருக்கலாம். ஷரியத் சட்டங்களையும் குர்ஆனையும் ஒன்று என்று குழப்பிக் கொள்பவர்கள் உண்டு.

ஆனால் அதே சமயத்தில் மிகத்தெளிவாக மதத்துவேஷம் செய்தவரான சல்மான் ருஷ்டியின் செயலுக்கு இவர் ஆதரவு தெரிவிப்பது தவறு. சல்மான் ருஷ்டி வலிந்து முகம்மது நபியையும் அவரது மனைவியரையும் அவமதித்து எழுதியுள்ளார். இதை ஒரு விமர்சனமாகக் கருத முடியாது. தனிமனித தாக்குதலாகத் தான் கருதமுடியும். அவ்வாறு எழுதிவிட்டு, பிறகு அவருக்கு எதிராக கூச்சல் கிளம்பியவுடன், " நான் எழுதிய சமயத்தில் நான் ஒரு முஸ்லீம் அல்ல; ஆனால் அதற்காக நான் மனம் வருந்துகிறேன்; நான் இஸ்லாத்தில் மீண்டும் இணைந்துள்ளேன்' என ஒரு பல்டி அடித்திருந்தார். பிறகு மேற்குலகில் இவருக்கு வரவேற்பு வலுக்க மீண்டும் தான் எழுதியது சரிதான் என்ற நிலைப்பாட்டிற்கு பல்டி அடித்தார். தஸ்லீமாவோ அவர் மன்னிப்புக் கேட்டது தவறு என்ற நிலைப்பாட்டைக் கொண்டவர். இதனை சமீபத்தில் அவர் ஃபிரண்ட்லைனுக்கு அளித்த பேட்டியிலிருந்து அறிய முடிகிறது தனிமனிதத் தாக்குதலை விமர்சனம் என்று இவர் நினைக்கின்றாரா ?

இருப்பினும் அது அவரது தனிப்பட்ட விஷயம். ருஷ்டியைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்பது அவரது தனிப்பட்ட விஷயம்.

இவரது விமர்சனங்களைப் பொறுத்தவரை இவர் ஓட ஓட துரத்தப் பட வேண்டியவரல்ல. அவ்வாறு செய்ய முயற்சிப்பவர்கள் தண்டனைக் குறியவர்கள். அவ்வப் போது மதத்தினைக் கொண்டு ஃபத்வா வழங்கும் இமாம்கள் தான் துரத்தப் படவேண்டியவர்கள். கற்பழித்தத் தந்தை மகளை மணக்கவேண்டும் என ஃபத்வா கொடுத்தவர் இந்த அளவிற்கு எதிர்ப்பினைச் சம்பாதித்தாரா என யோசிக்க வேண்டும்.

கூட்டுக் கற்பழிப்புக்கு ஆளான பெண்ணுக்கு சவுக்கடியைத் தண்டனையாக வழங்கியவர்கள் என்ன தண்டனையைப் பெற்றார்கள் என யோசிக்க வேண்டும்.

15 comments:

Amir Sulthan Basha said...

Excellent

Anonymous said...

உங்களது கருத்தை வரவேற்கிறேன் மாலிக்.

சதுக்க பூதம் said...

Good analysis

நந்தா said...

ஹாட்ஸ் ஆஃப் மாலிக்.

பெரும்பாலும் இது குறித்து கருத்து கூறுபவர்கள் எல்லாருமே ஒருதலைப் பட்சமாகவே பேசுகின்றனர். நடுநிலைமையாக ஒருவர் பேசும் போது கேட்க சந்தோஷமாய் இருக்கிறது.


// அவ்வப் போது மதத்தினைக் கொண்டு ஃபத்வா வழங்கும் இமாம்கள் தான் துரத்தப் படவேண்டியவர்கள். கற்பழித்தத் தந்தை மகளை மணக்கவேண்டும் என ஃபத்வா கொடுத்தவர் இந்த அளவிற்கு எதிர்ப்பினைச் சம்பாதித்தாரா என யோசிக்க வேண்டும்.

கூட்டுக் கற்பழிப்புக்கு ஆளான பெண்ணுக்கு சவுக்கடியைத் தண்டனையாக வழங்கியவர்கள் என்ன தண்டனையைப் பெற்றார்கள் என யோசிக்க வேண்டும்.//

மதத்தினடிப்படையில் எது செய்தாலும் சரிதான் என்று சிலர் இருக்கையில் உங்களது இந்த நேர்மையான அணுகுமுறைக்கு எனது பாராட்டுக்கள்.

Anonymous said...

மாலிக்! நல்ல பதிவு. தனிமனித சுதந்திரம் என்பது சமூக அமைதியைக் கெடுக்கக்கூடாது. இஸ்லாம் குறித்து எனக்கு அதிகம் தெரியாது. சல்மான் நாவலும் இதுவரை வாசிக்கவில்லை. ஒரு பொறுப்பான எழுத்தாளர் விமர்சனம் செய்யும் போது சமூக அக்கறை அவசியம். உங்கள் விளக்கம் பல சந்தேகங்களை நீக்கியிருகிறது.
நன்றி.


ஒரு ஈழத் தமிழன்

Anonymous said...

நாடடில் இரத்த ஆறு ஓடக் காரணமானவர்கள் எல்லாம் தஸ்லீமாவுக்கு வக்காலத்து வாங்கி தஸ்லீமாவுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேணடும் எனக்கூறுகிறார்களே இது ஒன்று போதாதா
சங்பரிவாருக்கு எதிரானவர் என்று உங்களை அறிமுகமும் செய்து கொள்கிறீர்கள் இப்போது முகத்தை எங்கு கொண்டு போய் வைத்துக் கொள்வீர்கள்?

மு மாலிக் said...

Anonymous,

அருமையான வாதம். உங்கள் சிந்தனையினை ஒட்டி ஒரு எண்ணம். பெளத்தத்தை ஆ.எஸ்.எஸ் காரர்களும் எதிர்க்கின்றனர், தாலிபான்களும் எதிர்கின்றனர். தாலிபான்களுக்கும் ஆர் எஸ் எஸ் காரர்களுக்கும் கூட்டு என்று நீங்கள் கூறுவீர்கள் போலிருக்கிறது.

அமெரிக்காவின் ஈராக் மீதான படுகொலைகளுக்கும் ஈரான் மீதான அச்சுறுத்தல்களுக்கும் பிஜேபி காரர்களும் அரேபியர்களும் ஆதரவு. இருவருக்கும் கூட்டு என்று நினைக்கிறீர்களா ?

நல்ல சிந்தனை.

இஸ்லாத்திற்கு எதிராக சங் போன்ற சிந்தனைகளெல்லாம் தேவையில்லை. உங்களுடையது போன்ற ' நல்ல சிந்தனை'களே போதும். வாழ்க ..

மு மாலிக் said...

Anonymous,

இன்னும் ஒரே ஒரு கேள்வி:

அணு ஒப்பந்தத்தை பிஜேபி எதிர்க்கிறது. நாம் ஆதரித்துவிடுவோமா ? :‍)) . பிஜேபி என்ன செய்கிறது, என்ன சொல்கிறது என்று பொருத்திருந்து பார்த்துவிட்டுதான் நான் சிந்திக்க வேண்டும் என்று சொல்லாதீர்கள்.

தருமி said...

ஒரே ஒரு கருத்தில் உங்கள் பதிவோடு வேற்றுமையிருந்தாலும்,
இப்பதிவுக்கு என் பாராட்டுக்கள்.

பாபு மனோகர் said...

உங்கள் கருத்தை தெளிவாக சற்று உரத்தே சொன்ன உங்களுக்கு என் பாராட்டுகள்! வாருங்கள் எல்லா மத அடிப்படைவாதங்களையும் எதிர்ப்போம்!

சீனு said...

//இவரது விமர்சனங்களைப் பொறுத்தவரை இவர் ஓட ஓட துரத்தப் பட வேண்டியவரல்ல. அவ்வாறு செய்ய முயற்சிப்பவர்கள் தண்டனைக் குறியவர்கள்.//

அதே தாங்க. அது தஸ்லிமா ஹுசைன் இருவருக்கும் பொருந்தும்.

Raveendran Chinnasamy said...

//மதத்தினடிப்படையில் எது செய்தாலும் சரிதான் என்று சிலர் இருக்கையில் உங்களது இந்த நேர்மையான அணுகுமுறைக்கு எனது பாராட்டுக்கள்//

repeat!!!!!

Anonymous said...

தடையற்ற உடலுறவுக்கு பெண்களுக்கு உரிமை வேண்டும்" என இவர் எழுதியதாக 10 வருடங்களுக்கு முன்பு எங்கோ படித்த ஞாபகம். எனக்கு அதை நம்ப முடியவில்லை. எங்கு, எப்போது அதை எழுதினார் என யாரும் எனக்கு சொன்னால் வரவேற்கிறேன்.
உங்களுக்கு நம்பமுடியவில்லை ஆனாலும் தஸ்லீமாவை ஆதரிக்க வேண்டும் என்று மட்டும் தோன்றுகின்றது

Anonymous said...

பிறகு "லஜ்ஜா" எனும் அவரது நாவலில் அவர் இஸ்லாத்தைத் தாக்கி எழுதினார் என்று சிலர் கூறினர். அதுவும் உண்மையல்ல என்று தோன்றுகிறது. நான் படிக்கவில்லையானாலும், அது பங்களாாதேஷில் நிகழ்ந்த ஒரு மதக் கலவரத்தை அடிப்படையாகக் கொண்ட நாவல் என மற்றவர்களின் விமர்சனங்களைப் பார்க்கையில் அறிய முடிகிறது.
உணமையல்ல என்று உங்களுக்குத் தோன்றுகின்றது நீங்கள் படிக்க வில்லை அதெப்படி உங்களுக்கு உண்மையல்ல என்று தோன்றுகின்றது
மற்றவர்கள் விமரிசனங்கள் என்றால் அந்த மற்றவர்கள் யார்?
பூதங்களும் நந்தாக்களும் தருமிக்களும் உங்களை வாழ்த்தியதில் உங்கள் உள்ளம் குளிர்ந்து போயிருக்குமே
முதலில் உங்கள் பெரை மாற்றுங்கள் மாலிக் என்பது இறைவனின் பெயர் அப்துல் மாலிக் என்று தான் பெயர் இருக்கவேண்டும் தஸ்லீமாக்களை ஆதரிக்கும் உங்களுக்கு பெயர் என்ன ஒரு பிரச்சினையா?
நீங்கள் ஆதரிக்கவேண்டிவர்கள் இன்னும் நிறைபேர் இருக்கிறார்கள்.

மு மாலிக் said...

மேலுள்ள இரு அனானிக்கள் அய்யாக்களுக்கும்,

நான் யாரையும் ஆதரிக்கவில்லை. சிலரைக் கண்டிக்க ம‌ட்டுமே செய்தேன். நான் யார் யாரை ஆதரிக்க வேண்டும் என நீங்கள் ஒரு பட்டியல் வைத்திருப்பது போல் தெரிகிறது. வேறு யாரிடமாவது கொடுக்கலாமே. நான் கொஞ்சம் பிசி.