Sunday, December 25, 2005

நிற வெறியை எதிர்த்து

ஒரு தென்னாப்பிரிக்கரால் எழுதப் பட்ட கவிதை - என்று நான் மின்னஞ்சல் வழியாகப் பெற்றது.


நான் ஒரு கறுப்பன், பிறப்பிலிருந்து;

நான் ஒரு கறுப்பன், வளர்ந்த பின்னும்

கோடையிலும் நான் கறுப்பன்

குளிரிலும் நான் கறுப்பன்

நான் அச்சத்திலும் கறுப்பன்

நோயுற்றபோதும் கறுப்பன்

மரணிக்கும்போதும் கறுப்பன்

அனால், வெள்ளையனே !

நீ பிறந்தவுடன் இளஞ்சிவப்பு

வளர்ந்தவுடன் வெள்ளை

கோடையினில் சிவப்பு,

குளிரினில் நீலம்

நோய்வாய்பட்டால் பச்சை

அஞ்சும்போது மஞ்சள்

மரணப்படுக்கையில் சாம்பல் நிறம் -என்று

பல நிறம் கொண்ட வெள்ளையா !

என்னைப் பார்த்து 'நிறமுடையவன்' என்கிறாய்

நீ கொண்டுள்ள நிறவெறி எந்த நிறத்திற்காக ?

7 comments:

நண்பன் said...

மாலிக்

அற்புதமான கவிதை.

உங்களுக்காக மின்னஞ்சலில் அனுப்பி வைத்த நெஞ்சம் வாழ்க.

தொடர்ந்து கவிதைகளைக் கொடுங்கள்.

மு மாலிக் said...

நன்றி நண்பன் அவர்களே.

Thangamani said...

மாலிக் கவிதை நன்று. நீங்கள் மின்னலுக்காக எதையாவது எழுதினீர்களா?

மு மாலிக் said...

நன்றி தங்கமணி. இது பற்றி நான் உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புகிறேன்.

rahini said...

arumai vaalththukkal thodaratum ungkal aakkam

rahini said...

யாழ் சுதாகரின் குரலுடன்,
thiramaiyin thedalil

http://www.yazhsuthakar.com
பழைய புதிய திரைப் படப்பாடல்களை...

http://www.archive.org/search.php?query=yarl
என்ற இணையத் தளத்தில் நீங்கள் கேட்கலாம்.

[ எம்.ஜி.ஆர் ,சிவாஜி கணேசன்...ஆகியோருக்காக டி.எம்.சௌந்தரராஜன்..[டி.எம்.எஸ்] பாடிய பாடல்கள்...மற்றும்.. கே.ஜே.ஜேசுதாஸ் ,ஹரிஹரன், உன்னி கிருஷ்ணன், எஸ்.ஜானகி பாடல்கள்..]

இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஐரோப்பிய ,கனேடிய மற்றும் ஆஸ்திரேலிய வானொலிகளில்

1998 இல்.... ஒலி பரப்பான நிகழ்ச்சிகள் ஆகும்.

சிவாஜி, எம்.ஜி.ஆர் படப் பாடல்களை...யாழ் சுதாகர் குரலுடன் கேட்க..

http://www.archive.org/search.php?query=yarl

rahini said...

senru kettu makilugkal