Wednesday, September 26, 2007

பிபிசி -யின் இருட்டடிப்பு

ஐக்கிய நாட்டு சபையில் அகமதினேஜாதின் உரையைப் பற்றி "செய்தி வெளியிடவில்லை" என்ற குற்றச்சாட்டு ஏற்படாமல் இருப்பதற்காக அதைப் பற்றி செய்தி வெளியிடவும் வேண்டும், அதே சமயத்தில் அவர் சொன்னவைகள் மக்களைச் சென்றடையவும் கூடாது என்று பிபிசி முயன்றுள்ளது எனக்கு தெளிவாகிறது. உங்களுக்கும் அவ்வாறு தெரிகிறதா என்பதினை அறிய பிபிசியின் செய்தி வெளியீட்டையும் அல்ஜசீராவின் செய்தி வெளியீட்டையும் கவனிக்க.

அல்ஜசீராவின் செய்திக்கு இங்கே அழுத்தவும் .
பிபிசியின் செய்திக்கு இங்கே அழுத்தவும் .
(குறிப்பு: அல்ஜசீராவுக்கும் ஈரானுக்கும் பிணக்குகள் உள்ளன. கடந்த காலங்களில் அல்ஜசீராவின் நிருபர்கள் மற்றும் படப்பிடிப்பாளர்களை ஈரான் தன் ராஜாங்க அலுவலர்களின் ப்ரஸ் மீட்டிலிருந்து வெளியேற்றி வந்தது. அல்ஜசீரா குழுவினர் ஈரானின் பாராளுமன்றத்திற்குள் நுழைய தடைவேறு. இதற்கு காரணம், அல்ஜசீராவின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஒருவர், ஈராக்கின் அலி- சிஸ்தானியை அவமரியாதைச் செய்துவிட்டார். இருப்பினும் அல்ஜசீரா நடுனிலையை மேற்கொண்டு வருவது எனக்கு பிடித்தமானது)

3 comments:

கார்த்திக் பிரபு said...

hi add me my page link in ur blog

its a googlepage for tamil free e books

http://gkpstar.googlepages.com/

thanks for adding my page

மு மாலிக் said...
This comment has been removed by the author.
மு மாலிக் said...

கார்த்திக்,
கொஞ்சம் நேரம் கொடுங்கள்.

எல்லோருக்கும்,
இந்த விஷயத்தில் ஒரு மேல்-தகவல்:

நிகராகுவா அதிபர், டானியல் ஒர்டெகா, "ஈரானின் அணுத்திட்டம் அமைதிக்காக இல்லை என சொல்லும் தகுதி அமெரிக்கா மற்றும் அதன் துணை நாடுகளுக்கு இல்லை" என கூறியுள்ளார். மேலும் படிக்க இங்கே அழுத்தவும் .