Monday, November 19, 2007

நந்திகிராம்: ஒரு டெஹெல்கா கட்டுரை

நந்திகிராமில் நடப்பது பற்றி மிகவும் வேறுபட்ட அபிப்ராயங்களை அனைத்து தரப்பினரும் கொண்டுள்ளோம்.

வலதுசாரி இந்துத்வா மக்கள், தங்கள் குஜராத் படுகொலையை மறைக்க, "இடதுசாரியினரும் முஸ்லீம்களையும் தலித் மக்களையும் மேற்கு வங்கத்தில் கொல்கின்றனர். நாங்கள் மட்டுமா கொல்கிறோம்" என்கிற தொனியில் ரெடிஃப் போன்ற தங்கள் ஊடகங்களில் எழுதி வருகின்றனர்.

அரசியல் சார்பற்ற இடதுசாரியினர் அங்கு நிகழ்ந்த படுகொலையைப் பற்றி கூறுகையில் அது மாவோயிஸ்டுகளுக்கும் சிபிஎம் யினருக்கும் இடையே நடக்கும் ஒரு அதிகாரச் சண்டை என்று கூறுகின்றனர்.

மேற்கு வங்காளத்தில் மாவோயிஸ்டுகளுக்கும் சிபிஎம் யினருக்கும் ஆகாது. மாவோயிஸ்டுகள் சற்று தீவிரமான இடதுசாரி சிந்தனையை உடையவர்கள். அவர்களை எதிர்கொள்ள முயற்சித்த சிபிஎம், வலதுசாரியினரைப் போல செயல்பட்டது துரதிர்ஷ்ட வசமானது. மேலும் சிபிஎம் குண்டர்கள் நிகழ்த்திய‌ உரிமை-மீறல்களைக் கூட கண்டுகொள்ளாமல் மாவோயிஸ்டுகளின் அழிவில் குறியாக இருக்கும் புத்ததேவ் (பொருத்தமற்ற பெயர்) வெற்றிக் களிப்பில் இருக்கின்றார்.

கீழே ஒரு டெஹெல்கா அறிக்கையின் இணையதள தொடுப்பு கொடுக்கப் பட்டிருக்கிறது. நந்திகிராமைப் போல அனைத்து மேற்கு வங்கமும் மாவோயிஸ்டுகளின் கையில் போய்விடுமோ எனும் அச்சத்தில் அவர்களிடம் இருந்து அதனைக் 'கைப்பற்ற' இந்த வன்முறையில் ஈடுபட்டதாக இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

http://www.tehelka.com/story_main36.asp?filename=Ne241107Smash_AndGrab.asp

2 comments:

Naina said...

சகோதரரே!
தங்களுடைய வஹ்ஹாபிசம் ஏன் ஓழிய வேண்டும் என்ற பதிவிற்கு பின்னூட்டமிட்டிருந்தேனே, ஏன் வெளிவரவில்லை? கிடைக்கவில்லையா அல்லாது பார்க்கவில்லையா அல்லது பதிவிட விரும்பவில்லையா?
அன்புடன்
நெய்னா முஹம்மது

மு மாலிக் said...

சகோதரர் நெய்னா முகம்மது அவர்களுக்கு,

எனக்கு கிடைக்கவில்லை. மீண்டும் எனக்கு அனுப்பி வைக்க முடியுமா ? சில சமயங்களில் அவ்வாறு கிடைப்பதில்லை. நீங்கள் பின்னூட்டம் எழுதும்போது "Your comment has been sent. will appear after moderation" என்று வராதவரை, பின்னூட்டம் அனுப்பப் படவில்லை என்பதை உணரவும். சில சமயங்களில் வெறும் வெள்ளையான பக்கத்தினை மட்டும் நமது உலாவி (Browser) காட்டும். நான் உணர்ந்த அனுபவம் இது. இவ்வாறு நிகழும்போதெல்லாம் நான் எழுதிய பின்னூட்டங்கள் பிற பதிவுகளில் தோன்றுவதில்லை.

நன்றி