Wednesday, October 10, 2007

அமெரிக்காவின் நீதித் துறை

பிபிசியின் இந்த செய்தியைப் பார்க்கவும் (http://news.bbc.co.uk/2/hi/europe/7036051.stm).

சிஐஏ தன்னை சித்திரவதை செய்தார்கள் என ஒருவர் புகார் செய்தார்.

உலக நாடுகளின் மனித-உரிமை தர வரிசையை (Human Rights Index) ஒவ்வொரு வருடமும் வெளியிடும் நாடு அமெரிக்கா என்பதை இந்த நேரத்தில் உங்களின் நினைவுக்குக் கொண்டுவருகிறேன்.

அதன் ஒரு நீதி மன்றம், "நாட்டின் பாதுகாப்பினைக் கருதி இந்த வழக்கை விசாரிக்க முடியாது"(!!!) என அவரது வழக்கினை தள்ளுபடி செய்துவிட்டது.

பாதிக்கப் பட்ட அந்த ஜெர்மானியர் (ஆனால் வெள்ளையர் அல்ல), அமெரிக்காவின் நீதி மீது நம்பிக்கைக் கொண்டவர் போலும். உச்ச நீதி மன்றத்துக்கு மேல் முறையீடு செய்தார்.

உச்ச நீதி மன்றமோ எந்த காரணத்தையும் காட்டாமல் அவரது வழக்கை விசாரிக்காமல் தூக்கி எறிந்து விட்டது. வாழ்க அமெரிக்காவின் நீதி.

1 comment:

மு மாலிக் said...

அல்ஜசீரா-வின் இணைய தளம் கொஞ்சம் தாமதமாக செய்திகளைத் தந்தாலும், அதன் சற்று விரிவாகவும் இருட்டடிப்பு சதியேதும் இல்லாமலும் பொதுவாகக் காணப்படும்.

இப்பதிவு விமர்சிக்கும் செய்தியின் அல்ஜசீராவின் அறிக்கையைப் பார்க்க இங்கே அழுத்தவும்